சாரு நிவேதிதா's Blog, page 126

December 28, 2022

ஒரு புகைப்படம்: ஸ்ரீராம்

ஒரு புகைப்படத்தைப் பார்த்து பத்து நாட்களாக ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நேற்று ஜெயமோகனின் தளத்திலும் இன்று சாருவின் தளத்திலும் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். சக்திவேலுடன் சாரு இருக்கும் புகைப்படம்தான் அது. சக்திவேல் ஜெயமோகனின் வாசகர். Physically challenged. சாரு அந்தப் புகைப்படத்தில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.ஒரு நாகரிகமான சமூகத்தில் இதைப் பற்றியெல்லாம் வியப்பது கூட அநாகரிகம்தான். ஆனால், சமீபத்தில் இன்னொரு புகைப்படம் பார்த்தேன். நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு விருந்திட்டு, ஒவ்வொருவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 05:04

புத்தக விழா

புத்தக விழா என்றால் எனக்கு ஒரு சின்ன பிரச்சினைதான் மனதில் நெருடும். வாகனம். மாலை நான்கு மணிக்குக் கிளம்பினால் இரவு ஒன்பதுக்குத் திரும்பலாம். சென்ற ஆண்டும் அதற்கு முந்தின ஆண்டுகளும் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்போது அந்த நண்பர் என் மீது சற்று பிணக்கில் இருக்கிறார். எப்போது அழைத்தாலும் நாளை அழைக்கிறேன் என்கிறார். எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன். அவர் இருந்தவரை வாகனப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் என்னோடு தொடர்ந்து நட்பாக இருப்பதும் கடினம்தான். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 04:31

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 5

விஷ்ணுபுரம் விழா பற்றி நேற்று அபிலாஷின் கட்டுரையைப் படித்ததிலிருந்து அது பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். என் மனதை அவர் கருத்துக்கள் துளைத்துக் கொண்டே இருந்தன. நான் ஒன்றுக்கு இரண்டாக அவருக்குப் பதிலும் சொல்லி விட்டேன். ஆனாலும் என் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. இருப்பினும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தேன். செமினார் வேறு, விழா வேறு என்பதே அது. நாம் கருத்தரங்கையும் விழாவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கருத்தரங்குகளில் எல்லோரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 02:53

December 27, 2022

மளிகைக்கடையும் பதிப்பகமும்…

தமிழில் 1965இல் தொடங்கி செயல்பட்ட வாசகர் வட்டம் பற்றி நான் எழுதி ஈரம் காய்வதற்குள் ஒரு நண்பரிடமிருந்து நேற்று மாலை தொலைபேசி அழைப்பு.  சாரு, உங்கள் கட்டுரை மிகவும் நல்ல கட்டுரை, ஆனால் அதில் சில விவரப் பிழைகள் உள்ளன.  அதைக் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்.  என்ன விவரப் பிழை என்றால், வாசகர் வட்டம் போட்ட மொத்த புத்தகங்களே 45தான்.  அதிலும் வெளிவந்தவை 39தான்; 45 இல்லை.  ஆக, ஒரு பதிப்பகம் எப்படி நடத்தக் கூடாது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 23:27

ஆட்டோநேரட்டிவ் தம்பிகளுக்கு…

நம் எதிரிகள் நம்மை அடையாளப்படுத்துவது போல் குடி அல்ல நம் பிரச்சினை.  நாம் செயல்வீரர்கள், குடிகாரர்கள் அல்ல.  அதே சமயம் நம்மிடம் இன்னொரு பிரச்சினை உள்ளது.  அது, இன்றைய இளைஞர்களின் பிரச்சினை.  முதலில் ஒரு காரியத்தில் இறங்கும்போது ஒரு அடிப்படைப் புரிதல் வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு வாட்ஸப்பிலோ தொலைபேசியிலோ இல்லை.  ஒரு வாசகர் ஒரு புத்தகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்.  நம்முடைய கடமை, புத்தகத்தை அனுப்புவது.   என் அப்பாவுக்குப் புடுக்கு வலி, என் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி என்றெல்லாம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 21:18

அபிலாஷுக்கு எதிர்வினை – 2

சில விஷயங்களை எழுத மறந்து போனேன். என்னுடைய எழுபது வயதில் இந்த விஷ்ணுபுரம் விருதை முன்வைத்துத்தான் இத்தனை பேர் என் எழுத்தின் உள்ளே சென்று தங்கள் அனுபவத்தை முன்வைத்த சம்பவம் நடந்தது. சுமார் ஐம்பது கட்டுரைகள் வந்திருக்கும் இல்லையா? அதில் போகன் சங்கர் என்ன எழுதினார்? அவர் என்ன தமிழருவி மணியன் மாதிரி பேச்சாளரா? நாங்கள் யாருமே சரியாகப் பேசவில்லை. ஆனால் அதையும் மீறி கடந்த ஒரு மாதமாக ஜெயமோகனின் தளத்தில் எத்தனை எத்தனை கட்டுரைகள் என் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 06:01

அபிலாஷுக்கு ஓர் எதிர்வினை

அபிலாஷின் கல்யாண மாலை ஒழிக கட்டுரையின் பெரும்பகுதியோடு எனக்கு உடன்பாடுதான். ஆனால் நான் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியும் அடிதடி இல்லாமல் – எனக்குக் கொலை மிரட்டல் விடப்படாமல் நடந்ததே இல்லை – விஷ்ணுபுரம் விழா மட்டுமே விதிவிலக்கு. விவாதங்களும் உரைகளும் இன்னும் செறிவாக இருந்திருக்கலாம்தான். ஆனால் அதை சாக்காக வைத்து எனக்குக் கொலை மிரட்டல் விடுவதும் நடந்து கொண்டேதானே இருந்தன. இப்போது மனுஷியின் கவிதை வெளியீட்டு விழாவில் பேசுகிறேன். பவுன்ஸர்களோடுதான் செல்ல வேண்டும். அந்த பயம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 05:40

கல்யாண மாலை ஒழிக! : அபிலாஷ் சந்திரன்

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுகளின் அரசியலின்மை பற்றி தோழர் புலியூர் சொன்னதை குளச்சல் யூசுப் திசைதிருப்பி அங்கு மதுவும், போதையும், அரைகுறை ஆடைகள், ஆரவாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சிலர் வருத்தப்படுவதாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன், திரும்பவும் சொல்கிறேன் – பழைய சிறுபத்திரிகை இலக்கிய அரங்குகள் குடித்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்துப் போட்டு பரஸ்பரம் அடித்தும் கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் எனும் மனப்பதிவு சிலருக்கு உண்டு. என் அனுபவத்தில் அப்படி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 05:24

ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்: சில செயல் திட்டங்கள்

முன்பே எழுதியிருக்கிறேன், எனக்குப் பதிப்பகம் தொடங்குவது பிடிக்காது என்று. என் புத்தகங்களை நானே பதிப்பித்த அனுபவம் ஒரு காரணம்.  என் நண்பர்கள் பதிப்பகம் ஆரம்பித்தாலும் பிடிக்காது, லாபம் வராது என்பதால்.  ஆனாலும் என் நண்பர்கள் ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  முதலில் ஸீரோ டிகிரி.  இப்போது ஆட்டோநேரட்டிவ்.  ஆட்டோநேரட்டிவை இயக்கும் நண்பர்கள் யாவரும் மாதம் இருபதாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க இளைஞர்கள்.  ஒருத்தர் சொந்தமாக ஒரு பிஸினஸ் ஆரம்பித்திருக்கிறார்.  இன்னும் சம்பளம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 05:04

December 26, 2022

மனுஷ் பாதிப்பில் சில கவிதைத் தலைப்புகள்!

ஹமீது என்னிடம் நட்பில் இருந்த போது என் புத்தகங்களுக்கு அவர்தான் தலைப்பு வைப்பார். காமரூப கதைகள் அவர் வைத்த தலைப்புதான். காமரூபக் கதைகள் என்று அவர் வைத்த தலைப்பில் நடுவில் உள்ள க்-ஐ நான் நீக்கினேன். அவ்வளவுதான். இலக்கணப்படி க் வர வேண்டும். ஆனால் நான் அவ்வப்போது இலக்கணத்தை மீறுவேன். இப்போது ஹமீதின் பதின்மூன்று கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளையும் பார்த்தேன். எல்லா தலைப்புகளையும் நான் சமீப காலத்தில் நேர் வாழ்வில் புழங்கியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி என்னுடைய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 20:51

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.