ஜேகே's Blog, page 2
November 19, 2024
மீன் யாவாரம்

தாமதமாகச் சென்றதாலோ என்னவோ குருநகர்ச் சந்தைக்குள் நுழையும்போதே நாறல் வாசம் குப்பென்று மூக்கில் அடித்தது. நான் வழமையாக மீன் வாங்கும் செல்லர் அண்ணையைத் தேடினேன். ஆளை எங்குமே காணவில்லை. பல நாட்களாக மீன் சந்தைக்கு வராததால் இடையில் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சைக்கிள் பார்க்கிங் ரிசீப்ட்டைத் தேடி வந்து கொடுத்த தம்பியிடம் செல்லர் எங்கே என்று கேட்டேன்.
“அவர் மோசம் போய்க் கனகாலம் ஆயிட்டு. இப்ப பிள்ளையள்தான் கடையளை நடத்தினம்”
அவர் காட்டிய திசையில் மூன்று வெவ்வேறு கடைகள் தெரிந்...
November 16, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார்.
“பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”மேலும் வாசிக்க »
September 28, 2024
லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ ...
September 18, 2024
அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது.
அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித் தரைக்குப் பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே...
September 11, 2024
மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.
2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிற...September 4, 2024
தவக்களை அண்ணை

தின்னவேலி மரக்கறிச்சந்தை வழமைபோலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
கொழுத்தும் வெயிலிலும் மரக்கறிகளாலும் பழங்களாலும் நிறைந்த கட்டடம் குளிர்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் முருங்கைக்காய்கள் குவிந்திருந்தன. விலையும் மலிந்துபோய். கிலோ நூறு ரூபாய்க்கு நல்ல இளங் காய்களை வாங்கக்கூடியதாக இருந்தது.மேலும் வாசிக்க »
August 22, 2024
பிள்ளை

எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை.
நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளிகளை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப்பிக்கொண்டேயிருப்பாள். ஒரு நாய் தூங்கும்போது மற்ற நாய் சொறிவது. நாய் நீச்சல் குளத்தில் பாய்ந...
August 21, 2024
குமரன் வரக்கூவுவாய்

நல்லூர்க் கோயிலின் உள் வீதி.மெல்லிருள் சூழ் வசந்த மண்டபத்தருகே அமைந்திருக்கும் கற்தூண் ஒன்றுக்கடியில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து ஆடி வெயில் நாள் அது. அதிகாலை வெக்கையில் வெறும் மேலில் வியர்வைத் துளிகள் புன்முறுவல் பூக்க ஆரம்பித்திருந்தன.மேலும் வாசிக்க »
July 7, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு ‘உ’ அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘உ’ அட்டைதான். நிவாரணத்தில் ‘உ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும். அரைப்போத்தல் மண்ணெண்ணெய், அரைக் கிலோ பருப்பு, அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும். அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும். குறைந்த சம்பளம், அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை. கா...
June 30, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 5. யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்

இன்னும் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி.
நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டிருந்தாலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகத்துக்குப் பின்னாலே சூரியன் மறைந்து கொண்டிருந்தது. எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டுக் கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீசத் தயாராகிறார். பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமுமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓன...