ஜேகே's Blog, page 10
April 27, 2021
கரண்டிக் கிராமம்
நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கி ஊர் முழுவதுமே முடங்கியிருந்த நாட்கள் அவை.
அந்தக் காலத்தில்தான் நாங்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்திருந்தோம். அம்மா என் தம்பியைத் தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வருவார். நானோ அப்பா எனக்குப் புதிதாக வாங்கிக்கொடுத்த ஸ்கேட்போர்டில் ஓடிவருவேன். சமயத்தில் அப்பாவும் எங்களோடு நடைப்பயிற்சியில் சேர்ந்துகொள்வதுண்டு. ஆனால் அவர் வந்தாலும் எம்மோடு ஒன்றாகச் சேர்ந்து நடக்கமாட்டார். நாங்கள் மெதுவாக நடக்கிறோம் என்று குறை சொல்லிக்கொண்டு அவர் தன்பாட்டுக்குப் பாட்டுக் கேட...
Published on April 27, 2021 01:52
April 17, 2021
த கிரேட் பனங்கொட்டைக் குசினி
Published on April 17, 2021 14:27
March 9, 2021
விருதுகள்
டூரிங் டாக்கிஸ் என்று சித்ரா லக்ஸ்மன் நடத்தும் யூடியூப் சனலை அவ்வப்போது பொழுதுபோக்காகக் கேட்பதுண்டு. அவர் ஒரு ஊடகவியலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தமையால் சுவாரசியமான திரைத் தகவல்களை அடிக்கடி பகிர்ந்துகொள்வார். ரசிகர்கள் கேள்விகளுக்கும் வார வாரம் பதில் சொல்வார். அவருடைய சென்ற வாரத்து நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.
“என்னால் பல பாடல்களில் எஸ்பிபிக்கும் மனோவுக்கும் வித்தியாசம் கண்டறிய முடிவதில்லை. அதேபோல ஜேசுதாசுக்கும் உன்னிமேனனுக்கும் இடையிலும் குரல் வித்தியாசம் தெரிவதி...
Published on March 09, 2021 11:34
February 22, 2021
ஊரோச்சம் : கட்டுநாயக்கா
பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது.
சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?மேலும் வாசிக்க »
Published on February 22, 2021 23:09
பயணங்கள் பலவிதம் : 1 கட்டுநாயக்கா
பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது.
சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?மேலும் வாசிக்க »
Published on February 22, 2021 23:09
ஆதிரை வெளியீடுகள்
சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ‘சமாதானத்தின் கதை’ வெளியானது.ஆதிரை பதிப்பகத்தின் முதல் வெளியீடு இது. அவர்களே எழுத்துப் பிழை திருத்தி, அட்டை வடிவமைப்பு, லே அவுட் எல்லாம் செய்து, அச்சடித்து, விநியோகித்து புத்தகங்கள் விற்று முடிந்ததும் அதற்கான உரிமைத் தொகையையும் கொடுத்தார்கள். ஈழத்தில் சில வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும்கூட வாசிப்பு நிகழ்வுகளை செய்யப்போவதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்குள் கொள்ளைநோய் பரவிவிட்டது.மேலும் வாசிக்க »
Published on February 22, 2021 22:43
நான்கு சம்பவங்கள்
சம்பவம் 1
அப்பா எனக்கொரு சைக்கிள் வாங்கித்தந்திருந்தார். அரைச்சைக்கிள். ஹீரோ. முதலில் நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினால்தான் வாங்கித்தருவேன் என்று சொல்லியிருந்தார். நானோ வாங்கித்தந்தால்தான் பாஸ் பண்ணுவேன் என்று அடம்பிடித்தேன். ஈற்றில் என் பிடிவாதம் தாங்காமல் பரீட்சைக்கு முன்னரே சைக்கிள் வந்துவிட்டது. புறக்கோட்டையில் வாங்கி லொறியில் எடுத்து வரப்பட்ட சைக்கிள். பெல்லுக்குப் பதிலாக பற்றரியில் வேலை செய்யும் ஹோர்ன் அதில் இருந்தது. சிவப்பு நிறம். வண்ண வண்ணமான டஸ்ட் கவருகள், குஞ்சங்கள் எனப் பு...
Published on February 22, 2021 22:37
February 9, 2021
வாணி
எழுதும் வேகத்தில் பிழைகளைத் தவிர்ப்பது கடினமாகவே இருப்பதுண்டு. மனவேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதுவதே கடினம். அதிலும் பிழைகளில்லாமல் எழுதுவது எப்படி? சரி எழுதிய பிற்பாடு வாசித்துத் திருத்தலாம் என்றால் அப்போது பஞ்சி பிடித்துவிடும். தவிர எழுதிய எழுத்தை மீள வாசிப்பதும் கொல்லக்கொண்டுபோவதுபோல. அப்படியே திருத்த வெளிக்கிடுகையில் கூடுதலாக ஐந்து பந்தி சேருவதுதான் நிகழுமே ஒழிய எழுத்துத் திருத்தம் நிகழாது.
இப்படியான சூழ்நிலையில்தான் சிலவருடங்களுக்கு முன்னர் வாணி பிழைதிருத்தியின் அறிமுகம் கிடைத்தது. எழுத்து...
Published on February 09, 2021 22:35
மெக்ஸிக்கோ
தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின்...
Published on February 09, 2021 22:26
February 6, 2021
காலத்தின் காலடி
Published on February 06, 2021 03:18


