ஜூம்பா லாகிரியை நேரிலே பார்க்கப்போகிறேன் என்ற பரவசம் காலையிலேயே ஆரம்பித்துவிட்டது.
மாலையில்தான் நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதனால் முதலில் நண்பர்கள் மூவரும் சேர்ந்து புரூக்லின் போகலாம் எனத் திட்டம் போட்டோம். புரூக்லின் என்றாலே எனக்கு மூன்று விசயங்கள் உடனேயே ஞாபகத்துக்கு வருவதுண்டு. முதலாவது புரூக்லின் என்ற திரைப்படம். ஐம்பதுகளில் அயர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்து புரூக்லினில் வந்து வாழும் ஒரு இளம் பெண்ணின் எளிமையான கதை அது. அடுத்தது லாகிரியினுடைய ஒரு கட்டுரை. லாகிரி இத்தாலிய மொழி படிக்க...
Published on May 10, 2024 16:27