எண்பதுகளில் எங்கள் ஒழுங்கையிலேயே புறொக்டர் வீட்டில்தான் தொலைபேசி இருந்தது. அந்த வட்டாரத்தில் இருந்த இருபது முப்பது வீடுகளுக்கும் அதுதான் ஒரே தொலைபேசி. அதிலும் நாம் போய் அழைப்பு எடுக்க அந்தப் புரொக்டர் மனிசி விடாது. ஆனால் அவசர அழைப்பு ஏதும் வந்தால் எங்களுக்குச் சொல்லி அனுப்புவார்கள். அப்படி அழைப்பு எடுத்து விசயம் சொல்லுமளவுக்கு அங்காலப்பக்கம் தொலைபேசி வசதிகொண்ட எவரையும் வட்டாரத்துக்கும் தெரியாததால் பெரிதாக அழைப்பு எதுவும் எமக்கு வருவதில்லை. வெளிநாட்டுக்கு ஆட்கள் போகத்தொடங்கியிராத காலம் அது. அல்லத...
Published on May 09, 2021 14:38