Jeyamohan's Blog, page 6

September 30, 2025

விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்

2025 விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டிய வாசகர் திருவிழாவின்போது வழக்கம்போல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலான விவாத அரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் அரங்கில் எழுத்தாளர் மு.குலசேகரன் கலந்துகொள்கிறார்.

மு. குலசேகரன்  மு. குலசேகரன் மு. குலசேகரன் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_2{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_2 .td_block_inner{
width: 100%;

margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_2:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_2 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_2 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_2 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;

display: block; order: 0;
}.ie10 .tdi_2 .td-image-container,
.ie11 .tdi_2 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_2 .td-module-container{
flex-direction: row;

border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_2 .td-module-meta-info,
.ie11 .tdi_2 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_2 .td-module-meta-info{
padding: 1% 5%;

border-color: #eaeaea;
}.tdi_2 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;

padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;

border-color: #eaeaea;
}.tdi_2 .entry-thumb,
.tdi_2 .entry-thumb:before,
.tdi_2 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_2 .td-post-vid-time{
display: block;
}.tdi_2 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_2 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;

margin-right: 6px;

border-radius: 50%;
}.tdi_2 .td-excerpt{
display: none;

column-count: 1;

column-gap: 48px;

font-size:= !important;
}.tdi_2 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;

font-size: 13px;
}.tdi_2 .td-read-more{
display: none;
}.tdi_2 .td-author-date{
display: none;
}.tdi_2 .td-post-author-name{
display: none;
}.tdi_2 .td-post-date,
.tdi_2 .td-post-author-name span{
display: none;
}.tdi_2 .entry-review-stars{
display: none;
}.tdi_2 .td-icon-star,
.tdi_2 .td-icon-star-empty,
.tdi_2 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_2 .td-module-comments{
display: none;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_2 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_2 = new tdBlock();block_tdi_2.id = "tdi_2";block_tdi_2.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222732","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_2","tdc_css_class":"tdi_2","tdc_css_class_style":"tdi_2_rand_style"}';block_tdi_2.td_column_number = "1";block_tdi_2.block_type = "td_flex_block_1";block_tdi_2.post_count = "1";block_tdi_2.found_posts = "1";block_tdi_2.header_color = "";block_tdi_2.ajax_pagination_infinite_stop = "";block_tdi_2.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_2);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்







விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2025 11:34

விஷ்ணுபுரம் விருந்தினர்-1 மு. குலசேகரன்

2025விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டிய வாசகர் திருவிழாவின்போது வழக்கம்போல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலான விவாத அரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் அரங்கில் எழுத்தாளர் மு.குலசேகரன் கலந்துகொள்கிறார்.

 மு. குலசேகரன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2025 11:34

நௌரு- கடிதம்

நௌருவின் விதி

வணக்கம் இனிய திரு. ஜெயமோகன்,

நவ்ரு தீவு (“நௌரு” எனும் பதத்தினை நெ ள ரு என்று என்னை போன்றவர்கள் வாசிக்கும் அபாயம் இருப்பதால் “நவ்ரு” என்பதே பொருத்தமான தமிழ் எழுத்து வழக்கு) கட்டுரை வாசித்தேன்.

நான் இத்தீவில் பணியின் நிமித்தம் சில ஆண்டுகள் இருந்தவன். மொத்த நாட்டையும் சில மணித்தியாலங்களில் நடந்தே சுற்றிவர முடியும். விமானத்தில் இருந்து பார்க்கும்  போது உருளை கிழங்கு வடிவில் இருப்பதால்  “Potato Island” என்ற செல்லப்பெயரும் உண்டு.

நவ்ரு என்னும் சொல்லின் அர்த்தமே “பறவை எச்சம்” என்பதாக சில “நரூவன்ஸ்” சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தீவு இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. போருக்கு பின் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்து முடிந்த  அளவு phospate சுரண்டப்பட்டது. ஒரு கால கட்டத்தில் “நவ்ரு குடிகள்” தனி மனித சராசரி வருமானதில் உலகிலேயே முதன்மையானவராக இருந்தார்கள். ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஒரு நல்ல நாளில் வாக்கெடுப்பு நடத்தி பின் சுதந்திரம் வழங்கினார்கள். (Phospate வளம் 95 சதவிகிதம் சுரண்டப்பட்ட பின்!)  

இன்றும் இந்த தீவு ஒரு  வெள்ளை Phospate பரப்புதான். மக்கள் தொகை 12000 என்று ஒரு கணக்கிருந்தாலும் பெரும்பாலான இளையோர் ஆஸ்திரேலியாவின்  கிழக்குகரை நகரங்களில் பணி செய்கின்றனர் (பெரும்பாலும் களியாட்ட கூட காப்பாளர்களாக). ஒரு சராசரி நரூவன், 5 சராசரி இந்தியருக்கு சமமான உடல் வலிமையையும், அதற்குண்டான பருமனும் உள்ளவர். செல்வ செழிப்பு காலத்தில் அரசாங்கம் வெளிநாடுகளிலும், பங்குசந்தையிலும் செய்த முதலீடுகள் பெருமளவில் காணாமல் போய் விட்டாலும் இன்றும் ஒரு பெரும் வட்டி தொகையை  அந்த முதலீடுகள் ஈட்டுகின்றன. அந்த பணம் நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றது.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இத்தீவு உலகில் இருந்து ஒதுங்கிய ஒரு தனிமை தீவு.  Phospate எனும் ஒன்றை தவிர எந்தவித பூகோள அரசியல் முக்கியத்துவம் அற்ற குட்டித்தீவு.

குடிகளும் மிக சமீபத்தில்தான் (100 வருடங்கள் என்று கொள்ளலாம்) நாகரீக சமூகங்களின் தொடர்பை அடைந்தவர்கள். இன்றும் இவர்களின் கலாச்சார நடனம் என்பது தென்னை ஓலைகளை இடுப்பிலும், இரண்டாக பிளந்த பெரும் தேங்காய்களை மார்பிலும் அணிந்து மிக மெதுவான ஒரு இசைக்கு அந்த இசையை விட மெதுவாக உடலை அசைப்பதுதான் (சபை நாகரீகம் கருதி இந்த அசைவை “நடனம்” என்றும் அழைக்கலாம்)

மற்றபடி வாழ்க்கை குறித்து வளர்ந்த நாகரீக சமூகங்கள் என்று நம்மை நாமே அழைத்துக்கொள்ளும் நாம் கொண்டிருக்கும் பார்வையும் இவர்கள் பார்வையும் வித்தியாசமானது. இம்மக்களை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இன்றைய இன்பத்தில் உள்ளது.  “இன்பம்” சுட்ட பன்றி தொப்பையிலும், பொறித்த டூனா மீனிலும், பியரிலும் உள்ளது. இதன் காரணமாகவே உடல் பருமனும், நீரிழிவுநோயும் எங்கும் எல்லோரிலும் நிறைந்துள்ளது. மிக, மிக குறைவாகவே முதியோர்களை காண முடியும் (முதியோர் எனும் கட்டத்திற்க்கே பெரும்பாலானோர் செல்வதில்லை).

மக்கள் மிக வெகுளியானவர்கள்.. முதன் முறை சென்றபொழுது விமான நிலையத்தில் இருந்த அதிகாரி என்னை பார்த்து கேட்டது (you Allah?.. you Allah?? ) எனக்கு உடனே விளங்கவில்லை.. பின் புரிந்தது என்னவென்றால் அவர் என்னை பார்த்து “நீ முஸ்லிமா?” என்று கேட்டிருக்கிறார் :)

இவர்களிடம் மிக உயர்ந்த ஒரு பழக்கம் உண்டு. ஒருவரிடம் இருக்கும் ஒரு பொருளை “இது நன்றாக இருக்கின்றது” என்றோ “உங்களிடம் இருக்கும் பொருள் எனக்கு பிடித்திருக்கின்றது” என்றோ சொன்னால் அவர்கள் கலாச்சார வழக்கப்படி அந்த பொருளோ அல்லது அதனை போன்ற ஒரு பொருளோ உடனடியாக உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். முதல்முறை ஒரு “நரூவரிடம்” அவர் அணிந்திருந்த சட்டை நன்றாக இருக்கின்றது என்று சொல்லப்போக அடுத்த 10 நிமிடத்தில் அதே போன்ற ஒரு புதிய சட்டை என் கையில் கட்டாயமாக  திணிக்கப்பட்டது :)

இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பெரும் தொகை முதலீட்டு வட்டியாக வழங்கப்படுகின்றது. அந்த தொகையை அடுத்த 10 தினங்களில் செலவழிப்பதும் இவர்களின் மரபுகளில்  ஒன்று. பல குடும்பங்கள் ஒன்றுகூடி ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி Brisbane சென்று கண்ணுக்குப்பட்ட தேவையான பொருட்களையெல்லாம் வாங்குவார்கள். (இதில் கார், டிவி, மேசை, நாற்காலிகள் என்று சகலமும் அடங்கும்) இந்த ஷாப்பிங் படலம் ஒவ்வொரு 4 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். காரணம், ஏற்கனவே சொன்னதுதான். நண்பரோ, அண்டைவீட்டுக்காரரோ அவர்களுக்கு பிடித்துஇருக்கின்றது என்று கேட்டால் கொடுத்து விடவேண்டும்.. அல்லது அவர்களே எடுத்துக்கொள்வார்கள். (எடுத்ததை திரும்ப கேட்டல் மரபு மீறல்! அப்படி யாரும் கேட்பதும் இல்லை) மொத்த நாடுமே பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்டு தனி, தனி குடும்பலுக்கு சொந்தம். நிலம் விற்கவோ, வாங்கவோ முடியாது. வாரிசுகளுக்கே சொந்தம்.

மற்றபடி நாட்டின் விமானநிலையம் மிக அடிப்படையான சிறிய விமானநிலையம் தான். நம் ஊரில் உள்ள ஒரு ஊராட்சி மன்ற கட்டிடத்தை விட சிறியது. ஜப்பான் இவர்களுக்கு கொடையாக வழங்கிய 2 பழைய விமானங்கள் மட்டும்தான். விமான tire puncture  ஆனாலோ radiator சூடானாலோ விமான சேவை வாரக்கணக்கில் ரத்து செய்யப்படும். விமானம் இறங்கி, ஏறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓடுபாதை குழந்தைகள் விளையாடுவதற்க்கோ, இளம் பெண்கள் கார் ஓட்டி பழகவோ பயன்படும்.

இத்தீவே பறவை எச்சத்தினால் உருவானது என்னும் தொன்மமும் உண்டு.  இந்த தீவே மிக ஆழமான  கடலுக்கு மத்தியில்  ஒரு தூண் போன்ற வடிவில் நிற்பதால் கரையை தாண்டி விழுந்தால் பல கிலோமீட்டர் ஆழம் போகலாம். இதன் காரணமாகவே மிக உயர் தர Tuna மீன் தீவை ஒட்டியே வரும். Tuna இம்மக்களின் அடிப்படை உணவு. இம்மீன்களை பிடிப்பதற்கு இம்மக்கள் பெரிதாக கஷ்டப்படுவதில்லை low tide  நேரங்களில் மீன்கள் Phospate பாறை இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும்.. அதனை ஒரு ஈட்டியால் குதி தூக்குவதுதான் பெரும்பாலும். அல்லது, ஒரு சிறிய Canoe வில் சென்று அந்த Canoe அளவுக்கே இருக்க கூடிய Tuna மீன்களை இழுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.

இவர்களின் கலாச்சார விளையாட்டாக “Frigate Bird” எனும் பறவையை பழக்குவது இருக்கின்றது. இந்த வகை பறவைகள் மிக பரந்த இறக்கை உடையவை. மிக நீண்ட தொலைவு நிற்காமல் பறக்க (பறப்பது என்ற சொல்லைவிட Glide எனும்சொல் பொருந்தும்.. இறக்கையின் விரிவும், பரப்பும் இதனை சாத்தியமாக்குகின்றது) தூங்கி கொண்டே பறப்பவை என்று பல சிறப்புகள் உண்டு. ஆனாலும் இம்மக்கள் பெரிதாக பெரிதாக பறவையுணவு (கோழிகளும் அடக்கம்)  உண்பதில்லை. பொறித்த டூனா மீன் முதன்மை உணவு. பன்றி கொழுப்பு சிறப்புணவு. அரையடி நீளம், அகலம் உள்ள சுட்ட

 பன்றி தொப்பையை குண்டு குழந்தைகள் இரு கையாளும் பிடித்து லொலிபோப் போல சப்பிகொண்டிருப்பதை பார்க்கையில் நமக்கு வாய் ஊறும்.

இத்தீவின் சாபம் இதன் மிக சிறிய பரப்பும், தனிமையும்தான். குடிநீர் முழுமையாகவே வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது, மின்சாரத்திற்கு டீசல் ஜெனெரேட்டர்.  விவசாயத்துக்கான நிலப்பரப்போ, மனிதவளமோ இல்லை. மக்களிடம் பணம் இருந்தாலும் நாடு வறுமையில்.

இவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இம்மக்கள் “Power Lifting” எனும் ஒரு வித பளுதூக்கும் போட்டியில் காமன்வெல்த் கேம்ஸ் முதற்கொண்டு ஒலிம்பிக்ஸ் வரை பதக்கங்களை வாங்கி குவித்து தன நாட்டிற்கு ஒரு மரியாதையும் சிறப்பையும் சேர்ப்பவர்கள். (இந்த இடத்தில இந்தியாவை பற்றி குறிப்பிட்டால் உடனே தேச பக்தர்கள் மனம் புண்படுவார்கள்)

இந்த தனிமைத்தீவில் ஒரு காலத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் குடும்பத்துடன் இருந்தார்கள் என்று சொன்னால் உங்களுக்கு விந்தையாக இருக்கும். இருந்தார்கள்.

உங்கள் நேரத்திற்கு நன்றி

சிவா 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2025 11:31

இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன்

சாமிக்கிட்ட அருளும், குறிப்பிட்ட கடை ஒன்றில் பொருளும் வாங்க சொல்லும் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஜெயபைரவிக்கு சமீபகாலமாக அதிகம் பிடித்திருப்பதால், ஒரு நாளைக்கு சிலமுறை அந்த விளம்பரத்தை யூடிபில் பார்க்க நேரிடும்…ஆலயக்கலை பயிற்சி வகுப்பு முடிந்து வீடு சேர்ந்த மறுநாள் மேற்படி விளம்பரம் ஒளிபரப்பப் படுகையில், “அட… ஒரு கைல அபய ஹஸ்தம்மறு கையில வரத ஹஸ்தம்….”  என்று வாய்விட்டு சொல்ல முடிந்தது.

இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன்

Generally, ordinary people who only read Facebook pages or those who read occasionally tend to judge writers based on their ‘modesty’ or ‘humbleness.’ A ‘modest’ writer is always praised as a ‘good person.

The arrogance of an intellectual
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2025 11:30

September 29, 2025

கலைஞனின் உயிர்த்தெழல்

முழுமையறிவு இணையதளம்

முழுமை அறிவு சார்பாக நான் நடத்தி வரும் இந்திய தத்துவப் பயிற்சி முகாம்கள் 2022ல் இப்போது மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டிருக்கின்றன. முழுமையறிவு சார்பாக எல்லா வகுப்புகளையும் சேர்த்து இருநூறு நிகழ்வுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். தத்துவ வகுப்பின் முதல் வகுப்பின் ஆறாவது அணி செப்டம்பர் மூன்றாம் வாரம் நிகழ்ந்தது. அதன் ஐந்தாவது வகுப்பின் நான்காவது அணி செப்டெம்பர் இறுதி வாரம் நிகழ்ந்தது. ஆகவே நடுவே ஒரு வாரம் மலையிலேயே தங்கி விடலாம் என்று முடிவெடுத்திருந்தேன் . அமெரிக்கா செல்வதற்கு முன் எழுதவேண்டிய பணிகளும் நிறைய இருந்தன.

ஆனால் இடையில் சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. பொன்னி இதழாசிரியரும், முரசொலி நிர்வாகியும், மு.கருணாநிதி அவர்களின் அணுக்க நண்பருமான அரு.பெரியண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக புதன்கிழமை கிளம்பி ரயிலில் சென்னை வந்தேன். வியாழக்கிழமை காலையில் அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து விட்டு அன்று மாலையே மீண்டும் மலைக்கு திரும்ப திட்டமிட்டிருந்தேன்.

அன்பு காலை நான் மேடையில் இருக்கையிலேயே புதுச்சேரியில் இருந்து நண்பர்கள் அழைத்து ரமேஷ் பிரேதன் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்திருப்பதாகவும் சொன்னார்கள்.  என்னால் ஒரு முழுமையான உரையை நிகழ்த்தமுடியவில்லை. ஒன்பது நிமிடங்கள் மட்டுமே பேசினேன். அறைக்குச் சென்றபின்னரே முழுச்செய்தியையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன்.

முந்தைய நாள் இரவு ரமேஷுக்கு திடீரென்று மூளையில் உயர் ரத்த அழுத்த தாக்குதல் நிகழ்ந்து ரத்த உறைவு உருவாகி இருக்கிறது. அது தொடர்ந்து இதயம் பலவீனம் அடைந்திருக்கிறது. காலையில் மருத்துவமனைக்கு சென்றதுமே தேர்ந்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மிகச் சிறிய குருதி அடைப்பு இருந்தால் அவற்றை உறைய வைத்து நகர்த்தி வெளியே கொண்டு வருவதோ அறுவை சிகிச்சை செய்வதோ சாத்தியமாகும். ஆனால் மூளையில் மூன்றில் ஒரு பகுதி முழுக்க குருதி நிரம்பி அது தண்டுவடத்தை நோக்கி சற்று வழிந்திருந்தது.ஆகவே மருத்துவ வழிமுறைகளின்படி செய்வதற்கு எதுவுமே இல்லை.

நான் திரும்பும்போது செய்திகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் மூச்சு இதை ஓடிக்கொண்டிருந்தது .அவர் மயக்க நிலையில், கிட்டத்தட்ட மூளை இறந்த நிலையில் இருந்தார். என்ன செய்யலாம் என்று நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். மருத்துவர்கள் உயிர்காக்கும் கருவியை நீக்கலாம் என்றும், ஆனால் அந்த முடிவை அவருடைய உற்றார்தான் எடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.

பொதுவாக இந்த வகையான முடிவை நெருங்கிய உறவினர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.நண்பர்கள் எடுக்க கூடாது, அவர்கள் அவருக்கு எல்லா வகையிலும் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் என்றாலும். மருத்துவமனையிலும் வெளியிலும் எல்லா வகையான ஏற்பாடுகளையும் நமது நண்பர்கள் செய்து கொண்டிருந்தாலும் கூட அந்த முடிவை அவருடைய சகோதரிகளே எடுக்கும்படி சொல்லிவிட்டோம்.

பின்னர் ‘எதற்கும் மூன்று நாட்கள் பார்ப்போம்’ என்று நண்பர்கள் பிறகு முடிவெடுத்தனர். மூன்று நாட்களில் மருத்துவமனையில் வைத்து பார்த்தார்கள். மருத்துவமனையிலேயே அவருடைய இறுதி நெருங்கி விட்டது என தெரிந்தது. கருவிகளை நீக்கம் செய்யத் தேவையில்லாமலேயே இதயம் நின்று விட்டது.

அந்தச் செய்தியை சனிக்கிழமையன்று சொன்னார்கள். அன்று காலையிலேயே இன்று மாலைக்குள் உயிர் விலகும் என்ற தகவல் வந்திருந்தது. மாலையில் அது உறுதிசெய்யப்பட்டது. அப்போது மலையில் இருந்தேன், நண்பர் சரவணனும் அந்தியூர் மணியும் கூடவர நடை சென்றுகொண்டிருந்தேன். எஞ்சியோர் தத்துவ விவாதங்களுக்கான தயாரிப்பில் இருந்தனர்.அஞ்சலிக்குறிப்பை போட்டுவிட்டு வகுப்புக்குச் சென்று அதை தொடர்ந்தேன்.

மூன்று நாட்களாக இருந்து வந்த பதற்றம் அகன்று ஓர் எடைமிக்க உணர்வுதான் உருவானது. 2011 முதல் ரமேஷின் உடல்வதைகளை அறிந்தவன் என்ற வகையில் இந்த இறப்பு ஒரு விடுதலைதான் என்ற எண்ணம் எழுவதே தவிர்க்க முடியவில்லை.ஏனென்றால் இதற்கு முன் இரண்டு தருணங்களில் இதற்கு இணையான நெருக்கடிக்குள் சென்று அவர் மீண்டு வந்திருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் உடலில் ஒரு பகுதி இறந்தது.

ஆனால் விஷ்ணுபுரம் விருது அவருக்கு என்று தெரிவிக்கப்பட்ட பின்னர்  அவர் உடல் நிலையில் அபாரமான ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது . எப்போதும் உற்சாகமாக பேசலானார். எழுதிக்கொண்டிருக்கும் நாவல் ஒரு வருடத்திற்கு மேலாக பாதியில் நிற்கிறது என்றும், உடனடியாக முடித்து விடுவேன் என்றும், ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும் சொன்னார். ஒவ்வொரு நாளும் முப்பது முதல் ஐம்பது பேர்வரை புது வாசகர்கள் அவரை கூப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள் .அவருக்கு மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருந்தன. அவருடைய நூல்களை பற்றிய மதிப்பீடுகளும், ஐயங்களும், புதிய வாசகர்கள் அவற்றை அணுகும் போது வரும் திகைப்புகளும் வந்தன. 

அவை அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. .“இதைத்தான் வாழ்நாள் முழுக்க எதிர்பார்த்தேன் ஜெயமோகன்” என்று என்னிடம் சொன்னார். “என்றோ ஒருநாள் நான் கண்டெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சொல் அழியாது என்று நான் நம்ப விரும்பினேன்…” என்றார்.  

சாவுச்செய்தி அறிந்ததும் “ரெண்டு வருஷம் முன்னாடியே குடுத்திருக்கலாமோ?” என்று நண்பர் செந்தில் சொன்னார் . விஷ்ணுபுரம் விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் என்பது இலக்கியமறிந்த எவரும் அறிந்ததே. தோராயமாக எந்த ஆண்டு என்று கூடச் சொல்லிவிட முடியும். அதில் சாகித்ய அக்காதமி, இயல் போன்ற பிற முக்கியமான விருதுகளைப் பெறுபவர்கள் விலகினால் பின்பிருந்தோர் முன்னால் வருவார்கள்.  ரமேஷுக்கு முன்னால் விருது பெறவிருந்த சிலர் வேறு முக்கியமான விருதுகளை பெற்றதுதான் அவருக்கு நான்காண்டு முன்னதாகவே விருது வர காரணமாகியது. விஷ்ணுபுரம் விருது பெறுபவர்களில் என்னைவிட வயது குறைவான முதல் எழுத்தாளர் ரமேஷ்.

முன்னரே விருதை கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுவது நியாயமே. ஆனால் விருதை முன்னரே கொடுப்பது என்பது அவர் உடல்நிலை மோசமாக இருப்பதையும், அவர் உயிர்வாழ மாட்டார் என்பதையும் நாம் ஏற்பது போல ஆகிவிடும் என்ற தயக்கம் இருந்தது. அவருடைய முறை எப்போது வருகிறதோ அப்போது மட்டுமே அளிக்கலாம் என்று எண்ணினோம். பொருளாதார ரீதியாக உதவுவது என்பது வேறு, விருது என்பது வேறு என்ற எண்ணமும் இருந்தது.  அவர் விருது அளிக்கும்  வாசக ஏற்பை அனுபவித்து மகிழ்ந்து நிறைவுற்று மறைந்தார் என்ற எண்ணம் இப்போது மகிழ்ச்சியை அளிக்கிறது.

எத்தனை பேர் புதுச்சேரி அஞ்சலி நிகழ்வுக்கு வருவார்கள் என்ற மனக்குழப்பம் எனக்கு இருந்தது .மிக குறைவானவர்கள் வந்து அந்நிகழ்வு நிறைவு தராமல் போய்விடுமோ என்று தோன்றியது. ஏற்கனவே நாங்கள் அத்தகைய ஒரு பிழையை செய்து விட்டோம் என்று எண்ணமும் எங்களுக்கு உண்டு. ஞானக்கூத்தனின் மறைவின் போது சென்னையில் அவர் வாழ்ந்தமையாலும், அவருக்கு நீண்டகால வெவ்வேறு அரசியல் மற்றும் திரைப்படத் தொடர்புகள் இருந்தமையாலும் அவருடைய இறுதி நிகழ்விற்கு திரளாக பலர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்கள் சார்பில் எட்டு பேர் சென்று மலர்வளையம் வைத்தோம். ஆனால் குறைவான கூட்டம் காரணமாக அவருடைய அஞ்சலி நிகழ்வு தமிழின் முதன்மைக் கவிஞர் ஒருவருக்கு  நிகழவேண்டிய வகையில் நிகழவில்லை என சென்றவர்கள் சொன்னார்கள். இப்போதும் குற்ற உணர்வு உண்டு ,அதை அரங்கசாமி அவ்வப்போது கூறிக் கொண்டே இருப்பார் .

ஆகவே நான் என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் செய்தியனுப்பி அவர்கள் கண்டிப்பாக இறுதி நிகழ்வுக்கு வர வேண்டும் என்றும், அமைப்பு சார்பாக வருவதாக இருந்தால் மலர்வளையத்துடன் வரவேண்டும் என்றும் அறிவித்தேன். ஈரோடு, சேலம், கோவை, மதுரை, சென்னை, பெங்களூர் என விஷ்ணுபுரம் நண்பர்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருந்தனர்.

நான் தத்துவ வகுப்பில் ஞாயிறு நிகழவிருந்த வகுப்பை இரவு 9 மணிமுதல் 12 மணி வரை நடத்தி முடித்தேன். ஞாயிறு நிகழவிருந்த கூட்டு விவாதத்தை கிருஷ்ணன் மற்றும் அந்தியூர் மணி தலைமையில் நிகழும் படி ஏற்பாடு செய்துவிட்டு, இரவு ஒரு  மணிக்கு மலையிலிருந்து நேரடியாகவே கிளம்பி, அந்தியூர் சேலம் வழியாக புதுச்சேரி வந்தேன். என்னுடன் இரண்டு வண்டிகளிலாக பத்து நண்பர்கள் வந்தனர். அஜிதன் நாகர்கோயிலில் இருந்து கிளம்பி  பேருந்தில் வந்து சேர்ந்தான்.

உடனடியாக இறப்பு இல்லத்துக்குச் நான் செல்ல விரும்பினாலும் நண்பர்கள் சிறிது ஏற்பாடுகள் மிஞ்சி உள்ளன என்றும் அதன் பிறகு நான் அங்கே செல்லலாம் என்றும் சொன்னார்கள். ரமேஷின் குடும்பத்தினர் அவர்களின் குலவழக்கப்படி சற்று எளிமையான நிகழ்வுக்கே ஏற்பாடு செய்திருந்தனர். நிறையபேர் வருவார்கள் என்னும் செய்தியும் அவர்களுக்குத் தெரியவில்லை.  நம் நண்பர்கள் ஒரு எழுத்தாளனுக்கு உரிய பெருமையுடன் அது நிகழ வேண்டும் என்று எண்ணினார்கள்.

கே.வி. அரங்கசாமி இறுதி நிகழ்வின் பொருட்டு துபாயிலிருந்து கிளம்பி சென்னை வந்து, சென்னையிலிருந்து கார் வழியாக புதுச்சேரி வந்து சேர்ந்தார் .அரங்கசாமி வந்து சேர்ந்த பிறகு அவருடைய பொறுப்பில் சாலை முழுக்க துணிப்பந்தல் போடவும் , நிறையபேர் அமர்வதற்கான நாற்காலிகள் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுச்சேரியிலேயே மிகப்பெரிய மலர்த்தேர்தான் வேண்டும் என்று அரங்கசாமி உறுதியாக இருந்தார். 

ஏற்பாடுகள் முடிந்ததாக எனக்கு தகவல் வந்த பிறகு நான் கிளம்பிச் சென்றேன். என் சார்பில் மறைந்த படைப்பாளிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் செந்தில்குமார், அரங்கசாமி, விஜயசூரியன் ஆகியோர் மலர்வளையம் வைத்தனர். வெவ்வேறு ஊர்களின் சார்பில் விஷ்ணுபுரம் நண்பர்கள் மலர்வளையம் வைத்தனர். அங்கே தமிழின் படைப்பிலக்கியத்தளத்தின் நண்பர்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஒவ்வொரு முகத்தை பார்க்கும் போதும் அவர்கள் வந்திருப்பதற்காக ரமேஷின் பொருட்டு ஒவ்வொரிடமும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர் கோணங்கியைப் பார்த்தேன். அவரை தழுவிக் கொண்ட போது அவருடன் நிகழ்ந்த அந்த வகையான சந்திப்புகளுடன் ரமேஷின் நினைவும் எழுந்தது.  எப்போதெல்லாம் ரமேஷை நான் சந்தித்தேனோ அப்போதெல்லாம் அவரை தோள் சேர்த்து தழுவிக் கொள்ளும் வழக்கம் எனக்கு இருந்தது. “குண்டர்களை தழுவுறது எனக்குப் புடிக்கும், மல்யுத்தம் பண்ற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு” என்று ஒருமுறை அவரிடம் சொன்னேன். அவர் சிரித்தது நினைவிலெழுந்தது.

1999ல் ரமேஷ் எங்கள் வீட்டுக்கு  வந்திருந்தபோது அஜிதன் சின்னப்பையன், எல்கேஜி. என் வாசகர் ஒருவர் மாஸ்டர் என்ற ஒரு உடற்பயிற்சிப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அது வீட்டிற்கு மாதந்தோறும் வரும். அஜிதன் அதில் இருக்கும் மாபெரும் பயில்வான்களின் படங்களை வெட்டி ஒட்டி வைத்து தன்னுடைய முருங்கைக்காயைப் போன்ற கைகளை தூக்கி ‘மசில்’ பிடித்து பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். அவனிடம் ரமேஷைச்  சுட்டிக்காட்டி ‘இவர் யார் தெரியுமா? என்று நான் சொன்னேன். “பெரிய சுமோ பயில்வான்!”

உடனடியாக அவன் தன்னுடைய படச்சேமிப்பை புரட்டி நாலைந்து சுமோ பயில்வான்கள் படங்களை பார்த்து உறுதி செய்து கொண்டான் .மறுநாள் நான் ரமேஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜன்னல் இடுக்கில் மூன்று மண்டைகள் தெரிந்தன. என்ன என்று நான் கேட்டபோது இரண்டு பேர் ஓடிப் போய்விட்டார்கள். அஜிதனிடம் என்னடா என்று கேட்டேன். “என்னோட ஸ்கூல் ஃபிரன்ட்ஸ் .எங்க வீட்டுக்கு பெரிய சுமோ பயில்வான் வந்திருக்கார்னு சொன்னேன். அதான் பாக்க வந்தாங்க” என்று அவன் சொன்னான்.

பெரும்பாலும் குண்டர்களுக்கே உரிய பெருந்தன்மையும், வேடிக்கைச்சிரிப்பும் கொண்டவர் ரமேஷ். குண்டர்களில் அந்த பெருந்தன்மை அற்றவர்கள் மிகக்குறைவு என்பது என் அனுபவம். எவர்மேலும் அவருக்கு வஞ்சம், நிரந்தர வெறுப்பு இருந்ததில்லை. அவர் மிகக்கடுமையாக அவமதிப்பை உணர்ந்தது அவர் நம்பியவர்களால் கைவிடப்பட்டபோது. ஆனால் மிக விரைவாக அதிலிருந்து வெளிவந்தார். அதன்பின் அதைப்பற்றியும் நையாண்டியாகவே பேசிக்கொண்டோம்.

நீண்ட இரவு பயணமும் தூக்கமின்மையும் அளித்த களைப்பு. கூடவே வெயில். நான் நேரடியாக வெயிலில் நின்று நீண்ட நாள் ஆண்டுகளாகிறது என்று அஜிதன் பிறகு சொன்னான். மண்டை ரத்தம்போலச் சிவந்துவிட்டது. நான்கு மணிக்கு உடல் மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

ஒரு முதன்மைப் படைப்பாளிக்கு எவ்வாறு அந்நிகழ்வு நிகழவேண்டுமோ அவ்வளவு சிறப்பாக நிகழ்ந்தது. மலர்த்தேரில் அவர் உடல்  மிகப்பெரிய மேளதாளத்துடன் கொண்டுசெல்லப்பட, உடன் தமிழின் இன்று எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஏறத்தாழ அனைவருமே சென்றனர். பல இளம் படைப்பாளிகள், இன்னமும் ஒரு கதைகூட வெளிவராதவர்கள் சிலர் கூட, நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருந்தார்கள். அவர்களில் பலரிடம் அப்பயணத்திற்கான பணம்கூட இருந்திருக்காது.

அவ்வாறுதான் அது நிகழவேண்டும். ஒரு படைப்பாளியின் இறுதி நிகழ்வு ஏன் அதற்குரிய மகத்துவத்துடன் நடக்க வேண்டும் ?ஆம், அவர் வாழும் காலத்தில் அவருடைய சமூகம் அவரை கௌரவித்திருக்கவேண்டும். அவருடைய இறுதிச் சடங்கை ஊர் கூடி நிகழ்த்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எப்போதுமே தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்வதில்லை. தமிழ்ச் சமுதாயத்தில் பேச்சாளர்களுக்கும் ,எளிய யூடியூபர்களுக்கும் இருக்கும் இடம்கூட எழுத்தாளர்களுக்கு இல்லை. நடிகர்களுக்கும் அரசியலாளர்களுக்கும் இருக்கும் இடம் பேச்சாளர்களுக்கும் கிடையாது. ஆகவே எழுத்தாளர்கள் தங்களுக்கான கௌரவத்தை தாங்களேதான் தேடிக் கொள்ள வேண்டும். 

உடல்நலிந்து கைவிடப்பட்ட நிலையில் ரமேஷ் இருந்தபோது உடனிருந்தவர்கள் எழுத்தாளர்களே. இந்த நேரத்தில் பலரைச் சொல்லவேண்டும். மாணவராக மிக வறிய நிலையில் இருந்தபோதும் மனோமோகன் ரமேஷுடன் இருந்தார். நம் நண்பர்கள் சிவாத்மா, கடலூர் சீனு, விசாகன் என அவருடைய வாசகர்கள் அவருடன் இருந்தனர். தனக்கு என்ன நடந்தாலும் சிவாத்மாவிடம் தெரிவிக்கவேண்டும் என்றுதான் ரமேஷ் அறிவுறுத்தியிருந்தார். கோணங்கி அவரை வந்து சந்தித்துக்கொண்டே இருந்தார்.ஜீவகரிகாலன் பதிப்பாளராகவும் நண்பராகவும் ரமேஷுடன் இருந்தார். நானறியாத பலர் அவருக்கு நிதியுதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்கள். 

அவரை எழுத்தாளர் சமூகம் கைவிடவில்லை என்பதை உறுதியாகப் பதிவுசெய்ய வேண்டும். 1948ல் புதுமைப்பித்தன் மறைந்தபோது நிகழ்ந்தவற்றை இன்று ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரைகளில் காணலாம். (புதுமைப்பித்தன் களஞ்சியம்) புதுமைப்பித்தனை தமிழ்ச்சமூகம் பொருட்படுத்தவில்லை. அவருடைய உடன்பிறந்தார் கைவிட்டனர்.  ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அவருடன் நின்றனர், அவர் குடும்பத்தைக் காத்தனர். அக்களஞ்சியத்தில் எத்தனை எழுத்தாளர்கள் நெகிழ்வும் தீவிரமுமாக அவருடனிருந்தனர், எத்தனைபேர் அவருக்காக எழுதினர் என்பதை வெங்கடாசலபதியே உணர்ச்சிகரமான வியப்புடன் எழுதியுள்ளார்.

மயானத்தில் இருந்து நான் காரிலேயே கிளம்பி கோவை வந்தேன். மீண்டுமொரு முழு இரவுப்பயணம், துயில்நீத்தல். உற்றார் சாவுக்காக ஒரு நாள் துயில்நீக்கவேண்டும் என மரபுண்டு. இரண்டு நாட்கள் துயில் நீத்திருக்கிறேன். அஜிதன் மீண்டும் நாகர்கோயிலுக்குச் சென்றான். அரங்கசாமி  அன்றே சென்னை சென்று மீண்டும் துபாய்க்குக் கிளம்பினார்.

ரமேஷுக்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அது முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது போலவே மிகச்சிறப்பாக டிசம்பர் 21, 22ஆம் தேதிகளில் நிகழும். இதை ரமேஷுக்காக நாங்கள் தமிழின் முதன்மை நாளிதழ்களிலெல்லாம் அளித்திருந்த இரங்கல் செய்திகளில் தெரிவித்திருந்தோம். ரமேஷுகான ஓர் இலக்கிய விழாவாகவே அது அமையும். அவருடைய முகம், அவருடைய எழுத்து விஷ்ணுபுரம் அரங்கிலே முழுமையாக திகழும். கலைஞர்கள் மறைவதில்லை. கலைஞன் உயிர் நீங்கும்போது அவன் மறுபடியும் பிறக்க தொடங்குகிறான். அவன் மீதான வாசிப்புகள் கூர்மை அடைகின்றன. அவன் மீதான விமர்சனங்களும் கசப்புகளும் மறைகின்றன .அதன் பிறகு அவன் என்ன எழுதினான் என்பதே நிற்கும்.

தன் உடல் ஒவ்வொரு நாளும்  சிதைந்து கொண்டிருக்கும் போது கூட தன்னுள் இருந் அனலை ஊதி ஊதி மேலெழுப்பிக் கொண்டவன், எழுதி தன்னை நிறுவிக்கொண்டவன், அவ்வளவு எளிதாக இந்த பண்பாட்டில் இருந்து மறந்துவிட மாட்டான். இன்று அவனுக்காக இச்சமூகத்தின் பெரிய முகங்கள் வந்து நின்றிருக்காமல் இருக்கலாம். பொதுமக்கள் திரண்டு வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருக்கலாம். (அவனுக்கான இறுதிநாள் நேரடி ஒளிபரப்பை நடத்திய சுருதி டிவியும் கபிலனும் நன்றிக்குரியவர்கள்) ஆனால் எவர் அவனை வாசித்தார்களோ, அவனை தங்களுள் ஒருவராக நினைத்தார்களோ அவர்கள் அனைவரும் அங்கு இருந்தனர். அவர்கள் அவனை அரசனுக்குரிய கௌரவத்துடன் இடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அவனுடைய சொற்கள் இங்கு என்றும் வாழும்.அதை விஷ்ணுபுரம் விழாவின் ஊடாக மீண்டும் நிறுத்துவோம்.

ரமேஷுக்கு அளிக்கப்படவிருந்த விருது அந்த விழாவில் அவரை பிரதிநிதித்துவம் செய்பவருக்கு அளிக்கப்படும். விருதுத் தொகை மட்டும் இந்த ஆண்டுமட்டும் இணையாக பங்கிடப்பட்டு அவர் பெயரில் விஷ்ணுபுரம் –ரமேஷ் பிரேதன் சிறப்பு விருதாக இளம் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும்.  எவருக்கு விருது என பின்னர் அறிவிப்போம். அவர்கள் ஒவ்வொருவரின் சொல்லிலும் முன்னோடி என ரமேஷ் மீண்டும் பிறந்து வருவார். ரமேஷ் நினைவாக என்ன செய்யலாம் என்பதை ஓராண்டுக்குள் கூடி ஆலோசித்து முடிவுசெய்வோம்.

வாழ்ந்து நிறைந்த என் இனிய குண்டனுக்கு மீண்டும் அஞ்சலி.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:35

திருக்கண்டியூர்

அட்டவீரட்டான ஆலயங்களில் ஒன்று. சிவன் பிரம்மனின் தலையை கொய்த இடம் என்பது தொன்மம். ஆகவே இப்பெயர் அமைந்தது.சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

திருக்கண்டியூர் திருக்கண்டியூர் திருக்கண்டியூர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:33

மனிதகுலத்தின் மீதான நம்பிக்கை- மீனாட்சி நாராயணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

கடந்த சில வருடங்களாகவே நான் புத்தகங்களை ஆன்லைனில் தான் வாங்குகிறேன். செயற்கை நுண்ணறிவு வைத்து பரிந்துரைக்கப்படும் பாடல்களும்/ புத்தகங்களும் ஓரளவுக்கு நமக்குப் பிடித்தவகையாகவே இருக்கின்றன.  இரண்டு வாரங்களாக “மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு” புத்தகப் பரிந்துரை உள்டப்பியில் வந்து கொண்டே இருந்தது.

10 வருடங்களுக்கு முன்பு படித்த Selfish Gene புத்தகத்தை படித்து நிறைய விடையில்லா கேள்விகளுடன் இருந்தேன்.  அறிவியலில் வாழ்வது சுயநலத்திற்காகவே என்று கூறப்பட்டால் மதத்தில் மோட்சம் என்னும்  கருதுகோள் சற்று சுயநலமானதோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வாழ்வோ சாவோ சுயநலம்தான் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறம், பண்பு போன்றவை உருவாகி வந்த விதத்தை இதை வைத்து புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது. 

எதிர்மறை  செய்திகளே உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரியான ஒரு புத்தகம் மிக நல்ல முயற்சி. ஆங்கிலத் தலைப்பான Humankind என்பதே என்னை அதை நோக்கி இழுத்தது. புத்தக ஆசிரியர் Rutger Bregman. மனித இனத்தின் இரக்க குணத்திலும் தன்னலம் பாராமல் பிறருடைய நலம் மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும் , அதன் மூலமாக சமுதாயத்தின் உண்மையான மாற்றக் உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் ஆசிரியர் இந்த நூலில் அலசுகிறார். தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். 

நூலின் ஆரம்பத்திலேயே தத்துவார்த்த குத்துச்சண்டை வளையத்திற்குள்  தத்துவவியலாலாளர்ரகளான தாமஸ் ஹாப்ஸ் யும் ( Thomas Hobbies) , ஜீன் ஜாக்ஸ் ரூஸோவையும் ( Jean Jacques Rousseou) எதிரெதிர் துருவத்தில் நிறுத்துகிறார்.  மனிதன் தீய இயல்பு கொண்டவன் என்று நம்ப வைக்க என்ற ஒரு அவநம்பிக்கையாளர் என்ற பட்டத்துடன் Hobbes நிற்கிறார். ஒரு குடிமை சமுதாயத்தால் மட்டுமே நம்முடைய அடிப்படை இயல்பிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இதற்கு நேர் எதிராக ரூஸோ மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள் என்றும் நாகரீகம் மனிதனை காப்பாற்றுவதற்கு பதிலாக அவனை சீரழிக்கவே செய்கிறதும் என்றும் அவர் வாதிட்டார்.

Hobbes தன்னுடைய லெவாயத்தன் ( Levaithan)நூலில், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் சுதந்திரமானவர்களாக இருந்தோம் நமக்கு பிடித்ததை நம்மால் செய்ய முடிந்தது ஆனால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருந்தன. மனிதர்கள் பயத்தால் முடுக்கி விடப்படுகின்றனர் எனவே நாம் பாதுகாப்பிற்காக ஏங்குகிறோம். அதன் விளைவு எல்லோரும் எல்லோருக்கும் எதிராக சண்டையிடும் ஒரு சூழல் உருவானது. ஆனால் அதே நேரத்தில் நாம் பயப்படத் தேவையில்லை என்ற நம்பிக்கையும் அவர் நமக்குத் தருகிறார் சட்ட ஒழுங்கு தீர்ப்புகளை சரி செய்து அமைதியை நம்மால் நிலைப்படுத்த முடியும் நாம் அனைவரும் நம்முடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில். நான் நம்முடைய உடலையும் ஆன்மாவையும் தனி ஒரு மாபெரும் சக்தியின் கைகளில் ஒப்படைக்க தயாராக இருக்க வேண்டும் அந்த சக்தியை அவர் Levaithan என்று அழைத்தார். ஹாப்ஸுக்கு பின்னால் வந்த எண்ணற்ற நிர்வாகிகள் சர்வாதிகாரர்களுக்கு வலியுறுத்திய ஒரு வாதத்திற்கு அடித்தளத்தை ஹாப்ஸின் சிந்தனை அமைத்துக் கொடுத்தது. 

” எங்களுக்கு அதிகாரத்தை கொடுங்கள் இல்லையேல் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்“

ரூசோ விற்கு திருப்புமுனையாக அமைந்தது அவர் கலந்த கொண்ட கட்டுரை போட்டி தலைப்பு “அறிவியல் மற்றும் கலைகளின்  மறுசீரமைப்பு அறம் ஒழுக்கத்தை தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதா?” முதன்முதலாக ஒரு சில சதுர அடி நிலத்தை வளைத்து போட்ட ஒருவன் இது எனக்கு சொந்தமானது என்று நினைப்பே தன் மனதில் விதைத்தான். அதை அவன் வெளிப்படையாக அறிவித்த போது மக்கள் மிகவும் எளிமையானவர்களாக இருந்ததை கண்டு வியந்தான். குடிமை சமுதாயத்தை உண்மையில் தோற்றுவித்தவன் அவன் தான். சபிக்கப்பட்ட இந்த குடிமை சமுதாயம் உருவான நாளிலிருந்து தான் விஷயங்கள் தவறாக போகத் தொடங்கியதாக ரூஸோ வாதிட்டார். மனிதர்களாகிய நாம் இயற்கையோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பொழுது நாம் இரக்கமுள்ள ஜீவன்களாகத்தான் இருந்தோம் ஆனால் இப்போது தன்னலவாதிகளாகவும் அவநம்பிக்கையாளர்களாகவும் ஆகியுள்ளோம் இப்பொழுது நாம் பலவீனவர்களாக/ சோம்பேறிகளாக மாறிப்போய்விட்டோம். நாகரிகத்தின் வளர்ச்சி ஒரு தவறு என்றும் நாம் நம்முடைய சுதந்திரத்தை ஒருபோதும் விரயமாக்கி இருக்கக் கூடாது என்று ரூஸோ  எழுதினார். அவருக்குப் பின்னால் வந்த எண்ணற்ற அராஜகவாதிகளும் சுதந்திர விரும்பிகளும் லட்சக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய ஒரு வாதத்திற்கான அடித்தளத்தை ரூசோவின் சிந்தனை அமைத்துக் கொடுத்தது. 

” எங்களுக்கு சுதந்திரத்தை கொடுங்கள் இல்லையேல் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்“

இந்த இரண்டு  தத்துவவியலாளர்களின்  யாருடைய கண்ணோட்டம் சரியானது என்ற கேள்வியை ஆசிரியர்  ஆராய்கிறார்.

நான் முதல் முதலில் ஹாப்ஸ் என்கிற தத்துவவியலாளரை பற்றி அறிந்தது  Calvin and Hobbes  கார்ட்டூன் வழியாகத்தான். ஹாப்ஸின் இந்த வாதத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தக்கூடிய  சில பக்கங்கள் இந்த கார்ட்டூனில் உண்டு.

நூலாசிரியர் பின்வரும் தலைப்புகளில் இவ்விரு வாதங்களுக்கு உண்டான விளக்கங்களை முன் வைக்கிறார். 

1. பரிணாம வளர்ச்சி 

2. மனித குலத்தின் தற்போதைய நிலவரம் 

3. நாடுகளாக எவ்வாறு வினையாற்றுகிரோம் _ போர்க்காலங்களில்

5.பெருநிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள்.

 பரிணாம வளர்ச்சி

முதல் உயிரினம் தோன்றி நாநூறு  கோடி ஆண்டுகளுக்குப் பிறகே  மனிதன் தோன்றியுள்ளான். மனிதர்களாகிய நாம் எவ்வளவு தனித்துவமானவர்களாக  கருதினாலும் மற்ற உயிரினங்களைப் போலவே நாமும் பரிணாம வளர்ச்சியின் விளைவு தான் என்று என்பது மறுக்கப்படாத உண்மை. உதனிகள் என்று அழைக்கப்படுகின்ற உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த விலங்கினங்கள் தான் நாம் மனிதனும் மனித குரங்குகளையும் ஒத்த வேறு பல  உயிரினங்கள் பூமியில் நம்முடன் உலா வந்து கொண்டிருந்தன. பின்னர் திடீரென மறைந்து விட்டது.  நியான்தற்கள் sapiens விட மிக வலுவானவர்கள்/ உயரமானவர்கள் மூளையும் நமது தற்போதைய மூளையின் அளவைவிட சராசரி 20 மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது.  வரலாற்றியலாளரான  Yuval Noah Hari, வரலாற்றின் முதல் இன ஒழிப்பு நடவடிக்கை ( sapiens Vs Neandrathals )நடந்திருக்கலாம் என்று யூகிக்கிறார். 

இதற்கு எதிர்வாதமாக  நரியிலிருந்து நாயை உருவாக்கும் ஆய்வு சைபீரியாவில் நடந்ததை பற்றி குறிப்பிடுகிறார். அம்மாற்றம் நடந்ததற்கு முக்கிய பண்பு நலனாக கருதப்பட்டது “தோழமை“என்பது. இதையே மனிதர்களுக்கு பார்த்தால் Neanderthal  Sapiens ஆகிய தற்போது தனி  நபரை விட அதிக அறிவார்ந்ததாகர இருந்திருக்ககூடும். ஆனால் சேப்பியன்ஸ் ஒரு பெரிய குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர். Neandrathals சூப்பர் கம்ப்யூட்டர் என்று வைத்தால் சேப்பியன்ஸை வைஃபையுடன் கூட கம்ப்யூட்டர் என்று வைத்துக் கொள்ளலாம் ஒருவரோடு ஒருவர் சிறப்பாக பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இதுவே நாம் மனிதர்களாக நீடிப்பதற்கு உதவி செய்கிறது.

ஆனால் நடைமுறையில் குழுக்களுடன் மோதல் என்பதை நாம் வரலாற்றின் வழியாக பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அது எவ்வாறு நிகழ்வது என்பதற்கு விளக்கம் இவ்வாறு அளித்துள்ளார் எந்த அம்சம் நம்மை கனிவான உயிரணுமாக ஆக்கியதோ அதே அம்சம்  இது யார் நம்மை பெரும்பளவு ஒத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கு ஆக்சிடோஸின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஆக்சிடோசன் இன் தாக்கம் ஒருவருடைய சொந்த குழுவினரோடு நின்று விடுகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் அந்த ஹார்மோன் நண்பர்கள் மீது பாசத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அந்நியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டவும் செய்கிறது. 

இப்பொழுதும் பழங்குடியினர்கள் மூர்க்கமான மக்கள் எப்பொழுதும் போரிட்டுக் கொண்டே இருக்கின்ற ஒரு சமூகமாகவே கருதப்படுகிறது. ஸ்டீவன் பிங்கர் இன் தி பெட்டர் ஏஞ்சல்ஸ் ஆஃப் அவர் நேச்சர் புத்தகம் வெளி வரும் வரை, யாநூமமி பழங்குடியின மக்களை பற்றி ஆய்வின்படி “மூக்கமான மக்கள்” ( the fierce people)  என்பதே பெரிதாக முன்வைக்கப்பட்டது. ஸ்டீபன் பிங்கரின் புத்தகங்கள் புள்ளி விவரங்களோடு நமது அந்த புரிதல் சரியில்லை என்பதை விளக்கியது. 

வேட்டைச் சமூகமாக இருந்தவரை  சண்டை சச்சரவின்றி இருந்து வந்தோம் . பின்னர் ஓரிடத்தில் தங்கி உடைமைகளை அதிகரிக்கச் செய்யும்பொழுது இந்த மாற்றம் நிகழ்ந்தது.

இதேபோன்று மற்றொரு உதாரணம் ஈஸ்டர் ஐலேண்ட் மோவாய்  இன மக்கள். இவர்களைப் பற்றி எதிர்மறையான செய்திகளை அதிகம் கிடைக்கின்றன. ஆனால் உண்மையில் கேப்டன் ஜேம்ஸ்  குக்கின் குறிப்பேடுகளின் படி இவர்கள் மிகவும் திறமையானவர்கள் வல்லவர்கள் என்று குறித்து வைத்திருந்தார். ஆனால் பின் வந்த ஆய்வாளர்களான ஜெராடூ டைமண்ட்,  பால் ஜான் பிளான்சி ஆகியோர் அத்தீவுவாசிகளை நரமாமிசம் உண்பவர்களாக  சித்தரிக்க ஆரம்பித்து விட்டனர்.  இக்கருத்து அதிகம் பரவியதால் இப்பொழுதும் நாம் பழங்குடிகள் என்றால் நர மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். 

தற்போது எலிகளை வைத்து ஆய்வு செய்யும்  பல்கலைக்கழகத்தில், எலிகளை இரு குழுவாக பிரித்து ஒன்றிற்கு புத்திசாலியான எலிகள் ( group 1)என்று எழுதி வைத்து அடுத்ததற்கு மந்த புத்தி ( குரூப் 2) எலிகள் என்றும் எழுதி வைத்தனர். சில பார்வையாளர்களை தேர்ந்தெடுத்து இரண்டு எலி குழுக்களும் எவ்வாறு செயல்படுகிறது என்று சோதனை செய் செய்தார்கள். இச்சோதனையில் கலந்து கொண்ட எல்லோரும் புத்திசாலி எலிகள் என்ற குழுவில் பிரிக்கப்பட்டு இருந்த எலிகள் எல்லாம் நன்றாக செய்வதாக குறிப்பிட்டு  இருந்தனர்.  உண்மையில் எல்லா எலிகளுமே ஒன்றுதான், அவைகள் செய்தது எல்லாமே ஒரே மாதிரி தான். ஆனால் ஒரு நல்ல பண்பிற்கு அடையாளப்படுத்தி விட்டால் மக்கள் எல்லாருமே நல்ல விதத்தை பின்பற்றுகின்றனர் என்று அந்த குறிப்பு உணர்த்தியது. 

இதுவே தனியார் கம்பெனிகளுக்குமே பொருந்துகிறது என்றும் ஆய்வு குறிப்பிடப்பட்டுள்ளது.

 சந்தேகத்தைக் கைவிட்டு விட்டு மனித இயல்பு குறித்து அதிக நேர்மறையான ஒரு கண்ணோட்டத்தை நீங்கள் எடுக்கும் பொழுது எல்லாமே மாறுகிறது என்று இந்த ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் இதை கண்டதுண்டு கொரோனா காலகட்டத்தில் முதல் இரண்டு தினங்கள் பிடி கிடைக்காமல் மக்கள் அலைந்தாலும் பின்னர் நான் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில், எதிர்மறை செய்திகளால் மிகவும் பாதிக்காத வண்ணம் அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். உங்களின் நோய் தொற்று கதை களியாட்டங்களையும்  இதில் அடக்கலாம்.

இந்நாட்களில் சுதந்திரம் இல்லாமல் விளையாட்டு இல்லாமல் உள்ளார்ந்த ஊக்கமில்லாமல் நம்மில் பலர் வேலை செய்கின்ற விதம் மனத்தளர்ச்சி பெருந்தொற்றை தூண்டிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு வேட்டையாடி  சமுதாயங்கள் எந்த தத்துவத்தை கடைப்பிடிக்கின்றனரோ அதே தத்துவத்தை நாமும் கடைப்பிடித்தால் இந்நாட்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். நம்முடைய குழந்தைகள் சக ஊழியர்கள் அண்டை வீட்டார் ஆகியோரை பற்றி மட்டுமல்லாமல் நம்முடைய எதிரிகளை பற்றியும் நல்லவிதமாக நினைத்தால் என்ன நிகழும்?அவ்வாறு நினைப்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் இரண்டு மாபெரும் தலைவர்கள் ஆன மகாத்மா காந்தியும் மாட்டின் லூதர் கிங் இயல்புக்கு புறம்பான நடத்தையில் கைதேர்ந்தவர்கள் அசாதாரண தனி நபர்கள்.

நம் கேளிக்கை சினிமாக்களிலுமே எதிர்மறை வன்முறை படங்களே கொண்டாடப்படுகிறது. எதார்த்த உலகத்தைப் பற்றிய சினிமாக்கள், ஒரு நாடகத் தனமான சித்தரிப்பு என்று நையாண்டி செய்யப்படுகிறது. 

நிறைவு பகுதியில் ஆசிரியர் மனித இயல்பைப் பற்றிய ஒரு எதார்த்தமான பார்வை நீங்கள் மற்றவர்களுடன் உறவாடும் விதத்தின் மீது முக்கிய தாக்கம் ஏற்படுவதை விளக்குகிறார். 

ஹாப்ஸ்சை பற்றி ஒரு செவி வழி கதை உலவுகிறது. ஒரு நண்பருடன் லண்டனில் சுற்றித்திரிந்தபோது ஒரு பிச்சைக்காரனுக்கு சிறிது பணம் கொடுத்தார்.அவர் நண்பர் இதை  பார்த்து சுயநலமாக இருப்பது தான் நம்முடைய அடிப்படை இயல்பு என்று வாதிட்டவரே பிச்சைக்காரனுக்கு உதவுகிறார் என்று வியப்புற்றார். உண்மை என்னவென்றால் ஒரு நல்ல காரியம் செய்வது நமக்குள் ஒரு நல்ல விதமான உணர்வை தோற்றுவிக்கிற உலகில் நாம் வாழ்கிறோம். இரக்கம் vs  பச்சாதாபம் பகுதி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் கொஞ்சம் அதிகமாக sugar coated ஆக இருக்கிறதோ என்று தோன்றியது. ஆனால் இப்போதுள்ள நிலைமைக்கு இது கொஞ்சம் அவசியம்தான் என்றும் பட்டது. 

When it becomes too negative, positive has to go extra miles to compensate that.

அன்புடன்,

மீனாட்சி

மனிதகுலம் ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:31

உரு-அரு- கடிதம்

 

அன்புள்ள ஜெ,

உங்கள் உரை உரு.அரு.உருவரு முக்கியமான ஒன்று. உங்கள் உரைகள் அனைத்திலும் செய்வதுபோல ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தொகுத்தளித்து, அதன் மேலே சென்று அடிப்படையான சில கேள்விகளையும் விடைகளையும் முன்வைக்கிறீர்கள். நீங்கள் பேசும் அந்த ஒட்டுமொத்தச் சித்திரம் நீங்கள் பொதுவாக எல்லா உரைகளிலும் முன்வைப்பதுதான்.

இந்திய சிந்தனையின் ஒவ்வொரு பிரிவிலும் உரு, அரு, உருவரு ஆகிய கருதுகோள்கள் எப்படியெல்லாம் ஏற்கவும் மறுக்கவும்படுகின்றன என்று சொல்லி அதன்மேல் உங்களுடைய பார்வையை முன்வைக்கிறீர்கள். உங்கள் பார்வை வேதாந்தம், அத்வைதம் சார்ந்ததாக இருந்தாலும் எல்லா தரப்புகளுக்கும் அவற்றுக்கான இடத்தை அளிப்பதற்கான அக்கறை அந்த உரையில் இருந்துகொண்டே இருந்தது. அது நிறைவை அளித்தது.

நான் உருவ வழிபாட்டாளன். அருவ வழிபாடெல்லாம் எனக்கு தெரியும். எனக்கு என்னப்பன் முருகன் கண்கண்ட தெய்வம். இன்னொரு வகையிலே யோசிக்க முடியாது. ஆனால் என் முருகனையே அருவமாகவும் உணர இந்த உரை வழிவகுத்தது. நீங்கள் அடையும் முடிவு மட்டும் அல்ல, அந்த முடிவை நோக்கிச் செல்லும்பாதையும் முக்கியமானதாகவே இருந்தது எனக்கு. 40 ஆண்டுகளாக நான் சித்தாந்தம் படிப்பவன். ஆனால் அனைத்தையும் ஒரே பார்வையில் இப்படி சுருக்கி, செறிவாகத் தொகுத்துக்கொள்வது எனக்குப் பெரிய பாடமாக அமைந்தது.

கூர்ந்து ஒன்றுக்குமேற்பட்ட தடவை கவனித்தால் மட்டுமே முழுக்கப் புரியும் உரை இது. ஆனால் கேட்பதற்கு எப்போதுமே ஈர்ப்புள்ளதாக உள்ளது. இரண்டரை மணிநேர உரையில் எங்குமே தொய்வும் சலிப்பும் இல்லை. எங்குமே உரையின் மையத்துக்குத் தேவையற்ற எதுவும் சொல்லப்படவில்லை. உரையில் செயற்கையான ஏதும் இல்லை. உள்ளம் நேரடியாகவே வெளிப்படுவதுபோன்ற உரை. கண் முன் சிந்தனை நிகழ்வதைப் பார்ப்பதுபோன்ற உரை. வணக்கம்

ஆ. நீலகண்ட சிவம்

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:31

A stirrer…

There is a particular activity in cooking—we usually call it stirring. For cooking a tasty porridge, you must know how to stir the dish properly. If not, the lower part, near the fire of the stove, will scorch and the upper part of the dish will be left uncooked. I dare to compare the functioning of literature to stirring the society.

A stirrer…

இத்தனை தெளிவான முறையில் மிக அடிப்படையான செய்திகளைச் சொல்லும் இந்த காணொளிகள் ஏன் ஆயிரக்கணக்கிலே பார்க்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

ஏன் பரவவில்லை?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 11:30

September 28, 2025

நுகர்வுக்கலாச்சாரமும் பாலியல் பிறழ்வுகளும்

நுகர்வுக்கலாச்சாரத்தை ‘வசதி’ என்றும் ‘நாகரீகம்’ என்றும் இன்றைய உயர்நடுத்தரக்குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கின்றனர். கட்டற்ற நுகர்வுக்கலாச்சாரம் கட்டற்ற பாலியல்  நுகர்வையும் உள்ளடக்கியது என்பதை புரிந்துகொள்வதில்லை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2025 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.