ஜேகே's Blog, page 3
June 23, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 4. அரோகரா
“பிடிச்சிட்டன்”
குமரன் சொன்னதைக் கேட்ட கீர்த்தி ‘எங்கடா?’ என்று திரும்ப எத்தனிக்கிறான்.
“டேய் டக்கெண்டு திரும்பாத... நைசாப் பார்”
கீர்த்தி கோபுரவாசலில் ஆரம்பித்து, விதானம் உயர்த்தி, அப்படியே வலப்பக்கம் திரும்பி, தேர்முட்டி உச்சி கண்டு, கீழே மெதுவாக வருகிறான்.
“தேர்முட்டிண்ட… தெற்கு வாசல் … இடக்கைப்பக்கம் … கண்டிட்டியா?”
“அந்தச் சின்னப்பெடியனக் கையில பிடிச்சுக்கொண்டு நிக்கிற பெட்டையா?”
“அவள் இல்லை .. அவளுக்கு வலப்பக்கம்”
“அந்தக் கண்ணாடியா?”
“கறுப்புக் கலர் பிரேம் ... நீலக்கலர் மைசூர் சில்க் .. மயில் போர...
June 16, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 3. கம்பவாரிதி
“மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் கைகேயிலா? சூர்ப்பனகையிலா? மண்டோதரியிலா?”
அப்போது எனக்கு வயது பதினொன்று. தொண்ணூற்றொராம் ஆண்டு யாழ்ப்பாணக் கம்பன் விழா. நல்லை ஆதீனத்தில், இட நெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று எட்டி எட்டிப் பார்த்தபோது வெறுமனே உயரமான நடுவர் இருக்கையில் இருந்தவர் மாத்திரமே தெரிந்தார். மேடை தெரியவில்லை. அப்பாவை இம்சித்து என்னைத் தோளில் தூக்கி வைத்துக் காட்டச்சொல்லிப் பார்த்த பட்டிமண்டபம் அது.
இராமன் சீதைக்கு முதலிரவு.
நெருங்கிவந்து சீதையின்...
June 11, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 2. கடவுள்
நித்தியகல்யாணியில் தேடித்தேடிப் பூ ஆயும் அதிகாலை. மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரக்கொப்பை, ஆட்டுக்குக் குழை குத்தும் கம்பியால் எட்டிப்பிடித்து, கொளுவி வளைக்கும்போது, சொட்டுச் சொட்டாக கொஞ்சம் பனித்துளி, தலை, முகம், கழுத்தடி எல்லாம் விழுந்து உடம்பு சில்லிடும். திருவிழாவில் வாங்கிய சின்னப் பனை ஒலைப்பெட்டியில், மொட்டுத் தவிர்த்து, பூக்களைப் பிடுங்கிப் போட்டவாறு செவ்வரத்தைக்குத் தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகைப் பூக்கள்? அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஒடித்துப் போடுகிறேன். தோட்டத்தில் நின்ற ...
"வெள்ளி" நாவல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி
ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர். எனினும் ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.
தங்களுக்கு ஆஸ்திரேலியாதான் தெரியும், அவு...
June 8, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - 1. பங்கர்
விலாட்டு மாமரம் பட்டுப்போக ஆரம்பித்திருந்தது. மரத்தடிக்குக் கீழே இருந்த குப்பைக்கிடங்கு எரிக்கப்பட்டதால், கரி மரத்தடி முழுதும் படர்ந்து கொப்புகளுக்கும் எட்டியிருந்தது. குப்பையை மெதுவாகக் கிளறிப்பார்த்தேன். ஏதோ ஒரு சத்தம். என்னடா இது? அருகில் இருந்த அலவாங்கை எடுத்துக் கொஞ்சம் நன்றாகக் கிளற, ஒரு குரல். தெளிவாகக் கேட்டது. மீண்டும் அலவாங்கு போட்டேன். அட .. இது அந்தக் கிழவியின் குரல் அல்லவா. இரைக்க இரைக்கக் கவனுத்துடன் கிளறினேன். கிழவி இன்னமும் உள்ளேயேதான் இருக்கிறதா? குரல் இப்போது தெளிவாக கேட்டது.
“...
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - பங்கர்
விலாட்டு மாமரம் பட்டுப்போக ஆரம்பித்திருந்தது. மரத்தடிக்குக் கீழே இருந்த குப்பைக்கிடங்கு எரிக்கப்பட்டதால், கரி மரத்தடி முழுதும் படர்ந்து கொப்புகளுக்கும் எட்டியிருந்தது. குப்பையை மெதுவாகக் கிளறிப்பார்த்தேன். ஏதோ ஒரு சத்தம். என்னடா இது? அருகில் இருந்த அலவாங்கை எடுத்துக் கொஞ்சம் நன்றாகக் கிளற, ஒரு குரல். தெளிவாகக் கேட்டது. மீண்டும் அலவாங்கு போட்டேன். அட .. இது அந்தக் கிழவியின் குரல் அல்லவா. இரைக்க இரைக்கக் கவனுத்துடன் கிளறினேன். கிழவி இன்னமும் உள்ளேயேதான் இருக்கிறதா? குரல் இப்போது தெளிவாக கேட்டது.
“...
June 1, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - முதல் பிரசவம்
அன்றைக்கு ‘ஸ்ரீ லங்கா பிரஸ்’ முதலாளியின் வீட்டுவாசலில் நானும் நான்கு நண்பர்களும் நின்றது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. கதவை அரைவாசி திறந்துவைத்தபடி ‘என்ன தம்பி, டிக்கட் விக்க வந்திருக்கிறீங்களா?’ என்று கேட்ட முதலாளியிடம் தயக்கமாகச் சொல்கிறோம்.
“ஒரு புத்தகம் அடிக்கோணும் அங்கிள்”
அப்போது பன்னிரண்டு வயசு. அம்மா காற்றடிக்கவும் அவ்வப்போது கிழங்கு ரொட்டி வாங்குவதற்கும் தந்த பணத்தை மிச்சம் பிடித்து ஒரு நூறு ரூபா சேர்த்து வைத்திருந்தேன். பிரேம்நாத், கொஞ்சம் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவன், ஐந்நூறு ரூ...
May 30, 2024
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - படலையில் மறுபடியும்
குவாண்டம் விஞ்ஞானத்தில் 'Super Position' என்றொரு வஸ்து இருக்கிறது. ஷிரோடிங்கரின் பூனையை சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒரு மூடிய கறுப்புப் பெட்டிக்குள் இருக்கின்ற பூனையின் நிலை அது. அது உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா, காது குடைகிறதா, காலிடுக்கை சொறிகிறதா என்று வெளியிலிருக்கும் எவருக்கும் தெரியாது. பெட்டி மூடிக்கிடக்கையில் உள்ளே அது எல்லாமுமாக இருக்கிறது. எல்லாவற்றையும் செய்கிறது. எல்லாவற்றையும் செய்யாமலும் இருக்கிறது. அதனைத்தான் 'Super Position' என்பார்கள். நாம் பெட்டியைத் திறந்து அதனைப் ப...
May 10, 2024
லாஹிரியைச் சந்தித்தல்
மாலையில்தான் நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதனால் முதலில் நண்பர்கள் மூவரும் சேர்ந்து புரூக்லின் போகலாம் எனத் திட்டம் போட்டோம். புரூக்லின் என்றாலே எனக்கு மூன்று விசயங்கள் உடனேயே ஞாபகத்துக்கு வருவதுண்டு. முதலாவது புரூக்லின் என்ற திரைப்படம். ஐம்பதுகளில் அயர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்து புரூக்லினில் வந்து வாழும் ஒரு இளம் பெண்ணின் எளிமையான கதை அது. அடுத்தது லாகிரியினுடைய ஒரு கட்டுரை. லாகிரி இத்தாலிய மொழி படிக்க...
March 2, 2024
‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா
பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல்
கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள...


