Jeyamohan's Blog, page 113

May 10, 2025

மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்

[image error] வெள்ளி காலை முதல் வகுப்பு.ஆசிரியர் ஜெயக்குமாருக்கும் கர்நாடக இசை அறிமுகம் என்ற வகையில் இதுவே முதல் வகுப்பு. ஆலயக்கலை வகுப்புகள் பலவற்றை வெள்ளிமலையில் நடத்திவரும் அனுபவத்தினால்,சிறந்த முன் தயாரிப்போடு வந்திருந்தார்.

மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்

You are organizing bird-watching and plant-watching classes at your institution. I think your main motto is to teach philosophy and literature. What is the role of these classes in this curriculum? . I thought birdwatching was a hobby and plant watching was a practice related to science.

A royal gateway
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2025 11:30

May 9, 2025

ஜனநாயக மதிப்புயர்வு விழா உரை

பெருந்தலையூரில் நிகழ்ந்த ஜனநாயக மதிப்புயர்வு விழா 2024ல் ஆற்றிய உரை. பெருந்தலையூர் கிராமம் நினைவிருக்கலாம். ஒரு கிராமத்தையே வாக்குக்குப் பணம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கச் செய்து அதை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்களா என்று சோதனை செய்து அதை உறுதிப்படுத்திக்கொண்டபின் நிகழ்ந்த வெற்றிவிழா இது.

பெருந்தலையூர் வெற்றிவிழா ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர்  நேர்மைக்காக ஒரு நாள் விழா லஞ்சமில்லா தேர்தல் – கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 11:36

போதையின் படிநிலைகள்

எர்ணாகுளத்தில் நான் கண்ட ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று பாலங்களுக்கு அடியில், வெவ்வேறு மறைவிடங்களில் தூங்குபவர்கள். வேலைக்களைப்பால் அப்படி சென்னையில் கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையங்களில் தூங்குபவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தூங்குவதைப் பார்த்தாலே தெரியும். கைகால்களைப் பரப்பி, மேலிருந்து விழுந்தவர்களைப்போல கிடக்கிறார்கள். அதிலும் ஒதுங்க இடமிருந்தும்கூட மழையில் நனைந்தபடி கிடக்கிறார்கள். செருப்புகளும் உடைமைகளும் அங்கே சிதறிக்கிடக்கின்றன.

நின்று பார்க்கும் என்னிடம் ஒருவர் “போதை சார்” என்றார்

“குடியா?”

“குடி இப்படி விழவைக்காது. இது மற்றது”

“கஞ்சாவா?”

“சாருக்கு ஒண்ணுமே தெரியலை போல. கஞ்சா இப்டி தூக்கி வீசாது சார். இது கெமிக்கல்….இது எர்ணாகுளம். கொச்சி துறைமுகம் வழியாத்தான் மொத்த கேரளத்துக்குமே கெமிக்கல் வருது”

அன்றே நடக்கும்போது ஒரு தெருவின் முகப்பில் அந்த அறிவிப்பைப் பார்த்தேன். அந்த தெருவின் குடியிருப்போர் சங்கம் வைத்திருக்கும் பலகை. “இது ஒரு குடியிருப்புப் பகுதி. இங்கே போதைப்பொருட்கள் அனுமதி இல்லை. போதைப்பொருட்ளை பயன்படுத்திவிட்டு எவர் உள்ளே வந்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்று அதற்கென்றே ஒரு குழு உருவாக்கி அறிவித்திருக்கிறார்கள்.

எர்ணாகுளம் போதை மையம் என நான் ஒரு கட்டுரையில் சொன்னேன். (மஞ்சும்மல் பாய்ஸ்) அதற்கு பயங்கர எதிர்ப்பு— தமிழ்நாட்டில் இருந்து. ஆனால் அங்கே அமைசரே அதைச் சொன்னார். அந்த மொழியின் இயக்குநர்களும் நடிகர்களும் தொடர்ச்சியாக போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கும், விற்றதற்கும் கைதுசெய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கு நாகர்கோயிலிலேயே போதை நடமாட்டம் அதிகம் என்கிறார்கள். இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல. சமூகப்பிரச்சினை.

சென்ற இரண்டு தலைமுறைக்காலமாக குடி கட்டற்றுப் பெருகுகிறது கேரளத்திலும் தமிழ்நாட்டிலும். தமிழகக் கிராமங்களில் சாயங்காலம் ஆறு ஏழுமணிக்கு மேல் போதை இல்லாத ஒருவரை பொதுவெளியில் காண்பதே அரிது. ஒருமுறை வழிதவறி, வழி விசாரித்துச்செல்ல முயன்று, கிட்டத்தட்ட எட்டு பேரிடம் பேசினோம். எட்டுபேருமே போதை.

குடிபோதையின் அடுத்த படிநிலை கஞ்சா. அங்கிருந்து மாத்திரைகள். அந்த இயல்பான பரிணாமத்தை போலீஸோ அரசோ கட்டுப்படுத்திவிட முடியாது. முதலில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அரசே மதுவை விற்க ஆரம்பித்தது. இன்று அரசு மது விற்பனைக்கு இலக்கு வைத்து அதிகாரிகளைக் கொண்டு உச்சகட்ட பிரச்சாரம் செய்கிறது. சாதனை விற்பனை என மார்த்தட்டிக் கொள்கிறது. மதுவுக்கு எதிராக எவரேனும் பேசினால் அரசு நடவடிக்கை வரும். அரசாங்கத்தின் அல்லக்கைகளான அறிவுஜீவிகளின் தாக்குதலும் தொடரும். 

போதைப்பொருட்களை சட்டநடவடிக்கை வழியாக கட்டுப்படுத்தலாம், ஒழிக்கமுடியாது. அதற்குச் சமூகக் கண்காணிப்பே அவசியமானது. கேரளம் அதை நழுவவிட்டுவிட்டு இப்போது அரசை நம்பி பயனில்லை என ஆங்காங்கே சமூகக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கி கட்டுப்படுத்த முயல்கிறது. அங்கே பேசியபோது அத்தனை நடுத்தரவர்க்கக் குடும்பங்களிலும் தங்கள் குழந்தைகள் பற்றிய பீதி நிலவுவதை காணமுடிகிறது. தந்தை வெளிநாட்டில் இருக்கும் குடும்பங்களிலேயே குழந்தைகளிடம் போதைப்பழக்கங்கள் தொடங்கினவாம். தாயால் பையன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே இப்போது இப்படிப்பட்ட குழுக்களை ஆரம்பித்துள்ளனர். இவை ஒரு தெருவை, ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றை அஞ்சித்தான் ஆகவேண்டும். இந்த முயற்சி வெல்கிறதா என்று போகப்போகத்தான் தெரியும்.

எர்ணாகுளம் இரவு ஒன்பது மணிக்கே கிட்டத்தட்ட கடையை மூடிவிடுகிறது, காரணம் மிகப்பெரும்பாலான நாட்களில் இருக்கும் மழைதான். அதன்பின் போதையின் உலகம் தொடங்கிவிடுகிறது. எம்புரான் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியே வந்தபோது தெரிந்தது, என்னுடன் வந்த பல இளைஞர்கள் போதைநிலையில் இருந்தனர். மதுப்போதை அல்ல, மதுப்போதையில் தள்ளாட்டம் இருக்கும். இதில் தள்ளாட்டம் இல்லை. ஆனால் ஒரு வகையான கட்டற்ற நிலை இருந்தது. உதாரணமாக ஒருவன் ஒரு கைப்பிடியை பிடித்து வெறிகொண்டு அசைத்தபடியே சிரித்துக்கொண்டிருந்தான்.

போதைக்கு இணையாகவே கேரளத்து இளைஞர்களை போர்ன் ஆள்கிறது என்கிறார்கள். போதை – போர்ன் என்னும் இரண்டு சாத்தான்களால் ஆட்டிப்படைக்கப்படும் இளமை. திருவனந்தபுரமே இரவில் பாதுகாப்பானது அல்ல, சங்குமுகம் கடற்கரையில் போலீஸே இரவு எட்டு மணிக்கு அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுவார்கள். எர்ணாகுளம் அதன் வளர்ச்சி நிலை. மது தமிழகத்தையும் ஆட்கொண்டுவிட்டிருக்கிறது. நாம் செல்லவிருக்கும் திசை இதுதானா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 11:35

காவியம் – 19

சாதவாகனர் காலம், சுடுமண் சிற்பம், பொயு 1பகுதி 2: பலகோடிப் பாடல்கள்

பைத்தானில் எங்கள் குடியிருப்பு பகுதி ஒவ்வொரு ஆண்டும் கோதாவரியின் நீர் பெருகி வந்து அத்தனை குடிசைகளையும் அடித்துக்கொண்டு போகும் புழுதிமண் சரிவில் அமைந்திருந்தது. ஈரம்பட்டால் சேறாகிவிடும் மென்மணல்தான் அது. வெள்ளம் மெல்ல மெல்ல ஏறிவந்து முழுக்க மூடி அலைகொண்டுச் சுழித்துக் கடந்து சென்றபின் புதியதாக போடப்பட்ட எருமைக்கன்றுபோல அந்த மண் மீண்டு வரும். கருப்பையின் நிணநீர் மணத்துடன், நனைந்து ஒட்டிய மென்மயிர்பரப்பும், ஓர் இலை உதிர்ந்து விழுந்தால்கூட நலுங்கும் சேற்றுக் கதுப்புமாக.

நெடுங்காலமாகவே அங்கு ஒவ்வொரு வெள்ளம் முடிந்தபிறகும் புதிய குடிசைகள்தான் கட்டப்பட்டன. எங்களுக்கு கல்லையோ மண்ணையோ கொண்டு குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதியில்லை. கழிகளை மண்ணில் நேரடியாக நாட்டி, ஈச்சையோலை முடைந்த கீற்றுகளும், மூங்கில்தட்டிகளும் கொண்டுதான் நாங்கள் குடிசைகளைக் கட்டிக்கொள்ளவேண்டும். ஈட்சையோலையோ புல்லோதான் கூரையாக அமையவேண்டும். எங்கள் இல்லங்களை கூடு என்றுதான் நாங்கள் சொல்லவேண்டும். கரட்டே என்று சொல்வோம். எங்களை கூட்டில் வாழ்பவர்கள் என்னும் பொருளில் கரட்டேவாலா என்பார்கள்.

அதுவே ஒரு சிறப்பாக எங்களவர்களால் சொல்லிக்கொள்ளப்படும். கல்லிலும் மண்ணிலும் கட்டப்படும் வீடுகள் வானுக்கும் மண்ணுக்கும் எதிரானவை. தெய்வங்களுக்கு உவப்பற்றவை. கூடுகளே இயல்பானவை. பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் தெய்வங்கள் கற்றுத்தந்தவை. மற்றவர்களின் வீடுகள் தூய்மையற்றவை, அழுக்கு நிலைகொண்டவை என்று நாங்கள் சொல்வோம். எங்கள் குடிசைகள் ஒவ்வொரு ஆண்டும் கோதாவரியால் தூய்மை செய்யப்படுகின்றன. நாங்கள் அழுக்கானவர்கள், அழுக்கில் உழைப்பவர்கள் என்பதனால் கோதாவரி எங்களைத் தூய்மை செய்வதாக பிறர் சொன்னார்கள். அதை எங்கள் கிழவர்கள் எங்களிடம் திருப்பிச் சொன்னார்கள்.

எங்கள் குடில்களில் பொருட்கள் மிகக்குறைவு. மண்சட்டிகள், சில குடுவைகள் மட்டும்தான். கோதாவரிக்கரையில் மழைக்காலம் முடிந்தபின் தானாக முளைக்கும் பூசணி, சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை பறித்துவந்து நாங்களே உருவாக்கிக்கொள்ளும் மெல்லிய குடுவைகள் வலுவானவை. ஒரு பூசணிக்குடுவைக்குள் வைக்கும் அளவை விடக் கூடுதலாக எங்கள் மக்களில் எவரிடமும் தானியங்கள் இருப்பதில்லை. ஒரு குடுவைக்குள் சுருட்டி வைக்கும் அளவுக்கே மாற்று உடைகளும் இருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கி, கோதாவரியின் நீர் ஏறி ஏறி வரும்போது நாங்கள் எங்கள் குடிசைகளை கைவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் புகுந்து, எங்களுக்கென்று ஊரார் அளிக்கும் திறந்தவெளிப் பொட்டலில் சென்று தங்குவோம். பெரும்பாலான மழைக்காலத்தை குடை போன்ற ஈச்சை ஓலையால் அமைந்த பாய்ச்சுருளுக்குள்தான் கழிப்போம். சிலர் தட்டிகளால் குடில்போல ஒன்றை அமைத்துக்கொள்வதுண்டு. எங்கள் குடிகளில் மூத்த கிழவர்கள் அந்நாட்களைப் பற்றித்தான் நிறையவே பேசுவார்கள். அது நாள்முழுக்க மழையை வெறித்துக்கொண்டு, உடலைச்சுருட்டிக்கொண்டு, ஒடுங்கி அமர்ந்திருக்கும் காலம். இரவும் பகலும் உடலுக்குள் எரியும் பசியை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

மழைக்காலம் முழுக்க இரவும் பகலும் ஈரத்திலேயே இருப்போம். ஆனால் அப்போது எங்களுக்குத் தூய்மைப்பணிகள் இருக்காது. எங்காவது சாக்கடை அடைத்துக்கொண்டால் மட்டும் ஆண்கள் நீண்ட மூங்கில்களுடன் சென்று குத்தி எடுத்து விடுவார்கள். சிலசமயம் மூழ்கிச்சென்று தோண்டிவிடுவதும் உண்டு. நகரில் மழை எங்கள் பணியைச் செய்யும். மழை சீதளை அன்னையின் தாய். சீதளை என்றால் குளிர்ந்தவள். மழையே பெருங்குளிர்ட்டி. எங்களுக்கு மழையும் குளிரும் எதிரி அல்ல. எங்கள் குழந்தைகள் கூட கொட்டும் மழையிலேயே அமர்ந்திருக்கும். அதையும் எங்களை வானம் தூய்மை செய்யும் ஒரு செயலாகவே எங்கள் சாதிக் கிழவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.

மழை முடிந்து புதுவண்டல் படிந்து எங்கள் குடில்கள் இருந்த நிலம் வெளியே வரும்போது அங்கு சென்று முதலில் சீதளை அன்னையை ஒரு சப்பைக்கல் மேல் செங்குத்துக் கல்லாக நிறுவுவோம். ஈச்சையோலைக் குச்சியால் செய்யப்பட்ட சிறிய துடைப்பத்தை அந்த செங்குத்துக்கல்மேல் சாய்த்து வைத்து, சிறிய சிவப்புத்துணியை சுற்றி, குங்குமமும் மஞ்சளும் பூசிவிட்டால் அன்னை அதில் தோன்றிவிடுவாள். முழங்காலளவு சதுப்புச் சேற்றில் நின்றுகொண்டு மீண்டும் மூங்கில்களையும் கழிகளையும் ஊன்றி எங்கள் குடிசைகளை கட்டத்தொடங்குவோம்.

சேற்றில் சென்று தேவையான கழிகளைப் பொறுக்குவோம். காட்டிலிருந்து வரும் கழிகள் மேல்தோல் மட்கி வைரம் மட்டும் எஞ்சி வலுவானவையாக இருக்கும். சேற்றிலிருந்து பலவகையான நெற்றுகள் கிடைக்கும். சிலசமயம் வலுவான மான்கொம்புகளும் காட்டெருதின் கொம்புகளும் கிடைக்கும். சேற்றுடன் குவிந்திருக்கும் குப்பைகளுக்குள் மலையிறங்கி வந்த பாம்புகள் உண்டு. அவற்றின் கடிபட்டு சிலர் உயிரிழந்ததும் உண்டு.

சேறு உலர்ந்து மீண்டும் காற்றில்பறக்க தொடங்க பலநாட்களாகும். அதுவரை வீட்டுக்குள்ளும் சேறுதான். சேற்றின்மீதே ஈச்சையோலைப்பாய்களை விரித்து தரையை உண்டு பண்ணி அதில் கைக்குழந்தையிலிருந்து நடுங்கும் கிழவர்கள் வரை படுத்துத் தூங்குவோம். சேற்றுமணம் காற்றிலும் நீரிலும் இருக்கும். மூச்சே சேற்றுமணம் கொண்டிருக்கும். ஆனால் அப்போது பசி இருக்காது. சேற்றில் சிக்கிக்கொண்ட மீன்களைப் பிடிக்கலாம். சேற்றுப்பரப்பில் முளைக்கும் கீரைகளையும் பூசணிக்காய்களையும் உண்ணலாம். நகரெங்கும் படிந்த சேற்றையும் குப்பையையும் அள்ளுவதனால் வேலையும் இருக்கும்.

கோடைகாலம்தான் உண்மையில் எங்களுக்கு இனியது. கோடையில் ஔரங்காபாதில்தான் இந்தியாவிலேயே மிக உச்சகட்ட வெயில் அடிக்கும் என்பார்கள். பைத்தானில் கோதாவரி இருப்பதனால் காற்றில் நீராவி எழுந்து நிறைய உடலை உருகவைப்பதுபோன்ற வெக்கையும் உண்டு. மிகப்பெரிய உலை அடுப்பு ஒன்றின் அருகே நெருங்கி அமர்வது போலிருக்கிறது என்று ஒருமுறை புதிதாக அங்கே மாற்றலாகி வந்த ஆசிரியர் ஒருவர் சொன்னார். உண்மையில் காலையில் கோதாவரியின் மென்மையான குளிர்காற்று இனிதாகவே இருக்கும். பத்து மணிக்குமேல் தான் வெண்ணிறநெருப்பு போல வெயில் பொழிந்து, ஒரு சுவர்போல கண்களை மறைத்து திடமாக நின்றிருக்கும்.

ஆனால் எங்களுக்கு வெயில் ஒரு பொருட்டே அல்ல. மேலும் நாங்கள் வெயிலில் வேலை செய்வதுமில்லை. எங்கள் வேலைகள் பகல் பத்து மணிக்குள் முடிந்துவிடும். அதன்பின் ஈச்சமர நிழல்களிலும் பாய்கட்டி சரிக்கப்பட்ட சிறு நிழல்பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக எங்கள் ஆண்கள் அமர்ந்திருப்பார்கள். ஈச்சங்கள்ளையும், தாங்களே வடித்துக்கொண்ட சாராயத்தையும் குடித்துக் கொண்டு சுருண்டு படுத்துக் கிடப்பார்கள்.

காலை முதிர்ந்து, வெயில் ஏறஏற ஓசைகள் அடங்கிக்கொண்டே வரும். பறவைகளின் ஓசைகள் இல்லாமல் ஆகும்போது கோதாவரிக்கரை அத்தனை அமைதியாகிவிடும். மெலிந்த நீர்ப்பெருக்கு பாறைகளையும் மணல் திட்டுகளையும் அரித்தபடி செல்லும் ஓசை கேட்கும். ஆற்றில் மீன் குதிக்கும் ஓசைகூட கேட்கும் என்று சொல்வார்கள்.  நல்ல சுவையான கள் கிடைக்கும் காலமும் கூட .இப்பகுதியில் ஈச்சமரக்கள் இனிப்பாகவும், நாக்கை சற்று எரிப்பதாகவும், குடித்து முடித்தபின் மெல்லிய ஆவியும் புளிப்புமாக நெஞ்சில் இருந்து கிளம்பி வந்து மூக்கை நிறைப்பதாகவும் இருக்கும். அதில் எங்கள் சாதியின் ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே ஒரு பெரும் ஈடுபாடு உண்டு. என் அம்மா ஈச்சங்கள் வாங்கி சமையலறைக்குள்ளேயே வைக்கோல் நிரப்பப்பட்ட சிறுபெட்டியில் எப்போதும் வைத்திருப்பாள். ஒவ்வொரு நாளும் அந்தியில் ஆற்றில் குளித்துவிட்டு வந்து அதை ஊற்றி குடித்துவிட்டு தூங்குவாள். எனக்கு அதில் பெரிய ஈடுபாடு வந்தது கிடையாது. அதில் குமட்டி வரும் அந்த நெடியை நான் விரும்பியதில்லை.

கோதாவரி எங்களால் அன்னை என்றும் அருள்பவள் என்று கருதப்படவில்லை. அதன் கரையில் நாங்கள் வாழ்கிறோம் என்பதன்றி அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. கோதாவரியில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நாங்கள் குளிக்க முடியும். நாங்கள் குளிக்கும் இடங்களுக்குப் பிறர் வரமாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் பன்னிரண்டு மாதமும் கோதாவரிக்கு வெவ்வேறு சாதியினர் பூசைகள் செய்வதுண்டு. நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் மேளதாளங்களுடன் கிளம்பி வருவார்கள். மலர்களும் கனிகளும் நிரப்பிய தட்டுகளையும், குங்குமப் பேழைகளையும், பூஜைசெய்த பொருட்களையும் ஏந்தியபடி வண்ண ஆடைகள் அணிந்த பெண்களும், தலைப்பாகைகளும் தொப்பிகளும் அணிந்த ஆண்களும், உற்சாகமான குழந்தைகளும் வரிசையாக செல்வார்கள். நீரில் ஒரு மலர்மாலை மிதந்து போவது போல எங்கள் சரிவிலிருந்து பார்த்தால் அப்பால் அவர்கள் வளைந்து ஆற்றை நோக்கி செல்வது தெரியும்.

அவர்கள் முழக்கி வரும் முழவுகளும் சிறிய மத்தளங்களும் எழுப்பும் ஓசை  காற்றில் கலைந்து கலைந்து எங்களை வந்தடையும். மத்தளமும் மணியோசையும் இணைந்த அந்தத் தாளம் எப்போதும் ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒலிப்பது போலிருக்கும். ஆற்றின் அகலம் மிக அதிகம். நீர்ப்பரப்பின் விளிம்பில் நிற்பவர்கள் கரையில் இருந்து பார்த்தால் ஒரு சாண் உயரமான பொம்மைகள் போலத்தான் தெரிவார்கள். அங்கிருந்து பார்த்தால் நீர்ப்பரப்பு மிகச்சிறியதாகத் தெரியும், அதன்மேல் ஒழுகிச்செல்லும் படகுகள் சிறிய நெற்றுகள் என்று தோன்றும். அங்கிருந்து கரைநோக்கிச் சுழன்றடிக்கும் காற்றின் அலைப்பின் சிதறுண்ட தாளம்.  ஆண்களும் பெண்களும் இணைந்து பாடும்போது வரும் ஒருவகையான முழக்கம். அவர்கள் அங்கே வழிபாடாக என்னதான் செய்கிறார்கள் என்று தொலைவிலிருந்து பார்த்தால் தெரியாது. நாங்கள் அருகே சென்றால் அவர்களுக்குத் தீட்டு, அடிவிழும் என சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

அவர்கள் ஆற்றில் மலர்களையும் கனிகளையும் கொட்டிவிட்டுச் செல்வார்கள். அந்தக் கனிகள் மிதந்து எங்கள் சுடுகாட்டுப் படித்துறையை அடையும்போது சிறுவர்கள் நீரில் பாய்ந்து  நீந்திச் சென்று அவற்றைப் பிடித்து கொண்டு வருவார்கள். கரைநோக்கி நீந்தி வரும்போதே கடித்துச் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். இல்லையேல் கரையேறியதுமே அங்கு நிற்கும் பெண்கள் அவற்றை அடித்து பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் ஆரஞ்சு, சப்போட்டா பழம், மாம்பழம். இதற்கப்பால் ஒவ்வொரு நாளும் நீத்தார்க் கடன் கழிப்பதற்காக ஏராளமான சிறு குழுக்கள் கோதாவரிக்கு வந்துகொண்டிருந்தன. அவர்கள் எலும்புகளுடன் வெவ்வேறு சிறு துணி  முடிச்சுகளையும் நீரில் வீசிவிட்டு செல்வார்கள். ஏக்நாத் ஆலயத்திலிருந்து நெடுந்தொலைவிற்கு நீர்க்கடன்களைக் கழிப்பதற்கான படித்துறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

எங்கள் நீர்க்கடன்கள் எதுவும் கோதாவரியில் செய்யப்படுவதில்லை. எங்கள் உடல்கள் எரிக்கப்பட்டதும் எலும்புகளை அப்படியே அள்ளி சற்று அப்பால் சிறு குழியில் புதைத்துவிடுவதுதான் வழக்கம். கோதாவரியின் கரைப்புழுதிக்குள் புதைந்த எலும்புகள் மேலெழுந்து கால்களில் உறுத்தும். பல்லிளித்தபடி மூதாதையரின் மண்டையோடுகள் அகப்படும். அவற்றை கையில் எடுத்து மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவோம். சிலசமயம் இரவில் ரகசியமாகக் கொண்டுசென்று உயர்சாதியினர் குளிக்கும் படித்துறையில் வைத்துவிட்டு வந்துவிடுவோம். அதன்பின் பலநாட்கள் அங்கே ஒரே ரகளையாக இருக்கும். பேயோட்டும் சடங்குகள் நிகழும். அதன்பின் தூய்மைச்சடங்குகளை ஒவ்வொரு சாதியினரும் தனித்தனியாகச் செய்வார்கள்.

கோதாவரி எங்கள் கிழவர்களின் பேச்சில் சீற்றம் கொண்ட ஒருமிகப்பெரிய நாகம் என்றே வெளிப்படும். அது ஆண்டு முழுக்கத் தூங்குகிறது. பசிக்கும்போது சீறிப்பெருத்து படம் எடுக்கிறது.அதன் இருகரைகளிலும் வாழும் நாங்கள் அதன் சுற்றுப் பிடிக்கு ஆளாகிறோம். இறுக்கி நொறுக்கப்படுகிறோம். மீண்டும் அது எங்களை விடுவிக்கிறது. அதன்  அருகே எளிதில் உடைந்துவிடும் முட்டைகள் போல் எங்கள் சிறு குடில்கள். அது மெலிந்து மீண்டும் தூக்கத்திற்கு ஆளாகும்போது நாங்கள் மீண்டும் அருகே வந்து அதன் கவனத்தை கலைக்காமல் வாழ வேண்டியிருக்கிறது.

கோதாவரியை எங்கள் சாதியினர் அஞ்சினார்கள். சற்று வெறுத்தார்கள் என்று கூட சொல்லலாம். அதில் மீன் பிடிப்பதற்கு கூட எங்களுக்கு உரிமை இருக்கவில்லை. மீன்பிடிப்பதற்கு உரிமையுள்ள சாதியினர் நாங்கள் அதில் தூண்டில் இடுகிறோமா என்பதை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதோ ஒருவர் ஒரு மீனைப் பிடித்து விடுவார். அதை அவர்கள் எப்படியோ அறிந்துகொள்வார்கள். அதன்பிறகு எங்களுக்கும் அவர்களுக்கும் வாய்ச்சண்டை நடக்கும். எங்களுக்குத்தான்  அடிவிழும். எங்கள் மக்கள் எந்நிலையிலும் திருப்பி அடிக்க மாட்டார்கள். அடிவாங்கும்போது வசைகளைக்கூட மூச்சுக்குள்தான் முனகிக்கொள்வார்கள். பெரும்பாலும் சம்மந்தப்படாத சிலர் அடிவாங்குவார்கள். எங்களை எவர் தாக்கினாலும் நாங்கள் பெரிய மடத்திற்கு சென்று அதைப்பற்றி முறையிடவேண்டும். இனிமேல் தாக்க வேண்டாம், எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானது என்பதுதான் எப்போதுமே மடத்தில் அளிக்கும் தீர்ப்பாக அமையும்.

நான் பிறப்பதற்கு முன்னரே பைத்தானில் ஜெய்க்வாட் அணை கட்டப்பட்டுவிட்டது. கோதாவரி அதன் அச்சுறுத்தும் சீற்றத்தை பெருமளவு இழந்தது. வெள்ளம் வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை என ஆயிற்று. என் நினைவில் நான்கு முறை மட்டுமே இல்லங்களை விட்டுவிட்டு நாங்கள் வெளியேறும் அளவுக்கு வெள்ளம் வந்தது. அப்போது என் அப்பா ராணுவத்தில் இருந்தார். நானும் அம்மாவும் கிளம்பி எங்கள் சாதியினர் குடியிருந்த இடத்திற்குச் சென்றோம். அங்கே அணைக்கட்டுக்கான ஒப்பந்தக்காரர் அவருடைய பொருட்களை வைப்பதற்காக தகரக்கூரை போட்டு கட்டியிருந்த பெரிய கொட்டகையில் அத்தனைபேரும் ஒண்டிக்கொண்டோம். எனக்கு அது மகிழ்ச்சியான காலமாக இருந்தது. பள்ளி இல்லை. அத்தனைபேரும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தோம். ஒவ்வொரு நாளும் அங்கே புதியதாக ஏதேனும் நிகழ்ந்தது.

ஜெய்க்வாட் அணை நெடுந்தொலைவில் எங்கோ வருகிறது என்றுதான் முதலில் சொன்னார்களாம். பின்னர் அது நகர்ந்து நகர்ந்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மேலேயே வந்தது. எங்களூர்க்காரரான எஸ்.பி.சவானின் தனிப்பட்ட சாதனை அது என்று சொன்னார்கள். வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான உழைப்பாளிகள் அங்கே குடியேறினார்கள். அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவர்களுக்கான வணிகர்கள் வந்து கடைகளை அமைத்தனர். உணவகங்களும், சிறிய கோயில்களும் உருவாயின. எங்களூரில் பலர் செல்வந்தர்களானார்கள். பல செல்வந்தர்கள் ஊருக்குள் வந்து மையப்பகுதிகளில் பெரிய வீடுகளையும் கடைகளையும் கட்டிக்கொண்டனர். ஊர் ஒவ்வொரு நாளும் என மாறத்தொடங்கியது.

எங்கள் ஊர்க்காரர்களும் உடலுழைப்பு வேலைக்கு போகத் தலைப்பட்டனர். எங்கள் குடிசைப்பகுதிகளில் நாங்கள் செங்கல்லும் கல்லும் அடுக்கி உறுதியான சிறு வீடுகளைக் கட்டத்தொடங்கினோம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு குடிசை அளவுக்கே இடம் இருந்தது. சிலசமயம் அந்த இடமும் பல சகோதரர்களால்  பங்கிடப்பட்டது. ஆகவே ஒரு குடிலுக்கும் இன்னொரு குடிலுக்குமிடையே ஒருவர் நடந்து போகும் அளவுக்கு சிறிய பாதை மட்டுமே இருந்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் கழிவு நீர் அந்த இடைவெளி வழியாகத்தான் வழிந்து கோதாவரிக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆகவே எல்லா ஊடுபாதைகளுமே கழிவு நீர் ஓடைகளும் கூடத்தான். அவற்றுக்கு மேல் கற்களைத் தூக்கிப்போட்டு கால் ஊன்றி நடக்க வழி செய்திருந்தார்கள்.

பின்னர் அந்த சிறு வீடுகள் எல்லாம் கான்க்ரீட் பெட்டிகள் போல மாறின. அந்தச் சாக்கடைகளுக்கு மேல் கான்கிரீட் பலகைகளைப்போட்டு பாதை போல மாற்றினார்கள். ஆயினும் பல இடங்களில் சாக்கடை தேங்கி கான்கிரீட் பலகைகள் உடைந்து கரிய கழிவுநீர் மேலெழுந்து வழிந்தோடுவது வழக்கம். சாக்கடைகள் வழியாகவே நடமாடவேண்டும். சாக்கடைகளை மிதிக்காமல் நடக்கவே முடியாது. குழந்தைகள் முழங்காலளவு சாக்கடையில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கும்.

இளமையில் ஒரு முறை நான் அந்தக் கான்கிரீட் பலகைகளின் மேல் விளையாடிக் கொண்டிருந்தபோதுன் அதன் ஒரு பகுதி இறங்கி இன்னொரு பகுதி மேலெழுந்து என்னை உள்ளே தள்ளிவிட்டது. என்னை ஒரு கை அள்ளி உள்ளிழுத்துக்கொண்டது போலத்தான் நான் உணர்ந்தேன். கரிய சாக்கடைநீர் வழிந்தோடும் இருண்ட குகைவழியினூடாக நான் வழுக்கியும், ஆங்காங்கே தங்கி நின்று நீரால் இழுக்கப்பட்டும் சென்றுகொண்டே இருந்தேன். நீட்டி நின்றிருந்த கற்களைப் பிடிக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அழவேண்டும் என்றும்கூட தோன்றவில்லை.

அந்தச் சாக்கடை பெரிய சாக்கடையைச் சென்றடைந்து இரண்டடி ஆழத்தில் அருவிபோல வளைந்து கொட்டியது. அதன் வழியாக வந்து வெயிலில் வற்றி நொதித்துப் போயிருந்த கரிய மலினக்குழம்பில் நான் விழுந்து மூழ்கினேன். ஆனால் அப்பகுதியில் சைக்கிளில் சாய்ந்து நின்றிருந்த இருவரில் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டார். அவர் அப்படியே குதித்து என்னை தூக்கி தலைமேல் எடுத்து கரையில் வீசிவிட்டார். நான் பிழைத்துக்கொண்டேன்.

என் அம்மாவை ஊரிலுள்ள அனைவரும் வசைபாடினார்கள். ஒன்றரை வயது குழந்தையை அப்படி வெளியே விட்டதற்காக. ஆனால் எல்லா குழந்தைகளும் அங்கேதான் விளையாடிக்கொண்டிருந்தன. எல்லா குழந்தைகளுக்கு மூத்த உடன்பிறப்புகள் இருந்தன. அக்காக்கள் தம்பிகளுடனும் தங்கைகளுடனும்தான் எப்போதும் இருந்தனர். என் வீட்டில் மட்டும்தான் ஒரே குழந்தை. அதுவே என் அம்மாவுக்கு வசைகளையும் அவமதிப்புகளையும் பெற்றுத்தந்தது. ”இவன் செத்துப்போனால் என்ன செய்வாய்?” என்று ஒவ்வொரு முறையும் எவரோ அம்மாவிடம் கேட்பார்கள்.

சீதளை அன்னையின் அருள் இல்லாததனால்தான் எனக்குப்பின் குழந்தை பிறக்கவில்லை என்று ஊரில் சொல்லப்பட்டது. ஆனால் ஒரு முறை என் அம்மா சொன்னாள், அவளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள பயம் என்று. அதனால்தான் குழந்தை பிறக்கவில்லை. நான் என் அம்மாவின் வயிற்றிலிருந்து எளிதில் வெளிவரவில்லை. நான்குநாள் கடும் பேற்றுநோவில் என் அம்மா துடித்தாள். அன்றெல்லாம் ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழக்கம் இல்லை. பேறு எடுக்க வந்த கிழவி வெளியே நீட்டிய என் காலைப்பிடித்து முரட்டுத்தனமாக இழுத்து வெளியே எடுத்துவிட்டாள்.

வலி தாளாமல் என் அம்மா அலறியபடி மயங்கிவிட்டாள். ஏழுநாட்கள் கடும் காய்ச்சலில் நினைவிழந்து கிடந்த அவள் விழித்துக்கொண்டபோது நான் அருகே கிடந்தேன். என்னை திரும்பிப் பார்த்த அவள் வெறுப்புடன் உந்தி விலக்கினாள். என்னை மீண்டும் பார்க்கக்கூட அவளுக்கு விருப்பம் இல்லை. எனக்குப் பால்கொடுக்க மறுத்துவிட்டாள். நான் அலறிக்கொண்டே இருந்தேன். பத்துநாட்கள் ஊரில் வேறு எவரோதான் எனக்குப் பால் தந்தனர். என் அம்மாவின் முலையில் பால் கட்டியபிறகுதான் அவள் எனக்குப் பால்தர சம்மதித்தாள். அந்த விலக்கம் அம்மாவுக்கு இறுதிவரை இருந்தது.

என் அப்பா அதே கழிவுநீரோடையில் மட்கிய துணி சேற்றில் புடைத்திருப்பதுபோல முக்கால் பங்கு மூழ்கி குப்புறக் கிடப்பதை நான் கரையில் நின்று பார்த்துக் கொண்டு நின்றபோது நான் அங்கே அப்படிக் கிடப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு நான் அந்த இருண்ட குறுகிய பாதை வழியாக ஒழுகிச்சென்ற நினைவு நன்றாகவே இருந்தது. திரும்பத் திரும்ப அது என் கனவில் வந்து என்னை நடுங்கச் செய்துகொண்டிருந்தது.

அப்பாவை அந்தச் சாக்கடையில் இருந்து ஒரு பெரிய கிழங்கு போல பெயர்த்து எடுத்தபோது உருவான அந்தப் பள்ளத்தில் கரியநீர் ஊறிவிழுந்து நிறைந்துகொண்டிருந்தபோது நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் நின்றிருந்த நிலம் கரைந்து இடிந்து அந்தக்குழிக்குள் விழுந்து நான் அதில் மூழ்கிவிடுவேன் என்பதுபோல தோன்றியது. அது ஒரு பிசாசின் பசித்த வாய் போன்று இருந்தது. என் வாழ்நாளெல்லாம் அதிலிருந்து தப்புவதற்காகத்தான் போராடிக்கொண்டிருந்தேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 11:33

ஆர்.வி. ரமணி

[image error]இந்திய ஆவணப்பட இயக்குனர், திரைப்பட ஒளிப்பதிவாளர். தனக்கென ஒரு தனித்துவமான பாணியை நிறுவிச் சுயாதீனமான இம்ப்ரெஷனிஸ்டிக் ஆவணப்படங்களை உருவாக்குகிறார்.

ஆர்.வி. ரமணி ஆர்.வி. ரமணி ஆர்.வி. ரமணி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 11:32

Tamil renaissance movement.

தாங்கள் இலக்கியத்திலிருந்து வாசகர்களை தத்துவத்திற்கு இட்டுச்செல்லும்பாதை  நன்றாக தெளிவாக தெரிகிறது. ஆலமரத்தை தத்துவ தரிசனத்தின் அடையாளமாக சொல்லுவார்கள். கோயம்புத்தூர் ஆனைகட்டி ஆஸ்ரமம்  சுவாமி தயானந்த சுவாமியின் இலச்சினை ஆலமரம்.

தத்துவவிருட்சம், கடிதம்

Generally, populist movements like the Dravidian movement absorb the essence of intellectual moments and achieve political power. They present their leaders as intellectuals. EVR, C.N. Annadurai, and M. Karunanidhi are political icons, not intellectuals.

Tamil renaissance movement.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.