வேலையின் கயிறுகழுத்தை இறுக்கும் நிழல்ஆனால் அவளின் நினைவுமணலில் எழுதப்பட்ட மந்திரம்காற்றின் மொழியில் அலைகிறதுமறையாமல்மறுக்கப்படாமல். இம்சை செய்யேனென சத்தியமளித்தேன்பன்னிரண்டு மணி நேரம்ஒரு புனிதனைப் போல்ஒரு முட்டாளைப் போல்மௌனத்திலிருந்தேன்பிறகுமாலையின் மஞ்சள் நிறத்தில்சத்தியம் மீறிஃபோன் செய்தேன்அரை நிமிட உரையாடல்பைத்தியத்தின் பாலையில் விழுந்தநீர்த்துளிநட்சத்திரங்களாய் மாறுகிறது இந்த இம்சை இல்லாமல்விடுதலை எப்படி?நினைவுகள் பாசிபடிந்த கற்கள்கைகளில் பிடிபடாமல் நழுவுகின்றன நண்பன் கேட்கிறான்ஏன் உன் அந்தரங்கத்தைஉலகுக்குப் பகிர்ந்தளிக்கிறாய்? ஐம்பது ஆண்டுகளாய்அந்தரங்கத்தைத்தானே காகிதத்தில்வீசுகிறேன்?கவிதைக்குச் சலுகையில்லையா? வேப்பை இழுத்துவிட்டுபிரியத்துக்குரியவர்களுக்குஇம்சை கொடுக்காமல்வாழ்வது எப்படியென யோசித்தேன்ஆனால்அவள் நினைவு கத்தியைப் போல்மார்பைக் கிழிக்கிறது குதிரையின் ...
Read more
Published on August 12, 2025 09:05