S. Ramakrishnan's Blog, page 20

December 26, 2024

புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.

நிகழ்விற்குத் தலைமேற்று சிறப்பித்தார் தொழிலதிபர் அம்பாள் ஆர் முத்துமணி. அவர் தேர்ந்த இலக்கிய வாசகர். என் மீது அன்பு கொண்ட நண்பர்.

நிகழ்விற்கு காளிமார்க் நிறுவன உரிமையாளர் தனுஷ்கோடி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்.

கவளம் நூல் குறித்து சேரலாதன் சிறப்பான உரையை நிகழ்த்தினார். சிறுகதையின் பல்வேறு முனைகளைத் தொட்டு பேசியது அவரது ஆழ்ந்த வாசிப்பின் அடையாளமாக இருந்தது.

ஒளியின் கைகள் நூலைப் பற்றிய இளம்பரிதியின் பேச்சு அபாரம். ஓவியம் குறித்த அவரது தேடலும் பார்வையும் சிறப்பாக பேச்சில் வெளிப்பட்டது.

அது போலவே பாலபாரதி சிறார் இலக்கியத்தின் தற்காலப் போக்குகளை சுட்டிக்காட்டி எனது சிறார் நூலை அறிமுகம் செய்த விதமும் சிறப்பாக அமைந்திருந்தது

நிகழ்வின் துவக்கமாக கனியமுதன் பாரதியார் பாடலை இனிமையாகப் பாடி அரங்கை மகிழ்வித்தான். கனிக்கு எனது அன்பும் நன்றியும்.

புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்த எனது மகன் ஹரி பிரசாத் மற்றும் நூலை அழகாக அச்சிட்டுத் தந்த நூல்வனம் மணிகண்டன். தேசாந்திரி பதிப்பகத்தின் மேலாளர் அன்புகரன். உதவியாளர் கண்ணகி. நிகழ்வைத் தொகுத்து வழங்கிய முரளி. விழாவிற்குத் துணை நின்ற சண்முகம், அகரமுதல்வன், கபிலா காமராஜ். ஸ்ருதி டிவி கபிலன், ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த டாக்டர் பரணி. நண்பர் சண்முகசுந்தரம், மொழிபெயர்ப்பாளர் ஹேம்ஸ். ஜென் ராம், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

எனது அழைப்பை ஏற்று நிகழ்விற்கு வருகை தந்த எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள். திரைத்துறை நண்பர்கள், இலக்கிய வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பும் நன்றியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2024 23:02

December 24, 2024

டிசம்பர் 25 புத்தக வெளியீடு

நாளை மாலை எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது.

இதில் எமர்சன் பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறேன்

அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2024 00:19

December 23, 2024

தேசாந்திரி அரங்கு எண்

48வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எனது அனைத்து புத்தகங்களும் அங்கே கிடைக்கும்.

எண் 334 மற்றும் 335

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2024 06:02

தேவதச்சன் புதிய கவிதைத் தொகுப்பு

தேவதச்சனின் புதிய கவிதைத் தொகுப்பு தேதியற்ற மத்தியானம் கெட்டி அட்டை ( Hard Bound ) பதிப்பாக வெளியாகியுள்ளது.

முந்தைய பதிப்பில் காணப்பட்ட அச்சுப்பிழைகள் நீக்கப்பட்டு சிறப்புப் பதிப்பாக தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

விலை ரூ 300.

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 334 மற்றும் 345ல் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்

••

தேவதச்சனின் 2016 வரையிலான முழுக்கவிதைத் தொகுப்பினையும் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. சில தினங்களில் இந்த நூல் வெளியாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2024 05:57

December 20, 2024

கிதார் இசைக்கும் துறவி

2024ல் கவனம் பெற்ற நூல்களின் பட்டியலை இந்து தமிழ்திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை நூல் இடம் பெற்றுள்ளது.

நன்றி. தி இந்து தமிழ் திசை நாளிதழ்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2024 22:54

December 18, 2024

சாகித்ய அகாதமி விருது

2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.


பாரதி, புதுமைப்பித்தன், வஉசி என அவரது அரிய பதிப்புப் பணிகள் மற்றும் ஆய்வுகள் சிறப்பானவை. சங்க கவிதைகளைத் தங்கப்பாவுடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறந்த வரலாற்று அறிஞர். தமிழ் பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து புதிய வெளிச்சத்தைக் காட்டியவர். அவர் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2024 20:31

December 17, 2024

அழைப்பிதழ்

டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2024 03:37

மூன்று மெய்யியல் நாவல்கள்

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் மூன்று மெய்யியல் நாவல்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

••

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள்.

இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன்.

காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணின் உடலையும் மற்றொரு ஆணின் தலையையும் நேசிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர் ரா.ஸ்ரீ.தேசிகன்.

••

அமெரிக்க எழுத்தாளர் வில்லா கேதர் எழுதிய டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப் நாவலின் தமிழாக்கமே அன்புப்பிடியில் இருவர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதை நடக்கிறது . நியூ மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களாகப் பணியாற்றும் இருவரின் வாழ்க்கையை நாவல் மிகவும் நுண்மையாகச் சித்தரிக்கிறது.

உலகின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதனை லைஃப் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த நாவலை சி. ஸ்ரீநிவாசன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

••

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை அறிவதற்கான ஆன்மீகத் தேடலில் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். இதில் சோமர்செட் மாம் ரமண மகரிஷியை ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்துள்ளார்.

1938 ஜனவரியில், சோமர்செட் மாம் திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஷ்ரமத்திற்கு வருகை தந்து பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்திருக்கிறார். அந்த அனுபவத்தின் வெளிப்பாடாகவே இந்த நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த நாவலை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

••

மாறிய தலைகள் நாவலை 1964ம் ஆண்டு தென்மொழிகள் புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. அன்புப்பிடியில் இருவர் நாவலும் ஜோதி நிலையம் சார்பில் 1961 ஆண்டு வெளியாகியுள்ளது. சோமர்செட் மாம் நாவலை அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள டாக்டர் சந்திரமௌலி புதிதாக மொழியாக்கம் செய்துள்ளார்.

உலகப்புகழ்பெற்ற மூன்று மெய்யியல் நாவல்களையும் இன்றைய வாசகர்கள் ஒரு சேர வாசிப்பதற்காகத் தேசாந்திரி பதிப்பகம் அழகிய பதிப்பாக வெளியிடுகிறது

••

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி அரங்கில் இந்த மூன்று மெய்யியல் நாவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2024 03:21

December 16, 2024

காதலின் இருவேறு பாதைகள்.

ஆஸ்திரியக் கவிஞர் இங்கேபோர்க் பாக்மென் பற்றிய திரைப்படம் ingeborg-bachmann-journey-into-the-desert. பெண் இயக்குநர் Margarethe von Trotta இயக்கியுள்ளார்.

1950-1960களில் புகழ்பெற்ற கவிஞராக விளங்கியவர் பாக்மென். 1973 இல் தனது 47 வயதில் இறந்து போனார்..

சுவிஸ் நாடக ஆசிரியர் மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் பாக்மேனுக்குமான காதலையும் அவர்களின் உறவில் ஏற்பட்ட விரிசலையும் பற்றிய இத்திரைப்படம் அன்றைய இலக்கிய உலகின் செயல்பாடுகள் மற்றும் கவிஞனின் ஆளுமையைச் சிறப்பாக விவரிக்கிறது. 1958 மற்றும் 1964 க்கு இடையில் கதையின் பெரும்பாலான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

1958 ஆம் ஆண்டுப் பாரிஸில் நடந்த முதல் சந்திப்பில் இங்கேபோர்க் பாக்மென் மீது மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் காதல் ஏற்படுகிறது. Seine பாலத்தில் அப்போலினேயரின் கவிதைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் காட்சி அழகானது

அந்தக் காதலின் தீவிரத்தில் அவருடன் இணைந்து வாழுவதற்காகப் பாக்மென் சூரிச்சிற்கு இடம் மாறுகிறார். ஆனால் சில நாட்களிலே காதல் கசப்படைய ஆரம்பிக்கிறது. பரஸ்பரம் சண்டையிடுகிறார்கள். அங்கிருந்த நாட்களில் பாக்மென் எதையும் எழுத முடியாமல் போகிறார்.

தனது அறையில் மேக்ஸ் ஃப்ரிஷ் வேகமாக டைப் அடிக்கம் சப்தம் கேட்டு எரிச்சலாகும் பாக்மென் அவருடன் சண்டையிடுகிறார். சப்தம் இல்லாமல் டைப் செய்யும் மிஷின் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார் மேக்ஸ்

மனச்சோர்வும் தனிமையும் ஒன்று சேர அவள் இசைக்கலைஞர் ஹான்ஸ் வெர்னர் ஹென்ஸே போன்ற வேறு ஆண்களுடன் பழகுகிறார். இதை ஃப்ரிஷ்ஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளைச் சந்தேகிக்கத் துவங்குகிறார். இந்தச் சந்தேகம் அவளது நடத்தையைத் தீவிரமாக்குகிறது.

ஒரு உரையாடலின் போது பாக்மென் “You’ll make me unhappy, but I’ll take that risk,” என்கிறார். இது தான் படத்தின் அவரது தீவிரமான செயல்பாடுகளுக்கான ஒரே விளக்கம்.

கதை இரண்டு தளங்களில் நடக்கிறது. ஒன்று பாக்மெனின் பாலைவனப்பயணம். அதன் வழியே அவள் தனது கடந்தகால நினைவுகளுக்குள் மறுபிரவேசம் செய்கிறாள். இன்னொரு தளம் முறிந்து போன அவளது காதல் வாழ்க்கை மற்றும் குடிப்பழக்கம், இளைஞர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்பு.

பாலைவனத்திற்குள் பயணம் செய்ய வேண்டும் என்ற அவளது நீண்டகாலக் கனவு நிஜமாகிறது. இளம் வாசகனும் காதலனுமான அடோல்ஃப் ஓப்பல் அவளை அழைத்துப் போகிறான்.

பாலைவன மணலில் தன்னைப் புதைக்கும்படி சொல்கிறாள் பாக்மென். அடோல்ஃப் ஓப்பல் அவளைப் புதைக்கிறான். அங்கே ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறாள். பாலைவனம் முடிவற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும் கொடூரமான மனநிலையின் அடையாளமாகவும் சித்தரிக்கபடுகிறது.

ரோம் நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் பாக்மென் கடந்தகால வடுக்களிலிருந்து விடுபட்டுக் கவிதைகள் மொழியாக்கம் செய்வதில் ஆர்வம் கொள்கிறாள். இதற்காக இத்தாலிய கவிஞர் Giuseppe Ungarettiயை சந்திக்கிறார். அவர்களின் சந்திப்பும் அப்போது நடைபெறும் உரையாடலும் அழகானவை.

தன்னைத் தேடி ரோமிற்கு வரும் மேக்ஸ் ஃப்ரிஷை அழைத்துக் கொண்டு போய்ப் புது உடைகள் வாங்கித் தரும் பாக்மென் அவரை அழைத்துக் கொண்டு விருந்திற்குப் போகும் காட்சியும் அங்கே நடைபெறும் கசப்பான நிகழ்வுகளும் இரவு வீடு திரும்பிய பிறகு மேக்ஸ் ஃப்ரிஷ் நடந்து கொள்ளும் விதமும் உண்மை நிகழ்வின் சிறப்பான படமாக்கம் என்பேன்.

மேக்ஸ் ஃப்ரிஷ் நாட்குறிப்புகளை வாசிக்கும் பேக்மேன் அதில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவற்றைத் தீயிட்டு கொளுத்துகிறார். அது அவர்களுக்குள் பிரிவை உருவாக்குகிறது. காதலில் சிறிது காலம் மட்டுமே ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவும் நடந்து கொள்ளவும் முடியும். ஆண்களும் பெண்களும் தங்களின் தவறான புரிதல், குழப்பம் அல்லது அனைத்து உறவுகளின் சீர்குலைவு ஆகியவற்றிலிருந்து விடுபடும் வரை, ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் விலகி இருப்பதே நல்லது என்கிறார் பாக்மென்.

பாக்மெனின் உணர்ச்சிகளை மேக்ஸ் ஃப்ரிஷ் புரிந்து கொள்ளவில்லை. அவள் கொந்தளிப்பான மனநிலையே எப்போதுமிருக்கிறாள். வெளியே அமைதியாகத் தோற்றம் அளிக்கும் அவள் மனதிற்குள் அலைபாய்ந்தபடி இருக்கிறாள். பாலுறவில் மிகுந்த நாட்டம் கொண்டவளாக இருக்கிறாள். ஃபிரிஷ் மீதான பாக்மெனின் காதல் அவளை ஐரோப்பா முழுவதும் ஒரு நீண்ட பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஒரு சொற்பொழிவின் போது பாக்மென் “Fascism is the first element in a relation between a man and a woman.” என்று சொல்கிறார்.

கவிதையும் அழகிய நிலக்காட்சியும், சிறப்பான நடிப்பும் கொண்ட இந்தத் திரைப்படம் தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2024 04:59

December 12, 2024

சென்னை கலை இலக்கிய விழா.

நாளை சென்னையில் நடைபெறும் கலை இலக்கிய விழாவில் எனது ஆங்கில நூலின் மொழியாக்கம் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.

The Man Who Walked Backwards and Other Stories நூலின் மொழிபெயர்ப்பாளர் நீதிநாயகம் பிரபா ஸ்ரீதேவனுடன் அனில் ஸ்ரீனிவாசன் உரையாடுகிறார்

இடம் :

Madras School Of Economics
Gandhi Mandapam Rd, Behind Government Data Center, Surya Nagar, Kotturpuram, Chennai

நேரம் : மதியம் 3 மணி.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 23:58

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.