இசையைப் பொறுத்தவரை இது உசந்தது, இது தாழ்ந்தது என்று சொல்வது அர்த்தமற்றதுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இது ஒரு பொது விதி என்றாலும் எனக்கு பழைய கலைஞர்கள் பாடுவதே பிடித்திருக்கிறது. ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை யார் யாரெல்லாம் பாடியிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கேட்டால் செம்மங்குடிதான் உச்சத்தில் நிற்கிறார். அதேபோல் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தியும் மிகவும் சிலாக்கியமாக இருந்தது. ஆனால் சஞ்சய் சுப்ரமணியத்தை ஆர்வத்துடன் கேட்டும் என்னால் ஒன்ற முடியவில்லை. காரணம் என்ன என்று என்னையே ஆராய்ந்தேன். நேதுநூரி (1927–2014), ...
Read more
Published on September 29, 2025 09:19