ஆன்மா மரணமில்லாததுஆன்மா குடியிருக்கும் கூடுதான்உடல்உடல் அழிந்தாலும் ஆன்மாவுக்குஅழிவில்லைஇதை நம்பும் ஞானிகளேஎம் தேசத்தவர் எல்லாரும் உலகையே நடுங்கச் செய்தஉயிர்க்கொல்லிக் கிருமிஇங்கே நுழைந்தபோதுவிஞ்ஞானிகள் பதறினார்கள்கிருமி தாக்கிய ஒருவரைநெருங்கினாலே அடுத்தவரையும்தொற்றி அழித்து விடும்ஆனால் நாங்களோபத்துக்குப் பத்து அறையில்பத்து பேர் படுத்துறங்கினோம்கோவில் திருவிழாவில்புளிமூட்டை போல்பல்லாயிரக்கணக்காய் கூடிஒருவர் மீதொருவர் கட்டிப் புரண்டுஆடினோம்மதுக்கடைகளிலும்ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டுபோத்தல்களை அள்ளினோம் எங்கள் தொகை நூற்று நாற்பது கோடிஇதில் நாற்பது ஐம்பது கோடிகிருமியால் காலியாகும்என்றது விஞ்ஞானிகள் குழு யாருக்கும் அச்சமில்லைமரணம் கொஞ்சமாய் நிகழ்ந்தாலும்எவரும் அசரவில்லைஅதே கூட்டம்கோவிலிலும்மதுபானக் கடைகளிலும் ... 
Read more
   
    
    
    
        Published on July 31, 2025 07:42