ஜேகே's Blog, page 11

February 3, 2021

தறிகெட்ட கதை




நான் படிப்பெல்லாம் முடித்து வேலை செய்ய ஆரம்பித்திருந்த காலம். கொழும்பிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் அது. நான் இணைந்த காலத்தில் அங்கே பல வெளிநாட்டுக்காரர்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் அணியிலும் ஓரிருவர். அவர்களில் ஒருத்திதான் பெல்லா. பெல்லா என்றால் அழகானவள் என்று அர்த்தம். இத்தாலிக்காரி. பெல்லா என் பெயரின் அர்த்தத்தையும் கேட்டாள். ஜேகே என்றால் ஜெயக்குமரன் என்று சொன்னேன். அதாவது வெற்றிகரமான இளைஞன் என்று பொருள். ‘வாவ் ஸோ ஆப்ட்’ என்றாள். ஆப்ட் என்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்...

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2021 22:30

ஏர் எழுபது


ஒரு சின்ன தேடலின்போது ‘ஏர் எழுபது’ எனும் வேளாண் நூலைப்பற்றி அறிய முடிந்தது. வாழ்த்துப்பாடலோடு ஆரம்பித்து பின்னர் கமத்தொழிலின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றி இந்த நூல் பேசுகிறது. சிறப்புகள் என்றால் வெறும் புகழுரைகள் என்றில்லாமல் மிக நுணுக்கமான விடயங்களைப்பற்றியெல்லாம் இந்நூல் குறிப்பிடுகிறது. உழுகின்ற எருதின் பூட்டுக்கயிறு, கழுத்துக்கறை முதற்கொண்டு எவ்வாறு நாற்று நடுவது, போர் அடிப்பது, நெற்கூடை என அத்தனை விசயங்களையும் பாயிரங்களாக எழுதிவைத்திருக்கிறது இந்நூல்.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2021 03:07

பேக்கிழவாண்டி - கதை நிகழ்ந்த கதை



லொக்டவுனை எப்படிச் சமாளித்தீர்கள் என்பதுதான் இப்போது எதிர்படுபவர்கள் எல்லாம் கேட்கும் பொதுவான கேள்வியாக இருக்கிறது. எம்மிருவரையும் பொறுத்தவரையில் அக்காலம் நன்றாகவே கடந்துபோனது. காலை எழுந்ததும் எழுத்து. பின்பு கனிவு கொடுக்கும் வீட்டிலிருந்தான வேலை. மாலை முழுதும் நடை. நித்திரைக்கு முன்னர் நெட்பிளிக்ஸ்.

அப்புறம் அம்மாவும் அப்பாவும்.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2021 02:48

January 28, 2021

டொமினிக் ஜீவா


டொமினிக் ஜீவா எழுதிய சிலுவை என்ற சிறுகதையிலிருந்து ஒரு பகுதி. தனக்கு தினமும் கடிதம் கொண்டுவரும் தபால்காரர் காலமானதும் அவருக்கு எழுத்தாளர் எழுதும் பதில் கடிதம்தான் இக்கதை.

இது எழுதப்பட்டது சித்திரை, 1959ல். இங்கே எல்லாமே எழுதப்பட்டுவிட்டன. நாம்தாம் வாசிப்பதில்லை.ஜீவாவுக்கு நம் அன்பும் மனமார்ந்த நன்றிகளும்.மேலும் வாசிக்க »
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2021 13:46

பேய்க்கிழவாண்டி - இறுதிப் பாகம்


முதற்பாகம்


தாத்தா யோசித்தார்.
“ஒரு கப் மாட்டு மூத்திரம் கிடைக்குமா? வந்ததுக்கு குடிச்சிட்டுப்போறன்”
ஸீ. நான் இந்தச் சம்பவத்தை எழுதி வெளியிட முயற்சி செய்யாததற்குக் காரணம் இதுகள்தான். தாத்தா பேசின பேச்சுகள் எல்லாவற்றிலும் ஒரு அரசியல் சமூக பிரச்சனையைப் பேசுவதற்கான லீட் வந்துகொண்டேயிருந்தது. ஆனால் நான் எழுதினால் வெறுமனே லீடுக்காகத்தான் தாத்தாவைப் பேசவைத்தேன் என்பார்கள். வேண்டாம். உண்மையைச் சொல்லும்போதே இவர் புனைவாக்குகிறார் என்று ****க் கதை கதைப்பார்கள். Again, ஆண்பால் சார்ந்த வசை. இந்தா பிடி விண்மீனை....
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2021 13:42

பேய்க்கிழவாண்டி - முதற்பாகம்

வழமையான பேய்க்கதைகளைப்போலவே இக்கதையும் ஒரு மழைக்கால இரவில் ஆரம்பித்தது. இடி முழங்கியது. எதிர்பார்த்தாற்போலவே திடும்மென வீட்டுக் கதவு தட்டப்பட்டது.


“தட் தட்”
போய்த் திறந்தேன். வாசலில் என் தாத்தா. ஜம்மென்று நின்றார். விறாந்தை மாடத்தில் உழுத்துப்போன கறுப்புவெள்ளைப் புகைப்படத்தில் மெலிதாகச் சிரித்துக்கொண்டிருக்கும் அதே தாத்தா. ஏதோ ஒரு ஸ்டூடியோ திரைக்கு முன்னே அலங்காரக் கதிரையில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் அதே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. மெல்லிய உருவம். ஜீவானந்தம் மாஸ்டருக்கு கொஞ்சம் தொந்தி சேர்த்தாற்...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2021 02:39

January 26, 2021

Jan 26 in Australia


233 years ago, on this day, the Jan 26, the first fleet full of British convicts arrived in Australian shores. Further settlers continued to join, crown colonies established and eventually formed the federation, now called as Australia. As often the case with any colonisations, the rich and 65000 years long indigenous nations, their languages, culture and population decimated, mass genocide perpetrated and whatever the population left been cornered and suppressed.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 02:54

November 13, 2020

சூரரைப்போற்று


நேற்று சூரரைப்போற்று பார்த்தேன். ‘எயார் டெக்கான்’ நிறுவனர் கோபிநாத்தினுடைய வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை உள்வாங்கி அவற்றின் ஈர்ப்பில் உருவானது இந்தப்படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் படத்தைப்பார்ப்பவர்கள் இதனை ஒரு உண்மைக்கதை என்று நம்பிவிடக்கூடாது என்பதற்காகச் சில தகவல்கள்.

மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2020 03:14

October 3, 2020

புது நேரம்


நித்திரையால் எழுந்தபோது நேரம் ஆறு மணியாகியிருந்தது.

தாமதமாக எழுந்த எரிச்சலோடு தேநீர் ஊற்றவென குசினிக்கு வந்தேன். அங்கே ஹோலில் கடிகாரம் ஐந்து மணி என்று காட்டியது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இன்றைக்கு அவுஸ்திரேலியாவில் நேரம் மாற்றப்படும் நாள். வசந்தகாலத்தில் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் முன்னகர்த்தி பின்னர் இலையுதிர்காலத்தில் திரும்பவமும் பின்னகர்த்துவார்கள். அதாவது இன்று அதிகாலை நள்ளிரவு இரண்டு மணி தன்னாலே மூன்று மணியாகியிருக்கும். கோடைக்காலங்களில் வெள்ளனவே வெளிச்சம் இங்கு வந்துவிடுவதால் பகற்பொழு...
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2020 17:59

October 1, 2020

படம : என கொலலைபபுறததுக காதலிகள படலை திறநது இனறோடு ஒனபது வ...

படம : என கொலலைபபுறததுக காதலிகள

படலை திறநது இனறோடு ஒனபது வருடஙகள ஆகினறன. மேலும வாசிகக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2020 18:10