சாரு நிவேதிதா's Blog, page 10

September 2, 2025

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்…

ॐ हा३उ हा३उ हा३उ, अहमन्नमहमन्नमहमन्नम्, अहमन्नादोऽहमन्नादोऽहमन्नादः। ஓம் ஹாஉ ஹாஉ ஹாஉ, அஹமன்னமஹமன்னமஹமன்னம், அஹமன்னாதோ ஹமன்னாதோ ஹமன்னாத ஹ்। வெள்ளை நாய் சரமாவின் தலைமையில் மற்ற நாய்கள் “ஓம்” மந்திரத்தை உச்சரித்து, உணவைக் கேட்கின்றன.                                      சாந்தோக்ய உபநிஷத் 1.12.1-5) வேதங்களில் அனைத்து நாய்களின் தாயாகவும், இந்திரனின் தூது நாயாகவும் கருதப்படும் சரமா என்ற நாய் வானத்தின் நாய் (Hound of Heaven) என்றும் வர்ணிக்கப்படுகிறது.  ஒருமுறை பாணிகள் என்ற அரக்கர்கள் இந்திரனின் ஒளிமயமான பசுக்களைத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2025 05:50

September 1, 2025

எழுத்தும் கலகமும்…

என்ன செய்ய, சொல்வதற்கு இன்னும் இருக்கிறது.  எனக்கு ஃபோன் செய்து என் ரௌடித்தனத்தை என்னிடம் விளக்கிய தோழி என்ன நினைப்பார் என்று எனக்குத் தெரியும்.  நாம் சாருவிடம் தனிப்பட்ட முறையில் சொன்ன விஷயங்களை அவர் வழக்கத்தின்படியே பொதுவெளியில் எழுதி நம்மை மானபங்கப்படுத்துகிறார், அசிங்கப்படுத்துகிறார் என்பதே அவர் கருத்தாக இருக்கும்.  இதற்கும் நான் நூறு முறை பதில் எழுதி அலுத்து விட்டேன். என் மகன் என்னிடம் கடன் வாங்கினான்.  வேலைக்குப் போய் எனக்கு ஒரு பைசா கூட தராதவன்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2025 07:25

August 31, 2025

சொல்லித் தீரவில்லை (எதிர்க் கலாச்சாரம் -3)

ஒரு விஷயம் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. வள்ளலாரும் நானும் சமகாலத்தில் வாழ்கிறோம். வள்ளலாரை போலீஸ் கைது செய்கிறது. என்ன விஷயம்? வள்ளலார் சாருவைக் கத்தியால் குத்தி விட்டார். ஐயோ, என்ன இது, சாரு வள்ளலாரைப் புகழ்ந்து அல்லவா எழுதிக்கொண்டிருந்தார்? அது என்னவோ போங்க, சாருவின் TOV… TOVன்னா? தலையில் ஓத்த விதி! அந்த இசை விமர்சகர் விஷயத்திலும் இதேதான் நடந்தது. மிகவும் நல்லவர். பண்பானவர். அதிர்ந்தும் பேச மாட்டார். நானும் அவரைப் புகழ்ந்து புகழ்ந்தே எழுதியிருக்கிறேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2025 10:20

நாய் படும் பாடு (எதிர்க் கலாச்சாரம் – 2)

தோழி, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன். நீ பேசும் போது நான் எழுதிய – அதாவது, இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்ற நவீன தீண்டாமை என்ற கட்டுரையில் அந்த இசை விமர்சகரை நாய் என்று குறிப்பிட்டு எழுதியதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம் என்றாய். எனக்கு நாய் என்றால் உயிர். யாரையுமே நான் நாய் என்று திட்ட மாட்டேன். ஆனாலும் நீ சொன்னதால் மௌனமாகவும், அதே சமயம், நாய் என்று சொல்ல மாட்டேனே என்று முணகியும் மருகினேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2025 09:19

எதிர்க் கலாச்சாரம் ரவுடித்தனம் இல்லை!

இன்று ஒரு தோழி ஃபோனில் அழைத்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். மாதாமாதம் எனக்குத் தேவையான அலோபதி மருந்துகளை பல ஆண்டுகளாக அனுப்பிக்கொண்டிருப்பவர். அவர் சொன்ன விஷயங்களுக்கு நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் போடலாம். ஆனால் அவர் சொன்னது எல்லாமே ”நான் கொடுத்த பணத்தை நீ திருப்பவில்லை” என்பது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் அல்ல. எல்லாமே என் இயக்கம் சம்பந்தப்பட்டவை. எல்லாமே என் எழுத்து சம்பந்தப்பட்டவை. மேலும், இதையேதான் அவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2025 08:40

ஒரு முடிவு: எல்லோரும் இன்புற்றிருக்க…

நவீன தீண்டாமை என்ற கட்டுரையை நீக்கி விட்டேன். அது அதில் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்லாமல் மற்ற பலரையும் புண்படுத்தி, அவர்களுக்கு வேறு பல சங்கடங்களையும் விளைவித்திருக்கிறது என்று அறிகிறேன். முட்டாள்களே ஒரு சாதாரண ஆளை அறிஞர் என்றும், படுமுட்டாள்களே அவரை பேரறிஞர் என்றும் சொல்வார்கள் என்று அண்ணாதுரை இறந்த போது சொன்னவர் ஜெயகாந்தன். அதேபோல் சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில் சென்று கலந்து கொண்டு, சிவாஜியின் நடிப்பு பற்றி மிக மோசமாகப் பேசி உயிராபத்துடன் தப்பி வந்தவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2025 05:40

August 30, 2025

நவீன தீண்டாமை

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் படித்ததும், ஒரு நற்செயலைத் தொடங்கும்போது எதிர்மறையான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா என்று நண்பர்கள் பலருக்குத் தோன்றும்.  சிலருக்கு மனவருத்தமும் கோபமும் ஏற்படலாம்.  அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது.  பந்தை சுவரில் அடித்து விட்டீர்கள்.  பந்து திரும்பிதான் வரும்.  சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் என் சோற்றில் நஞ்சைக் கலந்தார்.  நஞ்சு என்னைக் கொல்லவில்லை.  தொண்டையிலேயே அடக்கி விட்டேன்.  அதை என் உடலிலிருந்து வெளியேற்றினால்தான் நான் செய்யப் போகும் நற்செயலை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2025 02:54

August 29, 2025

இன்றைய இந்தியா

Hello sir good evening ..trust you are doing well..just saw the video in Shruthi tv on sisu chellappa.where can I get the குறு நாவல் ஜீவனாம்சம் ஒரு வாசகரிடமிருந்து எனக்கு வாட்ஸப்பில் வந்த செய்தி மேலே உள்ளது. பெயரையும் ஊரையும் வெளியிடாமல் வைக்கிறேன். சீனி, உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்போது எனக்கு நீங்கள் ஒரு கோல்ட் மெடலோ அல்லது அதை விட பெரிய பரிசாகவோ கொடுக்க வேண்டும். டிஜி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2025 09:11

இறைவிக்கு அளிக்கப்பட்ட அப்பம்

இறைவி!காற்றின் றெக்கைகளில் பறந்துமலர்களின் ரகசியங்களைச் சொன்னஎன் கவிதைகள்: இந்தப் பூமியின் களமாகமழைத் துளிகளால் நனைந்து,காற்றின் ஸ்பர்ஸத்தினால் நடுங்கும்என் உடல் அடர்ந்த இரவின்நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகமௌனத்தின் ஆழத்தில் மூழ்கிஒளியின் தேடலில் தவிக்கும்என் ஆத்துமா பூமியின் இருமுனையில் ஓடும்சிவந்த நதியாக,உன் உதடுகளில் தவழ்ந்து,புனிதமான பனியாக உருகி,பூமியின் இதயத்தில் தூங்குகிறது.என் குருதி பாறையில் செதுக்கப்பட்ட புராணம்உன் விரல்களின் தொடுதலில்பறவையாக மாறிஅனந்தத்தின் வானில் பறக்கிறதுஎன் எலும்பு நெருப்பின் மையத்தில் மறைந்த விதைஉன் மௌனத்தில் முளைவிட்டுஒரு மலராகஎல்லையற்ற இரவில் பூக்கிறதுஎன் எலும்பின் மஜ்ஜை என் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2025 03:14

August 28, 2025

ஆகப் பெரிய வரம்

இறைவரிடம் எதுவுமே வேண்டுவதில்லைஏனென்றால்கிடைத்த வரங்கள் அதிகம் –நீரோடை போல ஓடும் அமைதியில்,ரகசியத் தோட்டத்தின்இலைகளுக்கிடையே மறைந்து,நேரத்தின் கண்ணாடியில்பிரதிபலிக்காத உருவங்கள் போல–அதில் ஆகப் பெரிய வரம்என் மனையாள்என் எழுத்தைப் படிக்காமல்இருப்பதுதான்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2025 00:41

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.