பதினைந்து வயதில் ஒரு பெண்இருபத்தைந்து வயதில் இன்னொரு பெண்முப்பத்தைந்து வயதில் ஒரு பெண்நாற்பத்தைந்து வயதிலிருந்து இன்று வரைஎன் மனையாள்மாதமொரு முறைஇடையிலொரு பெண்இப்போது எழுபத்து மூன்று வயதில்ஒரு பெண்எல்லோரும் சொன்னது“நீ என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை.” துக்கித்து அமர்ந்திருந்த என்னெதிரேவந்த மைனாவிடம் சொன்னேன்அது சொன்ன யோசனை: புரிந்து கொள்ள வேண்டாம்மௌனித்திருந்தால் போதும்
Published on July 17, 2025 09:28