காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார்.
‘லாம்புக்கா? அடுப்புக்கா?’‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’காசிம் பாவா உற்சாகமடைந்தார்.‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உத...
Published on May 09, 2023 22:55