சாரு நிவேதிதா's Blog, page 5

September 25, 2025

A Gift of the Ages, For the Ages*

*Collector’s Edition | Limited Preview Box Set of three timeless Classics in* *Graphic form* This festive season, we quietly open the doors to something extraordinary. Before Qomix Classics launches worldwide, a select few are invited to experience the future of books — the world’s greatest literature reimagined as stunning graphic volumes. Over the next five ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 25, 2025 22:18

மன்னிப்பு

இந்த உலகிலேயே அதிக முறை மன்னிப்பு கேட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். அநேகமாக தினமுமே ஒருவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். பெரும்பாலும் பெண்களிடம். இப்போது ஒன் ஆன் ஒன் என்ற கொடூரமான நிலைமைக்கு வந்து விட்டதால் ஒருத்தரிடம் மட்டுமே மன்னிப்புப் படலம் ஓடுகிறது. என் கவிதைகள் அனைத்துமே மன்னிப்புக் கவிதைகள் என்று சொல்லி விடலாம். மனைவியிடம் கேட்ட மன்னிப்புக்கு நட்சத்திரங்களை எண்ணி விடலாம். முந்தா நேற்று கூடப் பாருங்கள், எங்கோ ஒரு மேடையில் போகன் சங்கரின் கதை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 25, 2025 04:21

September 24, 2025

மொழிபெயர்ப்பு மோசடி

நேற்று ஜெயமோகனின் இணைய தளத்தில் தனக்கு வந்த சில கடிதங்களை வெளியிட்டு அது பற்றித் தனது கருத்துகளை எழுதியிருக்கிறார் ஜெ. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை அது. அதில் வந்துள்ள கடிதங்களின் ஒருசில பகுதிகளை இங்கே தருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து என்னுடைய தீவிரமான செயல்பாடுகள் அனைத்துக்கும் காரணம், எந்தத் தனிப்பட்ட நபரின் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. இது பற்றி நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் யாருமே இதைக் கண்டுகொள்ளவே இல்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2025 18:33

சில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள்

இலக்கியமும் அதிகாரமும் என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இதற்கு முன்பு ஒருமுறை “மொழிபெயர்ப்புகளை முற்றாகப் புறக்கணியுங்கள்” என்று நான் எழுதியிருந்ததை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஊம்பர்ட்டோ எக்கோவின் ரோஜாவின் பெயர் நூலை நீங்கள் ஆங்கிலத்திலேயே படிக்கலாம்.  நீங்கள் நீண்ட காலமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்காமல் இருந்த ஒரு புத்தகம் தமிழில் வந்தால் அதை உடனடியாகப் படிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால் அந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2025 09:02

இலக்கியமும் அதிகாரமும்

Intellectual snobs. தமிழவன்.  நாகார்ச்சுனன்.  எம்டிஎம்.  மூவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர்கள்.  காரணம், மூவர்.  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா.  முதல் மூவரிடமும் சிருஷ்டிகரத்துக்கான கடுகத்தனை மூலப்பொருள் கூட இல்லாததால் அப்படி ஆனார்கள்.  அவர்களிடம் இருந்ததெல்லாம் வெறும் பெயர்கள்.  நல்ல ஞாபக சக்தி மட்டுமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது.  அதை வைத்துக்கொண்டு அவர்கள் மேய்ந்ததையெல்லாம் செரித்துக் கொள்ளாமல் அப்படி அப்படியே வாந்தி எடுத்தார்கள்.  சூழல் நாறியது.  இந்த மூவரில் தமிழவன் மட்டும் புனைகதையிலும் வாந்தி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2025 06:44

September 23, 2025

இயற்கையின் ஸிம்ஃபனி

நிலவு தன் குளிர்மையை இயல்பாய் வீசுகிறதுசூரியன் ஒளியை வாரி வழங்குகிறதுபூமி தன் சுழற்சியில் இயல்பாய் இயங்குகிறதுகோள்களும் கிரகங்களும் ஒருபோதும் மோதுவதில்லை. விருட்சங்கள் பகலில் பிராணவாயுவையும்இரவில் கரியமில வாயுவையும் உயிர்ப்புடன் வெளியிடுகின்றனநிழல் தந்து, கனிகளை அள்ளி வழங்குகின்றனபறவைகள் பறந்து, எச்சமிட்டு வனங்களை ஆக்குகின்றன வனங்கள் பெருகி மேகங்களை அழைக்கின்றனமழைத்துளிகள் பூமியைத் தழுவி இசைக்கின்றனகடல் ஆர்ப்பரித்தும், ஆழ்ந்த மௌனத்திலும் வாழ்கிறதுதென்றல் இனிமையை மென்மையாய்ப் பரப்புகிறது மலைகள் மௌனத்தில் உறுதியாய் நிற்கின்றனநதிகள் பயணித்து கதைகளைச் சுமக்கின்றனமேகங்கள் வானில் ஓவியங்களைத் தீட்டி மறைகின்றனவிண்மீன்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2025 05:37

தவறுகள், ஒரு பரிசோதனை

நான் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறேன்ஒரு மோசமான ஆய்வக உதவியாளனைப் போலசோதனைக் குழாயில் தவறுதலாகதவறான அமிலத்தை ஊற்றிவிடுகிறேன்பிறகு, மன்னிப்பு—ஒரு வெள்ளைத் துணியை அசைப்பது போலஎல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் ஆனால் இந்த முறைநான் நிறுத்திஒரு நுண்ணோக்கியை எடுத்துஎன் கண்களின் குவிமையத்தை மாற்றுகிறேன்ஏன் இந்த மூலக்கூறுகள்எப்போதும் ஒரே மாதிரி மோதிக்கொள்கின்றன?நான் என் கண்ணாடியில் இருந்து பார்க்கிறேன்ஆனால் அவளுடைய கண்ணாடி—அது வேறு வளைவைக் கொண்டிருக்கிறது. ஒருவேளைதவறுகள் என்பவைநமது ஒளிவிலகல் கோணங்களின் தவறுதான்ஒரு புதிய விலகல் கோணத்தில்நான் ஒளியைப் பிடிக்கலாம்அல்லது இருளை. ஆனால்அவளுடைய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2025 04:32

September 22, 2025

பெண் குழந்தைகள்

நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுக்க பலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கு – அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகப் போராடவோ குரல் கொடுக்கவோ யாருமே இல்லை. கீழ்க் காணும் செய்தியைப் படித்துப் பாருங்கள். பெண்களுக்கு ஆண்களை விட பெண்கள்தான் பெரிய எதிரி. A grandmother in Barkhedi village of Seoni Malwa in Narmadapuram district in Madhya Pradesh strangled her four-month-old granddaughter because she longed for a grandson, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 23:21

கடவுளும் கண்ணாயிரம் பெருமாளும்…

ஒரு கவிஞன் என்னைப் பார்த்துபாரதிக்குப் பிறகு நீதான் என்றான்நான் அவனை ஃபாஸிஸ்ட் என்றேன் ’உனக்கு சர்வதேசப் பரிசு வாங்கித் தருகிறேன்அதற்காக என்ன வேண்டுமானாலும்செய்வேன்’ என்றாள் ஒரு தோழிகண்கள் மின்னஅவள் எனக்கு ஃபுல்க்கா சென்னாசெய்து தரவில்லையெனநட்பை முறித்தேன் ஒருத்திஉனக்காக என் உயிரையும்தருவேனென்றாள்ஒருநாள் போதையில்அவளிடம் எல்லை மீற முயன்றதில்‘இனி உன்னைத் தனிமையில் சந்திக்கமாட்டேன்’ எனச் சொல்லி விட்டாள் என் மனையாள்எனக்காகச் செய்யாத தியாகமில்லைஅவளைத் திட்டி ஒரு நாவல் எழுதினேன் நான் மாறியே ஆக வேண்டும்அது கடவுள் கையில்தான் இருக்கிறது கடவுளை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 03:16

தொலைவில் மங்கும் மெல்லிய குரலாய்…

கண்ணே,நீ செய்யும்சிறுபிள்ளைச் செயல்களைநான் மன்னிக்கிறேன்ஆம், மன்னிக்கிறேன்.ஆனால்பிறிதொரு சமயம்இது குறித்துநீ வருந்தும்போதுஉன்னை ஆற்றுப்படுத்தநான் இருக்க மாட்டேன்என்பதுதான்வருத்தமாக இருக்கிறது. அப்போதுஎங்கோ நினைவின் மூலையில்மௌனத்தின் கண்ணாடியில்உடைந்து சிதறிய நட்சத்திரங்களைப் போலஉன் செயல்கள் ஒளிரும்ஒவ்வொன்றும் ஒரு கணம்ஒரு கீறல்மறைந்து மறையாத புன்னகையின் நிழல்ஆனால்காலத்தின் கரையில்மன்னிப்பு என்பதுஒரு கறையற்ற காற்றுதொட முடியாதுஉணர முடியும்அது உன்னைத் தழுவிபின் விடைபெறும்ஒரு கனவின் கடைசி மூச்சு போலநீ தனித்து நிற்கையில்உன் வருத்தத்தின் எதிரொலி மட்டுமேஉன்னுடன் இருக்கும்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2025 00:22

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.