ஜேகே's Blog, page 7
May 9, 2023
தலித்துகளும் பௌத்தமும்
இந்து மதத்தின் சாதிய அமைப்பில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இந்து மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பௌத்தத்தைத் தம் ஆயுதமாக எடுத்துக்கொள்வதை நம்மில் பலர் கவனித்திருக்கக்கூடும். அவர்களுடைய கூட்டங்களில் பௌத்தம் பற்றிப் பேசப்படும். நேர்காணல்களில் அவர்களுக்குப் பின்னே புத்தர் வீற்றிருப்பார். இச்சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களில் புத்தர் சிலைகளைக் கவனிக்கமுடியும். இதற்கு ஆரம்பப்புள்ளி வைத்தது அம்பேத்கர். அவர் இலங்கைக்கும் பர்மாவுக்கும் சென்று...
Published on May 09, 2023 15:15
April 23, 2023
பூப் புனிதக் கொலைகள் - நாவல்
வணக்கம்.மழை விட்டும் தூவானம் விடாததுபோல, “பூப் புனிதக் கொலைகள்” நாவலை எழுதும் கணங்களிலிருந்த உற்சாகம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என்னோடு சேர்ந்து, இந்த நாவலில் பயணித்த வாசக நட்புகள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நாவல் பற்றிய விரிவான வாசிப்பு அனுபவங்களையும், அது பேசி நிற்கும் விசயப்பரப்பில் உங்களுடைய கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.“பூப் புனிதக் கொலைகள்” முழுப்பாகங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.அன்புடன்ஜேகே
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
Published on April 23, 2023 17:33
பூப் புனிதக் கொலைகள் - பாகம் 7
நிலாப்தீன் நம்பமாட்டாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்.
“இராஜராஜனா? அந்த கைனோகோலஜிஸ்டையா சொல்லுறிங்க?”அவர்கள் வாகனத் தரிப்பிடத்திலிருந்து பொலீஸ் கடவையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கோட்டையில் கூட்டம் அள்ளியது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. திடலை நிறைய இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் நிறைத்திருந்தனர். ஐந்தாறு செயற்பாட்டாளர்கள் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். கோட்டைக் கொத்தளத்தில் பெரிய அரங்கு ஒன்று நிர்மாணிக்கப்ப...
Published on April 23, 2023 17:25
பூப் புனிதக் கொலைகள் : பாகம் 6
சிவகடாட்சம் சிவபதமடைந்திருந்தார்.
வழமைபோல, இரத்தம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, கழுத்திலும் நெஞ்சிலும் காயங்களுக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தன. பட்டு வேட்டி கட்டி, வெற்று மேலில் இரட்டை வடச் சங்கிலியும் கைச்செயினும் அணிந்து, செத்துச் சில மணி நேரங்கள் கழிந்தும் சிவகடாட்சம் செகச்சோதியாக இன்னமும் மின்னிக்கொண்டிருந்தார். வேட்டி நழுவா வண்ணம் இடுப்பில் வெள்ளை நிறத்தில் பெல்ட் கட்டியிருந்தார். மேலே அவர் அணிய இருந்த விதம் விதமான சரிகை ஜிப்பாக்கள் அயர்ன் செய்யப்பட்டு, கட்டிலில் விரித்து வைக்கப்பட்டிருந்தன. எ...
Published on April 23, 2023 17:24
பூப் புனிதக் கொலைகள் : பாகம் 5
“பரணி எண்டா எலி. பூரத்துக்கு யானை. பகை மிருகங்கள். ரெண்டுக்கும் யோனிப்பொருத்தமே இல்ல. ஆனா ஒரு சாந்தியைச் செய்திட்டம் எண்டால் சரி. மாப்பிளை பகுதிட்ட சொல்லிப்பாருங்கோ. அவருக்கும் சொந்த வீட்டில கேது இருக்கு. இந்தச் சம்பந்தம் தவறினா இனி நாப்பதுக்கு மேலதான் அவருக்கும் கலியாணம்.”
சிவகடாட்சம் செல்பேசியில் பேசியவாறே ஓட்டோவிலிருந்து இறங்கினார். பின்னாலேயே மெதுவாக தயாளினியும் வெளியே வந்தார். காந்தாரி கிளினிக்கில் கூட்டம் அலை மோதியது. தயாளினி ஓட்டோக்காரருக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.“தி...
Published on April 23, 2023 17:22
பூப் புனிதக் கொலைகள் : பாகம் 4
சிட்டுவேசன் ரூமை நிலாப்தீன் வியப்போடு சுற்றிச் சுற்றி வந்தார்.
அறைச் சுவர்கள் முழுதும் பத்திரிகைத் துணுக்குகளும் இணையச் செய்தித்தளங்கள், முகநூல், டுவிட்டர், வைபர் போன்ற சமூக ஊடகங்களில் வந்த அலசல்கள் எனப் பலவும் பிரிண்ட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு கொலைச் சம்பவமும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேயப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர் விபரம், பிறந்த ஊர், வாழும் ஊர், குடும்பச்சூழல், சொத்து, மதம், சாதி, கொலை நிகழ்ந்த இடம் என எல்லாத் தகவல்களும் திரட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு இடையேயான தொடர்...
Published on April 23, 2023 17:21
பூப் புனிதக் கொலைகள் : பாகம் 3
“வட மாகாண முதலமைச்சர் சிவகடாட்சம்”
புரஜெக்டர் திரையில் பளிச்சென்ற எழுத்துகள் மின்னவும் சிவகடாட்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருடைய வீட்டிலிருக்கும் அலுவலக அறையில் கூட்டம் நிறைந்து வழிந்தது. வந்திருந்தவர்கள் எல்லோருமே சிவகடாட்சத்தின் மிக நெருங்கிய உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். சேந்தன் பல சுப்பர் மார்க்கட்டுகளின் உரிமையாளர். தணிகாசலம் குழந்தைகள் பராமரிப்பு, வயோதிபர் இல்லம் என்பவற்றை நடத்துபவர். மாறன் ஜெயமோகனால் ஈழத்து இலக்கியத்தின் ஒரே நம்பிக்கை என்று அடையாளப்படுத்தப்பட்டவர். பஞ்சன் பத்திரிகையாள...
Published on April 23, 2023 17:20
பூப் புனிதக் கொலைகள் : பாகம் 2
நிலாப்தீன் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
கொக்குவிலுக்குப் போகும் வழியில் நாச்சிமார் கோயிலடி கடந்ததும் கொஞ்சத்தூரத்தில் அந்தப் பெட்டிக்கடை இருந்தது. அதிகாலையிலேயே சிறுவன் ஒருவன் கடையைத் திறந்து வைத்து, முன்றிலைக் கூட்டித் துப்புரவாக்கி, மஞ்சள் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து இறங்கிய நிலாப்தீன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனை நெருங்கினார்.“தம்பி, இங்கிட்டு ஜெயரத்தினம்னு ஆரும் இரிக்கினமா? அவர்ட வூடு எங்கிட்டெண்டு சொல்லமுடியுமா?”அவன் வாளியைக் கீழே குனிந்து வைத்துவ...
Published on April 23, 2023 17:18
பூப் புனிதக் கொலைகள் : பாகம் 1
செல்வி திரிக்ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மின்வெட்டு நேரமாகையால் வாசலுக்கருகே ஒரு ஜெனரேட்டர் இரைந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே குளிரூட்டி நிறுத்தப்பட்டு வலுக்குறைந்த மின்சாரத்தில் மின் குமிழ்களும் விசிறிகளும் தூங்கி வழிந்தன. வந்தவர்களின் பலவித பெர்பியூமுகளுடன் அவர்களின் வியர்வையும் கலந்து புதி...
Published on April 23, 2023 17:16
February 13, 2023
தர்மசீலன்
ஆறாம் ஆண்டில்தான் தர்மசீலனை நான் முதன்முதலில் சந்திக்கிறேன். அனுமதிப் பரீட்சையினூடாக அந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முப்பத்தாறு பேரில் நாங்களும் உள்ளடக்கம். அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையிலிருந்து அவன் வந்திருக்கவேண்டும். அப்போது வகுப்புக்கு வருகின்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்கள் பெயர், எந்தப் பாடசாலையிலிருந்து வந்திருக்கிறோம் என்று அனைவருமே ஒப்பிக்கவேண்டுமென்பதால் அவனது ஆரம்பப் பாடசாலையின் பெயர் சன்னமாக இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.மேலும் வாசிக்க »
Published on February 13, 2023 18:40


