சாரு நிவேதிதா's Blog, page 8
September 16, 2025
ரோஜாவின் பெயர் – 1
ஊம்பர்ட்டோ எக்கோவின் நாவல்கள் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நான் அவரைப் படித்திருக்கவில்லை. ஃபூக்கோஸ் பெண்டுலம் நாவலை என்னால் படிக்க முடியவில்லை. ரோஜாவின் பெயரை ஒருமுறை பாதி படித்து விட்டு அலுத்துப் போய் விட்டு விட்டேன். ஆனால் அந்த நாவல் திரைப்படமாக வந்த போது பார்த்து மிரண்டு போனேன். இயக்கியவர், நான் எப்போதுமே பெரிதும் சிலாகிக்கும் ஃப்ரெஞ்ச் இயக்குனர் Jean-Jacques Annaud. Wolf Totem, Seven Years in Tibet படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ரோஜாவின் பெயர் ... Read more
Published on September 16, 2025 04:30
ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்
வரும் நவம்பர் முதல் வாரத்தில் பாண்டிச்சேரியில் ஒரு சினிமா பட்டறை நடத்தலாம் என்று திட்டம். திருவண்ணாமலையில் நடந்தது போல. காலை பத்து மணிக்கு என் உரை ஆரம்பித்து விடும். மாலை ஆறு மணி வரை நடக்கும். சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை பார்வையாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கும் நேரம் ஒதுக்கித்தான் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். அநேகமான நவம்பர் முதல் தேதி இருக்கலாம். சனிக்கிழமை. சென்ற ஆண்டு ஜெயமோகனின் கட்டண உரை பெங்களூரில் ... Read more
Published on September 16, 2025 02:47
September 14, 2025
என் மரணத்தை விரும்பும் அன்பர்கள்
நேசராஜ் என் நீண்ட கால நண்பர். தர்மபுரியில் வசிக்கிறார். அஞ்சல் துறையில் நான் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் நேசராஜ் அஞ்சல் துறையின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்தப் பதவி de facto Postmaster General மாதிரி. அதிகாரிகளை நடுங்கச் செய்யும் பதவி. நேசராஜ் தீவிர இலக்கிய வாசகர். அதனால் அவரும் நானும் அப்போதிருந்தே நண்பர்கள். இத்தனை காலத்துக்குப் பின்பும் அந்த நட்பு தொடர்கிறது. இப்போது அந்த நட்பு இன்னும் பலப்பட்டிருக்கிறது. அதேபோல் அவரது வாசிப்பும். ஃபேஸ்புக்கில் ... Read more
Published on September 14, 2025 03:36
பாராட்டும் பதிலும்…
கவிதையைப் படித்து விட்டு தோழி அனுப்பிய பாராட்டு: Congratulations Charu on your meritorious success. This victory is not a culmination but the inchoation of more radiant victories.May each work you pen illumine the path toward ever-illustrious achievements. (This is what i would have sent immediately) தோழிக்கு என் நன்றிக் கடிதம்: ராஜா: டேய் மந்திரி ஏன்டா என்னைப் பாராட்டலே? மந்திரி: ஐயோ ... Read more
Published on September 14, 2025 00:59
September 13, 2025
மகிழ்ச்சியின் விதி
நேற்று வந்தகுதூகலச் செய்தி ஒன்றைஎன் தோழிக்கு அனுப்பினேன்—மனித குலத்தில்எனக்கிருக்கும் ஒரே தொடர்புஅவள்தான். பதில் வரவில்லை.பிஸியாக இருக்கலாமென நினைத்தேன்.ஆயினும், இத்தனை மகிழ்ச்சிக்குஒரு “வாவ்” அனுப்ப முடியாதா?மனம் கலங்கியது முன்பெல்லாம் இதையெல்லாம்மனையாளிடம் பகிர்ந்திருக்கிறேன்.‘போய்யா, வேறு வேலை இல்லையா?’என்றே பதில் வரும்அதுமுதல்,மனிதர்களுடன் மகிழ்ச்சி பகிர்வதைநிறுத்திவிட்டேன். நாய்களும் பூனைகளும்தங்கள் குதூகலத்தைப் பகிர்ந்து கொள்ளும்—நமது மகிழ்ச்சி அவைகளுக்குப் புரியாதுபடைப்பு அப்படிமானுடக் கதவுகளோமௌனத்தில் அடைந்து கிடக்கின்றன. தோழி வந்தாள்மீண்டும் பகிரத் தொடங்கினேன்இரவில் பதில் வந்தது—வேறோர் விஷயம் பற்றி.என் குதூகலச் செய்திபோன இடம் தெரியவில்லை மகிழ்ச்சியின்தலையில் ஓத்த ... Read more
Published on September 13, 2025 20:25
September 12, 2025
ரூபாஸ்ரீயின் நூல் அறிமுகம்
என் நட்பு வட்டத்தின் முக்கியப் புள்ளியான ரூபாஸ்ரீயின் நூல் அறிமுகக் காணொலிகள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும். இந்தக் காணொலியில் ரூபாஸ்ரீ Tahar Ben Jelloun எழுதிய The Blinding Absence of Light என்ற அற்புதமான நாவல் பற்றி அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலின் விசேஷம் என்னவென்றால், இறை நம்பிக்கையில்லாதவனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய இரண்டு நூல்களில் இது ஒன்று. ரூபாஸ்ரீயின் மெஸேஜ்: Hi Charu,Hope you’re doing well… I recently finished reading This ... Read more
Published on September 12, 2025 01:44
கொல்லும் நினைவுகள்…
வளன், நீ கேட்டாய் அல்லவா, ஏன் இந்த துக்கம், ஏன் இந்தத் துயரம் என்று. இந்த டும்ரி பாடலில் அதற்கான பதில் இருக்கிறது.
Published on September 12, 2025 00:43
frenzy, just frenzy…
கோக் ஸ்டுடியோவில் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இதைப் பாடிய பெண் ஃபரிஹா பர்வேஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஃபரிஹாவின் மிகத் தீவிர ரசிகன் நான். ஜோகி என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்.
Published on September 12, 2025 00:08
September 11, 2025
அடி முட்டாளும் புத்திசாலிகளும்…
நாலைந்து தினங்களுக்கு முன்னால் என் தோழி “ஏன் சாரு இப்படி அடி முட்டாளாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் மகனும் இதே கேள்வியைத்தான் வேறு விதமாகக் கேட்டான். பதிலுக்கு மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு உடைத்தேன். ஆனால் தோழி கேட்டது விளையாட்டாக. மகன் கேட்டது வன்மம். தோழியிடம் இதைச் சொன்னால், ‘உனக்கு விளையாட்டே தெரியவில்லை, எப்போதும் சீரியஸாகவே இருக்கிறாய்” என்று ஏற்கனவே புகார் சொல்லிக்கொண்டிருக்கும் அவள் என்னிடம் அளந்து அளந்து பேச ஆரம்பித்து விடுவாள். ... Read more
Published on September 11, 2025 23:47
September 10, 2025
ஒரு சிறிய கணக்கு
நான் மாதம் நான்கு தினங்கள் வெளியூர் சென்று விடுகிறேன். அப்போது சில நண்பர்களை என்னோடு வருவதற்காக அழைக்கிறேன். நான்கு நாட்கள் என்னோடு தங்கிப் பேசலாம். யாரை அழைத்தாலும் வேலை இருக்கிறது என்கிறார்கள். என் வயது எழுபத்து மூன்று. இன்னும் ஏழு ஆண்டுகள் இருப்பேன் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு தாராளமான காலம். இந்த ஏழில் வருடத்துக்கு ஒரு முறை நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள் என்றாலே எழு சந்திப்புதான் வருகிறது. இதன் காரணமாகவே, நான் அசோகமித்திரனை அவரது ... Read more
Published on September 10, 2025 08:27
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

