“தம்பி ஸ்கார்பரோவில எந்தெந்த சொந்தக்காரர் வீட்டயெல்லாம் போகோணுமோ சொல்லும். நான் கூட்டிப்போறன்”
எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு நாட்களை மாத்திரம் ஒதுக்கியிருந்தேன். அதிலும் ஒரு நாள் கௌசல்யா அக்காவுக்கானது. அவர் என் பெரியம்மாவின் மகள். ஊரில் இருந்த காலத்தில் தீபாவளி என்றால் ஆட்டிறைச்சி சாப்பிட அக்கா வீட்டுக்குதான் ஓடுவோம். மணியாகப் பொரியல் கறி வைப்பார். அவர்களோடுதான் அரியாலைவரை ஒன்றாக 95ம் ஆண்டு இடப்பெயர்வின்போது சைக்கிள் உருட்டி...
Published on January 20, 2024 01:12