Jeyamohan's Blog, page 115
May 7, 2025
அ.மருதகாசி
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இருந்த சம்ஸ்கிருதக் கலப்பு மற்றும் செயற்கைத்தன்மையை நீக்கி இலக்கியத்தரமாக ஆக்கியவர் மருதகாசி..மெட்டுக்கு ஏற்ற பாடல்களை அமைப்பதில் வல்லவராக இருந்ததால், இசையமைப்பாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். மண்ணின் மாண்புகளைக் கூறும் பாடல்களைப் படைத்ததில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்களுக்கு முன்னோடியாக அ. மருதகாசி மதிக்கப்படுகிறார்.
அ.மருதகாசி – தமிழ் விக்கி
சிறகுகளை அளித்தவர் – கடிதம்
அன்புள்ள ஜெ,
மகள், மருமகள், மனைவி, மகன் எல்லோரும் சுகம் தானே?
ஒரு சிறிய அழகான அன்பான குடும்பம். ஆடம்பரமான வாழ்க்கையில்லை. ஆனால் கொஞ்சம் இழுத்து பிடித்து அதியாவசிய செலவுகள் நடக்கும். உண்மையில், அதியாவசிய செலவு ஒன்றுதான். தனியார் பள்ளியில் படிக்கவைப்பது. அதற்க்காக வேறெந்த செலவும் செய்வதில்லை. அன்பான தாய், சிரிக்க சிரிக்க பேசும் தந்தை. ஒரு குறை. வெளியே செல்வது பிடிக்காது. “ஸ்கூல்ல பி.டி ல விளையாடியாச்சில்ல? அதுபோதும்.” “இல்லப்பா friend வீட்டுக்கு….” “அங்க என்ன தேனும் பாலும் சொட்டுதா?” அதற்க்குமேல் பேச்சு கிடையாது. நவராத்திரி அபூர்வமாக மாமிகள், குழந்தைகளோடு எங்கள் வீட்டில், கண்ணில் படும் நாட்கள். சாதி, மதமெல்லாம் ஒருபொருட்டே இல்லை. Joyceம், லக்ஷ்மியும், தேவகியும், அஞ்சலையும், பேபியும், எல்லாரும் மாமிதான். அதைப்பற்றி பேசியதாகவும் நினைவில்லை. திருமணத்திற்க்குப்பின் புரிந்து கொண்டதுதான். பின்ன ஏன் இந்தப்பா வெளியிலேயே போகவிடவேயில்லை? தெரியவில்லை. வீடு விட்டால் பள்ளி, வீட்டுப்பாடம். 20 ஆண்டுகளில் 2 கல்யாணங்கள், 2 கோடை விடுமுறை பயணம். அதுவும் கோவை பெரியம்மா வீடு, சென்னை பெரியப்பா வீடு. பின், படிப்பைக்காரணம்காட்டி அப்பாமட்டும் சென்று வருவார். ஆனால் அது செலவைக்குறைக்கத்தான் என்று நினைத்தேன்.
8ம் வகுப்பு முடித்தபோது வீட்டில் முதல்முதலாக தொலைக்காட்சிப்பெட்டி வந்தது. Antenna வைத்து ட்யுன் செய்து தில்லி தூர்தர்ஷன் மட்டுமே தெரியும்.
மொழிகள்மீது பெருங்காதலோடு இருந்த நாட்கள். கலைநிகழ்ச்சிகள், மஹாபாரத், பன்மொழித்திரைப்படங்கள், புரிந்தும் புரியாமலும், பின் எப்படி புரிகிறது என்ற ஆச்சர்யம் மிக்க 3 ஆண்டுகள். 12 ம் வகுப்பில் பாடம் தவிர வேறேதும் கிடையாது. காலாண்டுக்குப்பின் காலை 6:30 முதல் இரவு 8:30 வரை பள்ளி நேரம். என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் காற்றில் குப்பை போல் சொன்னதெல்லாம் செய்து முடிக்கவேண்டியது தான்.
அதன் பின் கல்லூரி. விடுதி. இல்லை சிறை. பெற்றோர் மட்டுமே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைபார்க்க வரலாம், அடையாள அட்டையொடு. எப்போதும்போல் படிப்பு, தேர்வு, மதிப்பெண்.
பட்டமளிப்புக்குக்கூட செல்லவில்லை. திருமணம். சென்னை. குழந்தை. ஆச்சு 50 கடந்தாச்சு. கைநிறைய ஊதியம் தரும் ITES வேலைகள். பெரும்பாலும் ஆங்கிலம் பேசத்தெரிந்ததால். கடன்களை அடைச்சாச்சு. பின், ஒரு நல்ல பள்ளியில் ஆசிரியை. கோவிட்டுக்குப்பின்வ்வேலையை விட்டாச்சு.
மிகப்பெரிய குறையென்று ஒன்றுமில்லை. மனதுவைத்தால் நடக்காத ஒரு விக்ஷயமும் இல்லை. ஆனால் உறவுகள் புறியவில்லை. பழகத்தெரியவில்லை. மனிதர்கள் ஏன் இப்படி என்றும் நான் ஏன் இப்படி என்றும் பல கேள்விகள். குற்றம்பார்க்கின் சுற்றம் இல்லை என்று படித்திருந்தாலும் மன்னிக்கத்தெறியவில்லை. இதற்க்கெல்லாம் வளற்புமுறை தான் காரணம் என்று தோன்றுகிறது. ஆனால் ஏன் அப்படி வளர்க்கப்பட்டேன்? 2 அல்லது 3 திரைப்படங்கள் அழைத்துச்சென்றிருப்பார் அப்பா. பாடபுத்தகம் தவிர எதுவும் வாசித்ததில்லை. பயணம்? ஹ ஹா..!
படிக்க ஆரம்பித்தது ஒரு தற்செயல். 2022ல் வெண்முரசு தொடங்கினேன். முதல் முறையாக படிக்கிறேன். படிக்க படிக்க மனிதர்களை கொஞ்சம் புரிகிறது. நிறைய தெளிவான கேள்விகள். தளத்தில் வரும் கட்டுரைகளை, கடிதங்களை படிக்கிறேன். புரிதல் சற்று ஆழமாகிறது. சிறுகதைகள் இன்றும் ஈடுபடமுடியாதவை. ஆனாலும் சிலவற்றை படிக்கிறேன். ஆலயக்கலை, யோகா வகுப்புகளில் பங்கேற்றேன். ஆசிரியரோடு அஜந்தா எல்லோரா. பெரும்பாலும் வெண்முரசு தான். இருட்கனி 7ல் இருக்கிறேன். 20 நூல்களில் என் பெற்றோரை உடன் பிறந்தோரை நிறையவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்தக்கேள்விக்கு மட்டும் மனம் ஏற்க்கும் ஒரு விடை கிடைக்கவே இல்லை.
நேற்று உங்கள் சிறுகதை, ” சிறகு” வாசித்தேன். அளவிலா மெய்பாடுகள். தலையில் ஓங்கி செம்மட்டியால் அடித்தது போல அந்த கேள்விக்கு விடை கிடைத்தது. “அப்பா, எனக்கு இப்படி எதுவும் நடக்கக்கூடாதுன்னு தான் இல்லையா? எப்படி நன்றி சொல்வேன்? இப்படி பாலியல் தொல்லைகளால் ஆற்றமுடியாத
மனக்காயங்களோடும் குழப்பங்களோடும், குற்ற உணர்வுகளோடும் எத்தனை சிறுமிகள், பெண்கள், அறிவையர், தெரிவையர், வயது ஒரு தடையா என்ன? இரண்டு முலையும் ஒரு ஓட்டையும் தவிர வேறேதும் தெரியாதோர் இருக்கும் இங்கே, என்னை ஏன் இப்படி வளர்த்தாய் என்று எப்படிக்கேட்பேன்? அப்படி ஒன்று நடந்திருந்தால் ஆண்களை வெறுத்திருப்பேன். அண்கள் மேல் நம்பிக்கை இழந்திருந்திருப்பேன். இதையெல்லாம் “இந்த பெண்ணும் ஆணும் என்ன செய்தால் எனக்கென்ன? இந்த உலகில் அத்தனைபேரும் இல்லாமலானாலும்கூட எனக்கென்ன? எனக்கு ஒன்றுமில்லை. நூறாண்டு கண்ட இந்த மரங்களுக்கு ஒன்றுமில்லை. நீலப்புகைக்குவியல்போல எழுந்து நின்றிருக்கும் அந்த கரடிமலைச் சிகரத்திற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமே இல்லை” என்று இந்த சமுதாயம் பார்த்துக்கொண்டுதானே இன்றும் இருக்கிறது? அப்படிப்பட்ட இந்த சமுதாயத்தை நம்பியிருக்கமாட்டேன். மனநோயோடு போராடிக்கொண்டிருப்பேன், இந்த நாட்டின் பலப்பல பணபலமோ, படிப்போ, ஆள்பலமோ இல்லாத பெண்களை போல! நானும் அங்கிருந்து வந்தவள்தானே!
எத்தனையோ உயரங்களை தொடும் ஆற்றலும் திறனும் எனக்குண்டு. அதனாலென்ன? நீ எனக்களித்தது மிகச்சிறிய, ஆனால் ஊனப்படாத சிறகல்லவா?
ஜி
சிறகு- கடிதம்நற்றுணை கலந்துரையாடல்- சென்னை
அடுத்த நற்றுணை கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை 10-05-2025 அன்று மாலை 03:00 மணி்க்கு துவங்குகிறது. சமீபத்திய நான்கு நாவல்கள் குறித்த உரையாடல் / விமர்சன அரங்காக இது நிகழ்கிறது. விவரங்கள் இங்கே
தலைமை உரை:-
எழுத்தாளர் எஸ்.சண்முகம்
படைப்புகள் குறித்த உரையாடல்
1. மூன்றாம்பிறை – மானசீகன் – தமிழினி உரையாடல்:- விக்னேஷ் ஹரிஹரன்
2. டாங்கோ – குணா கந்தசாமி – எதிர்
உரையாடல்:- காளிப்ரஸாத்
3. இரவாடிய திருமேனி – வேல்முருகன் இளங்கோ – எதிர்
உரையாடல்– ஜா.ராஜகோபாலன்
4. யாக்கை – கே.ஜெ.அசோக்குமார் – காலச்சுவடு
உரையாடல் – சாம்ராஜ்
நாள் – மே 10 2025, சனிக்கிழமை
நேரம் – மதியம் 03:00 மணி முதல் 08:30 மணி வரை
இடம்– சத்யானந்தா யோகா மையம் – வடபழனி
Sathyam Traditional Yoga – Chennai
11/15, South Perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani
Chennai 600026
+919952965505
அனைவரும் வருக!!!!
Can we read all good books?
I only resumed the habit of reading daily after tenth grade last year. I also started reading in Tamil through ‘Aram’ only last year. This year I decided to start reading Venmurasu. I will set aside a specific time every day to read. Now Ambica and Vichitraveeryan’s friendship is blossoming at Mutharkanal of Venmurasu.
Can we read all good books?
சோழர்களின் பண்பாட்டு கொடை காணொளி ,சோழர் காலத்திற்கும் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கும் உள்ள ஆட்சித்தொடர்பை தெளிவு படுத்தியது.குமரி மாவட்ட ஏரிகள் சோழர் காலத்தில் வெட்டப்பட்டது என்பது அறியப்பட வேண்டிய வரலாறு.கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக மராமத்து பணிகள் எதுவும் இல்லாமல் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை கன்னியாகுமாரி மாவட்டம் மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் பார்க்கிறோம்.
சோழர்கள் – கடிதம்May 6, 2025
பௌத்த தியானம்- விபாசனா தொடக்கப் பயிற்சி
வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர். முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.
2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத் தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.
இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்
யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.
பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.
செப்டெம்பர்
ஜூன்27, 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com அறிவிக்கப்பட்ட பயிற்சிகள்- இடமிருப்பவைகுரு நித்யா இலக்கிய அரங்கம்
1993ல் குரு வாழும் காலத்திலேயே குரு நித்யா இலக்கிய அரங்கம் தொடங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப்பின் அப்பெயர் போடப்பட்டது. எல்லா ஆண்டும் மே மாதம் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தப்பட்டது. ஏற்காட்டில் ஓர் ஆண்டு நடத்தப்பட்டது. சென்ற இரு ஆண்டுகள் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ந்தது.
இவ்வாண்டு ஊட்டியில் நடத்த திட்டமிட்டோம். ஊட்டியில் மே மாதம் பெருந்திரளும் பயணக்கட்டுப்பாடும் இருந்தமையால் ஜூனில் தேதி முடிவுசெய்தோம். ஆனால் அங்கே நிகழ்த்த முடியாத சூழல். ஆகவே முழுமையறிவு நிகழும் இடத்திலேயே நடத்த எண்ணுகிறோம்
வரும் ஜூன் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஈரோடு மலைத்தங்குமிடத்தில் நிகழும்.
பங்கேற்பாளர் பதிவுக்கு
(இவ்வரங்கில் செலவுகளில் பங்கேற்கும் பொருளியல் சூழல் இல்லாதவர்கள் அதைக்குறிப்பிட்டு எழுதினால் கட்டணம் இன்றி பங்கேற்கலாம். கூடுதலாகக் கட்ட விரும்புபவர்கள் கட்டலாம். ஆனால் எந்த தகவலும் தனிப்பட்ட முறையிலானதே. எதுவும் வெளிப்படுத்தப்படாது.)
தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை
தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. நவீன முறையைச் சேர்ந்தவை. தில்லை இந்த தியானப்பயிற்சியை வெவ்வேறு புகழ்பெற்ற அமைப்புகளைச் சார்ந்து சென்ற 20 ஆண்டுகளாக அளித்து வருபவர். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு உள்ளனர். இந்த பயிற்சி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது.
இது மதம்சார்ந்த பயிற்சி அல்ல, இந்து பௌத்த மரபுகளில் இருந்து உருவானது எனினும். ஒருவர் தன் அகத்தை திரும்பி நோக்கவும், அதன் கட்டற்ற பாய்ச்சலை புரிந்துகொள்ளவும், அதை தனக்கேற்றவகையில் பழக்கிக்கொள்ளவும் உதவும் முறைமைகள் இவை. தொன்மையானவை, நவீனப்படுத்தப்பட்டவை.
முந்தைய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாவது நிலை தியான வகுப்பு இது. தில்லை செந்தில் பிரபு பிற இடங்களில் நடத்திய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
முந்தைய வகுப்பு உளக்குவிப்பு – கவனக்கூர்மைக்கான முதல்நிலை பயிற்சிகள் அடங்கியது. இப்பயிற்சி அதன் இரண்டாம் நிலை. அகத்தை கட்டுப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதற்கான கூடுதல் செயல்முறைகள் கொண்டது. வெவ்வேறு செயற்களங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது மிக உதவியானது.நாள் ஜூன் 6 7 மற்றும் 8
வைணவ இலக்கியம்ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார்.
வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஆழ்வார் பாடல்களின் கவித்துவத்திற்குள் உணர்ச்சிகரமாகச் செல்லும் ஓர் அனுபவப் பயிற்சிதான். வைணவ இலக்கியங்களின் மொழி ஆயிரமாண்டு தொன்மையானது. ஆகவே ஓர் ஆசிரியரின் உதவி அவற்றைக் கற்றுக்கொள்ள தேவையாகிறது. அவற்றின் தத்துவப்பின்புலத்தை உணர்வதற்கும் வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதலுடன் கூட்டாக அமர்ந்து கற்பதென்பது மிகத்தீவிரமான ஓர் உணர்வுநிலையை உருவாக்கும். ஒரு வகுப்பில் நாம் கற்றுக்கொள்ளும் வைணவ இலக்கியத்தை பல ஆண்டுகள் நூல்கள் வழியாகக் கற்கமுடியாது.
வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.
நாள் மே 30 31 ஜூன் 1
நாலாயிரம் கடிதம் பிரபந்த வகுப்பு கடிதம் பிரபந்தக் கல்வி, கடிதம் நாலாயிரம் கடிதம் பிரபந்தம், கடிதம் கண்ணனை அறிதல், கடிதம் வைணவம் கல்வி பிரபந்த வகுப்பு கடிதம் வைணவத்தை அறிதல் வருமாறு ஒன்றில்லையேல்… வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
இஸ்லாமிய தத்துவம் – சூஃபி மரபு வகுப்புகள்நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியாவின் பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.
சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.
நாள் ஜூலை4,5 மற்றும் 6
யோகப்பயிற்சி.தொடக்கநிலை.
பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் (குரு) ஆக 26 ஏப்ரல் 2025 அன்று அறிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.
அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.
நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.
நாள் ஜூலை 11, 12, 13
ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்)

குழந்தைகள் பற்றிய பதற்றம்
நான் செல்லுமிடங்களில் எல்லாம், தங்கள் குழந்தைகள் பற்றிய பதற்றத்தை பெற்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் அந்த பதற்றக்குரல் மிகுதி. நம் குழந்தைகளில் மிகப்பெரும்பாலானவை பெற்றோரும் சமூகமும் வகுத்தளித்த பாதையில் சீராக சென்று அவர்கள் நிறைவுகொள்ளும் இடங்களில் அமர்ந்துகொள்பவைதான். அவற்றைப் பற்றியும் பெற்றோர் பதற்றம் கொள்கிறார்கள். ஆனால் அந்த பாதையில் செல்லாமல் தங்களுக்கான பாதைகளில் முட்டிமோதும் குழந்தைகளின் பெற்றோர் தீராத அச்சத்தில் தத்தளிக்கிறார்கள். அவர்களுக்காக சில சொற்கள்.

தமிழ்விக்கி – ஒரு பேட்டி
தமிழ் விக்கி தொடக்கவுரை
தமிழ் விக்கி- விழா
தமிழ் விக்கி- முதல்பதிவு
தமிழ் விக்கி -சில கேள்விகள்
தமிழ் விக்கி -அறிவிப்பு
தமிழ் விக்கி பயனற்றதா? கடிதம்
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் துவக்கவிழா புகைப்படங்கள்
டிசம்பர் 2021 விஷ்ணுபுரம் விழா அரங்கில் தமிழ்விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை தொடங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே 7, 2022 அன்று வாஷிங்டன் டிசி பிராம்டன் பள்ளி அரங்கில் தமிழ்விக்கி முறையாக தொடங்கப்பட்டது. ஆயிரம் பதிவுகள் அப்போதே இருந்தன.
அந்த தொடக்க விழாவுக்கு திட்டமிட்ட முறையில் தடைகள் உருவாக்கப்பட்டன. தமிழ் விக்கி விழாவில் பங்கெடுக்க ஒப்புக்கொண்ட அனைத்து விருந்தினரும் விழா தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வரமுடியாது என தெரிவித்தனர். அவர்களை அழைத்து பொய்யான செய்திகளை அளித்து மிரட்டி தடுத்துவிட்டனர். தமிழ்விக்கி விழா ரத்து என இணையத்தில் அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் மூன்றே நாட்களில் புதிய விருந்தினருடன் விழாவை முன்னைவிடச் சிறப்பாக நடத்தி முடித்தோம். தமிழ் விக்கி தூரன் விருது அந்த மேடையில் அறிவிக்கப்பட்டது. 2002 முதல் தமிழ் ஆய்வாளர்களுக்காக அவ்விருது வழங்கப்பட்டுவருகிறது.
தமிழ் விக்கி தொடங்கப்பட்டபோது இணையத்தில் அதைப் பற்றி அவதூறுகளை பொழிந்தும், உள்நோக்கம் கற்பித்தும், எள்ளிநகையாடியும் எழுதப்பட்ட கட்டுரைகள் எங்கள் கவனத்திற்கு வந்தவை மட்டும் நூற்றி இருபத்தெட்டு. சிறிய முகநூல் பதிவுகள் முந்நூறுக்கும் மேல்.
தடைகளை உருவாக்கியவர்கள், எதிர்த்தவர்கள் எவர் மேலும் இன்று வருத்தம் இல்லை. எந்தப் பெருஞ்செயலுக்கும் அத்தகைய எதிர்ப்புகள் தமிழ்ச்சூழலில் எழாமலிருந்ததில்லை. அவர்களுக்கே இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பு என்ன, தமிழில் அதன் இடம் என்ன என்று தெரிந்திருக்கும். நல்லெண்ணத்துடன் அவர்கள் இனிவரும் செயல்களில் துணைநிற்கவேண்டும் என்று மட்டும் கோருகிறேன்.
தமிழ்விக்கி 3 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி தினமணி இதழ் வெளியிட்ட நேர்காணல். நேர்காணலை எடுத்தவர் அருட்செல்வன்
தமிழ் விக்கி தொடங்க தூண்டுதலாக இருந்த குறிப்பிட்ட காரணம் உள்ளதா?
கலைக்களஞ்சியம் என்பது எந்த ஒரு மொழிக்கும் அடித்தளம் போன்றது. ஒரு பண்பாடு கலைக்களஞ்சியத்தால்தான் வரையறை செய்யப்படுகிறது. எய்தியவற்றை வரையறைசெய்து தொகுத்துக்கொண்டுதான் மேற்கொண்டு எய்தவிருப்பதைப் பற்றி யோசிக்கமுடியும். ஒன்றை புதிதாக யோசிக்கத் தொடங்கும்போது முன்பு எதுவரை யோசிக்கப்பட்டது என்று அறிந்தால்தான் அந்த யோசனைகளுக்கு ஏதேனும் பொருளிருக்கமுடியும். அதற்காகவே கலைக்களஞ்சியங்கள் தேவையாகின்றன.
உலகின் எல்லா படைப்பூக்கம் கொண்ட மொழிகளிலும் மகத்தான கலைக்களஞ்சியங்கள் உண்டு. எந்த ஓர் ஆய்வேட்டிலும், எந்த ஒரு கட்டுரையிலும் கலைக்களஞ்சியத்தை பார்த்து தேவையான குறிப்புகளை அளித்தல் மரபு.
தமிழில் நிகண்டுக்கள் போன்ற தொன்மையான கலைக்களஞ்சியங்கள் இருந்தன. நவீனக் கல்வியும் அச்சும் வந்தபின் உருவான இடைப்பட்ட கலைக்களஞ்சியம் என்றால் ஆ.சிங்காரவேலு முதலியாரின அபிதான சிந்தாமணியைச் சொல்லலாம். ஆனால் தமிழில் முதல் நவீனக்கலைக்களஞ்சியம் பெரியசாமித் தூரன் தொகுத்ததுதான். இன்னமும்கூட அக்கலைக்களஞ்சியத்திற்கு பின் முழுமையான அடுத்த பதிப்பு வரவில்லை
இந்த இணையச்சூழலில் இணையக்கலைக்களஞ்சியங்கள் தேவையாகின்றன. தேடும் தலைப்பில் உடனடியாக நாம் செய்திகளைப் பார்க்க அவையே உதவியானவை. அப்படி இணையத்தில் உருவான கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா. அதன் தமிழ்வடிவமும் உள்ளது. ஆனால் அதிலுள்ள பிரச்சினை எவர் வேண்டுமென்றாலும் செய்திகளை அளிக்கலாம், எவர் வேண்டுமென்றாலும் செய்திகளை மாற்றலாம், விருப்பப்படிச் சுருக்கலாம் என்பதுதான்.
ஆகவே செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை. அத்துடன் எந்த தகுதியுமில்லாதவர்கள் அறிஞர்கள் உருவாக்கும் பதிவுகளை தங்கள் அரசியல் நோக்கங்கள் மற்றும் காழ்ப்புகளுக்கு ஏற்க திருத்தவும் அழிக்கவும் செய்தனர்.
ஒரு குழுவாகச் சிலர் செயல்பட்டால் விக்கிப்பீடியா போன்ற இணையப் பொதுக்கலைக்களைஞ்சியத்தை கைப்பற்றிவிடமுடியும். இன்றைய காலகட்டத்தில் செல்லுபடியாகாத அசட்டு மொழிப்பழமைவாதத்தை நம்பும் சிலர் விக்கிப்பீடியாவின் பதிவுகளை விருப்பப்படி திருத்திக்கொண்டிருக்கிறார்கள். பெயர்களைக்கூட மாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தனித்தமிழிலும் எந்தப் பயிற்சியும் இல்லை. ஆகவே சமகால மொழியும் இல்லாமல், பிழையான ஒரு செயற்கைமொழியில் விக்கிப்பீடியா அமைந்துள்ளது.
அந்தச் சிறு குழுவுடன் போராடிப்பார்த்தோம். முடியவில்லை. உருவாக்குவது கடினம், அழிப்பது மிக எளிது. ஆகவே நாங்களே தமிழ்விக்கியை தொடங்கினோம்.
தமிழ்விக்கி அறிஞர்களால் வழிநடத்தப்படுவது. தகுதியானவர்களால் மட்டுமே பதிவுகள் போடப்படுகின்றன. அவை தொடர்ச்சியாகச் சரிபார்க்கப்படுகின்றன. இப்படி அறிஞர்களின் முயற்சியால் நிகழும் இணையக்கலைக்களஞ்சியம் இந்தியாவில் வேறில்லை.
இந்த மாபெரும் முயற்சியில் எத்தனை பேர் பங்காற்றுகிறார்கள்?
ஏறத்தாழ நூறுபேர் பங்களிப்பாற்றுகின்றனர். பத்துபேர் ஒவ்வொருநாளும் பங்களிப்பாற்றுகின்றனர்.
இதில் உண்மைத் தன்மையை மதிப்பிட நீங்கள் பின்பற்றும் அளவுகோல் என்ன?
நாங்கள் இப்போது இலக்கியம், பண்பாடு சார்ந்த தளங்களையே மையப்படுத்துகிறோம். இந்த தளத்திலுள்ள முதன்மை அறிஞர்களின் ஒரு குழு ஆசிரியர் பொறுப்பில் உள்ளது. அத்துடன் பங்கேற்பாளர்கள் அனைவருமே சரிபார்ப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். தரவுகளை எவர் திருத்தி அனுப்பினாலும் அவற்றைச் சரிபார்த்து பதிவுகளை சரிசெய்துகொள்கிறோம்.
இணையக்கலைக்களஞ்சியம் என்பதன் நல்லபக்கம் என்னவென்றால் அது முடிவடைவதே இல்லை, திருத்திக்கொண்டே இருக்கலாம் என்பதுதான்.
தமிழ் விக்கிக்கான வரையறுக்கப்பட்ட முக்கியமான கொள்கை என்ன?
கலை, இலக்கியம், பண்பாடு தளங்களில் முழுமையான செய்திகளை அளிப்பது முதல் நோக்கம். அத்துடன் மிகத்திட்டமிட்டு ஒரு பதிவுடன் அதற்கு தொடபுள்ள பிற பதிவுகளை இணைக்கிறோம். நீங்கள் ஒரு பதிவை வாசித்தால் தொடர்புக்கண்ணிகள் வழியாக பல பதிவுகளை வாசிக்கலாம். அது அறிஞர்கள் உருவாக்கிய ஒரு நூல் போன்றது. வட்டுக்கோட்டை குருமடம் என்றும் பதிவை பாருங்கள், தொடச்சியாக ஐநூறு பக்க அளவுக்கு நீங்கள் வாசிக்கமுடியும்
விக்கிபீடியா போன்ற ஆசிரியர்கள் என எவரும் இல்லாத கலைக்களஞ்சியங்களில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அங்கே அளவீடுகள், மதிப்பீடுகள் இருக்காது என்பதுதான். யாரென்றே தெரியாத ஒருவர் பற்றி ஆகா ஓகோ என ஒரு பதிவு இருக்கும். பலசமயம் அவரே போட்டுக்கொண்டதாக இருக்கும். அதேசமயம் மிக முக்கியமானவர்கள் பற்றி சாதாரணமான ஒரு பதிவு இருக்கும். இருவரையுமே தெரியாத புதியதலைமுறை வாசகர்களுக்கு பிழையான வரலாறு சென்று சேரும்.
இது வருந்தலைமுறைக்கு நாம் இழைக்கும் மிகப்பெரிய பிழையாக அமைந்துவிடும் என நினைத்தோம். எங்கள் கலைக்களஞ்சியத்தில் மதிப்பீடு இருக்கும். பதிவின் தரவுகளின் அடிப்படையிலேயே அதை உணரமுடியும். சுருக்கமான மதிப்பீடும் அளிக்கப்பட்டிருக்கும்.
அது எங்கள் ஆசிரியர்குழுவின் மதிப்பீடு. அது இங்கே பொதுவாக ஏற்கனவே அறிவுச்சூழலில் ஏற்கப்பட்டுள்ள மதிப்பீடாகவே இருக்கும். அறிவுச்சூழலில் உண்மையில் ஈடுபட்டிருக்கும் அறிஞர்களாலேயே அதை உருவாக்கமுடியும். அதுவே எங்களுடைய தனிப்பங்களிப்பு. ஆசிரியர்குழு உள்ள கலைக்களஞ்சியமே அதைச்செய்யமுடியும். எங்கள் கலைக்களஞ்சியத்தில் எல்லா பதிவுகளுக்கும் பொதுவான ஒரு கொள்கையும் அளவுகோலும் இருக்கும்
நாங்கள் செய்வது எவ்வளவு முக்கியமான பணி என இன்று செயற்கை நுண்ணறிவு வந்தபின் மேலும் தெரிய ஆரம்பித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரத்தனமானது. இணையத்தில் ஓர் அறிஞரை விரிவாகப் பதிவுசெய்து, அவருடைய இடத்தையும் வரையறை செய்யாவிட்டால் அவர் மறைந்துபோய்விடுவார். தகுதியே அற்ற ஒருவர் அவராலோ பிறராலோ நிறைய புகழப்பட்டிருந்தால் செயற்கை நுண்ணறிவு அவரை கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு முன் நிறுத்திவிடும்.
தொடங்கும் முன் சந்தித்த தடைகள்,தொடங்கிய பின் கிடைத்த பெருமைகள் பற்றிச் சொல்ல முடியுமா?
எந்தப்பெருஞ்செயலுக்கும் தொடக்கத்தில் எதிர்ப்பும் வசைகளும் அவதூறுகளும்தான் இருக்கும். சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி உருவாக்கும்போதும் சரி, பெரியசாமித்தூரன் கலைக்களஞ்சியம் உருவாக்கும்போதும் சரி, இதைவிட பல மடங்கு எதிர்ப்பையும் காழ்ப்பையுமே சந்தித்தனர். சொல்லப்போனால் அவர்கள் வாழ்நாளில் எந்த அங்கீகாரத்தையும் பெறவுமில்லை, வசைகளையே பெற்றனர். அவர்கள் மறைந்த பின்னர்தான் அந்த முன்னோடிப்பணி அடையாளம் காணப்பட்டது.
ஏன் எதிர்ப்பு? ஒன்று ஒரு பெரிய பணி சாமானியர்களை மேலும் சாமானியர்களாக காட்டுகிறது. ஆகவே அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. இரண்டு, இங்கே ஒவ்வொருவரு சாதாரண ஆளுமைக்கும் பிடிக்காத ஒன்று என்பது மதிப்பீடுதான். புகழ்மாலைகள் மட்டும்தான் சாமானியமானவர்களுக்கு வேண்டும். பொய்யாக புகழ்ந்துகொண்டே இருப்பது நம் மரபும்கூட. இங்கே ஓர் அறிஞர்குழு பிறரை மதிப்பிட்டுச் சொல்ல ஆரம்பித்தாலே பீதியாகிறார்கள்.
தமிழ்விக்கியை முடக்க பலர் முயன்றனர். நாங்கள் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் தமிழ்விக்கியை 2022ல் தொடங்கியபோது அந்நிகழ்ச்சியை திட்டமிட்டு நிறுத்தினார்கள். எங்கள் மேல் அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் நாங்கள் செயலில் உறுதியாக இருந்தோம். அதுவே வென்றது.
இன்று தமிழ்விக்கியின் இடம் ஐயத்திற்கிடமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. ஆய்வேடுகளும், செய்திகளுமெல்லாம் எங்கள் கலைக்களஞ்சியத்தைச் சார்ந்தே உருவாக்கப்படுகின்றன. மிகமிக விரிவான பதிவுகளை அறிஞர்களும் வாசகர்களும் போற்றுகின்றனர். இளையதலைமுறைப் படைப்பாளிகள் பற்றி இருக்கும் ஒரே பதிவு அனேகமாக தமிழ்விக்கியாகவே இருக்கும்
இதுவரை பதிவான பதிவுகள் எண்ணிக்கை பற்றிக் கூற முடியுமா?
வெளிவந்த பதிவுகள் அளவுக்கே சரிபார்ப்பிலும் பக்கங்கள் உள்ளன. பத்தாயிரம் பதிவை கடந்துள்ளோம்.
இது ஒரு அதிகார முயற்சியா ?
சரி, அதிகாரநோக்கம் இல்லாத செயல்பாடு எது? அதிகார நோக்கமே இல்லாதவர் என்றால் கோயில்திண்ணைகளில் படுத்திருக்கும் ஆண்டிகள் மட்டுமே.
எந்த அறிவுச்செயல்பாடும் அறிவதிகாரத்தையே உருவாக்குகிறது. நாங்கள் தமிழ்ச்சூழலில் ஒரு நேர்நிலையான, ஆக்கபூர்வமான செல்வாக்கை உருவாக்க நினைக்கிறோம்.
இப்படிப் பாருங்கள். பொருட்படுத்தும்படி ஒரு நூல்கூட எழுதாமல், உயர்பதவிகளில் இருந்த ஒருவர் அனைவருக்கும் தெரிந்தவராக இருக்கிறார். நாங்கள் இந்தப்பக்கம் மாபெரும் ஆய்வாளர்களான குடவாயில் பாலசுப்ரமணியத்தை, அ.கா.பெருமாளை முன்வைக்கிறோம். இது அறிவதிகாரம்தானே?
தமிழ்ப்பண்பாட்டில் நிகழ்ந்த ஒரு சாதனை எவருக்கும் தெரியாமலேயே உள்ளது, அதை தெரியவைக்கிறோம். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதியைப் பற்றிய பதிவு ஓர் உதாரணம். தமிழ்வரலாற்றில் அறியப்படாத ஒன்றை விரிவாக பதிவுசெய்கிறோம். சயாம் மரணரயில் பற்றிய தொடர்பதிவுகள் உதாரணம். இதன்வழியாக நாங்கள் அறிவுசார்ந்த ஒன்றை நிறுவத்தானே முயல்கிறோம்.
அப்படிப்பார்த்தால் உ.வே.சாமிநாதையர் செய்ததும் பெரியசாமித் தூரன் செய்ததும் அறிவதிகார முயற்சியே. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரும், தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கம் நிறுவிய உமாமகேஸ்வரனாரும் அறிவதிகாரத்தை உருவாக்கியவர்கள்தான். எங்க நோக்கம் அதேபோன்ற உண்மையான அறிவியக்கத்தை உருவாக்குவதுதான். விளைவுகள் காலத்தின் கையில்.
பேட்டி அருள்செல்வன்
நன்றி தினமணி
நாறும்பூநாதன், தமிழ்விக்கி தமிழ்விக்கி, வெள்ளைவாரணனார்- கடிதம் தமிழ்விக்கி, கிறிஸ்தவம் – கடிதம் தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ் விக்கிக்கு ஒரு வாழ்த்து! தமிழ்விக்கி,தகவல்களின் உரிமைசி.பி.சிற்றரசும் தமிழ்விக்கியும்
காவியங்கள், தமிழ் விக்கி, கடிதங்கள்
தமிழ் விக்கி, கிறிஸ்தவர்கள்,ஆபிரகாம் பண்டிதர் -கடிதம்
தமிழ் விக்கி பங்களிப்பு, கடிதம்
தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும்
தமிழ் விக்கி வம்புகள்- கடிதங்கள்
தமிழ் விக்கி, இளைஞர்கள்-கடிதம்
தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?
தமிழ் விக்கி, கமல் வாழ்த்துச்செய்தி
தமிழ் விக்கி, தாவரவியல் அகராதி

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers