பரிசளிப்பு நிகழ்வுகள் பலவற்றை நான் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள். தமிழ்ப் பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு. இன்னுமொன்று தடகள விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு. முதலாவதற்கு வைத்தியர் ஒருவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்க அழைக்கப்படுகிறார். இரண்டாவதற்கு ஒரு பொறியியலாளரைக் கூப்பிடுகிறார்கள். அந்த வைத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்று யோசித்துப்பார்த்தேன். க.பொ.த சாதாரணத் தரத்தில் தமிழ்ப் பாடத்தில் அவர் சிறப்புத்தேர்ச்சி எ...
Published on September 29, 2021 00:26