சாரு நிவேதிதா's Blog, page 6
September 21, 2025
ஃபூக்கோவின் குஞ்சாமணி
காலையிலேயே ஒரு நண்பர் ஃபோன் செய்து, ஒரு இத்தாலிய நாவலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். உங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாதே, என்ன செய்வீர்கள் என்றேன். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புக்கு எந்த மொழியும் தேவையில்லை, க்ரோக்கிடம் கொடுத்தால் போதும், இத்தாலிய மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து விடலாம் என்றார். அதோடு விட்டிருக்கலாம். விதி யாரை விட்டது? என்ன நாவல் என்று கேட்டுத் தொலைத்தேன். ஃபூக்கோவின் குஞ்சாமணி என்றார். ஐயோ. பயப்படாதீர்கள். க்ரோக்கிடம் போவதற்கு முன்னால் கூகிள் ... Read more
Published on September 21, 2025 23:54
மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள்!
The Psychology of Money என்று ஒரு நூல். அதை ஒருவர் பணம்சார் உளவியல் என்று மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலில் sweat shop என்று ஒரு இடம் வருகிறது. அதை மொழிபெயர்ப்பாளர் இனிப்புக் கடை என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஸ்வெட்டுக்கும் ஸ்வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும், Codeக்கும் Codiceக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் மொழிபெயர்த்துக் கொடுக்கும் குப்பைகளைப் படிக்க வேண்டும் என்பது உங்கள் தலையெழுத்தா? ஸ்வெட் ஷாப் என்பது சித்ரவதைக் கூடம் போன்ற ஒரு இடத்தில் வேலை செய்வது. நீண்ட நேர ... Read more
Published on September 21, 2025 08:37
September 20, 2025
150/- ரூ.
காலையில் நண்பரிடமிருந்து ஜீபேயில் நூற்றைம்பது ரூபாய் வந்திருந்தது. நான் வாங்கச் சொல்லியிருந்த புத்தகம் கிடைக்கவில்லை என்று சொல்லி, நான் அனுப்பியிருந்த நூற்றைம்பது ரூபாயைத் திருப்பி அனுப்பியிருந்தார். புத்தகத்தின் விலை 150/- ரூ. எனக்கு கையில் ஆடம்பரமான ப்ரேஸ்லெட் அணிந்து கொள்ள வேண்டும் என்ற தீரா ஆசை உண்டு. பாண்டிச்சேரிக்காரர் அனைவரும் அணிவர். குர்மாத் என்று சொல்வர். வெள்ளியில் பெரிதாக அணிந்தால் ரவ்சாக இருக்கும். ஆனால் வெள்ளி எதுவுமே எனக்கு ஒத்து வருவதில்லை. என் தோலின் இயற்கைக்கு – ... Read more
Published on September 20, 2025 23:32
வாக்கில் சனி
என் அன்புள்ள போகன் சங்கர், ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியிருக்கும் பதிவு இது: “வாழ்க்கை ரொம்ப சிக்கலாகி விட்டது. நான் என்னால் சமாளிக்க முடியாத கடும் துயரங்களின் பாதுகாவலன் ஆகிவிட்டேன். நான் எம்டிஎம்மை பாதுகாப்பதாக சாரு வேறு திட்டுகிறார். முன்பு அவர் என்னை பாசிஸ்ட் என்று திட்டிக் கொண்டிருந்தார்.அதனுடைய தொடர்ச்சிதான் இது என்பது போல் தெரிகிறது. கடலூர் சீனுக்களின் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிகள்.ஆன்லைன் தள்ளுபடிகளில் நானும் ஒரு டால்பி அட்மாஸ் சவுண்ட் பார் குறைந்த விலைக்கு ... Read more
Published on September 20, 2025 22:20
மொழியும் நுண்ணுணர்வும்… : கடலூர் சீனுவின் கடிதத்தை முன்வைத்து
டியர் சாரு, தளம் வாசித்தேன்.எம்.டி.எம். மொழியாக்க சர்ச்சையில் மிக முக்கியான ஒன்று எது என்றால், நான்கு ஐந்து எழுத்தாளர்கள் அந்த நூலை வாசித்ததாகவும் தன்னால் “இயல்பாக” வாசிக்க முடிந்ததாகவும், சிரமமான சில இடங்களை இரண்டு முறை வாசித்தால் புரிந்து விடுகிறது என்றும் போட்டிருக்கும் பதிவுகள். மொழி சார்ந்த நுண்ணுணர்வு என்ற ஒன்றே கிஞ்சித்தும் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு மொழிபெயர்ப்பை செய்ய முடியும். மொழிசார்ந்த நுண்ணுணர்வு கிஞ்சித்தும் இல்லாத ஒருவரே ”என்னால் சரளமாக வாசிக்க முடிந்தது, ... Read more
Published on September 20, 2025 06:38
September 19, 2025
ரோஜாவின் பெயர்: என்ன நடந்திருக்கிறது?
சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மீது எனக்கு ஒருபோதும் மரியாதை இருந்ததில்லை. இருந்தாலும் நண்பர் பாலா லிங்க் அனுப்பி வைத்திருந்ததாலும், சனி ஞாயிறுகளில் என் தோழர் ஃபோனில் பேச அகப்பட மாட்டார் என்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்ததாலும் ருஷ்டியின் ஒரு நாவலைப் பற்றி ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என ஆர்வம் கொண்டு அதைப் படிக்கலானேன். ஜெயமோகனும் நானும் ரசனையிலும், தத்துவ நோக்கிலும், மற்றும் பல விஷயங்களிலும் துருவ வித்தியாசங்கள் கொண்டவர்கள் என்றாலும், இது போன்ற விஷயங்களில் ஒத்த ... Read more
Published on September 19, 2025 19:00
வன்மமும் சாருவும்: பிச்சைக்காரன்
பிச்சைக்காரன் தன் ப்ளாகில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள். என்னைப் பற்றிய மிக முக்கியமான ஒரு தகவலைக் கொண்ட கட்டுரை இது. இதை நானே மறந்து விட்டேன். எம்.டி.எம். நான் வன்மத்தோடும் முன்முடிவோடும் அவரது மொழிபெயர்ப்பை அணுகினேன் என்ற அபாண்டப் பழியை சுமத்தியிருக்கிறார். எனக்கு யார் மீதும் வன்மம் கிடையாது. ஜெயமோகனுக்கும் எனக்கும் வெட்டுப்பழி குத்துப்பழியாகக் கிடந்த போது நான் எழுதிய ஒரு கட்டுரை பற்றி பிச்சைக்காரன் மேற்கோள் காண்பித்து எழுதியிருக்கிறார். http://www.pichaikaaran.com/2025/09/b...
Published on September 19, 2025 09:17
சன்னி லியோனின் “பெரும் காட்சி” – அராத்து
ரோஜாவின் பெயர் நாவலில் துணைத் தலைப்பான “Naturally, a manuscript” என்பதை “இயற்கையாகவே, ஒரு கைப்பிரதி” என மொழிபெயர்த்திருப்பதை சாரு நிவேதிதா சுட்டிக் காட்டி, “இயல்பாகவே, இது ஒரு கைப்பிரதி” என வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு எம் டி எம் தற்போது ஒரு வியாக்யானம் கொடுத்து இருக்கிறார். அதைப்படித்தால் அது ரோஜாவின் பெயர் நாவல் மொழிபெயர்ப்பை விட கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. இயற்கையாகவே ஒரு கைப்பிரதி என்பதற்கு எம் டி எம் கொடுக்கும் ... Read more
Published on September 19, 2025 08:43
ஒரு சிறிய விளக்கம்
ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் Pierre Guyotat பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் தனது நாவல்களில் ஒரு விநோதமான மொழிநடையைக் கையாள்கிறார். எந்த வாக்கியமும் முழுசாக இருக்காது. என்னுடைய கர்னாடக முரசு, ஜோக்கர் போன்ற கதைகளைப் படித்திருக்கிறீர்களா? அப்படித்தான் ஒவ்வொரு வார்த்தையும் துண்டு துண்டாக இருக்கும். நாவல் முழுதுமே அப்படித்தான். நான் பியர் க்யூத்தாவை ஆங்கில மொழிபெயர்ப்பில்தான் படித்தேன். புரிந்தது. அதை நான் தமிழில் மொழிபெயர்த்தால் அப்படியேதான் மொழிபெயர்ப்பேன். ஆனால் ஊம்பர்ட்டோ எக்கோ, பியர் க்யூத்தாவின் மொழியில் துண்டு துண்டாக ... Read more
Published on September 19, 2025 08:35
யார் மீதும் வன்மம் இல்லை!
இன்றுதான் முதல் முறையாக குறியியல் பேராசிரியர் என் பெயரை சாரு நிவேதிதா என்று அவர் வாழ்நாளில் உச்சரித்திருக்கிறார். இதுவரை அவர் என் எழுத்து பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. விஷயம் என்னவென்றால், முழுமையான புறக்கணிப்பு. அது ஒரு தந்திரமான உபாயம். வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிப் பேசுவேன். உள்ளூர் எழுத்தாளன் மயிருக்கு சமானம். ஆனால் நான் அப்படி அல்ல. பாராட்டாக இருந்தாலும் விமர்சனமாக இருந்தாலும் இரண்டையும் பேசுவேன். உண்மையில் நான் பேராசிரியர் ... Read more
Published on September 19, 2025 04:20
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

