“பிடிச்சிட்டன்”
குமரன் சொன்னதைக் கேட்ட கீர்த்தி ‘எங்கடா?’ என்று திரும்ப எத்தனிக்கிறான்.
“டேய் டக்கெண்டு திரும்பாத... நைசாப் பார்”
கீர்த்தி கோபுரவாசலில் ஆரம்பித்து, விதானம் உயர்த்தி, அப்படியே வலப்பக்கம் திரும்பி, தேர்முட்டி உச்சி கண்டு, கீழே மெதுவாக வருகிறான்.
“தேர்முட்டிண்ட… தெற்கு வாசல் … இடக்கைப்பக்கம் … கண்டிட்டியா?”
“அந்தச் சின்னப்பெடியனக் கையில பிடிச்சுக்கொண்டு நிக்கிற பெட்டையா?”
“அவள் இல்லை .. அவளுக்கு வலப்பக்கம்”
“அந்தக் கண்ணாடியா?”
“கறுப்புக் கலர் பிரேம் ... நீலக்கலர் மைசூர் சில்க் .. மயில் போர...
Published on June 23, 2024 05:10