ஜேகே's Blog, page 9
August 20, 2021
ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 2
“ஒரு மின்னல் கோடு எங்கே போய் முடிவடைகிறது என்று எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அநேகமாக இன்னொரு மின்னலில் அது போய் முடியலாம். அல்லது தரையில்”
ஏப்ரில்
“ஶ்ரீலங்கனா?”
அம்மாவின் அந்த ஒரே வார்த்தையில்தான் எத்தனை கேள்விகள். எத்தனை உணர்ச்சிகள். அது ஆச்சரியமா? இகழ்ச்சியா? வெறுப்பா? இவள் எப்போதுமே இப்படித்தான் என்ற அவநம்பிக்கையா? அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து ஒரு சிங்கப்பூரியனைத் தேடிக்கண்டடைவேன் என்று அம்மா முட்டாள்தனமாக யோசித்திருக்கச் சந்தர்ப்பமில்லை. ஆனால் அது ஒரு சீன இனத்தவனாகவாவது இருக்கவேண்டு...
ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 1
“காதல் உங்களைப் பூமியிலிருந்து தூரத்தே தள்ளி வைக்கும் வல்லமை கொண்டது. வெற்றியிலும் தோல்வியிலும்"
மேலும் வாசிக்க »
June 20, 2021
அஷேரா - சிதறிய எறும்புகளின் கதை
எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும் இரவு பற்றிய குறிப்புகள் இவை.
“இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையைப் போன்றது. அதன் அதன் தீரா வாசனை எங்கேனும் பரவி இருக்கிறது”‘அஷேரா’ நாவலை வாசித்த கணங்களின்போது அதுவும் இரவைப்போலவே ஒரு இரகசிய நதியாக நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கும். சுவிற்சலாந்தின் பனிக்குளிருக்கு உறைந்து, வசந்தங்களில் குளிர்ந்து, கோடையில் தணிந்து, கொழும்பின் அழுக்கான புறந...
June 18, 2021
கந்தசாமியும் கலக்சியும் - ஒரு கண்ணோட்டம்
அண்மையில் பங்கு கொண்ட ஒரு இலக்கியக் கூட்டத்தில் காமெல் தாவூத்தினால் எழுதப்பட்ட "மறுவிசாரணை" மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இது அல்பேர்ட் காம்யூவின் அந்நியன் நாவலின் எதிரொலியாக எழுதப்பட்டது எனும் கருத்து எல்லோரிடமும் நிலவியது. கலந்துரையாடலில் பேசிய எழுத்தாளர் ஜேகே இந்தக் கருத்தை உடைத்துப் போட்டார். ஒரு நல்ல எழுத்து, அதனின்றும் அடுத்த சிந்தனைக்கு இன்னொரு எழுத்தாளரை இட்டுச் செல்லும், அந்நியனின் தொடர்ச்சியே மறுவிசாரணை நாவல் அன்றி, அதற்கு எதிராக எழுதப்பட்டதல்ல எனும் தெளிவான விள...
June 7, 2021
குரங்கு
“அம்மோய் .. குரங்கு வந்திட்டுது”
தகப்பனினுடைய மோட்டர்சைக்கிளின் சத்தம் கேட்கவும் அதற்காகவே காத்திருந்தவன்போலத் தம்பியன் கேற்றடியை நோக்கி ஓடினான். பின்வளவில் உடுப்புக் காயப்போட்டுக்கொண்டிருந்த அவனின் தாய்க்காரியும் போட்டது போட்டபடியே முற்றத்துக்கு விரைந்தார். பக்கத்து வீட்டு மதில்களுக்கு அப்பாலிருந்தும் பல தலைகள் அவசரமாக எட்டிப்பார்த்தன. தம்பியன் போய்க் கேற்றை வேகமாகத் திறந்துவிடவும் மோட்டர்சைக்கிள் முற்றத்துக்குள் நுழைந்தது. எல்லோர் கண்களும் அதன் பின் சீற்றிலிருந்த கூட்டையே பின்தொடர்ந்தன. வீட்ட...
May 9, 2021
ஊரோச்சம் : ரயில் பயணம்
கசுனுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்திருந்தது. பச்சை அம்பரலங்காயாக இருக்கவேண்டும். அல்லது திருட்டுத்தனமாக குசினித் தட்டிலிருந்து எடுத்துத் தின்ற அச்சாறு வெங்காயமாகவும் இருக்கக்கூடும். அப்போதுதான் அவன் தாய் தொழிற்சாலையில் வேலை முடித்துவந்து, குளித்து, வீட்டு உடுப்புக்கு மாறி எல்லோருக்கும் தேநீர் தயாரிக்கலாம் என்று அடுப்பைப் பற்றவைக்கப் போயிருந்தாள். அதற்கிடையில் போய் அம்மா ‘கக்கா’ என்றால் எப்படியிருக்கும்?
“போயிரு. முடிஞ்சோன கூப்பிடு, நான் வாறன்”கசுனுக்கு ஒரு பழக்கம். கக்கா இருக்கப்போகும்போதெல்லாம் ...அப்பாவின் தொலைபேசி
டைனோசர் முட்டை
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனிதா நாயரின் 'லேடிஸ் கூப்' நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதையில் மார்கரட் போல்ராஜ் என்றொரு பெண் பாத்திரம் வரும். அவருக்கு, வீட்டில் கொடுமை செய்யும், சுயநலக்கார, பெண்கள் மீது பலவீனம் கொண்ட, ஸ்மார்ட் லுக்கிங் உள்ள ஒரு கணவன். மார்கரட் தன் கணவனை எப்படி வழிக்குக் கொண்டுவந்து அவனை ஒன்றுமேயற்றவனாக்குகிறார் என்பதுதான் அந்தக் கதை. நாவலில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே வருகின்ற மார்கரெட் பல ஆண்டுகளாக நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தார். அந்தப் புள்ளி பல வருடங்களாக உப்புத...
May 5, 2021
ஒரு பனங்கொட்டை உதயமாகிறான்
May 2, 2021
தமிழ்நதியின் 'காத்திருப்பு'
மெல்பேர்ன் வாசகர் வட்டத்தில் தமிழ்நதியின் 'மாயக்குதிரை' சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வு சென்ற மாதம் இடம்பெற்றது. அத்தொகுப்பில் உள்ள 'காத்திருப்பு' என்ற சிறுகதை சார்ந்து இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
https://melbournevasakarvaddam.blogspot.com/2021/05/blog-post.html


