பொதுவாக ஃபேஸ்புக்கில் என் கவிதைக்கு பன்னிரண்டு பேர் விருப்பக்குறி இடுவார்கள். அந்தப் பன்னிரண்டு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். ஆனால் யேசுவின் கண்ணீர் பலரையும் பதறச் செய்திருக்கிறது. ஏகப்பட்ட நண்பர்கள் எனக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினார்கள். ஆச்சரியகரமாக நான் ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்பு கொள்ளாத என் தோழிகளில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி எழுதியிருக்கிறார்கள். ஒரு கடிதம்: நீங்கள் துக்கத்தில் இல்லை. பரவசத்தில் வாழ்கிறீர்கள். ...
Read more
Published on August 18, 2025 09:08