சாரு நிவேதிதா's Blog, page 3
October 5, 2025
அற்புதர்கள்
ஏ.ஆர். ரஹ்மானைத் தொடர்பு கொள்வது மிகவும் சிரமம் என்பார்கள். ஆனால் நான் தொடர்பு கொண்டால் அரை மணி நேரத்துக்குள்ளாக பதில் வந்து விடும். ஒரு முறை கூட தவறியதில்லை. சமீபத்தில் அவர் வாழ்வில் ஒரு அசந்தர்ப்பமான சம்பவம் நடந்த அன்று கூட வேறோர் வேலையாகத் தொடர்பு கொண்டபோது அரை மணி நேரத்தில் பதில் வந்தது. இறையன்புவும் அப்படித்தான். பொதுவாக உடனே எடுத்து விடுவார். அவசர வேலையில் இருந்தால் வேலை முடிந்ததும் அழைக்கிறேன் என்பார். அநேகமாக ஒரு மணி ... Read more
Published on October 05, 2025 09:49
மன உளைச்சல்
நேற்று காலை ஏழரை மணிக்கு எனக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைப் பார்த்ததிலிருந்து ஒரே மன உளைச்சல். மரண பயத்தினால் அல்ல. அந்த மொட்டைக் கடுதாசியில் என் பெயரை சாரு நாயுடு என்று குறிப்பிட்டிருந்ததால். என் நைனா நாயுடு சமூகம் அல்ல. காட்டு நாய்க்கன் சமூகம். அம்மா நாட்டுக்கோட்டை செட்டி. காட்டு நாய்க்கன் எப்படி நாயுடுவாக ஆக முடியும்? மேலும், நான் இன அடையாளத்தையும், தேச அடையாளத்தையுமே மறுத்து வருபவன். நான் எப்படி சாதி அடையாளத்தை, அதிலும் என் ... Read more
Published on October 05, 2025 01:03
October 4, 2025
மிரட்டல்
என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்தது. அது போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருப்பதால் போலீஸிடமிருந்து ஃபோன் வந்தது. இந்த விஷயத்தில் எனக்கு தமிழக அரசின் மீதும், அதிகாரிகள் மீதும், குறிப்பாக தமிழக போலீஸ் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. எனக்கு இந்த சினிமா நடிகனின் ரசிகக் குஞ்சாமணிகளின் மிரட்டல் பற்றி எந்தக் கவலையும் பயமும் இல்லை. காந்தி நகரில்தான் தினமும் தனியாக, போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல், வாக்கிங் போய்க்கொண்டிருக்கிறேன். ஏழரை மணிக்கு சரியாக ... Read more
Published on October 04, 2025 00:22
October 3, 2025
இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…
என் சொற்களைத் தொட்டால்நீங்கள் நெருப்பின் மையத்தில் நடனமிடலாம்அல்லதுபனிக்கட்டியின் இதயத்தில்பச்சைப் புல்லாய் உயிர்த்தெழலாம்உங்கள் மனம் தடம் புரளலாம்நிலவொளியில் தொலைந்த கனவுகள் போலநிழல்கள் துரத்தும் மரணத்தின் முனகல்கள்உங்களைச் சூழ்ந்து நடுங்கச் செய்யலாம் ஆனால்அந்த இருளின் கருவறையிலிருந்தேஒரு ஒளி தோன்றிஉங்கள் நாட்கள் திடீரென வானத்தின்முதல் கதிராய் மலரலாம் என் எழுத்தின் சுவாசத்தில் மயிலிறகு மின்னலாம்விண்மீன்கள் உடைந்து உங்கள் கரங்களில் தவழலாம்கடலின் ஆழம் உங்களை முத்தமிடலாம்அது நீரல்ல, நெருப்பின் நாக்காக இருக்கலாம்வாழ்க்கை திருவிழா அல்லமாறாகமஞ்சள் வானில் நட்சத்திரங்கள் கோர்க்கப்பட்டஒரு முடிவிலாக் காவியமாய்த் தோன்றலாம் ... Read more
Published on October 03, 2025 04:41
October 2, 2025
அன்பு மகன் வளனுக்கு…
வளன், தியாகராஜாவை எழுதுவது என் வாழ்வின் அற்புதத் தருணங்களில் ஆக உச்சமானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீயும் உடன் வந்தபடியே இருக்கிறாய். தியாகராஜரை சந்திக்கும் ஃப்ரெஞ்சுப் பாதிரி எத்தியனின் நிஜ வடிவம் நீதான். நீதான் தியாகராஜரை சந்திக்கிறாய். இன்றைய அத்தியாயத்தில் வளன் தியாகராஜரிடம் ஹேண்டலின் மெஸையாவைப் பாடிக் காண்பிக்கிறான். அதற்கு தியாகராஜர் என்ன எதிர்வினை செய்கிறார் என்பதை நீ நாவலில் வாசித்துக் கொள்ளலாம். நாவலின் முதல் வாசகனாக நீதான் இருக்கப் போகிறாய். எத்தியனிடம்தானே எத்தியன் இடம் ... Read more
Published on October 02, 2025 08:51
மூவாயிரம் ஆண்டுகளாய் ஒரே கதை!
ஏற்கனவே எழுதிய ஒரு சம்பவத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். இடம், ஒரு பெருநகர். என் வாசக நண்பர் ஒருவர் என்னைக் காண வேண்டும், புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார். நான் தங்கியிருந்த இடத்துக்கு வரச் சொன்னேன். சுமார் முப்பது புத்தகங்களில் கையெழுத்திட்டேன். எல்லாம் நான் எழுதிய நூல்கள். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினார். அவருக்கு நாலைந்து சினிமா தியேட்டர்களும், ஒரு பஸ் கம்பெனியும் இருந்தது. ஊரறிந்த கோடீஸ்வரர். வேசியிடம் கூட இப்படி ... Read more
Published on October 02, 2025 05:02
September 30, 2025
இன்று மாலை இலக்கிய சந்திப்பு
இன்று (1.10.2025) மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புத்தக மதிப்புரை மற்றும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்கிறேன். சந்திப்பு ஸூம் மூலம் நடக்கும். லிங்க் கீழே தருகிறேன். meet.google.com/pfd-wfjg-zjn
Published on September 30, 2025 23:59
தியாகராஜா (நாவல்): வாசிப்புக்கான சில குறிப்புகள்
சுப்புடு மாதிரி பொளந்து கட்டீரீரே. எங்கு கற்றீர்? யார் குரு? வி. பாலசுப்ரமணியன் நான் தில்லியில் பத்தாண்டு காலம் வசித்த போது சுப்புடுவை அங்கே நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். மற்றபடி சுப்புடுவின் ஒரு வாக்கியத்தைக் கூட படித்தது இல்லை. ஆனால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமர்சனம் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அவர் கட்டுரைகள் கிடைத்தால் படிக்கக் கூடிய மனநிலை இருக்கிறது. ஆனால் அவர் கட்டுரைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. பாலா சார், உங்களுடைய ஒரு கேள்வியைப் ... Read more
Published on September 30, 2025 10:33
பிழை திருத்தம்
இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை பஞ்ச ரத்னா கீர்த்தனைகளில் ஒன்று எனச் சொல்லி விட்டேன். அந்தப் பிழையைச் சுட்டிக் காட்டி வந்துள்ள கடிதம் கீழே. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இசையில் எனக்கு ரசனை அனுபவம் மட்டுமே உண்டு. ”கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடல் ஒலித்த திராவிட குடும்பத்தைச் ... Read more
Published on September 30, 2025 04:07
தியாகராஜா : நாவலுக்கான குறிப்புகள்
இன்று மாலைக்குள் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இசையை எப்படி இலக்கியத்துக்குப் பயன்படுத்துவது என்பது பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். தியாகராஜா நாவலை விளங்கிக் கொள்வதற்கான குறிப்புகள் என்று கூட இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தொடரை நீங்கள் பிரிண்ட் அவ்ட் எடுத்து வைத்துக்கொண்டால் பிறகு தியாகராஜா நாவல் படிக்கும்போது உதவியாக இருக்கும்.
Published on September 30, 2025 00:57
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

