சம்பவம் 1
அப்பா எனக்கொரு சைக்கிள் வாங்கித்தந்திருந்தார். அரைச்சைக்கிள். ஹீரோ. முதலில் நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினால்தான் வாங்கித்தருவேன் என்று சொல்லியிருந்தார். நானோ வாங்கித்தந்தால்தான் பாஸ் பண்ணுவேன் என்று அடம்பிடித்தேன். ஈற்றில் என் பிடிவாதம் தாங்காமல் பரீட்சைக்கு முன்னரே சைக்கிள் வந்துவிட்டது. புறக்கோட்டையில் வாங்கி லொறியில் எடுத்து வரப்பட்ட சைக்கிள். பெல்லுக்குப் பதிலாக பற்றரியில் வேலை செய்யும் ஹோர்ன் அதில் இருந்தது. சிவப்பு நிறம். வண்ண வண்ணமான டஸ்ட் கவருகள், குஞ்சங்கள் எனப் பு...
Published on February 22, 2021 22:37