1 என் உறவுகள்—என் புதல்வன்,என் மனையாள்,என் நண்பர்கள், தோழிகள்,மற்றும்என்னையறிந்த அனைவருமே—‘என்னைப் பற்றி எழுதாதே’ என்றார்கள். பழைய நண்பனொருவன் அழைத்தான்.கால் நூற்றாண்டு ஆகிவிட்டது.குமுதத்தில் என் எழுத்தைப் பார்த்தவன்,இரு நிமிடம் பேசினான்.முடிக்கையில்,‘என்னைப் பற்றி எழுதி விடாதே’ என்றான்.அதையே எழுத நேர்ந்தது. கடந்த வாரம் ஒரு நண்பர்,ஐந்தாண்டுகளாய் எதேச்சையாய்ப் பார்த்தார்.காஃபி குடித்தோம்.‘என்ன, இப்படி இளைத்து விட்டீர்கள்?’ என்றார்,குரலில் உண்மையான அன்புடன்.தொடர்ந்து சொன்னார்:‘நாளை என்னைத் திட்டிஎழுதி விடாதீர்.’ இப்போது,நீயும் சொல்கிறாய், என் இறைவி,‘என்னைப் பற்றி எழுதாதே.’ 2 கவிஞனே!மற்றவருக்கும் எனக்கும்ஒரு அடிப்படை வித்தியாசம் ...
Read more
Published on August 18, 2025 00:20