Jeyamohan's Blog

November 30, 2025

விழாவில் விவாதம்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா நடக்கவிருக்கிறது. இந்த முறை கிட்டத்தட்ட 11 அமர்வுகள நிகழவுள்ளன என்று நினைக்கிறேன். இந்த விழாவில் பங்கெடுப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்கு வாய்ப்பு அமைவதில்லை என்று ஒரு சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விவாதங்களில் பங்கு எடுப்பவர்களும் தங்களுடைய கருத்தை சொல்லும் வகையாக இவற்றை கட்டமைக்க வாய்ப்பு உள்ளதா?

ரவி கண்ணன்

அன்புள்ள ரவி கண்ணன்,

விஷ்ணுபுரம் விழா ஓர் இலக்கிய விழாமட்டுமே. இலக்கியக் கருத்தரங்கு அல்ல. இலக்கிய விவாத அரங்கும் அல்ல. இலக்கிய விழாக்களுக்கும் ,இலக்கியக் கருத்தரங்குகளுக்கும், இலக்கிய விவாத அரங்குகளுக்கும், இலக்கிய வகுப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு நமக்கு பெரும்பாலும் தெரியாது. ஏனெனில் தமிழகத்தில் இலக்கிய விழா என எதுவும் நிகழ்வதில்லை.

நாங்கள் இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக நிகழ்த்தி வருகிறோம். ஏ.வி.மணிகண்டன் நடத்துவது வகுப்பு. மானசா பதிப்பகத்தில் நிகழ்வது இலக்கிய விவாதம். சொல்முகம் கோவையில் நிகழ்த்தியது கருத்தரங்கு. வகுப்பில் ஆசிரியர் பேசவேண்டும், பிறர் கற்கவேண்டும். விவாதத்தில் அனைவரும் பேசி விவாதிக்கலாம். கருத்தரங்கில் அனுமதிக்கப்பட்டவர் மட்டும் பேசவேண்டும்.

இலக்கிய விழா என்பது ஒரு இலக்கிய களியாட்டம். அது அவ்வப்போது நிகழ முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை ஒரு திருவிழாவாகவே அதை நிகழ்த்த வேண்டும். அது இலக்கிய ஆர்வம் உடையவர்கள் கூடி களிப்பதற்கான தருணம் மட்டுமே. இலக்கியத்தை ஒரு கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்வதற்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி. ஆழமான தீவிரமான இலக்கிய விவாதங்கள் நிகழும் களம் ஒரு விழாவில் அமைய முடியாது. ஏனென்றால் அங்கே எவரும் வரலாம். இலக்கியமே அறியாதவர்கள்கூட வரலாம். அனைவருக்கும் பேச வாய்ப்பளித்தால் அங்கே எவருமே எதையுமே பேசமுடியாத நிலையே உருவாகும்.

இலக்கியவிழாக்களில் இலக்கிய அறிமுகம் நிகழும். இலக்கியவாதிகளை அறிமுகம் செய்துகொள்ளலாம். இணையான நண்பர்களைச் சந்தித்து உரையாடலாம். எல்லா விழாக்களுமே இலக்கியத்துக்கு மிக உதவியானவை. நாம் ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் கூட வாசிப்பதோ, இலக்கிய உரையாடலில் ஈடுபடுவதோ, திரைப்படம் பார்ப்பதோ, இசைகேட்பதோ சாத்தியமல்ல. ஆனால் ஒரு விழாவில் நம்மால் முழுநாளில் இலக்கியத்தில், கலையில் திளைக்கமுடியும். ஆகவேதான் விழாக்கள் முக்கியமானவை.

இலக்கிய விழாக்கள் இல்லை எனில் இலக்கியம் வாழ வாய்ப்பில்லை. எனக்கு தெரிந்து கேரளத்தில் நான்கு முக்கியமான இலக்கிய விழாக்கள் .  டிசி புத்தக நிறுவனம் நடத்தும் கே இலக்கிய விழா. (கோழிக்கோடு) மாத்ருபூமி இலக்கியவிழா (திருவனந்தபுரம்) ஹார்த்தூஸ் விழா (கோட்டயம்) ஹே புத்தகவிழா (எர்ணாகுளம்). ஒவ்வொன்றும் சர்வதேச விழாக்கள். இதைத் தவிர சிறிய இலக்கிய விழாக்கள் 12க்கு மேல் கேரளத்தில் நிகழ்கின்றன.கர்நாடகத்திலே பெங்களூர் இலக்கிய விழா, புக்பிரம்மா இலக்கிய விழா, நீநாசம் இலக்கிய விழா என்ற மூன்று இலக்கியவிழாக்கள்.

தமிழக இலக்கிய விழா என்றால் அது விஷ்ணுபுரம் விருது விழா மட்டுமே. பிற இந்திய இலக்கிய விழாக்களுடன் ஒப்பிடுகையில் அவற்றின் நிதி ஆதாரத்தில் ஐம்பதில்  ஒரு பங்கு கூட இல்லாதது இது. எங்கள் செலவினம் மாத்ருபூமி இலக்கியவிழாவின் நூறில் ஒரு பங்குதான். பெரும்பாலும் நண்பர்கள் கூடி எல்லாவற்றையும் செய்கிறோம். இலக்கியத்துக்கு நிதியளிப்போர் தமிழகத்தில் அனேகமாக எவருமில்லை. வாசகர்களின் நிதியே எங்களுக்கு ஆதாரம். ஆண்டு முழுக்க நிகழும் விழாக்களுக்கு ஒரே நிதிவசூல்தான். இந்த ஆண்டு அறக்கட்டளை பதிவு தாமதமானதனால் இதுவரை நிதி ஓரளவுக்குக்கூட சேரவில்லை. அமெரிக்கா விழா திட்டமிட்டிருப்பதனால் நிதி பெருமளவுக்கு அங்கே திரும்பிவிட்டது. ஆகவே இந்த ஆண்டு எங்கள் சொந்தப் பணத்தை நிறையவே செலவிடவேண்டியிருக்கலாம்.

இத்தனை செலவில், உழைப்பில் இவ்விழா நிகழ்வது புதியவாசகர்கள் இலக்கிய அறிமுகம் பெறுவதற்காகவே. ஒவ்வொரு ஆண்டும் புதியவாசகர்கள் உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களே உண்மையான வாசகர்கள். ஏற்கனவே உள்ளே வந்து, இலக்கியப்பூசல்களில் திளைப்பவர்கள் உண்மையில் வாசகர்களே அல்ல. இலக்கிய வாசிப்புக்கு முதல்தேவை இலக்கியம் நோக்கிய நேர்நிலை நோக்கு. அதை இழந்துவிடுகிறார்கள். சாதி,மத,அரசியல் குறுக்கல்களும் அமைந்துவிட்டால் அனேகமாக வாசிக்கவே முடியாமலாகிவிடும். எழுதுவோர் வாசகர்களாக எண்ணவேண்டியது புதியவர்களைத்தான். அவர்கள் வந்துகொண்டே இருப்பது இந்த விழாக்கள் வழியாகவே.

அப்படி வருபவர்கள் இலக்கியத்தின் பொறுப்பான குரல்களை மட்டுமே கேட்க விரும்புவார்கள். பயனுள்ள விவாதம் மட்டுமே அவர்களைக் கவரும். அது நிகழவேண்டும் என்றால் தகுதியானவர்களே பேசவேண்டும். ஆகவே அவர்களை மட்டுமே மேடையேற்றுகிறோம். அவர்களுடன் அரங்கினர் வினாக்கள் வழியாக தொடர்புகொள்ளலாம். அரங்கிலிருந்து அனைவரும் பேசலாம் என்றால் அது இலக்கியவிவாதம் ஆகாது, வெட்டி அரட்டையாக ஆகும். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

நாங்கள் புதிய வாசகர்களை பார்த்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களை அறிந்தவர்கள். இன்றைய வாசகர்களுக்கு வீணடிக்க நேரமில்லை. ஆகவே வெட்டியான ஆணவப்பூசல்களை அவர்கள் முழுமையாகப் புறக்கணிப்பார்கள். அர்த்தமற்ற விவாதங்களை அருவருப்பார்கள். பழைய சிற்றிதழ்க்கூட்டம் இந்த நடைமுறை உண்மையை அறிந்திருப்பதில்லை. அவர்கள் தங்கள் கோழிமுட்டைக்குள் இடைவிடாத சில்லறைப்பூசல்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாசகர் என எவருமில்லை, அவர்களே அவர்களின் வாசகர்கள். நாங்கள் வாசகர்களை நோக்கி நிகழ்வை கொண்டுசெல்வதனால்தான் வம்புகளை தவிர்க்கிறோம்.

எழுத்தாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என நாங்கள் அழைக்கிறோம். ஏனென்றால் அவர்களை வாசிப்பவர்களை அவர்கள் இங்கே காணமுடியும். புதிய வாசகர்களிடம் சென்றுசேரவும் முடியும். இந்த விழா வழியாக மட்டுமே இன்று தமிழில் அது சாத்தியம். எளிய ஆணவச்சிக்கலால் பலர் இந்த விழாவை தவறவிடுவதுண்டு, அவர்களே இழப்படைபவர்கள். ஓர் எழுத்தாளன் தன் வாசகர்களுக்காக எங்கும் செல்லலாம். அதில் ஆணவத்திற்கு இடமில்லை. எழுத்து என்பது ஒரு ‘மிஷன்’. ஒரு மதப்பிரச்சாரகர் எங்கும் தயக்கமில்லாமல் செல்கிறார். ஏனென்றால் அவர் தன்னை முன்வைப்பதில்லை, தன் மதத்தையே முன்வைக்கிறார். அதைப்போல ஓர் எழுத்தாளர் தன் எழுத்தை தன்னம்பிக்கையுடன் முன்வைக்கவேண்டும். அரங்குகளில் பேசுவது மட்டுமல்ல விழாப்பங்களிப்பு. அங்கே வரும் புதியவர்களுடன் உரையாடுவதுதான் முதன்மையான பங்களிப்பு. அனைவரையும் அழைக்கிறோம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 10:35

எம். பக்தவத்சலம்

விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அபிமானி. விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

எம். பக்தவத்சலம் எம். பக்தவத்சலம் எம். பக்தவத்சலம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 10:33

குருகு -டேவிட் அட்டன்பரோ இதழ்.

அன்புள்ள நண்பர்களுக்கு

“வாழ்வு ஆழ்கடலிலிருந்து தொடங்குகிறது” இப்படித்தான் டேவிட் அட்டன்பரோவின் ‘ஓஷன்‘ ஆவணப்படம் தொடங்கும், டேவிட் இந்த வரியை பலவிதங்களில் திரும்ப திரும்ப கூறுவதை பார்க்கலாம். மனித வாழ்க்கையை இயற்கையிடமிருந்து பிரித்து பார்க்க முடியாது என்பதை அவருடைய ஆவணப்படங்கள் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன, அவருடைய வாழ்கையே இயற்கையை அணுகி அறிவதாகத்தான் இருந்திருக்கிறது. ”வாழ்வு இயற்கையிலிருந்து தொடங்குகிறது” என்பது தான் டேவிட் அட்டன்பரோவின் ஆவணப்படங்கள் காட்டும் வாழ்க்கை தரினம் என்று கூறலாம். அவருடைய (8-5-1926) நூற்றாண்டை கொண்டாடும் விதமாக குருகு–அட்டன்பரோ சிறப்பிதழ் வெளியிடுகிறது.

டேவிட் அட்டன்பரோ (David Attenborough) உலகின் முன்னோடி சூழலியல் ஆளுமை, கானுயிர் சார் ஊடகவியல் முன்னோடி, எழுத்தாளர், சூழலியல் ஆய்வாளர். நூறாண்டுகள் வாழ்வென்பது மண்ணிலேயே ஒரு பெருநிலைதான். அவ்வாழ்தலின் காலத்தில் நின்று புவிக்கான குரலாக ஒலிப்பவர்கள், அறிவியக்கத்தின் முகமாக ஆனவர்கள் இன்னும் அரிது. இன்று அவ்வாறு உலகை நோக்கி பேசும் தகுதிகொண்ட வெகுசில ஆளுமைகளில் முதன்மையானவர் டேவிட் அட்டன்பரோ.

இதழில் வெளியாகும் அட்டன்பரோவின் நேர்காணல் அவர் அளித்த முந்தைய நேர்காணல்களிலிருந்து தொகுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, விஷ்ணுகுமார் தொகுத்துள்ளார். அட்டன்பரோவின் கட்டுரை ‘பறத்தலின் தருணம்‘ பாரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகிறது.

அட்டன்பரோ குறித்த தமிழ் கட்டுரைகளை ஆய்வாளர் தியோடோர் பாஸ்கரன், எழுத்தாளர்கள் லோகமாதேவி, கடலூர் சீனு, ரகு ராமன் எழுதியுள்ளனர். ஆங்கிலக்கட்டுரைகளை ராகுல் தருண், சாம்பவி எழுதியுள்ளனர். அட்டன்பரோவுடனான தனது பணி அனுவத்தை கர்நாடகத்தை சேர்ந்த கானுயிர் ஆவணப்பட இயக்குனரான அமோகவர்ஷா பகிர்ந்துள்ளார். எழுத்தாளரான தேவனப்பள்ளி வீணாவாணியின் தெலுங்கு கட்டுரையும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சூழலியல் ஆய்வுகள் செய்பவரான பென்னி குரியனின் மலையாள மொழிக்கட்டுரையும் இதழில் இடம்பெறுகின்றன. ஒருவகையில் டேவிட் அட்டன்பரோ மீதான ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் பார்வையும் அன்பும் இதழில் பதிவாகியுள்ளது.

எழுத்தாளர் அஜிதனின் நமது தெய்வம் என்னும் கட்டுரை இதழில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை முன்வைத்து எழுதப்பட்ட இந்தக்கட்டுரை எழுத்திலிருந்து வெளிப்படும் தெய்வத்தை, இலக்கியத்தின் தெய்வத்தை பேசுகிறது. ஆய்வாளர் சஜூவினுடைய தெய்யத்தின் முகங்கள் புத்தகத்திற்கு தாமரைக்கண்ணன் புதுச்சேரி அறிமுக கட்டுரை எழுதியுள்ளார். இத்துடன் குருகு இதழின் தொடர்களான இந்தியக்கவிதையியல் மற்றும் துட்டகாமுன் கட்டுரைகளும் வெளியாகின்றன.

இந்த இதழில் பல்வேறு மொழிகளில் இருந்து கட்டுரைகளை பெறவும் மொழிபெயர்க்கவும் உதவிய நண்பர்கள் நன்றிக்குரியவர்கள். தெலுங்கு கட்டுரையை பெறவும் மொழிபெயர்க்கவும் நண்பர்கள் ஈ நாடு ராஜு, விக்னேஸ்வரன் உதவினார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பில் நண்பர்கள் ஹெலன் முத்து, ராஜசேகர் பங்காற்றினர். அவர்களுக்கும் நன்றி. வாசகர்கள் எப்போதும் போல் வாசித்து எதிர்வினை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

நன்றி

குருகு

http://www.kurugu.in
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 10:31

விழுதுகள், வேர்கள்.

ஒரு வாரத்தில் எங்கெல்லாம் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில், நம் நண்பர்களின் அமைப்புகள் சார்பில் இலக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று . வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நண்பர்கள் சந்தித்து இலக்கியத்தை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருவகையில் வேர்களை விழுதுகளையும் நாங்கள் பரப்புவது போலத்தான்.

அஜிதன் மேலைத்தத்துவ வகுப்பு, லண்டன்

இந்த வாரத்தில் புதுவை வெண்முரசு இலக்கியக்கூடுகை நிகழ்ந்தது. தொடர்ச்சியாக மாதந்தோறும் நிகழும் இலக்கியச் சந்திப்பு அது. வெண்முரசு மீது வெவ்வேறு வாசகர்கள், விமர்சகர்கள் விரிவான வாசிப்பை நிகழ்த்தி விவாதிக்கிறார்கள்.

வார இறுதியில் கோவையில் நா.சுகுமாரன் புனைவுலகத்தைப் பற்றிய சொல்முகம் கூட்டம் நிகழ்ந்தது. சொல்முகம் அமைப்பு நண்பர் நரேந்திரன், பூபதி துரைசாமி ஆகியோரால் முன்னெடுக்கப்படும் ஓர் இலக்கிய கூடுகை .தொடர்ச்சியாக விஷ்ணுபுரம் அலுவலகத்தின் மாடியில் வடவள்ளி நிகழ்ந்து வருகிறது. எல்லா மாதமும் இக்கூடுகை நிகழ்கிறது.

இந்த நாளில் இங்கே லண்டனில் அஜிதன நடத்தும் மேலைத் தத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்த்து. பிரிட்டிஷ் மண்ணில் இது ஒரு புதிய நிகழ்வு.நமது நண்பர்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம். இங்கே இவ்வாறு வகுப்புகள் நடத்துவதற்கான அழகிய இடங்கள் உள்ளன என்பதே செய்திதான்.

இதே நாளில் நித்யவனத்தில் ஏ.வி.மணிகண்டனின் மேலைக்கலை அறிமுக வகுப்புகள் நடைபெற்றன. ஓவியம் முதல் வரைகலைகள் வரை அறிமுகம் செய்யும் நிகழ்வு.வழக்கம்போல பெருந்திரள். அடுத்த வாரம் ஆலயக்கலை பயிற்சி. அதற்கு அடுத்த வாரம் யோகமுகாம். தொடர்ந்து லோகமாதேவியின் தாவர அறிமுகம்.

மானசா புத்தக நிலையம், சென்னை அடையாறு

மானசா புக் கிளப் சார்பில் மானசா பதிப்பகம் அலுவலகத்தில் (சென்னை அடையாறு) ஆங்கில இலக்கிய நூல்களைப் பற்றிய ஒரு இலக்கிய விவாதம் நடைபெற்றது. அதிலும் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சென்னையில் அப்படி ஒரு புத்தகக்குழும நிகழ்வு என்பது ஒரு நல்ல தொடக்கம்.

ஜெனிஸ் பரியத்தின் புதிய நாவல் விவாதிக்கப்பட்டது. Everything the Light Touches. ஜெனிஸ் பரியத் எங்கள் விஷ்ணுபுரம் விழாவில் ஏற்கனவே கலந்துகொண்டவர். அடுத்தமாதம் (டிசம்பர்)நிகழும் சந்திப்பில் வைக்கம் முகமது பஷீரின் நாவலின் ஆங்கில மொழியாக்கம் பேசப்படுகிறது. நாவலை வாசித்தவர்கள், அறிய ஆர்வமுள்ளவர்கள் எவரும் கலந்துகொள்ளலாம்.

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் விருந்தினர்கள் வருவார்கள், அங்கே அவர்களுடனான உரையாடல் நிகழும். ஆனால் விவாதம் நிகழாது. ஏனென்றால் அனைவரும் வரும் ஒரு களத்தில் விவாதம் இயல்வதல்ல. ஆகவே தான் இந்த விவாத அரங்குகள். அங்கு தனிப்பட்ட முறையில் விவாதங்கள் தீவிரமாக நிகழ முடியும். நாம் கேட்டு தெளியவும், பேசி தேர்ச்சியடையவும் முடியும்.

இந்த வகையான நேரடி விவாதங்களின் பயனை பலர் உணர்ந்திருப்பதில்லை. நம் வாசிப்பு உத்வேகத்துடன் தொடங்கி பாதியில் நின்றுவிடுவதே வழக்கம். புத்தகச் சந்திப்புகள் நம்மை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக வாசிக்கச் செய்கின்றன. நம்மை புத்தகவாசிப்புள்ள நண்பர்களுடன் இணைந்து செயல்படச் செய்கின்றன. வாசிப்பை ஒரு களியாட்டமாக ஆக்குகின்றன. இன்றைய சமூகவலைத்தள அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற மிகச்சிறந்த வழி இதுவே.

connect@manasapublications.com  மானசா புத்தக குழுமம்

கோவை சொல்முகம் பூபதி துரைசாமி – 98652 57233 நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 10:31

இந்துஞானம், அத்வைதம்

அத்வைத வேதாந்தம் பற்றி உங்களுடைய தளத்தில் நிறைய கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. இங்கே முழுமையறிவு தளத்திலும் கட்டுரைகளும் காணொளிகளும் உள்ளன. அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக ஆக்கலாம். அத்வைதம் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில்சொல்லும் நூல்கள் நம்மிடையே மிகக்குறைவு.

இந்துஞானம், அத்வைதம்

Encouraging children to read is not an easy task. Everything around them seems to discourage reading. The media, schools, teachers, and even friends actively contribute to this.

Reading and our children
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 10:30

November 29, 2025

பதஞ்சலி யோகப்பயிற்சி முகாம்

சௌந்த்ர் ராஜன் தமிழ்விக்கி

எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.

சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.

யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.

நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14 

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்

ஆலயக்கலை அறிமுகப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.

ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.

ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.

பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள்தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)

தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.

தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில்  சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.

ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.

இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.

வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.

நாள் டிசம்பர் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

Introduction of Indian Philosophy Classes in English

We have been conducting Indian philosophy classes for over three years, with around 500 to 600 people having completed the first level across nine batches. Further-level classes are currently ongoing.

Many aspirants have expressed interest in attending these classes in English. As a result, we are launching the same classes in English for those who are not proficient in Tamil.

This class offers a thorough introduction to Indian philosophy, serving as the foundational starting point for advanced courses. The instruction will be conducted in English.

Date: January 2, 3, and 4 (Friday, Saturday, and Sunday), 2026

Venue: Nityavanam, at the hill station Vellimalai, near Erode.

For contact programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2025 22:18

நம் நகரங்கள் ஏன் ஒன்றுபோலிருக்கின்றன?

இந்தியாவின் நகரங்கள் பல மிகவும் தொன்மையானவை. நீண்ட பண்பாட்டு வரலாறு கொண்டவை. ஆனால் அவை ஏன் ஒரே போல கான்கிரீட் குப்பைமேடுகளாக இருக்கின்றன? ஏன் அவற்றின் தனித்தன்மை ஈவிரக்கமில்லாமல் அழிக்கப்படுகிறது? அந்த தனித்தன்மை உண்மையில் சுற்றுலா லாபம் ஈட்டித்தரும் ஒரு பொருளியல் முதலீடு என்றுகூட ஏன் நமக்குத் தோன்றாமலிருக்கிறது?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2025 10:36

ஒழுக்கத்தின் நிறப்பட்டை

சதிர், பரதம்- ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ,

நீங்கள் உங்கள் கட்டுரையில் சொல்வது போல தேவதாசி மரபு என்பது கோயில்களைச் சார்ந்த ஒரு தாய்வழிச் சமூகம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்திலே பலவகையான வாழ்க்கைமுறைகள் இருந்துள்ளன. தாய்வழிச் சமூகத்தின் அம்சங்கள் இங்குள்ள போர்ச்சாதிகளிடமும் உண்டு. ஆகவேதான் அங்கே விதவை மறுமணமும், விவாகரத்துக்குப் பின் மறுமணமும் இயல்பாக இருந்தது. நான் அத்தகைய போர்ச்சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் சமூக வழக்கத்தையெல்லாம் ஒழுக்கமின்மை என்று சொல்லும் ஒரு குரல் இப்போது உள்ளது. அந்தக் குரல் சைவமரபில் இருந்தது. காங்கிரஸில் இருந்தது. திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதைத்தான எழுதினார்கள். குறிப்பாக பாரதிதாசன் ஒருத்திக்கு ஒருவன் என்பதை மிகப்பெரிய அறமாகச் சொல்கிறார். தாய்வழிச்சமூக வாழ்க்கைமுறையை ஒழுக்கமற்றது என்று சொல்பவர்கள் இங்கே உள்ள சீரழிந்த தந்தைவழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதை தூக்கிப்பிடிப்பவர்கள். இங்குள்ள பெண்ணியவாதிகளும் அதைச் சொல்வது வருந்தத்தக்க மடத்தனம். ஆனால் பெண்களும் அதைச் சொல்வது வருத்தம் அளிப்பது.

க. சிவசமுத்திரம்.

அன்புள்ள சிவசமுத்திரம்,

உங்கள் கடிதத்தை தமிழாக்கம் செய்துள்ளேன். முக்கியமான கடிதம்.

நான் தாய்வழிச்சமூகத்தைச் சேர்ந்தவன். தந்தைவழிச் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டினர் இன்றுகூட ஊடகங்களில் தொடர்ச்சியாக அச்சமூகத்தை இழிவுசெய்வதைக் காணலாம். அவர்களின் பார்வையில் தந்தைவழிச் சமூகத்திலுள்ள ஆண்களின் எல்லா பாலியல் நடத்தைகளும் சுரண்டல்களும் இயல்பானவை. தாய்வழிச்சமூகத்தின் செயல்பாடுகள் ஒழுக்கமற்றவை. (சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலிலேயே தாமுவின் குடும்பம் அவ்வாறு இழிவுசெய்யப்படுவதன் சித்திரம் உள்ளது). தமிழகத்தின் தந்தைவழிச் சமூகப் பெருங்குடும்பங்களில் ஆதிக்க ஆண்கள் குடும்பத்தின் பெண்கள் மேல் செலுத்தும் பாலியல் ஆதிக்கம் எல்லா எல்லைகளையும் மீறிய ஒன்று. அதை குறைந்த அளவில் இலக்கியம் பதிவுசெய்துள்ளது. (ஓர் உதாரணம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம்). 

தமிழகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன வாழ்க்கைக்குள் வந்தது. அப்போதுதான் அது இதுதான் தமிழ் மரபு, இதுவே தமிழ் பண்பாடு, இது தமிழர் அறம் என்ன தன்னை சராசரிப்படுத்திக்கொண்டது. அப்போது உயர்குடிகளின் ஒழுக்கமும் பண்பாடும்தான் உயர்வானவை என்றும், இயல்பானவை என்றும், தமிழரின் ஒழுக்கமும் நாகரீகமும் அதுவே என்றும் வகுக்கப்பட்டது. பிராமணர், பிராமணரல்லா உயர்சாதியினர் (வேளாளர் , செட்டியார்கள் மற்றும் முதலியார்கள்) சேர்ந்து அதை அவர்களே முடிவுசெய்து அவர்களே ஏற்றுக்கொண்டு நிறுவிவிட்டார்கள்.

ஓர் உதாரணம் சொல்கிறேனே. தமிழில் ‘விதவை மறுமணம்’ என்பது ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்காக சமூகசீர்திருத்த முன்னோடிகள் ஏராளமாகப் பேசியுமிருக்கிறார்கள். கைம்பெண் மறுவாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1900 முதல் விதவை மறுமணம் இலக்கியத்தில் ஒரு முக்கியமான பேசுபொருள். தமிழிலக்கியத்தில் விதவை மறுமணம் பெரிய பேசுபொருள். மாயாவி எழுதிய புகழ்பெற்ற கண்கள் உறங்காவோ நாவலில் இளம்விதவையான ஒரு பெண் மருத்துவர் மறுமணம் செய்வதை ஊரே கொந்தளித்து எதிர்க்கிறது. ஆனால் உண்மையில் நம் கிராமங்கள் அப்படித்தான் இருந்தனவா? 

விதவை நோன்பு என்பது ஒட்டுமொத்த தமிழ்ப்பண்பாட்டின் பிரச்சினை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையா? 

சாதிவாரியாகப் பார்த்தால் விதவை மறுமணம் அனுமதிக்கப்படாத சாதிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் மிகச்சிறுபான்மையினரான உயர்சாதியினர் மட்டுமே. எஞ்சிய போர்ச்சாதிகள், குடியானவச் சாதிகள், அடித்தள மக்கள் அனைவரிலும் மிக இயல்பாக மறுமணம் செய்யும் வழக்கம் இருந்தது. அதற்கான சடங்குகள் இருந்தன. அது அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் பாரம்பரியம். அப்படியென்றால் விதவைமறுமணம் என்பது எப்படி ‘தமிழகத்தின் சமூக–பண்பாட்டுப் பிரச்சினை’ ஆக மாறியது? எவர் மாற்றினார்கள்?

நாம் சினிமாக்களை பார்ப்போம். எத்தனை விதவைகள்! 1940 முதல் தமிழ் சினிமாவில் விதவைப்பெண்களின் துயரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாட்டு இன்றும் விதவையின் குரலாக தமிழ் சினிமாவில் இருந்து ஒலிக்கிறது. விதவையைப் புனிதப்படுத்தும் எவ்வளவு படங்கள். விதவையாக இருப்பது ஒரு வகையான தவம் (கைம்மை நோன்பு) என்று காட்டும் எவ்வளவு படங்கள். இரண்டு சினிமாக்களை பார்ப்போம். நான் பாடும் பாடல் என்று ஒரு படம். கதைநாயகி விதவை. கணவன் கேட்டுக்கொண்டமையால் அவள் பொட்டும்பூவும் வைத்துக்கொள்கிறாள். அதைக்கண்டு அவள் கன்னி என நம்பி ஒருவன் அவளை விரும்பி திருமணம் செய்யலாமா என்று கேட்கிறான். அதெப்படி அப்படி என்னிடம் கேட்கலாம் என்று அவள் தீயால் நெற்றியைச் சுட்டுக்கொள்கிறாள்.

அந்தப்படம் வெளிவந்தபோது ஒரு விவாதம். அந்தப்படத்தை கண்டித்து சிவசங்கரி எழுதினார். ஏனென்றால் அவர் கணவன் மறைந்தபின்னரும் கணவரின் விருப்பப்படி பொட்டு வைத்துக்கொண்டிருந்தார். சென்னையில் விஜில் என்னும் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் கோவி மணிசேகரன் “கணவன் மறைந்த பின் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்கள் பெண்களல்ல, பேய்கள்” என்று பேசினார். அரங்கில் ஒரே சச்சரவு. அந்த கூட்டத்தில்தான் நான் க.நா.சுவைச் சந்தித்தேன். வெளியே காபி சாப்பிடச் செல்லும்போது அவர் சங்கரநாராயணன் என்பவரிடம் “ஒழுக்கம் பற்றிப் பேசுற எந்தப் பேச்சுமே பாதுகாப்பின்மையிலே இருந்து வர்ரது. அது இலக்கியத்திலே இடமில்லை” என்றார்.

அதற்கும் பிறகுதான் சின்னத்தம்பி படம் வந்தது. அதில் ஒரு விதவைத்தாயை ‘சித்திரவதை’ செய்கிறார்கள். எப்படி? அவள் வெள்ளைச்சேலைமேல் வண்ணத்தை ஊற்றி! அந்த வண்ணம் அவளுக்கு தீ பட்டதுபோல எரிகிறது. அவள் துடிதுடிக்கிறாள். அதை தமிழ்மக்கள் பார்த்து ரசித்தனர். அவர்களில் முக்கால்வாசிப்பேரின் சாதிகளில் விதவைகள் மறுமணம் செய்யும் வழக்கம் இயல்பாக இருந்தது. எல்லா குடும்பங்களிலும் மறுமணம் செய்துகொண்டு வாழும் விதவைகள் இருந்தனர். அவர்கள் அந்தப் படங்களைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவர்களின் குழந்தைகள் என்ன நினைப்பார்கள்? எவருமே அதை சிந்திக்கவில்லை. 

ஒரு சிறுபான்மை எப்படி ஒரு பண்பாட்டின் பெரும்பான்மையை இப்படி இழிவுசெய்ய முடிகிறது? அந்த இழிவுபடுத்தலை மதத்தின் பெயரால் பிராமணர்கள் செய்திருந்தால் கொந்தளித்திருப்பார்கள். தமிழ்ப்பண்பாட்டின் பெயரால் பிராமணரல்லாதவர்கள் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறார்கள். இதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். (யாருடைய சொத்து, கண்ணகியும் மாதவியும்) தமிழ்ப்பண்பாட்டின் ஒரே பெண் அடையாளமாக கண்ணகியை முன்வைப்பது என்பது இந்தியப் பண்பாட்டின் ஒரே பெண் அடையாளமாக சீதையை முன்வைப்பதுபோன்றது. இருவருமே ஆணாதிக்கச் சமூகத்தின் பலியாடுகள். அவர்களை தியாகிகள் ஆக்குவதன் வழியாக ஆணாதிக்க விழுமியங்கள் புனிதப்படுத்தப்பட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன. ஆனால் இங்கே முற்போக்கினரும், பெண்ணியரும்கூட அதைத்தான் செய்கிறார்கள்.

மேலே சொன்ன படங்கள் வெளிவந்தபின் இன்னொரு படம் வந்தது. சீமான் எழுதிய கதை அது. பசும்பொன். அதில் விதவை மறுமணம் இயல்பாக நிகழ்ந்து அந்த அன்னைக்கு இன்னொரு கணவனில் மகன்கள் இருப்பதுபோல இருந்தது. சீமான் அவர் அறிந்த இயல்பான சமூகக்கதையை எழுத, அச்சமூகத்தைச்சேர்ந்த பாரதிராஜா இயக்கினார். படம் பெருந்தோல்வி. காரணம் அந்த விதவை மறுமணத்தை மக்கள் ஏற்கவில்லை, அத்துடன் அதிலிருந்த வரண்ட நிலமும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி அக்காலத்தில் சீமான் ஒரு தனி உரையாடலில் சொன்னார். “தமிழ் சனங்க அவங்களோட பண்பாடு எதுவோ அதை நினைச்சு வெக்கப்படுற மாதிரி செஞ்சுட்டாங்க. அவங்களோட நெறம், அவங்களோட நெலம், அவங்களோட சாப்பாடு எல்லாமே தப்புன்னு  ஆக்கிட்டாங்க” அது ஓர் உண்மை.

ஒரு பண்பாட்டுக்கு, ஒரு சமூகத்திற்கு என ஒட்டுமொத்தமாக ஓர் ஒழுக்கநெறி இருக்கமுடியாது. ஓர் உணவு, ஒரே தெய்வம் இருக்கமுடியாது என்பதைப்போலத்தான் அதுவும். ஒவ்வொரு சமூகக்குழுவும் தனக்கான வாழ்க்கைமுறையை உருவாக்கிக்கொண்டுள்ளது. ஒழுக்கம் அதன் ஒரு பகுதியே. தாய்வழிச்சமூகம் தனக்கான ஒழுக்கம் கொண்டது. தாய்வழிச்சமூகத்தின் பெண் எந்நிலையிலும் ஒரு பொய்யைச் சொல்லக்கூடாது, அதுதான் அவளுக்கான ஒழுக்கமீறல். ஆனால் பொய்சொல்லாமல் தந்தைவழிச் சமூகப்பெண் வாழவே முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவீனயுகத்தின் தொடக்ககாலத்தில், நாம் நம் பண்பாடு இது என வகுத்துக்கொண்டபோது இதுவே நம் பொது ஒழுக்கம் என நூல்களைக்கொண்டும், உயர்சாதியினரின் வாழ்க்கையைக் கொண்டும் ஒரு முடிவை அடைந்திருக்கலாம். ஆனால் அந்த ஒற்றைப்படைத்தன்மையைக் களைந்து விரிவான பன்முகத்தன்மையை உருவாக்கிக்கொள்ளவேண்டிய காலம் இது.  

சுரண்டல் அற்ற எந்த ஒழுக்கமும் நல்லொழுக்கமே. ஒழுக்கம் சார்ந்து இன்னொருவரை பழிப்பதும் மதிப்பிடுவதும் இழிவு. இன்னொரு வகை ஒழுக்கத்தை குறைத்துப் பார்ப்பது முழுமையான பண்பாட்டு அறிவின்மை மட்டுமே. எச்சமூகத்திலும் ஒழுக்கம் என்பது ஒரு பலநிறப் பட்டையாகவே இருக்கும். அந்த வானவில்லை புரிந்துகொள்ள முடியாதவர்கள் பண்பாடற்ற பழம்பிறவிகள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2025 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.