ஜேகே's Blog, page 8
February 8, 2023
வாணி ஜெயராம்
“எது சுகம் சுகம் அது, வேண்டும் வேண்டும்” என்று அந்தப்பாட்டு ஆரம்பிக்கும். வழமைபோல கொஞ்சம் உயர் சுருதிதான். இந்தப்பாட்டு இங்கே ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்று நமக்கெல்லாம் கவலை வரலாம். “கூடும் நேரம், யுகங்கள் கணங்கள் ஆகும், நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்” என்று மேலே போய் “வா, வா, மீண்டும் மீண்டும் தாலாட்டு” என்று பல்லவியே முதல் மாடிக்குச் சென்றுதான் ஓயும். ஆனால் அந்தப்பெடி ரகுமான் பல்லவியில் செய்தது போதாது என்று சரணத்தைத் தூக்கி அடுத்த மாடியில ஏத்திவிட்டிருக்கும். “சாம வேதம் நீ...
February 5, 2023
சின்னான்
“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம் அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்டது. போர் ஆரம்பித்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் தீவிரவாதமே. இறுதிப்போரில் இனப் படுகொலையே நிகழவில்லை. இப்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதால் தமிழரின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழவில்லையா? தேவையில்ல...
September 29, 2021
சாமந்த் மயூரன் நேர்காணல்
சாமந்த் மயூரனுக்கு பத்துவயதுதான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவருடைய அம்மா என்னைத் தொடர்புகொண்டார். தன் மகனுக்கு ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசிக்கக்கொடுத்ததாகச் சொன்னார். சாமந்துக்கு புத்தகம் நன்றாகப் பிடித்துப்போனதில் என்னோடு பேசவேண்டுமென்று மகன் கேட்டதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்தநாளே சூமில் நாங்களிருவரும் உரையாடல் ஒன்றைச் செய்தோம். சூம் மீட்டிங்கை ஒருங்கமைத்து, லிங் அனுப்பி, ரெக்கோர்டிங்கையும் செய்து, வீடியோவையும் அனுப்பிவைத்த...பனங்கொட்டை பாத்தி
பரிசளிப்பு நிகழ்வுகள் பலவற்றை நான் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள். தமிழ்ப் பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு. இன்னுமொன்று தடகள விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு. முதலாவதற்கு வைத்தியர் ஒருவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்க அழைக்கப்படுகிறார். இரண்டாவதற்கு ஒரு பொறியியலாளரைக் கூப்பிடுகிறார்கள். அந்த வைத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்று யோசித்துப்பார்த்தேன். க.பொ.த சாதாரணத் தரத்தில் தமிழ்ப் பாடத்தில் அவர் சிறப்புத்தேர்ச்சி எ...
September 26, 2021
எஸ். பி. பி
பாட்டு வழமைபோல சரணத்தில்தான் பிக்கப் ஆகும்.மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்மண் தொட்டதால் இன்றுசெவ்வானம் போல் ஆச்சுவிண் சொர்க்கமே பொய் பொய்என் சொர்க்கம் நீ பெண்ணேஅந்த இரண்டு வரிகளையும் திரும்பவும் பாடுமாறு ராஜா சொல்லியிருக்கக்கூடும்.விண் சொர்க்கமே பொய் பொய்என் சொர்க்கம் நீ பெண்ணே.இம்முறை அந்தப் பொய்யிலே சின்னதாகச் சிரிப்பும் சேர்த்து. ஓ வசந்த ராஜா.மேலும் வாசிக்க »
September 8, 2021
மடொல் டூவா என்கின்ற கிராஞ்சி
சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்திலும் இந்த நூல் உள்ளடங்கியிருக்கிறது.
நாவலில் கதை இதுதான்.
ஒரு கிராமத்து முதலாளியின் மகனான ஏழு வயது உபாலி கினிவெலவும் அவர்களுடைய வீட்டு வேலைக்காரச் சிறுவனான ஜின்னாவும் சேர்ந்து ...
August 20, 2021
ஏப்ரில் - குறுநாவல்
“காதல் உங்களைப் பூமியிலிருந்து தூரத்தே தள்ளி வைக்கும் வல்லமை கொண்டது. வெற்றியிலும் தோல்வியிலும்"
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 5
“சமுத்திரத்தின் மிக மிக ஆழத்தில், சூரிய ஒளியின் பிரசன்னமே இல்லாத ஒரு குகையினுள் நீந்தித் திரிந்த மீனுக்கு கண்கள் இருந்தன”
ஏப்ரில் - மகிழ்
அம்மாவின் மரணம் நிகழ்ந்து அன்றோடு நான்காவது நாள் ஆகிவிட்டிருந்தது.
ஏப்ரில் அழக்கூடத் திராணியில்லாமல் அறைக்குள்ளேயே எந்நேரமும் ஒடுங்கிக் கிடந்தாள். எக்காரணம் கொண்டும் சிங்கப்பூர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி ஊரில் எவரோடும் பேசவே மறுத்தாள். அம்மாவை, இருபதாவது மாடியிலிருந்து விழுந்து சிதைந்த அவரின் உடலை அவளுக்குப் பார்க்கவே தைரியம் இருக...
ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 4
"அவன் முகத்தில் எல்லாமே தெரிந்தது. கோபம். குரூரம். இயலாமை. இகழ்ச்சி, வன்முறை. திருமண நிகழ்வுக்குச் செல்லும் சீமாட்டிபோல அவன் அவற்றை நகைகளாக மாட்டிப் பெருமிதப்பட்டான். அவனுக்கும் நான் ஒரு சீமாட்டியாக அக்கணம் தோன்றியிருக்கக்கூடும்"மேலும் வாசிக்க »
ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 3
“அந்தப் பூங்கா ஓர வாங்கிலில் அமர்ந்திருக்கும் தாத்தாவும் பாட்டியும் என்றாவது சண்டையிட்டிருப்பார்களா?”மேலும் வாசிக்க »


