ஜேகே's Blog, page 5

January 19, 2024

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

வெள்ளி நாவல் தயாராகிக்கொண்டிருக்கையிலேயே இவ்வகை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றுவது எமது கனவாக இருந்தது. நாவலில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை ஒரு எளிமையான அரங்கில் பாட்டு, நடனம், நயப்புரை கோர்த்து வழங்கவேண்டும் என்பதுதான் அது. அது ஈற்றில் கைகூடியது என்னளவில் மிகப்பரவசமான தருணங்களுள் ஒன்று.

நிகழ்வில் மொத்தமாக மூன்று பாடல்களை எடுத்துச் செய்தார்கள். முதலாவது பாடல் குறுந்தொகையில் உள்ள செம்புலப் பெயல் நீரனாரின் ‘யாயும் ஞாயும்’. கொல்லன் மகளாம் வெள்ளி பட்டறையில் பணி புரிந்துகொண்டிருக்கும் சமயம் அங்கு வருகின்ற க...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2024 01:11

January 17, 2024

பாடசாலையை விட்டு வெளியே வாருங்கள்



ஜேகே ஒரு ஜொனியன் என்பதில் பெருமையடைகிறேன் என்று ஜூட் அண்ணா தன் உரையில் சொன்னார். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இது பிரபல பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றாலும் முதலில் நம் பாடசாலையைத்தான் சுட்டவேண்டும் அல்லவா?

பரி. யோவான் கல்லூரி உருப்பட வேண்டும் என்று ஜொனியன்ஸ் எவரும் உண்மையிலேயே நினைக்கிறீர்கள் என்றால் முதலில் பாடசாலையை விட்டுக் கொஞ்சக்காலம் தள்ளி நில்லுங்கள்.Get the hell out of there and leave the school alone.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2024 01:06

January 14, 2024

வலியின் எல்லைக்கோடு


வலி உயிரைத் தின்ன ஆரம்பித்தபோது அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு சிறிது தூங்கி எழலாம் என்று புரண்டும் திரும்பியும் படுத்து, பல மணி நேரம் கழித்து எழுகிறோம் என்று நினைத்து மறுபடியும் மணிக்கூட்டைப் பார்த்தால் வெறுமனே பத்து நிமிடங்கள்தான் கழிந்திருந்தன. வலிக்கு அந்தப் பண்பு உண்டு. அது காலத்தை மெதுவாக நகர்த்த வல்லது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்துப்பார்த்தேன். ஒரு நூலை எடுத்து இரண்டு பக்கங்களைப் புரட்டினேன். டிவி ரிமோட்டை உருட்டிக்கொண்டிருந்தேன். செல்பேசியின் செயலிகளுக...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2024 01:03

January 10, 2024

அபர்ணா - சிறுகதை

அபர்ணாவை எப்படி மனைவிக்கு அறிமுகப்படுத்துவது என்பது குழப்பமாகவே இருந்தது.

“கூடப்படிச்சவ எண்டா எப்பிடி? உங்கட காலத்திலதான் பெடி பெட்டையள் ஒண்டாயிருந்து படிச்சதேயில்லையே?”நியாயமான கேள்வி. எனக்கு அபர்ணா அறிமுகமானது வன்னியில். நான் இடம்பெயர்ந்து இராமநாதபுரத்தில் வசித்தபோது அவள் குடும்பம் திருவையாற்றுக்குக் குடிபெயர்ந்திருந்தது. நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலைகள் இணைக்கப்பட்டு கிளிநொச்சியில் ஒன்றாக இயங்க ஆரம்பித்திருந்தன. ஒரே வகுப்பில் நாங்கள் இருவரும். அப்போது ஆரம்பித்த பழக்க...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2024 15:48

December 17, 2023

வெள்ளி கொண்டாட்டம்


மழை நின்றும் தூவானம் அடங்காத மனநிலை எனக்கு. வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வு நிகழ்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மனது இறுதி நாள் நிகழ்வினதும் அதற்கான பயணத்தினதும் கணங்களையே அசைபோட்டுக்கொண்டிருக்கிறது.இந்நிகழ்வை இவ்வண்ணமே நடத்தவேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. மன்றை அன்புடையோர் அனைவரும் நிறைத்திருக்க ஒரு பக்கம் ஜனகனின் ஓவியங்களும் மேடையில் அற்புத நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேணும். வெள்ளியின் பட்டறைக் காட்சி நாட்டிய அரங்காய் அமைதல் வேணும். என் மதிப்புக்குரிய முதலாந்தலைமுறை இலக்கிய ஆர்வலர் மட்...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2023 15:50

December 13, 2023

வெள்ளி நாவலைப் பெற்றுக்கொள்ள

வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 
“வெள்ளி” நாவல் மற்றும் என்னுடைய ஏனைய நூல்களின் பிரதிகளை படலை இணையத்தளத்தில் இப்போது online order செய்து பெற்றுக்கொள்ளலாம். விலைகள் அனைத்தும் தபால் செலவை உள்ளடக்கியவை. 
இலங்கை, இந்திய வாசகர்களுக்கு புத்தகத்தை இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதற்கான முயற்சிகளை வெண்பா பதிப்பகத்தார் முன்னெடுத்துள்ளார்கள். 
அன்பும் நன்றியும்ஜேகே வெள்ளி
வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது...
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2023 13:37

November 30, 2023

வெள்ளி - நாவல் முன்னோட்டம்

வெள்ளி நாவலுக்கான சிறு முன்னோட்டம். காணொலி ஆக்கத்திற்குப் பங்கெடுத்த என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.    வாசகர்கள் அனைவரும் இதனை இரசிப்பீர்கள் என நம்புகிறோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2023 15:30

November 2, 2023

கொட்டம் - கலையின் எதிவுகூறல்


அந்தக் கிராமத்தை ஒரு இராட்சச அனல் கக்கும் மூன்று தலை டிராகன் ஒன்று ஆட்சி செய்து வந்தது. அது தனக்கான உணவினைத் தினமும் அந்தக் கிராமத்து மக்களை மிரட்டி அபகரித்துப் பெற்றுக்கொள்ளும். தவிர அந்த மக்கள் அதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணையும் தாரை வார்க்கவேண்டும். இது இன்று நேற்று அல்ல, நானூறு ஆண்டுகளாக அந்தக்கிராமத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வு.மேலும் வாசிக்க »
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2023 18:05

September 19, 2023

விளமீன் - சிறுகதை



அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும்.
சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக.

“தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.”

“அரியண்டம் பண்ணாம வாங்...
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2023 16:25

September 11, 2023

பர்மா புத்தர் - சிறுகதை




பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது. 


அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன. பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன. முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க, சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன. பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன. ...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2023 13:40