ஜேகே's Blog, page 6

September 11, 2023

பர்மா புத்தர்




பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது. 


அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன. பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன. முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க, சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன. பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன. ...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2023 13:40

May 10, 2023

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2023 00:26

கந்தசாமியும் கலக்சியும் - புதுப்பதிப்பு

வணக்கம் நண்பர்களே,



என்னுடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆவலை வெண்பா புத்தக நிலையத்தின் நிறுவனர் சுதர்சன் சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தார். தாமே பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் “கந்தசாமியும் கலக்சியும்” நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார். அப்படித்தொடங்கியதுதான் இந்த மூன்றாம் பதிப்புக்கான வேலைகள்.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2023 00:24

பர்மா புத்தர் - சிறுகதை



வாசக நட்புகளுக்கு வணக்கம்.

ஈழத்திலிருந்து வெட்சி எனும் பெயரில் சிறு பத்திரிகை இதழ் ஒன்று அச்சில் வெளியாக ஆரம்பித்திருக்கிறது. வெட்சி தொடர்ந்து முக்கியமான பல இலக்கியப் படைப்புகளைக் கொடுத்து வாசகர்களை முன்னகர்த்திச் செல்ல என் மனப்பூர்வமான வாழ்த்துகள். வெட்சியை ஈழத்திலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நேரடியாகவோ அல்லது தபால்மூலமாகவோ பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2023 00:20

May 9, 2023

இல்லாள் - சிறுகதை


அகழ் இதழில் நான் எழுதில் இல்லாள் சிறுகதை வெளிவந்துள்ளது.


https://akazhonline.com/?p=3677

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 23:23

மூளா தீ


காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார்.

‘லாம்புக்கா? அடுப்புக்கா?’‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’காசிம் பாவா உற்சாகமடைந்தார்.‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உத...
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 22:55

ஒலிவியாவின் பில்டிங்



எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் ஒஸ்டின் வைத்தியசாலையில்தான் அப்பாவுக்குப் புற்று நோய் சிகிச்சை இடம்பெற்றது. புற்று நோய் சிகிச்சை என்பது ஓரிரு நாட்களில் நிகழ்ந்து முடிவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அப்பருக்கும் இது வருசக்கணக்கில் இழுத்தது. பல்வேறு சோதனைகள். ரேடியேசன், கீமோ, சத்திர சிகிச்சை என ஒன்று மாறி ஒன்று எப்போதும் வந்துகொண்டேயிருக்கும். ஒரு கட்டத்தில் முட்டி மோதி நோயைக் கட்டுப்படுத்திவிட்டாலும் வைத்தியசாலை விட்டுவைப்பதாக இல்லை. அடிக்கடி அவர்கள் அப்பரை அழைத்து எப்பன் ...
2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 22:48

பொன்னியின் செல்வன் - இராட்சச மாமனே



கடந்த சில வாரங்களாக நான் திரும்பத் திரும்பக் கேட்டு லயித்துக்கிடக்கும் பாடல்கள் பொன்னியின் செல்வனுடைய பாடல்கள். தலைவர் ரகுமான் எப்போதும்போல நெருப்பெடுத்திருக்கிறார். என் ரசனையின் அடிப்படையில் ரகுமான் என்றைக்குமே அவுட் ஓஃப் போர்மில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு அண்மையில் வெளியான “தமிழ் நாட்டின்” வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல், கோப்ரா, மலயான் குஞ்சு, அற்றாங்கி ரே எல்லாமே அட்டகாசம். அதற்கும் முன்னர் வந்த 99 Songs பற்றி பேசவே தேவையில்லை. என்ன ஒன்று பலருக்கு ஒரு இசைத்தொகுப்பை ஆற ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 22:41

வாத்துக்கூட்டம்



வசந்த காலத்தின் நடைப்பொழுதுகள் எப்போதும் உவகை கொடுக்கக்கூடியவை.
அதுவும் மனைவியோடு நடக்கும்போது நகைக்குப் பஞ்சமிருப்பதில்லை. மற்றவர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் ஆண் பறவைகளைப்போலப் பெண் துணைக்கு ஆடியும் பாடியும் நகாசுகள் என பல வித்தைகள் காட்டியும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பத்தாண்டுகளாக இன்னமும் தொடர்கிறது. அவள்தான் எல்லாவற்றையும் வெறும் இறக்கைச் சிலிர்ப்போடு சலிப்பாகக் கடந்துபோய்விடுகிறாள்.ஆற்றங்கரையோடே நடைபாதை அமைந்திருக்கிறது. கூடற் பருவம் முகிழ்ந்து குஞ்சுகள் சகிதம் வாத்துக்கூட்டங்கள் பல வலம் வ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 22:35

பரி. யோவான் பொழுதுகள் - ஜூட் பிரகாஷ்




பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை. பசுமரத்தாணிபோல அவை நம்முள் புதைந்துபோய் மீட்டும்பொழுதெலாம் சுகமான வலியைக் கொடுத்து மாய்த்துவிடுகின்றன . வழுக்கைத் தலையும் வண்டித் தொப்பையுமாய்க் கிழப்பருவமெய்திய பின்னுங்கூட நம் பள்ளி நண்பர்கள் மட்டும் காற்சட்டையிலும் அரும்பு மீசையிலும் காட்சி கொடுப்பதன் மாயமெதுவோ யாமறியோம். அறுபது வயதாகிப் பேரப்பிள்ளையையும் கண்டபின்னருங்கூட நம் வயது சுண்டிக்குளிப் பெட்டைகள் என்னவோ இன்றும் நல்லூர் வடக்குவீதியில் ஹாஃப் சாறி அணிந்து உலா வரக் காண்கின்ற அதிசயமும் ஏதறியோம்.மேலும் வா...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 22:32