நிலாப்தீன் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
கொக்குவிலுக்குப் போகும் வழியில் நாச்சிமார் கோயிலடி கடந்ததும் கொஞ்சத்தூரத்தில் அந்தப் பெட்டிக்கடை இருந்தது. அதிகாலையிலேயே சிறுவன் ஒருவன் கடையைத் திறந்து வைத்து, முன்றிலைக் கூட்டித் துப்புரவாக்கி, மஞ்சள் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து இறங்கிய நிலாப்தீன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனை நெருங்கினார்.“தம்பி, இங்கிட்டு ஜெயரத்தினம்னு ஆரும் இரிக்கினமா? அவர்ட வூடு எங்கிட்டெண்டு சொல்லமுடியுமா?”அவன் வாளியைக் கீழே குனிந்து வைத்துவ...
Published on April 23, 2023 17:18