Jeyamohan's Blog, page 20

September 11, 2025

சமயவேல்

தமிழ்க் கவிஞர். எண்பதுகளில் எழுதவந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் சமயவேலும் ஒருவர். அலங்காரமற்ற இயல்புமொழிக் கவிதையை (Plain Poetry) முதலில் அறிமுகப்படுத்தியவர் என விமர்சகர்களால் சமயவேல் அடையாளப்படுத்தப்படுகிறார். சமயவேல் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதி வருகிறார்.

சமயவேல் சமயவேல் சமயவேல் – தமிழ் விக்கிகவிதைத் தொகுப்புகள்காற்றின் பாடல் (1987)அகாலம் (1994)தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்)அரைக்கணத்தின் புத்தகம் (2007)மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010)பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014)இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019)சமகாலம் என்னும் நஞ்சு (2021)மின்னிப் புற்கள்சிறுகதைத் தொகுப்புஇனி நான் டைகர் இல்லை (2011)கட்டுரைத் தொகுப்புஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017)புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018)மொழிபெயர்ப்பு நூல்கள்அன்னா ஸ்விர் கவிதைகள் (2018)குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019)மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2025 11:33

முடிவிலியின் புன்னகை

கொற்றவை படிப்பதற்காகவே கொடுங்கள்ளூர் கண்ணகி (வி.ஆர்.சந்திரன், தமிழில் ஜெயமோகன்), சிலப்பதிகாரம் நாவல் வடிவில் (கே.ஜி.ஜவர்லால்), தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் (ஜெயமோகன்) ஆகிய நூல்களை படித்தேன். இந்நூல்கள் கொற்றவையின் பல பகுதிகள் புரிவதற்கு உதவியாக இருந்தன.

குமரியில் ஆரம்பிக்கும் கதை கடல் கொண்ட சம்பாபுரி அன்னையின் கால் தொட்டு, புகாரில் பயணிக்கிறது. புகாரில் ஒன்றும் அறியாத பேதையாக இருக்கும் கண்ணகி, ஐந்நிலத்தைக் கடந்து மதுரையில் முப்புரம் எரித்த கொற்றவையாக மாறி நிற்கும் கதையே இந்த கொற்றவை.

கதையின் ஆரம்பத்தில் வரும் பழம் பாடல் சொன்னதில் பல வகையான வார்த்தைகளின் தொடக்கம் அல்லது மொழியின் தொடக்கத்தை கூறும் வாக்கியங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். உதாரணமாக

‘ நிரம்பியிருந்தமையாலும் நிரந்திருந்தமையாலும் நீர் என்றும், கடந்தமையால் கடல் என்றும் சொல்லப்பட்ட ஓய்வறியாப் பெருவெளியிலிருந்து காலத்தின் முதல் விளிம்பிலிருந்தே தொடர்ந்து வரும் அந்தச்சொல் மீண்டும் மீண்டும் பிறந்து வந்தபடியே இருந்தது.’

‘ஆ என்று காலப்பசிகொண்டு வாய்திறந்து வரும் அலை நா மடக்கி பெருவெளியில் ஒரு மிடறை விழுங்கித் திரும்பியது. அதை அவன் ‘ஆழம்’ என்றறிந்தான். ஆழமேயான ஆழி அலைகளால் தன்னை மறைத்த பேரமைதி. அதன் விளிம்புகள் ஊழி எனப் பெயர் கொண்டன.’

 அதைப்போலவே ஓம், மால் என்று ஒவ்வொரு சொல்லின் தொடக்கத்தையும் கூறி மொழி இவ்வாறு தான் தொடங்கி இருக்கும் என்று நம்மை எண்ண வைக்கிறார். எத்தனை முறை கடல் கொண்டாலும் தமிழ் பொங்கி பெருகி வளர்ந்த கதையில் கொற்றவை தொடங்குகிறது. 

         புகாரில் மாதவியிடம் இருந்து பிரிந்து கண்ணகியுடன் கோவலன் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை நோக்கி செய்யும் பயணத்தில் கதை சூடு பிடிக்கிறது. புன்னைக்காட்டு நீலி கவுந்தி அடிகள் உருவத்துடன் கண்ணகிக்கு துணையாக வருகிறாள். ஐவகை நிலங்களையும் கடந்து பல்வேறு மக்களை சந்தித்து பல இன்னல்களை கடந்து மதுரையை அடைகின்றனர். 

ஐவகை நிலங்களையும் கண்ணகி நீலியின் துணையுடன் பல்வேறு கண்கள் உடன் நோக்குகிறாள். நெய்தலை சுறா மீனின் கண்களுடனும், மருதத்தை தவளையின் கண்களிலும், குறிஞ்சியை குரங்கின் கண்கள் பெற்றும், பாலையை செந்நாயின் கண்களோடவும், முல்லையை பசுங்கன்றின் கண்களிலும் காண்கிறாள். பயணத்தின் ஊடாக நீரர மகளிரின் கதை, ஆதிமந்தியின் கதை, வள்ளி முருகனின் கதை, கொற்றவையின் கதை என்று பல்வேறு கதைகளுடன் நாமும் பயணிக்கிறோம். 

வெளியில் இருந்து பார்க்கும் பொழுது செழிப்பாக இருக்கும் மதுரை உள்ளே நீதி இல்லாமலும், மக்கள் மீது அக்கறை செலுத்தாத அரசாலும் அழுகி கிடைக்கிறது. அனைத்தையும் தூய்மையாக்கும் தீயினால் அதை சுத்தப்படுத்த வந்தாள் தாய். நம் திருவிழாக்களில் ஊருக்கு சன்னதம் வந்தாலே அந்த இடத்தையே கலக்கி விடுவார்கள். இந்தக் கதையில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சன்னதம் வந்து அவர்களுக்கு நடுவே கொற்றவையாக ஒற்றை முலை அறிந்து கண்ணகி வரும் காட்சியை நினைத்துப் பார்த்தாலே அச்சம் தொற்றிக் கொள்கிறது. மதுரையை எரித்து நீதியை நிலை நாட்டிய அன்னை எங்கேயும் நிற்காமல் நடந்து சேர மண்ணில் சாக்கிய நெறியை தழுவி கோவலனுடன் விண்ணகம் புகுகிறாள். 

காடு மலை ஏறி அன்னையை தரிசிக்க செல்லும் சேரன் செங்குட்டுவனின் கதை அடுத்தது. இளங்கோவின் கதையுடன் ஐயப்பனின் கதையை இணைத்திருக்கிறார் ஆசிரியர். சீத்தலைச் சாத்தனார் எரிந்த மதுரையை மீண்டும் சென்று பார்த்த கதை சுவாரஸ்யமானது. 

பசியுடன் இருக்கும் மக்களுக்கு தீராமல் அன்னம் அளிக்கும் மணிமேகலையின் கதை, கொடுங்கலூர் பகவதியின் கதை, டச்சு வீரர்கள் அன்னையின் சக்தியை உணர்ந்த கதையானது கொடுங்கள்ளூர் கண்ணகி புத்தகத்திலும் வரும்.

குமரியில் ஆரம்பித்த கதை இறுதியில் ஆசிரியர் தன் குடும்பத்துடன் குமரியில் கடலையும் அன்னையையும் தரிசித்த கதையுடன் முடிகிறது. 

கதை படித்த பிறகு எனக்கு தோன்றியது இது. ஆரம்பத்தில் இந்த புதிய நடை கொஞ்சம் தடுமாற வைக்கிறது. தளிர் நடையுடன் தட்டு தடுமாறி நடந்தாலும் கோவலன் கண்ணகி பயணத்துடன் வேகமாக நடை போடுகிறோம். மதுரைக்குள் நுழைந்தவுடன் நம் நடை ஒட்டமாகிறது. சேர நாட்டில் நுழைந்த பிறகு ஓட்டம் மீண்டும் நடையாகிறது. இறுதியில் குமரியின் கடற்கரையில் அன்னையின் கதையை மனதில் அசை போட்டபடி அமர்ந்து வானை பார்க்கும் போது நமக்கு தோன்றுகிறது ” நீலம் ஒரு புன்னகை “.

கிரிதரன் (முகநூலில்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2025 11:31

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று இருப்பேன்

மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45.

மதுரை புத்தகவிழாவில் இன்று (12 வெள்ளி 2025) மாலை 6 முதல் இருப்பேன். நண்பர்களை வரவேற்கிறேன்

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் கிடைக்குமா என விசாரிக்கிறார்கள். மதுரை புத்தகவிழாவில் யாவரும் புத்தக அரங்கில் அவர் நூல்கள் கிடைக்கும்.

எங்கள் புதிய நூல்கள்

ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.

ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.

பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.

சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.

தினமலரில் தொடராக வந்த எளிமையான கட்டுரைகள். இவை நம் ஜனநாயகத்தின் அடிப்படைகளை விவாதிக்கின்றன. நாம் அறிந்த தகவல்களை அறியாத கோணத்தில் காட்டி இன்றியமையாதவற்றைப் புரியவைப்பது இவற்றின் பாணி.

நாஞ்சில்நாடனைப் பற்றிய ஜெயமோகனின் நூல். அவரை பிரியமான நகைச்சுவையுடன் மதிப்பிடுகிறது, நட்பை விவரிக்கிறது.

 

எங்கள் நூல்கள்

தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.

குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்

பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.

மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.

மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.

அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.

தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.

சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.

முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற  அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.

முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.

தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.

பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.

தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.

இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.

காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.

இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செய்த பயணத்தின் நேரடிப்பதிவுகள். வடக்கின் அரசியலையும், பண்பாட்டையும் எளிய கோட்டுச்சித்திரம் வழியாக தெரியவைப்பது இந்நூல்.

ஜெயமோகன் கல்லூரிப்படிப்பை விட்டு அரைத்துறவியாக வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று திரும்பி வந்த அனுபவங்களைப் பேசும் நூல் இது. அவரது புனைவுகளுக்கு நிகரான உத்வேகத்துடன் சொல்லப்பட்ட நிகழ்வுகள் கொண்டது. விஸ்வநாதன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2025 11:31

Vijay and alternate politics

It is true that power politics is impossible without compromise. But the real meaning of democracy is people participating in the power and sharing it. So if the majority of people are away from power politics, it means letting the thugs and greedy people handle the power of a state.

Vijay and alternate politics

இந்தியப்பெற்றோர் குழந்தைகளை அரசர்களைப் போல வளர்க்கிறார்கள். 22 வயதில் படிப்பு முடிந்ததும் அக்குழந்தை வேலைதேடும்போது பிச்சைக்காரன் ஆகிறர்கள். வேலைக்குப்பின் அடிமை ஆகிறது. இந்த மாபெரும் வீழ்ச்சி ஒரு பெரிய உளச்சிக்கலாக ஆகிவிடுகிறது.

இளையதலைமுறையும் பெற்றோரும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2025 11:30

September 10, 2025

சூஃபி இலக்கியம், நாகர்கோயில் நிகழ்வு

சென்ற 10 செப்டெம்பர் 2025 அன்று பெங்களூரில் வாழும் எழுத்தாளர் எச். முகம்மது சலீம் அவர்கள் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாகர்கோயில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நிகழ்ந்தது. நண்பர் ஹமீம் முஸ்தபா நூல்வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நண்பர் ஷாகுல் ஹமீது வண்டி ஓட்ட நான் காலை பத்துமணிக்கு கிளம்பிச் சென்றேன்.

நூலை நான் வெளியிட்டேன், மதிப்புக்குரிய மூத்தபடைப்பாளி பொன்னீலன் பெற்றுக்கொண்டார்.விழாவில் நண்பர் நிஷா மன்ஸூர் சூஃபி மரபு பற்றியும், தமிழக சூஃபி இயக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிமுகம் செய்து நூலின் கருத்தமைப்பு மற்றும் உணர்வுநிலை பற்றிய உரை ஒன்றை ஆற்றினார்.ஹோலி கிராஸ் தமிழ்த்துறைத் தலைவி வரவேற்புரை வழங்க, ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் தலைமையுரை ஆற்றினார். நான் வெளியீட்டுரை ஆற்றினேன்.

நீண்ட நாட்களுக்குப்பின் பொன்னீலனைப் பார்த்தேன். அவருடன அவருடைய மூத்த மகள் வந்திருந்தார்.  மகள் உதவியுடன் செந்தீ நடராசன் வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் பேரா.ஜனார்தனனை பார்த்தேன். அனீஷ்கிருஷ்ணன் நாயர் வந்திருந்தார். தக்கலை ஹலீமா, அனந்தசுப்ரமணியம், ஜி.ஜவகர் என பல நண்பர்களை பார்த்தேன். நெல்லையில் இருந்து கவிஞர் மதார், மற்றும் அழிசி பதிப்பகம் நடத்திவரும் ஶ்ரீனிவாச கோபாலன் என பல நண்பர்கள் வந்திருந்தார்கள்.

நான் உரைக்குப்பின் விடைபெற்று கிளம்பினேன். நிஷா மன்ஸூரும் என் இல்லத்திற்கு வந்தார். ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிச்சென்றார். ஒரு மகிழ்ச்சியான நாள்.

சூபி நிகழ்வில் என் உரை பதிவுசெய்யப்படவில்லை. என் நினைவிலிருந்து சுருக்கத்தை இவ்வாறு அளிக்கிறேன்.

சூபி மரபு, குமரியின் சூஃபிகள் மற்றும் நான்.

நண்பர்களே, நாங்கள் நண்பர்களுடன் இணைந்து குரு நித்யா பேரில் நடத்திவரும் முழுமையறிவு என்னும் கல்வி இயக்கத்தில் சூஃபி மெய்யியல் பயிற்றுவிக்கும் நண்பர் நிஷா மன்ஸூர் சிறப்பான ஓர் உரையை ஆற்றினார். இங்கே நான் அழைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று முழுமையறிவு வகுப்புகள் என நினைக்கிறேன். அதன்பொருட்டு நன்றி.

இந்த அவையில் ஒரு நூலை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ‘சூஃபியிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. (குட்வேர்ட் புக்ஸ்). இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம். நான் வழக்கமாக மொழியாக்க நூல்களைப் பரிந்துரைப்பதில்லை, மொழியாக்கங்கள் படிக்கவே முடியாதபடிச் செய்யப்படுவது வழக்கம். இந்நூல் மிகச்சிறப்பான நடையுடன் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலில் ஃபரீதா சூஃபி மரபின் தொடக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறார். சூஃபி என்னும் சொல் திண்ணை, கம்பிளி, வரிசை என்னும் வேறுவேறு சொற்களில் இருந்து உருவாகி வந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அரேபியாவுக்கு வெளியே பாரசீகத்திலும் கீழைநாடுகளிலும்தான் இது ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்தது. நபியின் திண்ணைத்தோழர்கள் என்னும் மாணவர் அணி அவர் வாழ்வுடனேயே பிற உடைமைகளோ, பிற வாழ்க்கையோ இல்லாமல் பயணித்தது. அவர்களிடமிருந்தே சூஃபி என்னும் மனநிலை உருவாகி வந்தது.

சூஃபி இயக்கம் கீழைநாட்டில் மிகப்பெரிய பண்பாட்டுச் செல்வாக்கைச் செலுத்திய ஒன்று. ஆன்மிக நோக்கம் கொண்டு அதை அணுகலாம். மதநம்பிக்கை சார்ந்தும் அணுகலாம். இவை ஏதும் இல்லாதவர்களுக்குக் கூட அவ்வியக்கம் முக்கியமான ஒன்று. அதன் மூன்று தளங்கள் முக்கியமானவை. அறிவார்ந்ததும் தத்துவம் சார்ந்ததுமானதுமான முதற்தளம் கீழைச்சிந்தனையை, இந்திய சிந்தனையை அறிய முயலும் எவருக்கும் தவிர்க்கமுடியாது. அதன் பங்களிப்பின்றி கீழைச்சிந்தனை என்பதே இல்லை. இரண்டாவது தளம், உணர்வுபூர்வமானது, கலை சார்ந்தது. வேறு எதன்பொருட்டு இல்லை என்றாலும் சூஃபி இசையின் பொருட்டாவது அதை ஓர் அறிவியக்கவாதி அறிந்திருக்கவேண்டும். மூன்றாவது தளம் அதன் மெய்யியல், மெய்ஞானத்தளம்.

 

என் மகன் அஜிதன் இதைப்பற்றி பேச என்னைவிடவும் தகுதியானவன். படித்தேயாகவேண்டிய ‘ஐம்பதாயிரம் பக்கங்கள்’ என சூஃபி தத்துவம் பற்றி பேசும்போது ஒரு முறை குறிப்பிட்டான். மேலைநாட்டு பிளேட்டோவிய கருத்துமுதல்வாதத் தத்துவத்துடனும், கீழைநாட்டு மெய்யியல் மரபுகளுடனும் விவாதித்து விரிந்த ஒரு தத்துவப்பெரும் பரப்பு அது. நாம் சூஃபிகளை தத்துவம் கடந்தவர்கள், மெய்ஞானிகள் என நினைக்கிறோம். அது சரிதான். ஆனால் அத்தகைய நுண்ணிய அகப்பயணத்தை கருத்துநிலையாக ஆக்கும்போது உயர்தத்துவம் இயல்பாக உருவாகி வருகிறது. அதற்கான உருவகங்களும் உருவாகி வருகின்றன. (பாலைவனத்தை கடத்தல் என்னும் அனுபவத்தை சூஃபி உருவகமாக கொண்டு அஜிதன் எழுதிய மருபூமி இந்த தளத்தில் தமிழில் எழுதப்பட்ட மகத்தான ஆக்கங்களில் ஒன்று)

சூஃபி இசை பற்றி நான் பேசத் தகுதியானவன் அல்ல. என் அறிதல் மிகக்குறைவானது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஒரு தனிநபரின் குரல்வழி மீட்டலாக, அகவெளிப்பாடாக நீளும் ‘மெலடி’ என்னும் இன்னிசை மரபே கீழைநாட்டு இசை. அந்த இசையில் குரல்வழியாகவே ஒரு சேர்ந்திசை (ஆர்கெஸ்ட்ரல்  தன்மை) உருவானது சூஃபி இசைமரபு வழியாகவே. அதுவே இந்து மரபுக்குள் பஜனை சம்பிரதாயமாக வந்தமைந்தது. அஜ்மீரில் மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் தர்காவில் அதைக் காணலாம். ஒருவர் பாட பலர் இணைந்துகொள்வார்கள். பாட்டு சென்றுகொண்டே இருக்கும்.பாடுபவர்கள் கிளம்பிச்செல்வார்கள், புதியவர்கள் வந்து அமர்வார்கள். (அஜிதனின் அல்கிஸா என்னும் நாவலில் இந்த அனுபவம் அற்புதமாகக் நிகழ்த்தப்பட்டுள்ளது)

ஃபரீதா சூஃபி மரபின் இரண்டு மனநிலைகளை குறிப்பிடுகிறார். அதை சூஃபியிசத்தின் அடிப்படையாகவே கொள்ளலாம். ஒன்று, ‘நபியின் கால்தூசிக்கு நிகரல்ல உலகியல்’ என்னும் வரி. இரண்டு ‘எல்லா பொழுதும் இறைவனுக்கே’ என்னும் வரி. அவைதான் சூஃபிகளின் ஆதாரசிந்தனையாக உள்ளது. சூஃபி இயக்கம் அந்த இரண்டு மனநிலைகளின் நீட்சியே.

ஃபரீதா தன் நூலில் சிஷ்டி மரபு. காதிரியா மரபு, சுஹ்ரவர்தியா மரபு, நக்ஷ்பந்தி மரபு, ஃபிர்தௌசி மரபு ஆகிய ஐந்து மரபுகள் சூஃபி இயக்கத்தில் இந்தியாவில் உள்ளன என்று குறிப்பிடுகிறார். தமிழகத்திலும் அந்த மரபுகள் உள்ளன. இங்கே காதிரியா மரபே (முகையிதீன் ஆண்டவர்) முதன்மையாக உள்ளது என அறிந்துகொண்டேன்.

நண்பர்களே, இன்னொரு நூலை நான் இங்கே குறிப்பிடவேண்டும். சூஃபி மரபு பற்றிய என் சிந்தனையை வகுத்தளித்த நூல்களில் இதுவும் ஒன்றி. The Foundations of the composite culture in india. என்னிடம் உள்ள பிரதியை காட்டுவதற்காகக் கொண்டுவந்துள்ளேன். நூலாசிரியர் மாலிக் முகமது அவர்கள் பத்மஶ்ரீ விருது பெற்றவர். கோழிக்கோடு பல்கலை துணைவேந்தராக இருந்தவர். நான் அவரை ஒருமுறை சந்தித்ததுண்டு, ஓரிரு சொற்கள் பேசினேன். அவர் நாகர்கோயிலில் வாழ்ந்தார், 2007ல் கொள்ளையர்களால் அவரும் மனைவியும் கொல்லப்பட்டார்கள். (செய்தி).

மாலிக் முகம்மது அவர்கள் தன் நூலில் சூஃபி மரபு இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்புகளை சுருக்கமாகச் சொல்கிறார். (சூஃபி மரபு பற்றிய அவருடைய இன்னொரு நூல் விரிவானது). இஸ்லாமிய ஆட்சியாளர்களின் போர்கள், அதிகாரப்போட்டிகள் வழியாகவே நாம் அவர்களை அறிந்துள்ளோம். அது சூழ்ச்சி என நான் நினைக்கவில்லை, அதுவே பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாற்றெழுத்து முறை. ஆனால் ஐம்பதாண்டுகளாக உருவாகி வந்துள்ள வரலாற்றெழுத்துமுறை என்பது மக்கள் வாழ்க்கையை அளவீடாகக் கொண்டு வரலாற்றை எழுதுவது. அந்நோக்கில் மாலிக் முகமது முகலாயர் கால ஆட்சிமுறை, சமூகமுறையை மதிப்பிடுகிறார்.

அவர் ஓர் இரட்டைநிலை ஆட்சியை உருவகிக்கிறார். அதை இப்படிச் சொல்லலாம். காஸி- சூஃபி முறை. காஸிகள் இஸ்லாமிய நீதிபதிகள் மற்றும் நிதியதிகாரிகள். அவர்கள் மரபார்ந்த இஸ்லாமிய ஆட்சியை அரசப்பிரதிநிதிகளாக நின்று நிகழ்த்தினர். இஸ்லாமிய மதக்கொள்கைகளை செயல்நெறிகளாகக் கொண்டனர். சூஃபிகள் நெகிழ்வான பார்வைகொண்டவர்கள், அமைப்பு சாராதவர்கள். அவர்கள் இஸ்லாமிய மையப்போக்கைக் கடந்துசென்றவர்கள். அதிகாரத்திற்கு வெளியே எளிய மக்களுடன் வாழ்ந்தவர்கள். பிற மதங்களுடன் இசைவை உருவாக்கியவர்கள். அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கருத்தியல் ஏற்பை உருவாக்கினார்கள். ஆகவே இஸ்லாமிய ஆட்சி அவர்களை ஆதரித்தது. இந்தியாவின் சமூகத்தை ஒருங்கிணைவும் ஒத்திசைவும் உள்ளதாக ஆக்க சூஃபிகளே பெரும்பங்காற்றினர்.  

தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள் என்னும் இந்நூலில் முகம்மது சலீம் அவர்கள் குமரிமாவட்ட சூஃபி இறைநேசச்செல்வர்கள் பற்றிய ஆய்வுகளை தொகுத்துள்ளார். குமரிமாவட்ட சூஃபி ஞானிகளில் முதன்மையானவரும் மூத்தவருமான தக்கலை பீர்முகம்மது அப்பா பற்றி மூன்று கட்டுரைகள் உள்ளன. பீர்முகம்மது அப்பா அவர்களை ஒரு கவிஞராக முன்னிறுத்தும் கட்டுரைகள் முக்கியமானவை. அவர் ஞானி, ஆனால் என்னைப்போன்ற ஒருவருக்கு எந்த ஞானமும் இலக்கியம் வழியாகவே வந்துசேரமுடியும்.

புகைப்படம் ஷாகுல் ஹமீது

ஞானியார் அவர்களைப் பற்றியும், ஆலிப்புலவரின் மிகுறாஜ் மாலை பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அந்த ஞானிகளின் வரலாறு மட்டுமல்ல அவர்களின் கவித்துவம் ஆகியவற்றை முன்வைப்பவையாக உள்ளன.  

ஹாமீம் முஸ்தபா அவர்கள் மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் முற்றோதல் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. அதை அவர் நூலாகவே விரிவாக்கலாம்.

முற்றோதல் என்பது இஸ்லாமிய மரபிலிருந்து, சூஃபி மரபிலிருந்து, வந்து சைவம் வரை இன்று பரவியுள்ளது. முற்றோதல் என்றால் முழுக்க வாசிப்பது மட்டும் அல்ல. கூட்டாகக் கூடி ஒரு நூலை வாசிப்பது. அதிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் கொள்வது. கூடுதலாக சொல்லிணைவின் எல்லா வகைப்பாடுகளையும் கொண்டு பொருள்கொள்ள முயல்வது. அரபு மொழியின் சொற்களை வெவ்வேறாக இணைத்துப் பொருள்கொள்ளலாம் என அறிந்துள்ளேன். அந்த மரபு இன்றும் நீடிக்கும் ஒன்று.

நிஷா மன்சூருடன். புகைப்படம் ஷாகுல்

சூஃபி மரபின் இலக்கியத்தன்மையை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம் என இந்நூல் காட்டுகிறது. ஒன்று, அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்தனர். ஆகவே மக்கள் மொழியில் எழுதினர். அவர்களின் பாடல்கள் எல்லாமே நாட்டார் அழகியல்கொண்டவையாக உள்ளன. செவ்வியல் ஆக்கம் ஒன்றுகூட இல்லை. மாலை, கண்ணி, ஏசல், கும்மி, குறத்திப்பாடல் என்னும் நாட்டுப்புற வகைகளிலேயே அவர்கள் எழுதினார்கள்.

சூஃபி மரபின் இன்னொரு தனித்தன்மை அவற்றின் வட்டார இயல்பு. குமரிமாவட்ட சூஃபி மரபைச் சேர்ந்த பாடல்களை ஆரல்வாய்மொழிக்கு அப்பாலுள்ளவர்கள் முழுக்க அறிந்துவிடவேண்டும் என்றால் கடும் முயற்சி எடுக்கவேண்டும். அவை அத்தனை தூரம் இப்பகுதியின் வட்டாரப்பண்பாட்டிலும் மொழியிலும் ஊறியவையாக உள்ளன. இந்த தனித்தன்மை சமய இலக்கியங்களில் சூஃபி படைப்புகளுக்க மட்டிலுமே உள்ளது.

அத்துடன் அவற்றின் சமயம் கடந்த தன்மையைச் சுட்டவேண்டும். சமயம் கடந்த என்றால் சமய மறுப்பு அல்ல. சமயம் சாமானியர்களுக்குரியது. ஆகவே சராசரித்தன்மை கொண்டது. அந்த சராசரித்தன்மையை தன் ஞானத்தேடலால் கடந்துசெல்வது என சூஃபி மெய்ஞானத்தைச் சொல்லலாம். ஆகவே அவை அனைவருக்கும் உரியவையாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவையாகக்கூட உள்ளன.

நண்பர்களே, இன்று சூஃபி மரபைப் பற்றிய பேச்சுக்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றிலுள்ள சமயம் கடந்த தன்மை, மதஒற்றுமைநோக்கு, அடித்தள மக்கள்சார்பு போன்ற பண்புகளே முன்வைக்கப்படுகின்றன. அவை அரசியல் நோக்குடன் விவாதிக்கப்படுகின்றன. அவை இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் சூஃபி மரபு என்பது உண்மையில் அது மட்டும் அல்ல.

நூலாசிரியர் எச்.முகமது சலீம், பதிப்பாளர் மணலி அப்துல் காதர்

அது மெய்ஞானம் சார்ந்தது. அகப்பயணம் வழியாகக் கண்டடைவது. நான் அஜ்மீர் செல்லும் அடியார்களில் ஒருவன் என்பது அனைவரும் அறிந்தது. என் இருபத்திரண்டாவது வயதில் முதன்முறையாக அங்கே சென்றேன். என் தாயும் தந்தையும் தற்கொலை செய்துகொண்டு, நான் உச்சகட்ட உள அழுத்ததுடன் வாழ்ந்த நாட்களில் ஒரு கனவு கண்டேன். இடுங்கலான தெருக்களினூடாக சென்றுகொண்டே இருக்கிறேன். தெரு எல்லைக்கு அப்பால் ஒளி.

அந்த இடம் அஜ்மீர் என தெரிந்ததும் கிளம்பிச் சென்றேன். சிலநாட்கள் அங்கே இருந்தேன். என் கொதிக்கும் தலை குளிர்ந்தது. அங்கே நான் அடைந்தது என்ன என்று இங்கே சொல்லப்போவதில்லை. சொல்லவும்கூடாது. இங்கே பலதரப்பட்டவர்கள் இருக்கலாம். நாத்திகர்கள்கூட இருக்கலாம். அவர்கள் உணரக்கூடியது அல்ல. அது எனக்கு மட்டுமேயான ஒரு தரிசனம்.

அந்த மெய்ஞானமே சூஃபிகள் நமக்கு அளிப்பது என நினைக்கிறேன். நன்றி.

*

 

புகைப்படங்கள் ஜி.ஜவகர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2025 11:35

எஸ்.செந்தில்குமார்

தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர். இதழாளர்.

எஸ். செந்தில்குமார் எஸ். செந்தில்குமார் எஸ். செந்தில்குமார் – தமிழ் விக்கிசிறுகதைத் தொகுப்புகள்வெயில் உலர்த்திய வீடு 2006 உயிர்மை பதிப்பகம்சித்திரப்புலி 2008 உயிர்மை பதிப்பகம்மஞ்சள் நிற பைத்தியங்கள் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021விலகிச்செல்லும் பருவம் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021அலெக்ஸாண்டர் என்கிற கிளி 2015 உயிர்மை பதிப்பகம்.அனார்கலியின் காதலர்கள் 2016 உயிர்மை பதிப்பகம்சிவப்புக்கூடை திருடர்கள் 2019 உயிர்மை பதிப்பகம்நாவல்கள்ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்நீங்கள் நான் மற்றும் மரணம் 2010 தோழமை பதிப்பகம்காலகண்டம் 2013 உயிர்மை பதிப்பகம்மருக்கை 2016 உயிர்மை பதிப்பகம்கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்கட்டுரைத் தொகுப்புகள்சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்) 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்கவிதைத் தொகுப்புகள்குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள்சமீபத்திய காதலிமுன்சென்ற காலத்தின் சுவை (கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியிடு)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2025 11:33

இன்றையகாந்தி, கமல்ஹாசன்

இன்றைய காந்தி- கமல் உரை

இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று கால கட்டம் ஒன்றின் நாயகனை, அன்றைய இந்தியாவின் சமூக பண்பாட்டு அரசியல் பின்புலத்தில் வைத்து விவாதிக்கும் நூல் ’இன்றைய காந்தி’. என்னுடைய நண்பர் ஜெயமோகன் எழுதிய இந்தப் புத்தகம் காந்தியை அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவக்கூடிய மிக முக்கியமான ஆக்கம்.

*

கமல்ஹாசன் இன்றைய காந்தி பற்றி பேசும்போது ஒருமுறை சொன்னார். ‘காந்தியின் ஒரு பலவீனத்தைக்கூட நீங்க சொல்லாம விடலை. ஒரு தோல்வியைக்கூட விட்டுவிடலை. அதுக்கு அப்றம் என்ன மிஞ்சுது காந்தியிலேன்னு பாக்கிறீங்க. அது எவ்ளவு பெரிய விஷயம்னு தெரியுது’ என்று சொன்னார். உண்மையில் இன்றைய காந்தி நூலின் வலிமையே அதுதான். அது எதையும் மழுப்பவில்லை. எதையும் நியாயப்படுத்தவில்லை. அப்பட்டமான நேர்மையுடன் காந்தியை மதிப்பிடுகிறது. இதே அளவுகோலை வேறு எந்த தலைவருக்கு வைக்கமுடியும், வழிபாட்டுணர்வு இல்லாமல் மதிப்பிட்டால் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தேறும் என எவரும் சிந்திக்கமுடியும்.

ஜெ

இன்றைய காந்தி வாங்க இன்றையகாந்தி மின்னூல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2025 11:31

நாவலின் கலை என்ன?

மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக்கொள்ள விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால்  மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன்  தனது செளகரியத்தன்மைக்கு பங்கம் வராத விருப்பத்தால் முடமாக்கி விடுகிறான்.   தனக்கு அசெளகரியமான படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்பு திறன் போதாமையே காரணம். இதனால்  தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகளை மட்டுமே நாடுகிறான்.

தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும்  எவ்வகையிலும்  அதிர்ச்சியளிக்கும் நாவல்களை விரும்பாது ஒதுக்கி வைத்த காலங்கள் சற்று  மாறி விட்டதாகவே கருதுகிறேன். இதன் விகிதச்சாரம் குறைவாக இருப்பினும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை உறுதியாக கூற முடியும்

முன்னெப்பதையும் விட தமிழ் வாசகப்பரப்பில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகளவில் வரவேற்கப்படுகின்றன. மொழிபெயர்ப்புகள் சொல்லப்படும் விஷயத்தில் மட்டுமல்லாது சொல்லும் விதத்திலும் வாசகனை கவர்வதோடு அவனது அட்ரினலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது.  ஒரு ஜெயிண்ட் வீலில் அமர்ந்து சுழலும் போதும் அட்ரினலின் அதிகம் சுரக்கவே செய்கிறது. எந்த மொழி வேண்டுமானாலும் இருக்கட்டும், நாவல் வாசிப்பு என்பது வாசகனின் சுரப்பு தூண்டியாக மட்டும் செயல்படுவதென்பது வளர்ச்சியாக கருத முடியாது.  ஒரு நாவலை தரிசனத்தின் மூலமாக செயல்பட வைப்பது அசாத்தியமானது என்றாலும் அதற்கான ஒளிக்கீற்றுகளை அது தன்னகத்தே கொண்டதாக திகழ வேண்டும்.

உண்மையில் தற்கால தீவிர வாசகர்களின்  ஒரு பகுதியினர் தரிசனங்களுக்கான  ஒளிக்கீற்றுகளை மறைத்து வைத்திருக்கும் நாவல்களை தேடுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜெயமோகன் சொல்கிறார் “விரிந்த தளத்தில் உலகமெங்கும் நடைபெறும் பெளதிக வாழ்வின் அலைகளும் புயல்களும் தமிழ் வாழ்வைத் தாக்கும் விதம் எழுதப்படவில்லை. அதற்கு தேவையான தகவலறிவு தமிழ்ப் படைப்பாளிகளிடம் குறைவு.”

இன்னொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “மன விரிவு இல்லாதவன் நாவலாசிரியனல்ல. அவன் தன் மன உலகை நாவல் கோரும் அளவு விரிவுபடுத்தவது இல்லை. அதை அவன், தன் மனத்தை உருவாக்கியுள்ள பற்பல கூறுகளுடன் மோதவிடவில்லை என்பதுதான் அதற்குப் பொருள். அவன் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருக்கிறான் அல்லது தனக்கு வசதியானபடி அவற்றைப் புறகணித்துவிடும் சோம்பல் கொண்டவனாக இருக்கிறான். இரண்டுமே நாவலாசிரியனுக்கு இருக்கக்கூடாத பண்புகள்.”

பெளதிக வாழ்வு மனிதனின் அகவெளியிலிருந்து முற்றிலும் அவனை  அந்நியப்படுத்தி வைத்துள்ளதே தற்காலத்தின்  வாழ்க்கைமுறை. ஆனால் தமிழ் எழுத்துலகில் பெளதிக விளிம்பிலிருந்து அகத்தின் மையம் நோக்கிய பயணத்திற்கான பரிசோதனைகள் விரிவடைவதற்கு பதிலாக அது திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கு வந்துள்ளதாக கருதுகிறேன்.

அமைப்புவாதத்தின்  அடையாளம் கொண்டு இயங்கி வரும் பல எழுத்தாளர்கள் தங்கள்  பிரக்ஞை உணர்வின்  மீது  எப்பொழுதோ சமாதி எழுப்பி விட்டார்கள். எல்லைக்குட்பட்ட பெளதிக தன்மையின் சுதந்திரம் என்பது நகைப்புக்குரியது. அது இலக்கியத்தில்  பல ஆண்டுகளாக உறைந்து போன அருங்காட்சியகத்தின் கொண்டாட்டம்.   பிரக்ஞை உணர்வில்லாத எழுத்தாளர்கள் இருண்ட மூலையில் உழல்கிறார்கள்.  நாம் நகர வேண்டியது அகவிடுதலைக்கான மையம் நோக்கி. கண்ணாம்மூச்சை போல் வாசகனை சுழலவிடும் விளையாட்டுத் தனமான படைப்புகளை விட விளிம்பிலிருந்து மையம் நோக்கிய பயணத்திற்கான வரைபடங்களை ஒரு நாவல் உருவாக்க வேண்டும். அது சிக்கலானதாக இருந்தாலும் சரி. 

மிலோராத் பாவிச் 1988-ல் எழுதிய கசார்களின் அகராதி தமிழில் 2019-ல் மொழியாக்கம் (ஸ்ரீதர் ரங்கராஜ்) செய்யப்பட்டுள்ளது. ஆண் பிரதி , பெண் பிரதி  என்கிற இருதலைப்பில் மாறுதலின்றி ஒரே உள்ளடக்கத்துடன் இரண்டு புத்தகம். வெளிவந்த இந்த இரண்டு பிரதியில்  சிறுவித்தியாசம் இரண்டு பத்திகள் மட்டுமே. அகராதி வடிவில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்நாவல் பல்வேறு வகையிலான  ஒளிக்கீற்றுகளை கசிய விடுகிறது. இது போன்றதொரு சிக்கலான அதே சமயம் ஆழமான வாசிப்புக்கு வித்திடும் மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கிய பரப்பில்  துணிச்சலாக கொண்டு வருவதற்கு காரணம்  மேம்பட்ட வாசகப்பார்வையின்  தேடல் தீவிரமாகி விட்டதாகவே கருதுகிறேன். 

இந்நூலை இளம்  எழுத்தாளர் ஒருவருக்கு பரிந்துரை செய்தேன்.  ஆனால்  அவருக்கு பா.சிங்காரம் எழுதிய  புயலிலே ஒரு தோனி வாசிப்பே சிரமம் என்று தெரிவிக்கிறார். மேலும் கடினமானதை சிரமப்பட்டு ஏன் வாசிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்று மறுத்து விடுகிறார். இப்படி தீவிர வாசிப்பு தன்மையிலிருந்து  தங்களை விலகிக்கொண்டவர்கள் இன்று நிறைய  எழுதுகிறார்கள். அவை கரையில் நிற்கும் வாசகனுக்கு கடல்  அலையின் சுகத்தை மட்டும் தருகின்றன. ஆழ்கடலின் தரிசனங்களை புலப்படுத்துவதில்லை. 

கரையிலிருந்த வாசகன் ஆழ் கடலின் மீது என்றோ தனது பயணத்தை துவக்கி விட்டான் என்பதை நாவல் எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்நூல் நாம்  வாசித்து பெரிதும் கொண்டாடிய தமிழ் நாவல்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. புதிய நாவல்கள்  மீதான வாசகர்களின் பார்வை புலத்தை கூர்மைப்படுத்துகிறது. நாவல் கலையின் துவக்கத்தையும்  அது சென்றடைய வேண்டிய இலக்கையும் அதற்கிடையே உள்ள இடைவெளிகளையும் ஆய்வு செய்கிறது.

ஜெயமோகனின் வாசிப்பு எல்லை விசாலாமானது. வியப்பானது. நாவல்– கோட்பாடு  என்கிற இந்நூல் இவரது முதல் திறனாய்வு நூல். 1992-ல் சமரசம் செய்து கொள்ளாத ஆழ்த்த இலக்கிய தேடலில் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகள். இது வெளிவந்தபோது அவருக்கு பலமான எதிர்வினைகளை பெற்று தந்த வகையில் மட்டும்  இந்நூல் முக்கியத்துவம் பெறவில்லை.  தற்போதைய தமிழ் இலக்கிய வாசக மற்றும் படைப்பு  சுழலுடன் இவரது கோட்பாடுகள் நீண்ட விவாதத்துக்கும் ஆய்வுக்கும் பின்பும் பொருந்தி போவதாகவே இருக்கிறது.

தமிழ் நாவல்கள் மீதான ஆழ்ந்த சிந்தனைகளை விதைக் கூடிய இந்த கட்டுரைகள் 2010-ல் நூல் வடிவமாக தொகுக்கப்பட்டது . அதன் முன்னுரையில் ஜெமோ இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“இதில் இருந்து என் பார்வைகள் உருவாகி இப்போது நெடுந்தூரம் வந்திருக்கும் விதம் எனக்கே ஆச்சரியம் அளிக்கிறது. இந்நூலில் நான் பேசியிருக்கும் பல விஷயங்களை பிற்பாடு நான் எழுதிய விமரிசன நூல்களில் பல கோணங்களில் வளர்ந்து எடுத்திருக்கிறேன். பல இடங்களைத் தொட்டு விட்டிருக்கிறேன். பல இடங்களில் தடுமாறியும் இருக்கிறேன். ஆனாலும் அக்கருத்துகளின் விதைக்களம் என்ற முறையில் இந்நூல் பல கோணங்களில் சிந்தனையைத் திறப்பதாகவே உள்ளது எனக்கு. வாசகர்களுக்கும் அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.”

30 ஆண்டுகளுக்கு  பிறகும்  வாசகர்களை தேடிச் செல்லும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விட வாசகன் தேடிச் செல்லும் எழுத்தாளர்கள் குறைவாகவே உள்ளனர். ஒரு எழுத்தாளன் வாசகர்களின் திணவிற்கான நகமாக தனது எழுத்தை பயன்படுத்தும்போது அவன் சிறந்த வியாபாரியாக மட்டுமே ஒளி வீசலாம். ஆனால் இலக்கிய நிழலாகக்கூட அவன் தடம் பதிப்பதில்லை.

விருதுகளுக்காகவும், அதிக பிரதிகள் விற்பனைக்காகவும், குறிப்பிட்ட குழுவினர்களின் திருப்திக்காகவும், அதிர்ச்சிகரமான  எழுத்துகளை கொண்டு தங்கள் மீதான நேர் மற்றும் எதிர் கவன ஈர்ப்புக்காகவும் எழுதி வருபவர்களிடம்  இயல்பான வகையிலான  படைப்பூக்கத்திறனை எதிர்பார்க்க முடியாது. அப்படியானவை  இலக்கிய ரகத்தில்  நிலைப்பதில்லை. 

மேலும் சிங்கப்பூரைப் பார், அமெரிக்காவைப் பார் என்கிற பொருளாதார சித்தாந்தங்கள் மீதான ஒப்பீட்டை  போல் விருது வேட்கையோடு எழுதும் அயல் எழுத்தாளர்களின்  இலக்கியத்துடன் நமது இலக்கியத்தை சில விமர்சகர்கள் முன் வைப்பது குறுகிய கருத்துரு மட்டுமல்ல அது  முதிர்ச்சியற்ற புரிதலின் குறைபாடு. ஒரு மண்ணின் கலாச்சாரம், வரலாறு, பண்பாட்டு விழுமியங்களை தவிர்த்து விட்டு  வரும்  இலக்கியங்கள்   வயிற்றுப்போக்குக்கு ஒப்பான வெறும் மனப்போக்கு மட்டுமே.

இந்நூல்  தமிழில் கன்னடத்தில் மலையாளத்தில் வங்கத்தில் வெளியான முக்கிய நாவல்கள் மீதான  விவாதங்களை  எழுப்புவதுடன் வாசிக்க வேண்டிய தமிழ் நாவல்களின் பட்டியலை அதன் பிரதிமையுடன் வழங்குகிறது. எதிர்காலத்தில் நாவல் எழுதுபவர்களுக்கான மனவிரிவின் முக்கியத்துவத்தை கூர்மையாக பேசுகிறது.

எழுத்தாளனையும்  நாம் படைப்பாளி என்றே அழைக்கிறோம். இது அவன் காண விழையும் தரிசனத்தைக் குறிக்கிறது. அத்தகைய எழுத்தாளனின் நாவல்கள் வாழ்வின் கர்மத்தை கரைக்கும் நதியாக பிரவாகமெடுக்கின்றன. நதிகள் குறிப்பிட்ட வாசகனுக்காக காத்திருப்பதில்லை என்றாலும் தேடல் நிறைந்த  வாசகனின் பயணம் நதியின் உயிர்ப்பை நோக்கியே நகர்கிறது.

நன்றியும் அன்பும் 

மஞ்சுநாத்

(முகநூலில்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2025 11:31

தாழ்திறக்கும் வாயில்கள்

The discussion on Nietzsche is inspiring. I have a personal perspective on this matter. Millions of people are living and dying. They never have any idea about themselves, or about human beings as a whole, or about posterity.

They are supermen…

ஒவ்வொரு ஆண்டும் விழாவிற்கு வரும் போது இயன்றவரை முன் தயாரிப்புகளுடன் வருவது மகிழ்வையும் நிறைவையும் அதிகரிக்கிறது. தமிழ் விக்கி விழாவில் இசை நிகழ்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பாடல்களை முன்பே கேட்டு வரும்போது இசை அனுபவம் மேம்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது. 

தாழ்திறக்கும் வாயில்கள் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2025 11:30

September 9, 2025

உருது இலக்கியம், கஸல் மரபு- இசையுடன் அறிமுகம்

உருது இலக்கியம், கஸல் அறிமுகம்

ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.

நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.

(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)

நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை மரபிலக்கியம்- சைவத்திருமுறைகள் அறிமுகம்

மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.

சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.

சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.

இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.

நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள் விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சி

அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.

விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)

பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.

நாள் அக்டோபர்  24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

[image error]

மரபிசைப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.

நாள்  அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு) 

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2025 18:51

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.