சாரு நிவேதிதா's Blog, page 4
September 29, 2025
வருகை
உணவு உடை உறையுள்என்கிறார்கள்இம்மூன்றும் இல்லையேல்மனித வாழ்வு சாத்தியமில்லை ஒரு தோழன்ஒரு தோழிஅவ்வளவுதான் என் உலகம்அம்பது வயதில் தோழன்என் முதுமையின் நிழல் கண்டுபிச்சையெடுத்து வாழலாகாது எனதிரவியம் தேடி ஓடினான்விரைவில் திரும்புவான்எப்போதெனத் தெரியாது தோழிக்கு வயது இருபத்தேழு,அவளுக்கும் அதே தேவைஉணவு உடை உறையுள்பெண் வேறுயாரையும்சார்ந்து வாழ முடியாதுகாசு வேண்டும்காசுக்கு ஒரு வேலை வேண்டும்வேலைக்கு படிப்பு வேண்டும்அவளும் கிளம்பினாள்கொஞ்ச காலத்தில் திரும்புவாள் நானோ நாளையற்றவன்இக்கணத்தில் மூழ்கி வாழ்பவன்அனாதையென உணர்ந்தேன்மனம் எதிலும் செல்லவில்லைபடிக்க இயலவில்லைஎழுத இயலவில்லைஇசையும் கேட்க இஷ்டமில்லை. அப்பனிடம் கேட்கலாம்ஆனால்கோடியில் ஒரு ... Read more
Published on September 29, 2025 21:11
ஸ்வர ராக ஸூதாரஸ… (2)
இசையைப் பொறுத்தவரை இது உசந்தது, இது தாழ்ந்தது என்று சொல்வது அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இது ஒரு பொது விதி என்றாலும் எனக்கு பழைய கலைஞர்கள் பாடுவதே பிடித்திருக்கிறது. ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை யார் யாரெல்லாம் பாடியிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கேட்டால் செம்மங்குடிதான் உச்சத்தில் நிற்கிறார். அதேபோல் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தியும் மிகவும் சிலாக்கியமாக இருந்தது. ஆனால் சஞ்சய் சுப்ரமணியத்தை ஆர்வத்துடன் கேட்டும் என்னால் ஒன்ற முடியவில்லை. காரணம் என்ன என்று என்னையே ஆராய்ந்தேன். நேதுநூரி (1927–2014), ... Read more
Published on September 29, 2025 09:19
ஸ்வர ராக ஸுதாரஸ…
தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றான ஸ்வர ராக ஸூதாரஸவை செம்மங்குடியின் குரலில் கேட்டுக் கொண்டிருந்த போது இதை எழுதத் தோன்றியது. இந்தக் கீர்த்தனையில் செம்மங்குடியின் ஆலாபனையையும் நிரவலையும் ஸ்வரப் பிரஸ்தாரத்தையும் ரசிக்க முடியாதவர்கள் செவியின் பயன்பாட்டை இழந்தவர்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கீர்த்தனையின் பொருளைக் கூட விட்டு விட்டு மேற்கூறிய மூன்றையும் கவனியுங்கள். தேன் வந்து பாயும் காதினிலே… ஆலாபனை என்பது கீர்த்தனைக்கு முன், வரிகள் இல்லாமல், ஸ்வரங்களை (ச, ரி, க, ம, ப, த, ... Read more
Published on September 29, 2025 07:09
நிர்குண்
நான் எப்பவும் சௌந்தர்ய லஹரியில் நீந்தித் திளைப்பவன். அதனால் ஓஷோவைப் பிடிக்கும். மற்றபடி அவர் பேச்சைக் கேட்டதில்லை; எழுத்தைப் படித்ததில்லை. பெண்களை விட ஆண் அழகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒரு சௌந்தர்யன் நிர்குண். அவர் கவிதைகள் நான் நிர்குண், இது நிர்ஹோஸ்தியஸ் என்று முடியும். ஒரு நாளில் பத்து கவிதைகள் எழுதுவார் போல. நள்ளிரவில் எழுதியது சில. அதிகாலையில் எழுதுவது சில. எப்படியெனக் கேட்டபோது இரண்டு மணி நேரமே உறங்கும் நேரம் என்றார் நிர்குண். ஆன்மீகவாதி. ... Read more
Published on September 29, 2025 01:52
September 28, 2025
பிழை திருத்தம்
சாரு, வணக்கம்! ஒரு கவளம் எடுத்தவுடனேயே மிச்ச சோறு புழுவாகிவிடும் என்ற சாபம் திருதராஷ்டிரனுக்கு. துரியோதனனுக்கு இல்லை. துரியோதனனுக்கு தொட்டதெல்லாம் விளங்கும் நல் வரம் உண்டு. கையில் சொர்ண ரேகை உள்ளவன் என்பார்கள் அவனை. திருதராஷ்டிரனுக்கு இருந்த இந்த சாபம் கர்ணனால் நீங்கியதாம். அதாவது தேரோட்டி குழந்தை கர்ணனை எடுத்துக்கொண்டு கௌரவர்களின் அரண்மனைக்கு வந்ததாகவும் அப்போது திருதராஷ்டிரன் ஒரு தட்டில் இருந்த சோற்றிலிருந்து ஒரு கவளத்தை மட்டும் எடுத்துத் தின்றுவிட்டு (மீதி சோறு புழுவாகப் போனதால்), அடுத்த ... Read more
Published on September 28, 2025 03:43
September 27, 2025
உள்ளத்தின் ஒளியினாலே கண்டடைவீர்! : காயத்ரிக்கு ஒரு கடிதம்
Hi CharuJust wanted to let you know that the novel that I have translated has been out for sales yesterday. Need your blessings! Thanks!GayathriFri, Sep 26, 2:26 PM ஹாய் காயத்ரி,உங்கள் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிட்டு பதில் சொல்வதற்கு என்னை அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக நான் எனக்கு வரும் ஒரு கடிதத்தைக் கூட எழுதியவரின் அனுமதியின்றி வெளியிடுவதில்லை. ஆனாலும் அந்த விதியை இப்போது மீறுவதற்கு ஒரு முக்கிய ... Read more
Published on September 27, 2025 05:40
September 26, 2025
கிரிமினல் மூளை என்றால் என்ன?
ரோஜாவின் பெயர் நாவலில் நடந்த மோசடி பற்றி எழுதினேன். உடனே மோசடியில் ஈடுபட்ட நபர் எழுதுகிறார், “யோவ், உன் புத்தகங்களைப் பதிப்பிக்கும் ராம்ஜியே எனக்கு ஃபோன் பண்ணி உங்கள் மொழிபெயர்ப்புகளையும், மற்ற புனைகதைகளையும் கேட்கிறார், அப்புறம் என்னய்யா?” கடைசியில்தான் தெரிகிறது, ராம்ஜி ஃபோன் பண்ணியது இந்த மோசடி வேலை வெளியே வராததற்கு முன்பு. ராம்ஜி ஃபோன் பண்ணின போது ரோஜாவின் பெயரே வந்திருக்கவில்லை. இப்போது புரிகிறதா, கிரிமினல் மூளை எப்படி வேலை செய்யும் என்று?
Published on September 26, 2025 18:59
ச்சோர் மச்சாயே ஷோர் – 2
டேய் தம்பி, என்னடா இந்தப் பயல் நம்மை தம்பி தம்பி என்று சொல்கிறானே என மருளாதே. சிந்துபூந்துறையில் உன் வீட்டில் உன் அன்னையின் கையால் உணவருந்தியிருக்கிறேன். அப்போதே நீ என் தம்பியாகி விட்டாய். அது மட்டுமல்ல. உன் பாட்டி உரலில் இடித்துக் கொடுத்த மொளகாப் பொடியைத் தொட்டு சுடச் சுட சாப்பிட்ட இட்லியை ஏழு ஜென்மாவிலும் மறக்க இயலுமா? ஆனால் தம்பி, உனக்கும் எனக்கும் பொதுவான வேறோர் அன்னை இருக்கிறாள். அவளை க.நா.சு.வும் சி.சு. செல்லப்பாவும் இன்னும் ... Read more
Published on September 26, 2025 08:20
ச்சோர் மச்சாயே ஷோர்!- 1
நம் குறியியல் தம்பி மீண்டும் என் மீது சேற்றை வாரி அடித்திருக்கிறார். ஒரே வார்த்தை. வன்மம் கொண்டு தாக்குகிறேனாம். டேய் தம்பி. நீ சாட் ஜிபிடி, கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் போன்றவற்றால் மொழிபெயர்த்து உன் பெயரைப் போட்டுக் கொண்ட மோசடி வேலை பற்றிப் பலரும் சான்றுகளோடு எழுதி விட்டார்கள். அதற்கு பதில் சொல்லாமல் நீ நாங்களெல்லாம் உன் மீது வன்மம் கொண்டு தாக்குகிறோம் என்கிறாய். தம்பி, நீ இரண்டாயிரம் ஆண்டுகளாய் வளர்த்த வனத்தைத் தீயிட்டுக் கொளுத்த முனைந்தாய். ஊர்க் ... Read more
Published on September 26, 2025 07:48
கேணியில் கலந்த நஞ்சு
அப்படி ஒரு துயரக் கதையைபாரதத்திலும் படித்திருக்க மாட்டீர்கள்ஹரிச்சந்திரன் பட்ட துயரமெல்லாம்இதற்கு முன்னால் வெறும் தூசுஅப்படி ஒரு துயரத்தைக் கடந்து வந்தான்பழைய நண்பன் இருபத்தைந்து ஆண்டுகள்தன் வாழ்வை உயர்த்தினான்அப்படியென்றால்?மீண்டுமொரு திருமணம்புது மனைவிகுழந்தைகள்சொந்த வீடுகை நிறைய காசுஉடம்பில் செல்வப் பூச்சு இருபத்தைந்து ஆண்டுகள்கழித்துதான் வாழ்ந்த ஊரில்எட்டிப் பார்த்துயாரும் பார்க்காத வேளையில்ஊர்க் கேணியில்நஞ்சைக் கலந்தான்ஈராயிரமாண்டு வாழும் கேணிதேனாய் இனித்த நீர்நஞ்சாய்க் கசக்கிறது ஊரில் சில பைத்தியங்கள்அது அமிர்தம் என்றனகெட்ட வார்த்தையில் திட்டிய என்னைஆபாச மனிதன் என்றான் நண்பன் நள்ளிரவின் கண்ணாடி முன்நிழல்கள் ... Read more
Published on September 26, 2025 03:53
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

