இந்த உலகிலேயே அதிக முறை மன்னிப்பு கேட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். அநேகமாக தினமுமே ஒருவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். பெரும்பாலும் பெண்களிடம். இப்போது ஒன் ஆன் ஒன் என்ற கொடூரமான நிலைமைக்கு வந்து விட்டதால் ஒருத்தரிடம் மட்டுமே மன்னிப்புப் படலம் ஓடுகிறது. என் கவிதைகள் அனைத்துமே மன்னிப்புக் கவிதைகள் என்று சொல்லி விடலாம். மனைவியிடம் கேட்ட மன்னிப்புக்கு நட்சத்திரங்களை எண்ணி விடலாம். முந்தா நேற்று கூடப் பாருங்கள், எங்கோ ஒரு மேடையில் போகன் சங்கரின் கதை ...
Read more
Published on September 25, 2025 04:21