Jeyamohan's Blog, page 116
May 6, 2025
அ.ம.சத்தியமூர்த்தி
தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர். அரிய நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். நாட்டார் இலக்கியங்களைத் தொகுத்தார். சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழா, மயிலை சீனி.வேங்கடசாமி நூற்றாண்டு விழா போன்ற நூற்றாண்டு விழாக்களைப் பொறுப்பேற்று நடத்தினார். பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
அ.ம. சத்தியமூர்த்தி – தமிழ் விக்கி

காவியம் – 16
யக்ஷன்,யக்ஷி- சாதவாகனர் காலம். பொயு1- பைதான் அருங்காட்சியகம்புதிய ஊர், புதிய காமம். கடும் கோடையில் திடீரென்று வந்து குளிரவைக்கும் பெருமழை போன்றது என் சென்னை வாழ்க்கை. சென்னைக்கு வந்ததுமே ஒரு சிறிய விடுதியில் அறை எடுத்துக்கொண்டோம். நாங்கள் மருத்துவத்திற்கு வந்த தம்பதிகள் என அவர்களே புரிந்துகொண்டார்கள். பதினெட்டு நாட்கள் அங்கே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். பனாரஸில் நினைத்தே பார்க்கமுடியாத நல்ல மருத்துவர், நல்ல மருத்துவமனை. விடுதியருகே நல்ல குஜராத்தி சைவ உணவகம்.
நான் மிக விரைவாகவே குணமடைந்தேன். ராதிகா வீடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவளே சென்று வீடுகளைப் பார்த்துவிட்டு வந்தாள். முகப்பேர் அருகே ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்தது. ஒரு படுக்கையறை, கூடம், சமையலறை கொண்டது. அங்கே தேவையான பொருட்களை அவளே நாலைந்து நாட்களிலாகக் கொண்டுசென்று சேர்த்தாள். பிளாஸ்டிக் நாற்காலிகள், டீபாய், சாப்பாட்டு மேஜை, மின்சார அடுப்பு, பாத்திரங்கள், கோப்பைகள், கட்டில், மெத்தை, போர்வைகள், தலையணைகள்…
”நீ வாங்கிக்கொண்டே இருக்கிறாய்… உன்னிடம் பணம் இருக்கிறதா?” என்று நான் கேட்டேன்.
“ஆறு லட்சம் வரை” என்று அவள் சொன்னாள். நான் திகைப்புடன் பார்க்க “இருபது சவரன் நகை இருக்கிறது. நகைகளை என்னிடமே வைத்திருந்தேன்.”
“இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாயா?”
“இல்லை, ஆனால் என் நகை என்னிடம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்… என் வங்கியிலும் இரண்டு லட்சம் இருந்தது….”
“ஒரு வருடம்கூட தாக்குப்பிடிக்கலாம்”
”பார்ப்போம். இங்கே இந்தி ஆசிரியராக எனக்கு வேலை கிடைக்கலாம்”
“ஆனால் வட இந்தியர்கள் என்றால் கண்டுபிடிக்க முடியும்”
“இங்கே எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இந்தி வகுப்புகள் இருக்கின்றன… நீயும் ஒரு பள்ளியில் சேர்ந்துகொள்ள முடியும். இங்கே உண்மையிலேயே வட இந்தியாவை விட சம்பளம் அதிகம்… விசாரித்துவிட்டேன்”
முதலில் அவள்தான் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தாள். நான் அப்பார்ட்மெண்டில் ஓய்வெடுத்தேன். என் கை மிக விரைவாகக் குணமாகியது. ஆனால் முழங்கை முதல் தோள்வரை வரிசையாக பெரிய பூரான்களை ஒட்டவைத்ததுபோல தழும்பு. நான் முழுக்கைச் சட்டையை இனிமேல் கழற்றவே முடியாது. என் அடையாளம் இது. எங்கும் எளிதில் கவனிக்கப்படுவது.
இரண்டு மாதம் கழித்து நான் இன்னொரு தனியார் கல்லூரியில் இந்தி ஆசிரியராகச் சேர்ந்தேன். எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்தனர். ராதிகாவுக்கு பதினைந்தாயிரம். எங்கள் அப்பார்ட்மெண்ட் வாடகை மூவாயிரம்தான். எல்லா செலவுகளுக்கும் சேர்த்து பத்தாயிரம் ஆகவில்லை. எல்லாமே சரியாக அமைந்துவிட்டன.
நாங்கள் இந்திக்காரர்கள் புழங்கும் எந்த இடத்திற்கும் செல்லவில்லை. பொதுவாக மக்கள்திரள் இருக்கும் இடங்களையே தவிர்த்தோம். நான் தாடி வைத்துக்கொண்டு தலைமுடியையும் குட்டையாக வெட்டிக்கொண்டேன். ராதிகா தென்னிந்திய பாணியில் புடவை அணிந்துகொண்டு, வெற்றுக் கண்ணாடி போட்டுக்கொண்டாள். அந்த உருமாற்றம் முதலில் வேடிக்கையாக இருந்தது, ஆனால் அந்த உருவத்திற்குள் நாங்கள் ஒளிந்துகொண்டதாகவும் உணரச்செய்தது. கண்ணாடி பார்க்கப்பார்க்க அந்த உருவங்களே நாங்கள் என ஆயின. எங்கள் முந்தைய முகங்களை நாங்களே மறந்துவிட்டோம்.
முதல் பதினைந்து நாட்களுக்கு என் காயம் ஆறுவதற்காகக் காத்திருந்தோம். அதன்பின் திருநீர்மலைக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். கோயிலில் திருமணம் செய்துகொண்டு அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்வதுதான் எளிது. சிறப்பு திருமணச் சட்டம் வழியாக பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்ய ஏராளமான சட்டச்சம்பிரதாயங்கள் உண்டு. சாட்சிகள் உட்பட எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து சட்டபூர்வமாகவே பதிவுசெய்து தர ஓர் ஏஜெண்ட் பத்தாயிரம் ரூபாய் கேட்டான். பணம் கொடுத்தபோது நான்குநாட்களில் திருமணமான ரசீதையே கையில் தந்துவிட்டான். நிரந்தரக் குடியிருப்பாக திருச்சி பக்கம் இரண்டு விலாசங்கள், அதற்கான சட்டபூர்வமான சான்றுகள். எங்கள் பெயர் தவிர எல்லாமே வேறுதகவல்கள். அதைக்கொண்டு எவரும் எங்களை நெருங்கி வரமுடியாது.
“நாம் வேலை பார்க்கும் இடங்கள்தான் நம்மைப் பிடிக்க வாய்ப்புள்ள சான்றுகள்” என்று ராதிகா சொன்னாள். “அங்கே நம் சான்றிதழைக் காட்டவேண்டியிருக்கிறது. ஆனால் இவை தனியார்பள்ளிகள். இங்கே வந்து தனியார்பள்ளிகள் தோறும் தேடினால்தான் நம்மைப்பற்றிய தகவல்கள் கிடைக்கும். அதற்கு வழியில்லை. அத்துடன் வட இந்தியாபோல அல்ல இந்த ஊர். இங்கே நடுத்தரவர்க்கம் வலுவாக இருக்கிறது. சட்டத்தை மீறி வெளிப்படையாக ஏதும் செய்துவிட முடியாது.”
நாங்கள் இருவரும் எவரையுமே தொடர்பு கொள்ளவில்லை. முற்றிலுமாக எங்களை விலக்கிக் கொண்டுவிட்டோம். ஒவ்வொன்றாகக் கவனித்து விலக்கிக்கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இயல்பாகவே முழுமையாக விலகிவிட்டோம். விலக்கியதில் முதன்மைப் பங்கு இருவரும் புதியதாகக் கண்டடைந்த காமத்திற்கு இருந்தது. ஒன்றையொன்று வேட்டையாடி உண்ணும் இரு விலங்குகள் போலச் சிலசமயம். ததும்பி இன்னொன்றை நிறைத்து ஒன்றேயென்றாகும் இரு சுனைகள் போலச் சிலசமயம். திளைப்பு, அத்திளைப்பை மேலும் வீரியம் கொண்டதாக ஆக்கும்பொருட்டு சீண்டலும் ஊடலும், மேலும் திளைப்பு. துளிக்கண்ணீர் ஓர் உறவாடலை எத்தனை ஆவேசமானதாக ஆக்கிவிடுகிறது!
காமம், அதை காவியங்களில் எத்தனைமுறை எப்படியெல்லாம் படித்து ரசித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். சொல்லப்போனால் இலக்கியச்சுவை என்ற பேரில் நான் ரசித்துக் கொண்டிருந்ததெல்லாம் காமத்தைத்தான். காமம் இல்லாத ஓர் இயற்கை வர்ணனைகூட காவியங்களிலே இல்லை. அப்பட்டமான நேரடியான காமம் தீ போலப் பற்றிக்கொள்கிறது. கவிதையின் காமம் என்பது விளக்குத்திரியில் எரியும் தீ. பற்றி எரிந்து கொழுந்தாட முடியாமல் கட்டுப்படுத்தப்படுவது, துளியாக எரியும் தீ. விளக்கின் சுடர் ஒரு மலரிதழ்போல. அதற்கு வெப்பமுண்டு என்று கூடச் சொல்லிவிடமுடியாது. தீயின் அழகு மட்டுமே கொண்ட தீ அது.
“காளிதாசனின் உவமை” என்று நான் சொன்னேன். “ரகுவம்சத்தில் வருகிறது. வானில் இருந்து இந்துமதியுடன் கீழே விழுந்த அஜன் எரிந்தபடியே எண்ணைத்துளி உதிர்வது போலிருந்தான். அந்த வரியை எண்ணிக்கொண்டிருந்தேன். சேர்ந்து எரிதல்… அது போல காமத்திற்குச் சரியான உவமை வேறில்லை”
“இப்போதும் காவியமா?” என்று அவள் புன்னகையுடன் கேட்டாள்.
அவள் உடலின் நிர்வாணம் மிகப்பழகியபின் புன்னகைதான் காமத்தை மிகத்தூண்டுவதாக இருந்தது. நிர்வாண உடல் நிலையானது, பொருள் மாறுபடாத ஒரு சொல்போல. புன்னகை ஒவ்வொரு முறையும் ஒன்று. கண்களின் அசைவும் ஒளியும், தலையின் சரிவு, கூந்தலிழையை ஒதுக்கும் அசைவு என பலவகையான இணைவுகளினூடாக ஒரு கலைநிகழ்வு. அப்புன்னகைமேல் முத்தமிடுவது காற்றில் நலுங்கும் இலையை பற்றுவதுபோல. புகைச்சுருளை மெல்ல விரல்நுனியால் வருடிவிட முடிவதுபோல.
“யட்சர்களுக்கும் நாகர்களுக்கும்தான் முழுமையான காம இன்பத்தை கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்” என்று நான் அவளிடம் சொன்னேன். “ஏனென்றால் மானுடராக இருந்து அதை அடையமுடியாது. மானுடத்தன்மையை துறந்தபடியே சென்றுதான் அதை அணுகக்கூட முடியும். உடைகளை துறப்பது முதற்படி. அறிந்த உலகத்தை துறக்கவேண்டும். சொற்களை விலக்கிவி டவேண்டும். எண்ணங்களையும் உதிர்த்துவிட வேண்டும். எஞ்சுவதென்னவோ அதைக்கொண்டு மேலே செல்லவேண்டும்.”
நான் உளறிக்கொண்டே இருந்தேன். என்னுள் அதுவரை நான் எண்ணாத சிந்தனைகள் எல்லாம் தோன்றிக்கொண்டே இருந்தன. அவள் முன்பெப்போதும் நான் காணாத ஒருவகையான புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். சிலசமயம் மாணவிபோல, சிலசமயம் மழலையின் பேச்சைக்கேட்கும் அன்னையைப்போல. அல்லது இரண்டுமே ஒரே சமயம் வெளிப்படுவதுபோல.
சிரிப்பு ததும்பிய அவள் உதடுகள்மேல் விரலைவைத்து நான் கேட்டேன். “என்ன சிரிப்பு?”
“ஒன்றுமில்லை”
“சொல்லு”
“இல்லை, இதையும்கூட சொற்களாக வரையறுத்தேதான் ஆகவேண்டுமா?”
“நீ சொல்வது முதல்பார்வைக்குச் சரி. சொல்லுக்கு அப்பாற்பட்டது காமம். இரு உடல்கள் வெறும் தசைகளாக நின்று ஒன்றை ஒன்று அறிகின்றன. இரண்டு உயிர்கள் ஒன்றையொன்று உணர்வதற்கு இங்கே இருக்கும் மிகச்சிறந்த வழி அதுபோலத்தான். ஆனால் எண்ணிப்பார், அதை நுணுக்கமாக அறிந்தவர்கள் எல்லாரும் அதைச் சொல்லாக ஆக்கிக்கொண்டவர்கள்தான். அவர்கள் உருவாக்கிய சொற்களைக் கொண்டுதான் இன்று எவரும் காதலிக்கவும் காமம் கொள்ளவும் முடிகிறது. மிகச்சாமானியர்களுக்குக் கூட சினிமாப் பாடல்களாவது தேவைப்படுகின்றன”
“ஏன்?”
“ஏனென்றால் சொல்லாக ஆக்கிக்கொண்டதும் அந்த அனுபவநிலையை கடந்து விடுகிறோம். இன்னும் இன்னும் என்று மேலே தாவுகிறோம். சொல்லாக ஆக்கிக்கொள்ளாதவர்கள் முதல் வட்டப்பாதையிலேயே சுழன்றுகொண்டிருப்பார்கள்” என்று நான் சொன்னேன்.
அவளுடைய சிரிப்பு சட்டென்று என்னைச் சீண்டியது. “அத்துடன் நான் இலக்கியவாதிதான். நான் என்றோ ஒருநாள் ஒரு காவியம் எழுதுவேன். ஆகவே என் எல்லா அனுபவங்களையும் மொழியாக ஆக்கிக்கொண்டேதான் இருப்பேன்… உன் தலையெழுத்து. நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்.”
“காவியமா? நாவலைச் சொல்கிறாயா?”
“இல்லை, நாவலுக்கு மிகப்பெரிய எல்லை என்பது அது யதார்த்தத்தை சார்ந்திருக்கவேண்டும் என்பது. மாய யதார்த்தவாதமோ, மிகுகற்பனையோ எதுவானாலும் அதன் சித்தரிப்பில் உள்ளே யதார்த்தம் இருந்தே தீரும். அந்த யதார்த்தத்தை சுமப்பதனாலேயே அது முழுமையாகக் கவிதைநோக்கிச் செல்லமுடியாது. அது கவித்துவத்தை அடையலாம், கவிதையாக ஆகவே முடியாது… கவிதையாக ஆகாத எதுவும் காலத்தால் பழையதாக ஆகும். கவிதை மட்டுமே நிலைநிற்கும்…”
“அப்படியென்றால் நீ கவிதைகள் எழுதலாமே?”
நான் உடலை அணைத்திருந்த என் கைகளை விலக்கிக்கொண்டு மல்லாந்து படுத்தேன். மேலே சுழன்ற மின்விசிறியைப் பார்த்தபடி “இல்லை, கவிதை உண்மையில் நாவலைவிடவும் குறைவான இலக்கியவடிவம். கவிதைக்கு ஒரு பின்புலம், ஒரு reference field தேவைப்படுகிறது. அதைவைத்துத்தான் கவிதையை பொருள்கொள்ள முடிகிறது. ஒரு கவிதையை அதன் வரிகளை மட்டும்கொண்டு எவரும் பொருள்கொள்ள முடியாது.ஒரு கவிதை என்பது ஒரு பெரிய நாடகத்தின் ஒரு வசனம்போல. ஒரு பெரிய கதையின் ஒரு தனி நிகழ்வு போல. ஒரு பெரிய காவியத்தின் ஒரு படிமம் போல. அந்த ஒட்டுமொத்தமான பின்புலம் என்பது பெரும்பாலும் சமகாலத்தின் ஒட்டுமொத்தக் கவிதையுலகம்தான். அதில் அறிமுகம் கொள்வதுதான் கவிதையைப் பொருள்கொள்ள தேவையான பயிற்சி என்பது” என்றேன்.
“ஒரு மொழிக்கு அதற்கான கவிச்சூழல் உண்டு. நவீனக் கவிதைக்கு என்று உலகளாவிய கவிச்சூழல் உண்டு. அதில் நின்றுகொண்டுதான் தனிக்கவிதைகளைப் பொருள்கொள்கிறோம். அதனால்தான் நான்குவரிக் கவிதை என்பது நமக்கு அனுபவமாக ஆகமுடிகிறது. கவிதை அத்தனை சுருக்கமாக அமையமுடிகிறது. அது எதையும் சித்தரிக்கவேண்டியதில்லை. ஆனால் அதுவே கவிதையின் பலவீனம். அதற்கு வெளியே இருந்து பொருள் வந்தமைய வேண்டியிருக்கிறது. அதற்கு தனக்கான தனிப்பின்புலம் இல்லை. ஆகவே கவிதை தனக்கேயான புதிய பொருள் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியாது. திரும்பத் திரும்பச் சொல்கிறேனா?”
“இல்லை” என்றாள்.
“நீயே பார். பழங்காலத்தில் காவியங்கள் அல்லாத தனிப்பாடல்களின் திரட்டுகள் எப்படி இருக்கின்றன? கதாசப்தசதியின் எல்லா பாடல்களும் ஒன்றுபோலிருக்கின்றன. பழங்காலத்தின் கவிதைத்திரட்டுகளைப் பார்த்தால் ஒருவரோ ஒரு சிறு குழுவோ சேர்ந்து விவாதித்து எழுதியவை போலத் தோன்றுகின்றன. ஏனென்றால் அவற்றின் reference field ஒன்றுதான். அது அவர்கள் அனைவரும் சேர்ந்து இயல்பாகவே உருவாக்கிக் கொண்டது. ஒரு கவிதை இன்னொரு கவிதைக்கு reference ஆகும்போது அது திரண்டு வருகிறது. அதுதான் அத்தனை கவிதைகளுக்கும் அர்த்தத்தை உருவாக்குகிறது.” என் குரலே என்னை மேலும் பேசச்செய்தது.
“அந்த பின்புலத்தை ஆராய்ந்து, வகுத்து மெல்ல இலக்கணமாக ஆக்குகிறார்கள். அந்த இலக்கணம் அதன்பின் கவிதைகளுக்கு அர்த்தம் அளிக்கும் மாறாத சட்டகமாக நீடிக்கிறது. கதாசப்தசதியின் இலக்கணத்திற்கு தமிழில் தொல்காப்பியத்தைத்தான் பார்க்கவேண்டும். கதாசப்தசதி அப்படியே தமிழிலுள்ள சங்கப்பாடல்களின் பின்புலத்தில்தான் அமைந்திருக்கிறது. சங்கப்பாடல்கள் அகம்புறம் என பிரிக்கப்பட்டுள்ளன. அந்த அக இலக்கணம்தான் கதாசப்தசதிக்கு… அதை திணை சார்ந்து அப்படியே பிரித்து வகைப்படுத்த முடியும்.”
“இன்றைய நவீனக்கவிதைகள் அடங்கிய anthologyக்களைப் பார். அவையும் ஒரே கவிஞரோ ஒரு சிறுகுழுவோ எழுதியவை போல இருக்கின்றன. ஒரே text ஆக தோன்றுகின்றன. உண்மையிலேயே அவை ஒற்றை text தான். அவற்றுக்கு அடியிலுள்ள அந்த reference field தான் உண்மையான ஒற்றை text. இந்த ஒவ்வொரு கவிதையும் அந்த ஒற்றைநூலின் உறுப்பாக நின்றுதான் பொருளை உருவாக்குகின்றன.” என்று பேசிக்கொண்டே சென்றேன்.
“எத்தனைபெரிய அடிமைத்தனம். தங்கநகையில் பதிக்கப்பட்ட வைரம் அழகும் பொருளும் பெறுகிறது என்பது உண்மைதான். ஆனால் அது கட்டுண்டிருக்கிறது என்பதும் உண்மை. கவிஞனுக்கு தன் அகத்தை உருவாக்கும் சுதந்திரமே இல்லை. ஏற்கனவே தன் சூழலில் திரண்டுள்ள அர்த்தத்தை எடுத்துக்கொண்டு அதை தனக்கென சிறிது உருமாற்றுவதை மட்டுமே அவன் செய்யமுடியும். நதியை அள்ளி நதியிலேயே விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அந்தணனைப் போன்றவன் அவன். அவனைப்போல தன் சமகாலத்திற்குக் கட்டுப்பட்ட இன்னொருவன் இல்லை.”
“அந்த ஒட்டுமொத்த reference field அதாவது அந்த text காலத்தை கடந்து செல்லும். ஏனென்றால் அது மிகப்பெரியது, பலநூறுபேர் சேர்ந்து பல நூறாண்டுகளாக உருவாக்குவது. ஒரு பெருநதி அதன்மேல் விழுந்த அனைத்தையும் கொண்டுசெல்வதுபோல அது தன் தனிக்கவிதைகளையும் காலத்தை கடத்திக் கொண்டுசென்று சேர்க்கலாம். அப்படித்தான் அகநாநூறிலோ கதாசப்தசதியிலோ உள்ள பாடல்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. ஆனால் அவனுடைய குரல் அல்ல அது. அது காட்டின் ஓசை. தனி இலைகளுக்கு அங்கே குரலே இல்லை…”
“தனிப்பாடல்களை எழுதும் கவிஞன் பரிதாபமானவன், அவன் காவியத்தை உருவாக்கவில்லை என்றால் அவனுடையதென ஒன்று இங்கே இல்லாமலேயே போய்விட்டது என்றுதான் பொருள்” என் பேச்சின் விசையிலேறி நான் சென்றுகொண்டே இருந்தேன். “ஆகவே காவிய ஆசிரியனே மெய்யான கவிஞன். அவ மட்டுமே முழுமையான கவிஞன். அவனுடைய முழு உலகையும் அவனே உருவாக்கிக் கொள்கிறான். ரகுவம்சத்தின் ஒரு பாடல் மொத்த ரகுவம்ச மகாகாவியம் என்னும் reference field ஆல்தான் பொருள்கொள்கிறது. ரகுவம்சம்தான் அந்த proto text, வேறொன்று தேவையில்லை. காளிதாசனின் இன்னொரு காவியம்கூட ரகுவம்சத்தின் ஒரு பாடலின் பொருள் உருவாக்கத்திற்கு அவசியமில்லை…”
“அதாவது, காவியம் எழுத முடிவெடுத்தாயிற்று?”
அந்தக் குரலில் இருந்த சிரிப்பால் நான் சீண்டப்பட்டு சொற்களின் விசை அடங்கி எரிச்சல்கொண்டேன். “ஏன் முடியாது என்று நினைக்கிறாயா?”
“சேச்சே, சும்மா சொன்னேன்…”
“சரி நீ சொல், நான் ஒரு காவியம் எழுத முடியுமா முடியாதா?”
“முடியும்…”
“எப்படிச் சொல்கிறாய்?”
அவள் “அப்படித் தோன்றுகிறது” என்றாள்.
“என் வேகத்தைக் கண்டு சொல்கிறாய்… நான் எழுதிய ஒரு கவிதையைக் கூட நீ இதுவரை வாசித்ததில்லை…”
“நீ காட்டவில்லை”
“ஏனென்றால் நான் இதுவரை ஒரு கவிதையைக் கூட எழுதவில்லை”
“உண்மையாகவா?”
“நான் வடிவத்துக்காக பயிற்சி எடுத்திருக்கிறேன். கவிதை எழுதியதில்லை”
“ஏன்?”
”எதை எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போலத் தோன்றுகின்றது. நான் நிறைய வாசித்துவிட்டேன்” என்றேன். “நான் என்னை கவிஞன் என எண்ணியிருப்பதுகூட இந்த பூமியில் எவருக்கும் தெரியாது. எவருக்கும் தெரியக்கூடாது என்ற எச்சரிக்கையே எனக்கு உண்டு.”
“இப்போது ஏன் சொல்கிறாய்?”
”தெரியவில்லை. காமத்திற்குப் பின்புதான் ஆண்கள் இப்படி அந்தரங்கமானவற்றைப் பேசுவார்கள் போல… எனக்கு இதுவரை இதுபோல இன்னொரு மனிதப்பிறவி அணுக்கமாக வந்ததே இல்லை… என் அம்மா, அப்பா எவருமே… இன்னொருவரிடம் முதல்முறையாக இத்தனை நெருக்கத்தை உணர்கிறேன். எதையுமே ஒளிக்கவேண்டியதில்லை என்று தோன்றுகிறது.”
”காமத்திற்குப் பின்பு மட்டும்தான் இல்லையா?”
“ஆமாம், அதில் என்ன தவறு? இது தசைகளின் இணைப்பு அல்ல. இப்படி ஒரு அந்தரங்கம் இன்னொரு உயிருடன் உருவாகுமா என்ன?”
”போதும், அதை வர்ணித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து தலைமயிரை சுழற்றிக் கட்டினாள்.
முழு நிர்வாணமாக இருந்தாள், அதைப்பற்றிய உணர்வே இல்லாதவளாக, அந்தச் சுதந்திரத்தை அவளுடைய ஒவ்வொரு உறுப்பும் கொண்டாடுவதாக.
“ஒன்று சொல்லவா?”
“என்ன?” என்று திரும்பி நின்று புன்னகைத்தாள்.
அப்போதுகூட அந்த தாய்மைச் சிரிப்பு எப்படி வருகிறது?
”இரண்டே இரண்டு தருணங்களில்தான் பெண்கள் பேரழகிகளாகத் தெரிகிறார்கள். ஒன்று உறவுகொண்டு, உச்சமடைந்தபின், வெட்கத்துடன் கண்களைப் பாதி தாழ்த்தி அரைமயக்கத்தில் படுத்திருக்கையில். இன்னொன்று, ஒன்றுமே நிகழவில்லை என்ற பாவனையில் எழுந்து விலகிச்செல்லும்போது…”
“சரிதான், அறிவு வழிகிறது…” என்றபின் அவள் கழிப்பறைக்குச் சென்றாள்.
நான் மின்விசிறியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மெய்யாகவே பொழிந்து தள்ளிவிட்டேன். அவளிடம் காவிய இயலை நிறையவே பேசியிருக்கிறேன். நான் ஒரு பேரறிஞன் என்று அவள் நம்புவதும் எனக்குத் தெரியும். ஆனால் எனக்குள் நான் ஒரு காவியகர்த்தன் என்ற எண்ணம் இருப்பதை நானேகூட சொல்லிக்கொண்டதில்லை. இதோ இவள் தனியறைக்குள் இருக்கையில்கூட இப்படி நிர்வாணமாக இருந்திருக்க மாட்டாள். ஆனால் இப்போது அத்தனை சுதந்திரத்தை உணர்கிறாள்.
அவள் திரும்ப வந்தபோது நான் அவளுடைய உடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். பால்வெண்மைநிறம். ஆண்மைச்சாயல் கொண்ட திரண்ட தோள்கள். ஆனால் பெரிய மார்புகளும் திரண்ட பின்பக்கமும் முற்றிலும் பெண்மை கொண்டவை. மகாராஷ்டிரப்பெண்கள் செங்கல்லின் சிவப்பு நிறம் கொண்டவர்கள். சிறிய எலும்புக் கட்டமைப்பும், கூரிய முகமும் ,சற்று ஆழமான கண்குழிக்குள் சிறு விழிகளும் கொண்டவர்கள். ராதிகாவின் கண்களுக்கு சற்று நீலநிறம் இருந்தது. அவளுடைய உடலின் கட்டமைப்பே பெரியது. கழுத்திற்குக் கீழே தோள் எலும்புகள் வலுவானவை. கைகள் திரண்டு உருண்டவை.
”உன் முன்னோர்களில் யாரோ காந்தாரம் வழியாக யவனநாட்டில் இருந்து வந்திருக்கவேண்டும்” என்று நான் சொன்னேன்.
“அடுத்து என்ன மானுடவியல் ஆய்வா?” என்று சிரித்தபடி வந்து என் அருகே படுத்துக்கொண்டாள்.
நான் அவளை அணைத்து அவளுடைய வெண்ணிறமான மார்புகளை அள்ளிக்கொண்டேன். அவற்றில் முகம் புதைத்தேன். சட்டென்று ஏதோ தோன்ற எழுந்து புரண்டு பக்கவாட்டில் இருந்த டீபாயில் இருந்து என் பால்பாயிண்ட் பேனாவை எடுத்தேன். “என்ன செய்யப்போகிறாய்?” என்று திகைத்தவள் போலக் கேட்டாள்.
“வியாசன் பெண்ணின் உடலை ஃபூர்ஜ மரப்பட்டையின் வெண்மைக்கு ஒப்பிடுகிறான்… பழங்காலத்தில் அதில்தான் எழுதினார்கள். பெடூலா என்பதுண்டு அந்த மரத்தை. Himalayan birch… திபெத் மடாலயங்களிலுள்ள பல ஏடுகள் அதில்தான் உள்ளன.”
அவளுடைய இடது மார்பின்மேல் நான் பேனாவால் எழுதினேன். அவள் “அய்யோ” என்று கூசி விலகினாள்.
“சும்மா இரு” என்றேன். மிக மெதுவாக ஓர் ஓவியனைப்போல எழுதினேன். அவளுடைய மென்மையான சருமம் புல்லரித்து அவற்றில் நீலநிறமான மயிர்கள் புள்ளிகளாகி எழுந்தன. மார்பின் காம்புகளின் தவிட்டு நிற வட்டத்தின் மேல் புள்ளிகள் எழுந்தன. நான் எப்போதுமே வயலட் நிற மையைத்தான் பயன்படுத்துவேன். அந்த எழுத்துக்கள் அவளுடைய மெல்லிய ரத்தக்குழாய்களால் ஆனவை போலத் தோன்றின.
நான் எழுதி முடித்ததும் அவள் ஓடிப்போய் கண்ணாடி முன்னால் நின்று தன் மார்புகளைப் பார்த்தாள். அவை திரும்பியிருந்தமையால் படிக்கமுடியவில்லை. ஓடிச்சென்று தன் கைப்பையில் இருந்து சிறு கண்ணாடியை எடுத்து அதை சரித்து அப்பிம்பத்தை பிடித்து அதில் படித்துப் பார்த்தாள். அவள் கண்களின் அசைவை, கருவிழிகள் உருள்வதை, முகம் உணர்ச்சிகொண்டு மாறுவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
கண்ணாடியை தாழ்த்திவிட்டு அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தன, ஓர் உறவின் உச்சத்தை அடைந்ததுபோல. பின்னர் பாய்ந்து வந்து படுக்கையில் விழுந்து என்னை இறுகப்பற்றி மூச்சித்திணற முத்தமிட்டாள். பெண்ணில் எழும் சர்ப்பத்தை முன்பும் கண்டிருந்தேன். அது பாதாளப் பெருநாகமென ஆகும் என்று, அதன் நஞ்சும் மணியும் வெளிப்படும் என்றும் அப்போது அறிந்தேன்.
(மேலும்)

வல்லினம், கீழை இலக்கிய உலகம்.
அன்பான ஜெ, நலமா?
மே மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது. இந்த இதழில் 3 சீன சிறுகதைகளின் மொழியாக்கங்களுடன் சிறுகதைகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இதழின் இணைப்பு:
வல்லினம் மே இதழ்ஜெ, ஜூன் 1 ஆம் திகதி முக்கோண கதைகள் எனும் நிகழ்ச்சி செய்கிறோம். என் நினைவில் மூன்று இன எழுத்தாளர்களும் இணைந்து மலேசியாவில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியை முன்னெடுத்ததில்லை. வல்லினம் அம்முயற்சியில் இறங்கியுள்ளது. எங்களில் அனைத்து சிறந்த திட்டங்களுக்கும் நீங்கள் முதன்மை காரணியாக இருப்பீர்கள். நான் அதை எப்போதும் ஆசிரியரின் ஆசி என்றே கருதுவேன்.
எஸ்.எம். ஷாகீரை விஷ்ணுபுரம் விழாவுக்கு அழைத்ததில் அனைத்தும் தொடங்கியது. அ. பாண்டியன் அவர் சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஷாகீருடன் எனக்கு ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல் ஒன்றை மலேசியாவில் ஏற்பாடு செய்தோம். அதில்தான் ஃபுளோரன்ஸ் அவர்கள் தொகுத்த சீன சிறுகதைகளின் மலாய் மொழியாக்கம் கிடைக்கப் பெற்றோம். தொடர்ந்து ஃபுளோரன்ஸ் சம்மதத்துடன் சீன சிறுகதைகளை மலாயில் இருந்து தமிழில் மொழியாக்கும் பணிகள் நடந்தன. இப்படி உங்களில் இருந்து உருவான ஒன்று விரிந்து பெரும் விழாவாக பரிணமித்துள்ளது. இதில் தமிழ்ச் சிறுகதைகளின் மலாய் மொழியாக்கமும் ஷாகீர் நடத்தும் பதிப்பகத்தின் வழியாக நூலுரு பெறுகிறது.
https://vallinam.com.my/version2/?p=10195 : முழு தகவல்
ஆக, தமிழ், மலாய், சீன எழுத்தாளர்கள் ஒன்றிணையும் நிகழ்ச்சியாக இது உருமாறியுள்ளது. மூன்று நூல்களின் வெளியீட்டுடன் மூன்று அரங்குகளும் இடம்பெறும். வாய்ப்பிருப்பின் தங்கள் தளத்தில் நிகழ்ச்சி குறித்து வெளியிடவும்.
அன்புடன்
ம.நவீன் / M.Navin
No Tel : 0163194522
web site : www.vallinam.com.my
blog : www.vallinam.com.my/navin/

உருது அறிமுக வகுப்பு, கடிதம்
உருது மொழி குறித்துப் பெரிதாக அறிந்திராத எனக்கு மொழியின் தோற்றம், இலக்கிய மரபு, ஆளுமைகள், மையங்கள் மற்றும் கடந்த எண்ணூறு ஆண்டுகளில் உருது அடைந்த பரிணாம மாற்றங்கள், போதாமைன்னு கிட்டத்தட்ட எல்லா பரிமாணங்களிலும் நினைவில் நிறுத்தி மேலும் தொடர போதுமான அடிப்படையைத் தந்தார் ஆசிரியர் ஃபைஸ் காதிரி.
உருது அறிமுக வகுப்பு, கடிதம்Searching for a guru is an unending movement in one’s life. Every person in his trade or business has become a guru in his domain. All successful people become gurus and start preaching in this digital age.
Mind—The Guru.உருது அறிமுக வகுப்பு, கடிதம்

Mind—The Guru.May 5, 2025
ஆழத்துச் சுழி
எர்ணாகுளம் நகர்தான் என்னுடைய இரவு நாவலின் கதைக்களம். நான் பலமுறை வந்து தங்கியிருக்கும் நகரம், ஆனால் அதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முன்பு. அப்போது இது இரட்டைநகரம், எர்ணாகுளம், கொச்சி. சொல்லப்போனால் மூன்று ஊர். திருப்பணித்துறையை ஒரு உபக்கிராமம் என்று இணைத்துக்கொள்ளலாம். இன்று இவையெல்லாம் இணைந்து ஒற்றைப் பெருநகரமாக ஆகிவிட்டிருக்கின்றன. பழைய கொச்சி ஒரு கசகசவென்ற துறைமுகம். கரிமீன் பிடிப்பது ஒரு முக்கியமான தொழில்.
இந்நகரெங்கும் நரம்புவலைபோல சிற்றோடைகள் பரவியிருக்கும். அவற்றினூடாக சிறிய படகுகள் சென்றுகொண்டிருக்கும். 1970 வரைக்கும்கூட துறைமுகத்திற்கு வரும் சரக்குகளில் பெரும்பகுதி படகுகள் வழியாகவே வந்தன. வளைவான பனம்பாய்க் கூரையிடப்பட்ட மரப்படகுகளை நீளமான கழிகளால் உந்தி முன்தள்ளி கொண்டு வருவார்கள். ‘கழைக்காரன்‘ என்று படகோட்டியின் பெயர். ஆலப்புழை உட்பட்ட ஊர்களில் இருந்து ஒரு ரூபாய் கொடுத்தால் அப்படகிலேயே கொச்சி வரமுடியும். படகிலேயே மீன்சோறு சமைத்து தருவார்கள். தூங்கலாம், ஆனால் காற்று நின்றுவிட்டால் கொசு பிடுங்கும். இருபக்கமும் ஒழுகிச்செல்லும் நிலம் என்பது தென்னை மரக்கூட்டங்கள் மட்டுமே. நடுக்காயலில் படகில் இருந்து பார்த்தால் செறிந்த புல்பத்தை போலவே தோன்றும்.
இன்று எர்ணாகுளம் ஒரு நவீன ஐரோப்பிய நகரம் போலுள்ளது. எங்கு பார்த்தாலும் புத்தம்புது ஆடம்பர அடுக்குமாடிவீடுகள், பங்களாக்கள். சாலையில் செறிந்தோடும் வண்டிகள். கடைகள், உணவகங்கள், பல்வேறு வகையான சேவைப்பணிகளை அளிக்கும் நிறுவனங்கள். ஒவ்வொரு வீட்டிலும் நாலைந்து கார்கள் இருப்பதை நடைசெல்லும்போது பார்க்கிறேன். பெரும்பாலான இடங்களில் ஒருவகையான அமைதியான நுகர்வு வாழ்க்கை இருப்பது தெரிகிறது. இங்கே எந்தத் தொழிலும் வீச்சுடன் இல்லை. மலையாளிகள் சம்பாதிப்பதெல்லாம் கேரளத்துக்கு வெளியேதான், கேரளம் என்பது அவர்களின் மாபெரும் குடியிருப்புப் பகுதிதான்.
நான் முதல்முறையாக 1985ல் எர்ணாகுளம் வந்து இங்கே ஒரு சிறுவிடுதியில் தங்கி திருக்காக்கரை உள்ளிட்ட ஆலயங்களைப் பார்க்கும் காலகட்டத்தில், வந்த மறுநாளே இங்கே ஓர் அரசியல்கொலை நடந்து ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கு இரண்டு நாட்களுக்குப்பின் தளர்த்தப்பட்டது. அதற்கான பழிவாங்கும் கொலைக்காக நகரம் காத்திருந்தது. நான் ஊரைவிட்டுக் கிளம்பி காஸர்கோடு சென்ற பின்னரும் ஆர்வமாக நாளிதழ்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘ஃபாலோ அப்‘ செய்திக்காக. எட்டுநாட்களுக்குப்பின் செய்தி வந்தது, இரண்டுபேர். கணக்கில் ஒன்று கூடிவிட்டது. அப்படியென்றால் இவர்களின் மறு பழிவாங்கல் இருக்கும். கணக்கு கணக்காக இருக்கவேண்டுமே? அதற்காக காத்திருந்தேன், அது பன்னிரண்டு நாட்களுக்குப்பின். மீண்டும் இருவர். இப்போதும் கணக்கு மிஞ்சிவிட்டது. இனி மற்றவர்களின் தரப்பு…
அன்றெல்லாம் வடகேரளம் இதில் இந்தியாவுக்கே முன்மாதிரி. 1950 முதலே கொலையரசியல் கேரளத்தில் வேரூன்றிவிட்டிருந்தது. கேரளத்தின் இடதுசாரித்தலைவர்கள் அனைவர் மேலும் கொலைக்குற்றச்சாட்டு உண்டு, விதிவிலக்குகள் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடும் சி.அச்சுதமேனனும் மட்டுமே. கேரளக் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர், பல கொலைகள் இன்றுவரை புதிர் நீங்காதவை. அடித்து நின்று வென்றவர்கள் கம்யூனிஸ்டுக்கட்சியினர். கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸுக்குமான சண்டை நீண்டநாட்கள் நடைபெற்றது. அதன்பின் கம்யூனிஸ்ட் – முஸ்லீம் லீக் சண்டை. அண்மைக்காலமாக கம்யூனிஸ்டு – ஆர்.எஸ்.எஸ். சண்டை. நடுவே எழுபதுகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் பூசலிட்டுக்கொண்டு, பல தலைகள் தொடர்ச்சியாக உருண்டன.
‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக‘ என்ற சினிமா ஶ்ரீனிவாசன் எழுதி குஞ்சாக்கோ போபன் நடிப்பில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளிவந்தது. உற்சாகமான படம். அதில் கதைநாயகன் பெயர் ஜெயகாந்தன். ஊரைவிட்டு ஓடிப்போன நரேந்திரனின் மகன் அவன், தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன். அவன் அப்பா ஜெயகாந்தனின் பரமரசிகர். கதையில் இளம் ஜெயகாந்தனுக்குச் சமகால கேரளம் என்றால் என்னவென்றே தெரியாது. அப்பாவின் ஒரு துண்டு நிலம் ஊரில் உண்டு, அதை விற்றுக் காசாக்கி திரும்பும் பொருட்டு வருகிறான்.
வந்த முதல்நாளே கேரளம் என்றால் என்னவென்று புரிகிறது. வரும்போது ரயிலில் இருந்து தப்பாக இறங்கி இரவில் நடந்து வரும்போது ஒருவர் துணைக்கு வருகிறார். மிக அன்பாகப் பேசுகிறார். விடியும்போது தெரிகிறது, அவர் கையெறிக் குண்டு செய்து விற்கும் தொழில் செய்பவர். மூட்டையில் இருப்பவை குண்டுகள். ”இது கொஞ்சம் குண்டு….நான் செஞ்சு விக்கிறது…. என்னோட தொழில்” என இயல்பாக அறிமுகம் செய்கிறார்.
முதல்நாளே அடிதடி, குண்டுவீச்சு, அரசியல் கலவரம். அடித்துப்புரண்டு ஒரு நூலகத்திற்குள் நுழைந்தால் அங்கே பலர் நிம்மதியாக நாளிதழ் படிக்கிறார்கள். ‘கொலை! கலவரம்!’ என்று ஜெயகாந்தன் கதறினால் அதில் ஒருவர் “அரசியல் கலவரம்தானே? அது தினமும் நடப்பது. அதிலென்ன? என்னமோ ஏதோ என்று பதறுகிறாய்? உட்கார்” என்று சிரிக்கிறார்.
ஆனால் சினிமாவின் முடிவில் ஒரு வரி வரும். “நீ நினைப்பதுபோல இங்கே எல்லாரும் அயோக்கியர்களும் கொலைகாரர்களும் இல்லை. தங்கள் நம்பிக்கையிலுள்ள கண்மூடித்தனமான உறுதிதான் இவர்களைக் கொலைகாரர்களாக ஆக்குகிறது. அது ஒருவகையில் நேர்மையின் இன்னொரு வடிவம்தான்” அதுவும் உண்மை. கேரள அரசியலில் தொண்டர்கள் பெரும்பாலும் பயன் கருதாத நம்பிக்கை கொண்டவர்கள். ஒப்பு நோக்க அரசியலில் கீழ்மட்டம் வரை ஊழல் அரிது. ஆகவே அரசியல் வழியாகப் பெரிதாக ஏதும் சம்பாதித்துவிட முடியாது. சைக்கிளில் உலவும் பஞ்சாயத்துத் தலைவர் ஐந்தாண்டில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று பேரா.ராஜன் குறையும் ஜெயரஞ்சனும் அறிவியல்பூர்வமாக நிறுவிய பின் நாம் என்ன சொல்ல? .
கேரளத்தில் அந்த ‘ஆத்மார்த்த அரசியலின்’ விளைவான கொலைகள் அண்மையில் மிகக்குறைந்து விட்டன. அதற்கு ஒரே காரணம்தான் என்கிறார்கள். ஒன்று, நீதிமன்றங்களின் கடுமையான நிலைபாடு. முன்பெல்லாம் அரசியல் கொலைகளுக்கு உண்மையான சாட்சிகளே வரமாட்டார்கள், எவர் தலையைக் கொண்டு தண்டவாளத்தில் வைக்கத் துணிவார்கள். எல்லா சாட்சிகளும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்பவைதான். அரசியல்கட்சிகள் வழக்குகளை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக எடுத்து நடத்துவதில்லை. கொலை செய்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் வழக்கு நீர்த்துபோகும், கொலைகாரர்கள் விடுதலை ஆகிவிடுவார்கள்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயகிருஷ்ணன் என்னும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மாணவர்களின் கண்முன் வகுப்பில் கொலைசெய்யப்பட்டபோது நீதிமன்றங்கள் சீற்றம் அடைந்தன. நீதிபதிகளின் மனசாட்சி விழித்துக்கொண்டு ஒரு கூட்டுப்புரிதல் உருவானது என்கிறார்கள். இன்று அரசியல் கொலைகளுக்கு பெரும்பாலும் ஆயுள்தண்டனைதான், தூக்கும் உண்டு. சாட்சிகள் பல்டியடித்தாலும், எல்லாமே ஏற்பாடு செய்யப்பட்ட சாட்சிகளாக இருந்தாலும், வழக்கில் என்னதான் வாதிட்டாலும் தண்டனை பெரும்பாலும் உறுதி. அது ஓர் அச்சத்தை உருவாக்கிவிட்டது. கட்சி பார்த்துக்கொள்ளும், சாட்சிகளை மிரட்டலாம் என்பதெல்லாம் இன்று செல்லுபடியாவதில்லை.
ஆகவே அரசியல்பூசல் டிவிக்கு இடம்பெயர்ந்துவிட்டது. அது இரண்டாவது காரணம். இன்று இந்தியாவிலேயே மிக அதிகமாக தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள் நிகழ்வது கேரளத்தில். அதில் எப்போதும் ரத்தக்களரி. பூனைகள் சண்டைபோட்டுக்கொள்ள நடுவே நாய்களும் புகுந்தது போல. மலையாளிகளின் அரசியல் வன்முறையை இந்த நாச்சுழற்றல் பெருமளவுக்கு திசைமாற்றி அமைதியை உருவாக்கிவிட்டது என்கிறார்கள். அந்த விவாதங்களில் ஏராளமான மம்மூட்டிகள், மோகன்லால்கள், சுரேஷ்கோபிகள். நக்கல், நையாண்டி, இடக்கு, ஆக்ரோஷமான வசைகள். மலையாளம் இளக்காரத்தை தெரிவிப்பதற்கென்றே உருவான மொழி என்று தோன்றிவிடும்.
எந்தப் பண்பாட்டுக்கும் அடியில் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு. மலையாளக்கலாச்சாரத்தின் உள்ளே இருப்பது அரசியல்வெறி. அதை அவர்களால் திரும்பிப் பார்த்துக் கொள்ளவே முடியாது. அந்தப் பைத்தியம் இங்கிருக்கும் மேலோட்டமான அமைதிக்கும், சொகுசுக்கும் அடியில் எங்கோ உள்ளது. ஆழம் சுழிக்கும் அந்த இடம் வரை செல்ல இங்கிருப்போரால் முடியாது, ஆனால் வெளியில் இருந்து வந்தவர்களால் உடனே அதை கண்டடையமுடியும்.
எர்ணாகுளத்தில் துளிவாழ்க்கைக் காலகட்டத்தில் காலைநடை செல்லும்போது இந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன். ஏதோ சட்டப்பிரச்சினையால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட வீடு ஒன்றின் சுவரில் வெறிபிடித்ததுபோல எவரெவரோ என்னென்னவோ எழுதியிருக்கிறார்கள். ஒரு வீட்டுக்கு பைத்தியம் பிடித்தது போலத் தோன்றியது. ஆழத்தில் சுழிகளில் சிக்கிக்கொள்ளும் மூழ்கிய கப்பல்களின் மேல் கடலின் சிப்பிகள் வந்து படிந்து படிந்து அப்படியே சிப்பிக்குவையாக ஆக்கிவிடும் என்று கேட்டிருக்கிறேன். கேரளத்தின் மொத்தவெறியும் வந்து இந்த வீட்டை மூடியிருக்கிறது.
இரண்டுநாள் இந்த வழியாக காலைநடை சென்றேன். இந்த வீடு போடும் ஓலம் செவிகளைக் கூசச்செய்தது. வழி மாற்றிச்செல்ல ஆரம்பித்தேன்.
இரவு மின்னூல் வாங்க இரவு நாவல் வாங்க
காவியம் – 15
மிதுனம், பைதான் அருங்காட்சியகம். பொமு1, மாக்கல்செதுக்குஅன்று பத்து நிமிடத்திற்குள் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் புழுதியில் ரத்தம் பரவிக்கொண்டிருக்க குப்புறக்கிடந்த என்னைப் பார்த்துவிட்டார். அந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்ததே நான் உடனே கண்டுபிடிக்கப்படுவேன், சாக வாய்ப்பில்லை என்பதற்காகத்தான். இருசக்கர வண்டிக்காரர் கூச்சலிட கீழே படிக்கட்டில் நீர்க்கரையோரமாக இருந்த நின்றிருந்த படகுகளில் தூங்கிக்கொண்டிருந்த குகாக்கள் மேலே வந்து என்னை தூக்கிக்கொண்டார்கள். என் கைகளுக்கு என் சட்டையால் இறுகக்கட்டுப்போட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
என் முழங்கையிலிருந்து தோள் வரை கிழிசலுக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன. ஓட்டுக்கூரையும் சுதைச்சுவர்களும், அலுமினியப் பெயிண்ட் அடித்த செங்குத்தான பெரிய கம்பிகள்கொண்ட சன்னல்களும் உடைய பொதுப்பகுதியில் இரும்புக்கட்டிலில் நான் படுக்கவைக்கப்பட்டேன். எனக்கு மெல்லிய நினைவுதான் இருந்தது. ஆனால் என்ன நிகழ்கிறது என்று தெரிந்துகொண்டும் இருந்தேன்
என் சட்டையிலேயே என் அடையாள அட்டை இருந்ததனால் கல்லூரிக்கு தகவல் தெரிவித்தார்கள். நள்ளிரவிலேயே ஸ்ரீகர் மிஸ்ரா வந்துவிட்டார். நான் காலையில் கண்விழித்தபோது என் அருகே அவர் அமர்ந்திருந்தார். என்னிடம் ”என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.
”என் பணத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள்” என்று நான் சொன்னேன்.
”அப்படியா?” என்று அவர் அவநம்பிக்கையுடன் கேட்டார்.
“ஆம்” என்றேன்.
“ராதிகாவுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
”வேண்டாம்” என்று நான் பதறி எழுந்தேன்.
”ஏன்?” என்று அவர் கேட்டார்.
”அவளுக்குத் தெரியவேண்டியதில்லை. அவள் பயந்துவிடுவாள்” என்றேன்.
”இல்லை அவளுக்குத் தெரியவேண்டுமல்லவா?”
நான் “அவள் இங்கே வந்து என்னைப்பார்க்கக்கூடாது” என்றேன்.
அவருடைய கண்கள் மாறுபட்டன ”ஏன்?” என்றார். பிறகு ”இது அவளுடைய வீட்டார் செய்ததா?” என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
”நான் நினைத்தேன். அப்படி எங்கோ ஏதோ திரண்டு கொண்டிருப்பதாக ஒரு சின்ன சஞ்சலம் எனக்கு இருந்துகொண்டிருந்தது. நீங்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதை இங்கு யார் யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான கணக்குகள் இருக்கும். இந்தியர்களுடைய எல்லாக் கணக்குகளும் கடைசியில் ஜாதியில் தான் சென்று முடியும்.”
”நாம் அதைப்பற்றி பேசவேண்டாம். அவள் இங்கு வந்து என்னைப் பார்த்தால் பிரச்னை தீவிரமடையும்” என்றேன்.
“நீ என்ன செய்யப்போகிறாய் அவளை விட்டு ஓடப்போகிறாயா?” என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
”பிரியவேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்யலாம். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியிலே அர்த்தப்படுகிறது” என்று ஸ்ரீகர் மிஸ்ரா சொன்னார்.
நான் “எனக்கு ஒன்றும் தெளிவாக இல்லை…” என்றேன்.
”நான் டாக்டரை சென்று பார்க்கிறேன். உனக்கு டெட்டனஸ் ஊசி இன்னும் இரண்டு போட வேண்டும் என்றார் ஸ்ரீகர் மிஸ்ரா. ”ஆண்டிசெப்டிக் மருந்துகள் தரப்பட்டிருக்கின்றன. பெரிய அளவில் ரத்த இழப்பு இல்லாததனால் ஒன்றும் பயப்படுவதற்கில்லை. ஒரு இரண்டு நாள் இங்கே இருக்க வேண்டியிருக்கும் பத்து நாள் கழிந்து வந்து தையல் பிரிக்க வேண்டியிருக்கும்”
நான் “அவளுக்கு தெரியவேண்டாம்” என்றேன்.
”சரி” என்றபின் அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த குடையை சன்னல் கம்பியிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
நான் “மாஷ்” என்று அழைத்து அவர் திரும்பியதும் ”எப்படியாவது அவளைத் தடுத்துவிடுங்கள். இங்கே வந்து என்னைப் பார்க்கவேண்டாம் என்று சொல்லுங்கள் அது மேலும் சிக்கல். அவள் இங்கே வருகிறாளா என்னைப் பார்க்கிறாளா என்று கவனித்துக்கொண்டே இருப்பார்கள்” என்றேன்.
“ஆம், தெரிகிறது, சொல்லிப்பார்க்கிறேன்” என்றார்.
ஆனால் அவர் சென்று ஒருமணி நேரத்திற்குள் ராதிகா சீற்றத்துடன் என் அறைக்குள் நுழைந்தாள். என்னருகே வந்து ஓசையுடன் இரும்பு நாற்காலியை இழுத்து அருகே போட்டு அமர்ந்து ”சொல் என்ன நடந்தது?” என்றாள்.
“இல்லை நான்…”
“எனக்குத் தெரியும் என்ன நடந்தது என்று. உன்னை தாக்கியவர்கள் உனக்குத்தெரிந்தவர்களா?” என்றாள்.
”இல்லை”
”அவர்கள் பாட்னாவிலிருந்து வந்தவர்களா?”
நான் தலையசைத்தேன்.
“நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?”
நான் பேசாமல் இருந்தேன். ”என்னைப் பிரிந்து போய்விடலாம் என்றா? திரும்ப ஒருபோதும் நாம் சந்திக்கக்கூடாது அதுதானே?”
“ஆமாம்” என்றேன்.
“என்ன செய்யலாம்?” என்று அவள் கேட்டாள்.
நான் அவளைப் பார்த்தேன்.
“சொல்”
“என்னால் முடிவெடுக்க முடியவில்லை. நான் மிகத்தனிமையானவன், மிகப்பலவீனமானவன். எனக்கு என்னுடைய சாதியின் பலமில்லை. இந்தியாவில் உள்ள போலீசோ நீதிமன்றமோ கல்லூரியோ அல்லது வேறெந்த சட்டபூர்வமான அமைப்போ எனக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை. சொல்லப்போனால் அவையெல்லாமே ஒன்று திரண்டு என்னை வேட்டையாடும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது” என்றேன்.
”ஆகவே…?” என்று அவள் கேட்டாள்.
“எனக்கு சொல்லத்தெரியவில்லை. என்னால் எவருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்றுதான் நான் யோசிக்கிறேன்.”
அவள் கண்களை இடுக்கிக்கொண்டு என்னைக்கூர்ந்து பார்த்து ”அல்லது உன் உயிருக்காக பயப்படுகிறாயா?” என்றாள்.
“உயிருக்காக பயப்படுவது என்றால் என்னவென்று எங்கள் சாதிக்காரர்களுக்குத்தான் தெரியும். உனக்கே தெரியும், என் அப்பா எப்படி இறந்தார் என்று. அதே சாக்கடையில் சென்று கிடப்பதற்கு எனக்கு மனமில்லை” என்றேன்.
“அப்படியானால் பிரிந்துவிட நினைக்கிறாயா?”
நான் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன்.
”நான் ஒன்று சொல்லவா, நான் உன்னை எந்த நிலையிலும் விடப்போவதில்லை. உன்னைப் பிரிவதற்கான முடிவை நான் எடுக்கப்போவதில்லை. ஆனால் நீ என்னைப் பிரிந்து செல்வதாக முடிவெடுத்தால் அது உன்னுடைய சுதந்திரம். உன்னுடைய பயம் எனக்குப்புரிகிறது. உன்னைக் கட்டாயப்படுத்தும் இடத்திலோ பழிக்கும் இடத்திலோ நான் இல்லை” என்று ராதிகா சொன்னாள்.
நான் மெல்லிய குரலில் “நான் என்ன செய்யவேண்டும் என்று நீ சொல்” என்றேன்.
“நீ என்னை நம்புகிறாயா?”
நான் அவளைப் பார்த்து ”இதுவரை இந்த உலகில் நான் இரண்டு பேரைத்தான் நம்பியிருக்கிறேன். நீ இரண்டாமவள்” என்றேன்.
“ஸ்ரீகர் மிஸ்ரா என்ன சொன்னார்?”
“என் வாழ்க்கை பற்றிய முடிவை நாம் இருவரும் எடுக்கவேண்டும் என்று சொன்னார்.”
அவள் முகம் மலர்ந்து ”நாம் இருவரும் என்று தானே சொன்னார்? நீ என்று சொல்லவில்லை அல்லவா?”
“ஆம்”
“அப்படியானால் நாம் இருவரும் சேர்ந்து முடிவெடுப்போம்.”
நான் ”எனக்கு என்று தரப்பேதுமில்லை. நீயே எனக்கும் சேர்த்து முடிவெடு. நீ எந்த முடிவெடுத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்.”
”உயிருக்கு பயமில்லையா?”
”இல்லை உன்னுடன் இருந்தால் எந்தப்பயமும் இல்லை.”
”அப்படியென்றால் இன்றே கிளம்புவோம்.”
”இன்றா?” என்றேன்.
”ஆம், இந்த மருத்துவமனையிலிருந்து. இன்றே நீயும் நானும் கிளம்புவோம் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். நீ இங்கிருந்து இரவு ஏழரை மணிவாக்கில் எழுந்து பின்பக்கம் இருக்கும் முற்றத்துக்குப் போ. பின்வாசல் அங்கே இருக்கிறது. ஏழரை மணிக்கு நான் அங்கிருப்பேன். டாக்ஸி காத்திருக்கும். நீ ஏறிக்கொண்டால் போதும்”
“சரி”
“நம்முடைய படிப்பு, சான்றிதழ் எதையுமே நாம் வாங்கிக்கொள்ள முடியாது. இருவரும் வெறுங்கையுடன் தான் போக வேண்டியிருக்கும்” என்றாள்.
”இல்லை. என்னுடைய சான்றிதழ்கள் என்னிடம் தான் இருக்கின்றன” என்றேன்.
அவள் ”போதும் எனக்கும் எம்.ஏ. கல்விக்கான சான்றிதழ் இருக்கிறது. நாம் கல்கத்தா செல்வோம்” என்றாள்.
”கல்கத்தாவுக்குத்தான் நாம் செல்வோம் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்” என்றேன்.
“கல்கத்தா அல்ல, அதற்கப்பால் வங்காளம் பாதுகாப்பானது.”
நான் ”இல்லை அதற்கப்பால் எங்காவது சொல். தெற்கே, நீ சொன்னாயே நமது ஜாதி என்றால் என்ன என்றே தெரியாத ஊர்களுக்கு.”
”சரி, என்னிடம் பணம் இருக்கிறது. நகையும் இருக்கிறது. ஓரிரு ஆண்டுகள் கூட நாம் கவலையில்லாமல் வாழ முடியும். அதற்குள் வேலை தேடிக்கொள்ளலாம். எந்த அளவுக்கு நாம் உடனே கிளம்புகிறோமோ அந்த அளவுக்கு அவர்களிடமிருந்து தப்ப முடியும். இந்த நிலையில் இவ்வளவு கட்டுப்போட்ட கையுடன் நீ கிளம்புவாய் என்று அவர்கள் எதிர்பார்க்கவே மாட்டார்கள்.”
நான் ”ஆனால் நாம் எங்கு சென்றிருப்போம் என்று உன் அண்ணனைப்போன்ற ஒருவர் எளிதில் கண்டு பிடிக்க முடியும்” என்றேன்.
”விமானத்திலோ முன்பதிவு பெட்டியிலோ சென்றால்தான். பதிவு செய்யாத ரயிலில் தனித்தனியாக ஏறி இறங்கிச் சென்றால் நம்மைப் பின்தொடரவே முடியாது. நாம் தெற்கே சென்றிருப்போம் என்று அவர்களால் கற்பனை செய்ய முடியாது. அதையெல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று ராதிகா சொன்னாள்.
”எல்லாம் நீயே திட்டமிடு. உன்னுடைய அளவுக்கு இத்தனை தர்க்கபூர்வமாகவும் தெளிவாகவும் என்னால் யோசிக்க முடியவில்லை” என்று நான் சொன்னேன்.
அவள் பேசிக்கொண்டிருப்பது வரை நான் ஒரு நிதானமான மனநிலையில் இருந்தேன். அவள் கிளம்பிச்சென்றதும் என் உள்ளம் ஆட்டம்போடத் தொடங்கியது. என்னால் படுத்திருக்க முடியவில்லை. என் உள்ளம் விசைகொண்டபோது கையில் போடப்பட்ட தையல்களில் வலி அதிகரித்தது. எப்படியோ கையை அசைத்துக்கொண்டிருந்தேன். கையை அசைக்காமலிருந்தபோதுகூட என் உடலின் இறுக்கமும் தளர்வும் கையில் வலியை நரம்புத்துடிப்பு போல உணரச்செய்தன.
நான் என் வாழ்நாளில் சாகசம் என எதையுமே செய்ததில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் துணிந்ததில்லை. நினைவறிந்த நாள் முதலே என்னை ஆட்கொண்டிருந்த முதல் உணர்ச்சியே அச்சம்தான். என் சுற்றம், என் சூழல் எல்லாமே எனக்கு அச்சத்தையே பழக்கிக்கொண்டிருந்தன. ஒரு தெருவில் நடக்கும்போது அங்கே ஒரு சிறுகூட்டம் தென்பட்டால் அனைவரும் அதைநோக்கிச் சென்று அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பார்கள். நான் நேர் எதிர்மூலைக்கு விலகிச் சென்றுவிடுவேன். ஒரு பொது இடத்தில் யார் யாருடன் சண்டை போட்டாலும், சற்றே குரல் உயர்ந்து ஒலித்தாலும் என் உடல் நடுங்க தொடங்கிவிடும். மிக வேகமாக முடிந்தவரை எவர் கவனத்தையும் கலைக்காமல் விலகிச்செல்வதே என் இயல்பு.
நான் எல்லா அந்நியர்களையும் அஞ்சினேன். ஒருவரிடம் சென்று என்னால் வழிகேட்க முடியாது. ஓரு புதிய உணவகத்தில் இயல்பாக நுழைய முடியாது. பேருந்தில் பிறரை தொட்டுக்கொண்டு அமரமுடியாது. சினிமா அரங்கில் நான் அமர்ந்திருக்கும்போது எவரேனும் என் அருகே அமரவந்தால் என்னையறியாமலேயே நான் அவரை கூர்ந்து கவனிப்பேன், அவர் அமரும்போது அவருக்காக என் உடல் தானாகவே சற்று ஒடுங்கும், இடம் விடுவதுபோல. எப்போதும் பிற எவரையும் தொட்டுவிடக்கூடாது என்ற தன்னுணர்வு என் உடலில் இருந்தது. அதை பிறர் தனியாகக் கவனிப்பதில்லைதான், ஆனால் அவர்கள் அறியாமலேயே என்னிடம் பேசும்போது அவர்களிடம் ஒரு மிடுக்கும் மேல்நிற்கும் தோரணையும் வந்துவிடும். அது என்னை மேலும் ஒடுங்கச்செய்யும்.
என் குரல் ஒருபோதும் மேலெழுவதில்லை. ஒருவரிடம் நான் பேசும் முதல்சொற்றொடர் மிகத்தாழ்ந்ததாகவும் மிகச்சிதைந்ததாகவுமே இருக்கும். “என்ன?” என்று அவர் கேட்டதும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, மூச்சைத் திரட்டிக்கொண்டு, நான் மேலும் பேசமுற்படவேண்டும். பள்ளியில் என்னிடம் கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொன்னதில்லை. அத்தனை சிரமப்பட்டு பதில்சொல்வதை விட அடிவாங்குவதே நல்லது என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. என் நாக்குக்கும் நெஞ்சிலுள்ள மொழிக்கும் நடுவே நெடுந்தூரம் இருந்தது.
நான் பேசியே ஆகவேண்டிய சூழல் கல்லூரிக்குச் சென்றபின் உருவானது. ஔரங்காபாதில் நான் எனக்கான சிறு குழுவைக் கண்டடைந்தேன். அனைவருமே தாழ்த்தப்பட்ட சாதியினர். நான் கல்லூரிக்குள் நுழையும்போதே மதன்ராவ் அம்ப்ரே என்னை தேடிவந்து அறிமுகம் செய்துகொண்டான். அங்கே தாழ்த்தப்பட்ட மாணவர்களின் அமைப்பு ஒன்று இருந்தது. அம்பேத்கர் படிப்பு வட்டம். நான் அதில் சேர்ந்துகொள்ளாமல் வழியில்லை. அங்கே நான் பேசவும் சிரிக்கவும் நண்பர்கள் அமைந்தனர்.
ஆனால் ஓராண்டில் அங்கும் என் சாதியினர் மட்டுமே எனக்கு அணுக்கமானவர்களாக எஞ்சினர். மஹர்கள் தங்களை போர்வீரர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் எண்ணினர். உண்மையிலேயே பெரும்பாலானவர்களின் குடும்பத்தினர் ராணுவவீரர்கள். கழிவகற்றும் வேலைசெய்யும் சாதியினரை சமமாக நடத்த அவர்களால் இயலவில்லை. அது பிறரிடையே அவர்களின் மதிப்பை குறைக்கிறது என எண்ணினர். ஆனால் கல்லூரியில்தான் என் குரல் வெளியே வந்தது. என்னால் பிறரைக் கவரும்படி பேசமுடியும் என்று கண்டுகொண்டேன். குறிப்பாக எனக்கு நூற்றுக்கணக்கான இந்தி சினிமா நகைச்சுவை வசனங்கள் நினைவில் இருந்தன. ஆயிரத்துக்குமேல் பாடல்கள் நினைவில் இருந்தன.
எம்.ஏ. இரண்டாம் ஆண்டில் நான் அறிஞன், கவிஞன் என அறியப்படலானேன். என் வட்டம் சிறியதாகியது. ஆனால் அதில் பிற சாதியினரும் இடம்பெற்றார்கள். அவர்களிடையே என்னுடைய பைத்தானி பங்கி உச்சரிப்பு என்னை அடையாளம் காட்டியதனால் நான் தரப்படுத்தப்பட்ட மராட்டியிலும் இந்தியிலும் பேசினேன். கூடுதல் சம்ஸ்கிருதச் சொற்களை சேர்த்துக்கொள்வதும், அவற்றை சரியானபடி உச்சரிப்பதும் எனக்கு ஓர் இடத்தை உருவாக்கி அளித்தது. முதலில் அப்படிப்பேச முயன்றுகொண்டே இருந்தேன், பின்னர் என்னையறியாமலேயே அது என் மொழியாகியது. நான் அதை ஊன்றுகோலாக, தெப்பமாக பற்றிக் கொண்டிருந்தேன்.
ஆனால் அனைத்துக்கும் அடியில் நான் அஞ்சிக்கொண்டுதான் இருந்தேன். நான் பேசிக்கொண்டிருக்கையில், அது எத்தனை தீவிரமான உரையாடலாக இருந்தாலும் சரி, ஒருவன் ஊடுருவினால் என் பேச்சு அப்படியே நின்றுவிடும். ஆனால் எவர் பேச்சையும் என்னால் மறித்துப் பேசமுடியாது. ஒரு மாற்றுக்கருத்தை தெரிவிக்கக்கூட முடியாது. நான் எவரையும் மறுப்பதே இல்லை. நான் பேசும் முறையை நானே விலகிநின்று பார்த்திருக்கிறேன். ‘ஆமாம், அது சரிதான், ஆனால்…’ என்றுதான் எதையாவது மறுத்தேன். எவர் என்ன சொன்னாலும் என்னிடமிருந்து வரும் முதல் சொல், ‘ஆமாம்’ என்பதுதான்.
நான் அன்று பிற்பகல் முழுக்க நடுங்கிக்கொண்டிருந்தேன். நர்ஸ் வந்து என்னைப் பார்த்துக் காய்ச்சல் இருக்கிறதா என்று கேட்டாள். நான் பேசமுயன்றாலும் என் நாக்கு உலர்ந்திருந்தது. அவளே தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்து காய்ச்சல் இருப்பதாகச் சொன்னாள். வெண்ணிறமான மாத்திரை ஒன்றைக் கொடுத்து விழுங்கச் சொன்னாள். ”தையல் போட்டிருக்கிறது. ஆண்டிபயாட்டிக் கொடுத்திருக்கிறது. காய்ச்சல் வரும்…” என்றாள்.
மாத்திரையை விழுங்காமல் நாவிலேயே வைத்திருந்தேன். அவள் அப்பால் சென்றதும் துப்பிவிட்டேன். காய்ச்சல் மாத்திரையானாலும் அது எனக்கு தூக்கத்தை அளிக்க வாய்ப்பிருந்தது. என்னால் எதையுமே எண்ண முடியவில்லை. என் அகம் வெறும் சொற்களாக கொப்பளித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அந்த முள்முனைவதை தாங்காமல் அப்போதே கிளம்பி வெளியே சென்றாலென்ன என்று தோன்றிவிட்டது. ஆனால் மாலை ஐந்து மணிக்குத்தான் பார்வையாளர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஏழுமணிக்குள் திரும்பிச்செல்லவேண்டும். ஏழரை மணிக்கு ஆஸ்பத்திரியின் எல்லா வாசல்களும் மக்கள்கூட்டத்தால் நிரம்பி நெரிசலிடும். வெளியே செல்பவர்களை எவரும் கவனிக்கப்போவதில்லை.
என் கையில் பெரிய கட்டு இருந்தது. அதை மறைக்காமல் நான் வெளியே செல்லமுடியாது. என் சட்டையை கட்டுப்போட கிழித்துவிட்டார்கள். மருத்துவமனையில் எனக்கு வேறு ஆடை எதுவும் தரவில்லை. ரத்தத்தில் நனைந்த என்னுடைய பைஜாமாவை மாற்றி ஸ்ரீகர் மிஸ்ரா கொண்டு வந்த புதிய பைஜாமாவைப் போட்டிருந்தேன். மேலே சட்டை ஏதுமில்லை. ராதிகா எனக்கு ஆடை கொண்டுவராமலிருக்க மாட்டாள். ஆனால் வெளியே செல்ல ஏதாவது ஒரு மேலாடை வேண்டும்.
நான்காவது படுக்கையில் இருந்த பெண்மணி ஒரு சால்வை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டேன். அவள் அதைப் போர்த்தியபடி சுருண்டு படுத்திருந்தாள். அதை எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் இருபத்தெட்டு படுக்கைகள் கொண்ட இந்த நீண்ட வார்டில் எவரும் கவனிக்காமல் அதை எடுப்பது சுலபம் அல்ல. என்ன செய்யலாம் என்று யோசிக்கலானேன். அந்த சிந்தனை என் அகத்தை கொஞ்சம் திரட்டி ஒருங்கிணைத்தது. பதற்றம் குறைந்தது. இரண்டு முறை கழிப்பறைக்குச் சென்று வந்தேன். கழிப்பறைக்குச் செல்லும் வழியில் நான்காவதாக அவளுடைய படுக்கை. அவள் கால் ஏதோ விபத்தில் முறிந்து பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அவளுக்கு கடுமையான வலிநீக்கி கொடுக்கப்பட்டிருக்கலாம். தூங்கிக்கொண்டே இருந்தாள்.
கழிப்பறையின் இருபக்கமும் திறந்து வெளியே செல்ல வழி இருந்தது. ஐந்து மணிக்குமேல் இங்கே நல்ல கூட்டம் இருக்க வாய்ப்புண்டு. அவளைப் பார்க்க எவரும் வராவிட்டால் நேராகச் சென்று அந்த சால்வையை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்குச் சென்று அப்படியே வெளியேறிவிடவேண்டியதுதான். ஆனால் நல்ல கூட்டம் வரவேண்டும். நர்ஸ்கள் இருக்கக்கூடாது. அந்தப் பெண்மணி விழித்திருக்கக் கூடாது. அவளைப் பார்க்க எவரும் வந்துவிடக்கூடாது. எத்தனை தடைகள். ஒன்று குறுக்கே வந்தால்கூட அந்தத் திட்டம் சரிவராது. என் போர்வையை போர்த்திக்கொண்டு கழிப்பறைக்குச் செல்லலாம்தான். ஆனால் அங்கிருந்து வெளியே போக முடியாது. அது ஆஸ்பத்திரிக்குரிய நீலப்போர்வை.
வேறுவழிகளை யோசித்தேன். எவரேனும் சட்டையை கழற்றிப் போட்டிருக்கிறார்களா? வேறு ஏதேனும் ஆடை கிடைக்க வாய்ப்புண்டா? ஏழுமணி என்றால் இருட்டியிருக்கும். இருட்டான பகுதி வழியாகவே போய்விடலாம். வாட்ச்மேனின் இடத்தைக் கடப்பதுதான் பெரிய சவால். ஆனால் போகும் வழியிலேயே ஏதாவது ஆஸ்பத்திரி ஊழியர் என்னைப் பார்த்துவிட எல்லா வாய்ப்பும் இருந்தது. அத்தனை பெரிய கட்டுடன் ஒருவர் வெளியே செல்வது மிகவும் கண்ணை உறுத்துவதுதான். அதற்கு ஒன்று செய்யலாம், ஒரு வார்டிலிருந்து இன்னொன்றுக்கு செல்வதைப்போல பாவனை காட்டலாம். ஆனால் நோயாளி அப்படி தனியாகச் செல்லமுடியுமா?
வெவ்வேறு வழிகளில் சென்று சென்று திரும்பிக்கொண்டே இருந்தது உண்மையில் அந்த காலத்தை கடப்பதற்கு உதவியது. ஐந்து மணிக்கே வருகையாளர்கள் வரத்தொடங்கி ஆறுமணிக்கெல்லாம் வார்டு முழுக்க நெரிசல். எவரும் எவரையும் பார்க்கமுடியாதபடி உடல்களின் அசைவு. மக்கள் வர வர நான் நம்பிக்கைகொண்டபடியே இருந்தேன். ஏதோ ஒன்று தவறாக நடக்கவிருக்கிறது, என் கூரிய புத்தியால் அதை வெல்லப்போகிறேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. நான் செல்லும்வழியில் அந்தச் சால்வையை எடுத்துக்கொண்டேன். அந்தப் பெண்மணி தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே எவருமில்லை. அப்பால் நின்ற நர்ஸ் கவனிக்கவில்லை.
நெஞ்சு படபடக்க கழிப்பறைக்குச் சென்றேன். அங்கிருந்து வராந்தாவுக்குச் சென்று படிகள் வழியாக முற்றத்தில் இறங்கினேன். வாட்ச்மேன் அறையை பார்த்துவிட்டு அதை நோக்கிச் சென்றேன். என் பார்வையை வாட்ச்மேனை நோக்கி தூக்கக்கூடாது. என்னை அவன் கவனிக்கக்கூடாது. ஆனால் அதற்கும் தேவை வரவில்லை. ”ராம்” என்று ராதிகாவின் குரல். அவள் டாக்ஸியில் உள்ளே வந்து என் வார்டுக்கு அருகிலேயே முற்றத்தில் நின்றிருந்தாள்.
நான் திகைத்து நின்றதும் என் கையைப் பிடித்து “ஏறிக்கொள்” என்றாள்.
”எப்படி?” என்றபின் ஏறிக்கொண்டேன்.
அவள் ”உன் சட்டைகளை எடுத்துவந்தேன். ஸ்ரீகர் மிஸ்ராவிடம் சொல்லிவிட்டேன். உன்னுடைய பெட்டியும் பொருட்களும் டிக்கியில் இருக்கின்றன”
“என் புத்தகங்கள்?”
“உளறாதே”
நான் உளறியது அப்போதுதான் தெரிந்தது. அவள் எனக்கு இருந்ததிலேயே பெரிய சட்டையை கையில் வைத்திருந்தாள். அதை ஒரு கையை மட்டும் நுழைத்து அணிந்துகொண்டு மேலே சால்வையைச் சுற்றிக்கொண்டேன்.
“நாம் பஸ் ஸ்டாண்டுக்குச் செல்கிறோம்” என்று அவள் சொன்னாள்
“அங்கிருந்து?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. அதன்பிறகுதான் நான் ஓட்டுநர் இருக்கும் உணர்வை அடைந்தேன்.
நாங்கள் பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொண்டோம். மிர்சாபூர் செல்ல டிக்கெட் எடுத்தோம். “மிர்ஸாபூருக்கா?” என்றேன்.
“நீ பேசாமல் என்னுடன் வா” என்றாள்.
மிர்ஸாபூர் செல்லாமல் வழியிலேயே இறங்கிவிட்டோம். அங்கிருந்து அலஹாபாத் சென்றோம். அங்கிருந்துதான் ரயில் ஏறினோம். அவள் எங்களைப் பின் தொடர்பவர்களை ஏமாற்றுகிறாள் என அதற்குப்பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஐந்து நாட்களுக்கு பின் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers