ஜேகே's Blog, page 4
February 27, 2024
தீண்டாய் மெய் தீண்டாய் : மயிலான்
“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ.
முந்திரி முத்தொளி சிந்திக்கோ,
மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே.
தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே.
தங்க கொலுசல்லே
குருகும் குயிலல்லே
மாறன மயிலல்லே”
‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடலிலிருக்கும் மலையாள வரிகள் அவை. தமிழாக்கும்போது அவ்வரிகள் இப்படி அமைகின்றன.
“அழகிய நிறங்கள் நிறைந்த சுந்தரியே.
தாங்கு தக்கென தகதிமி ஆடும் தங்க நிலாவே.
உன் தலைவனோடு நீ,
புன்னகை சிந்திக் கொஞ்சி விளையாடு.
உன் திராட்சை இரசமூட்டும் முத்துப்பற்களால்
சிரித்து அவனைச் சிதறவிடு.
நீ,
தங்கக் கொலுசல்லவா?
கூவும் குயிலல்லவா?
உன் ...
பர்தா : உடைவழி அதிகாரம்
மாஜிதா எழுதிய பர்தா நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருக்கும் வரிகள் இவை.
“ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதைத் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான் யுத்தங்களின் ஆயுதங்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது புர்காவைக் கழற்றுமாறும் நீங்களே கூறுகிறீர்கள். உங்களுடைய பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஏன் பெண்களாகிய எங்களது உடலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்?”
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் மாவடியூர் கிராமத்தைச் சேர்ந்த சுரையா என்கின்ற பெண்ணின் வாழ்க்கைதான் இந்நாவல். சிறுமியான சுர...
February 12, 2024
"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்).
•ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்...நாராய் நாராய்
வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் அரங்கேறிய இரண்டாவது சங்க இலக்கியப்பாடல்.
பிரிவுத்துயர் இல்லாத சங்க இலக்கியப் புனைவுக்கு இடமேது? வெள்ளி நாவலின் முக்கிய கட்டமொன்றில் பிரிவுத்துயருக்கான அத்தியாயமொன்று சாத்தியமானது. குறுந்தொகையில் ஏராளம் பிரிவுத்துயர் பாடல்கள் உண்டு. ஆனாலும் கடைச்சங்கப் பாடலான ‘நாராய் நாராய்’ வெள்ளியின் மனநிலைக்கு மிகவும் பொருந்திப்போனதாய் எனக்குத் தோன்றியது. இதை எழுதியது யாரென்று தெரியாததால் பாடலில் வருகின்ற சத்திமுத்த வாவியின் நிமித்தம் எழுதியவர் சத்திமுத்தப் புலவர் என அழைக்கப்படுகிற...February 4, 2024
நிலத்திலும் பெரிதே
வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல்.
இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும்.குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின் காட்சி இப்படி விரிகிறது. தலைவியைத் தேடி வந்திருக்கும் தலைவன் அவள் முன்னே தோன்றாது விளையாட்டுக்காக வேலியின் அப்புறமாக ஒளிந்திருக்கிறான். இதனைத் தோழி கண்டுவிட்டாள். தோழிக்குத் தலைவன்மீது கொஞ்சம் கோபம். என்னடா இவன், எப்போது பார்த்தாலும் இவளே கதியென்று அலைகிறானே, ஆனால் தலைவியைக் கைப்பிடித்து மணம் செய்து க...January 29, 2024
தமிழர் திருநாள் கொண்டாட்டம்
கடந்த சனியன்று விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அமைப்புகள் கூட்டுச்சேர்ந்து நடத்திய தமிழர் திருநாள் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
பெருந்திருவிழாபோல வடிவமைக்கப்பட்ட அந்நாளில் வெளியரங்குகள், உள்ளரங்குகள் என பல தளங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்குகள் என்று பன்மையில் சொல்வதன் காரணம், வெளியரங்குகளிலேயே விளையாட்டுகளுக்கான மைதானம் ஒன்று, அங்காடிகளுக்கான ஒழுங்குகள், பொதுமேடை எனப் பலவும் இருந்தன. உள்ளரங்குகளிலும் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கான திட்டமிடலே பிரமிக்கவைத்தது. மேலும் ...January 27, 2024
"வெள்ளி" நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்
ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான...
January 26, 2024
அலைமீது விளையாடும் இளந்தென்றல்
காதல் கவிதை திரைப்படம். தேம்ஸ் நதியின் படகொன்றில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழவும் இலண்டன் மாநகரின் அழகிய கட்டடங்கள். அப்போது சட்டென்று பவதாரிணியின் குரல் ஒலிக்கும்.
“அலைமீது விளையாடும் இளந்தென்றலே. அலைபாயும் இரு நெஞ்சைக் கரை சேர்த்துவா”மேலும் வாசிக்க »January 23, 2024
வரலாறு எனும் பரத்தன்
செங்கை ஆழியானின் "ஈழத்தவர் வரலாறு" என்ற நூலின் எட்டாவது அத்தியாயம் “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்”.
Buckle up folks!
கைலாயமாலையின் தனிப்பாடல் ஒன்றில் வரும் வரிகள் இவை.“அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகுநலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக் குல்விய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே.”பத்தாம் நூற்றாண்டில் கந்தவேளுக்கு கோயில் கட்டி புவனேகபாகு A அழகு பார்த்திருக்கிறான். அது பூநகரியிலிருக்கும் நல்லூர் என்கிறார் செங்கை ஆழியான். காரணம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அச்சமயம் பௌத்த செல்வாக்கும் சிங்கள மக்க...January 20, 2024
இலையுதிர் அழகு
“தம்பி ஸ்கார்பரோவில எந்தெந்த சொந்தக்காரர் வீட்டயெல்லாம் போகோணுமோ சொல்லும். நான் கூட்டிப்போறன்”எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு நாட்களை மாத்திரம் ஒதுக்கியிருந்தேன். அதிலும் ஒரு நாள் கௌசல்யா அக்காவுக்கானது. அவர் என் பெரியம்மாவின் மகள். ஊரில் இருந்த காலத்தில் தீபாவளி என்றால் ஆட்டிறைச்சி சாப்பிட அக்கா வீட்டுக்குதான் ஓடுவோம். மணியாகப் பொரியல் கறி வைப்பார். அவர்களோடுதான் அரியாலைவரை ஒன்றாக 95ம் ஆண்டு இடப்பெயர்வின்போது சைக்கிள் உருட்டி...


