சாரு நிவேதிதா's Blog, page 122
January 14, 2023
என் எழுத்தைப் பாருங்கள்…
என் நெருங்கிய நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அவர் சொன்னது சரிதான். ஆனால் எழுத்தாளர்கள் உளறக் கூடாதா? என் நாலு வரி அபிப்பிராயங்களைப் படிப்பதை விட நான் பத்து நாளில் எழுதிய அன்பு நாவலைப் படியுங்கள். கடவுளே எழுத்தாளனாகப் பிறந்தாலும் அப்படி ஒரு நாவலை எழுதியிருக்க முடியாது. என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு அது. ராஸ லீலா, ஸீரோ டிகிரி, எக்ஸைல் எல்லாவற்றையும் விட அன்புதான் உச்சம். இனிமேல் எழுதப் போகும் நாவல்கள் ... Read more
Published on January 14, 2023 09:10
இழுத்துப் போர்த்திக் கொண்ட கலகங்கள்!
இரண்டு மூன்று தினங்களுக்கு முன் புத்தகத் திருவிழாவில் புல்புல் இஸபெல்லாவைப் பார்த்தேன். ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ரொம்பவும் வருத்தப்பட்டேன். அவரைப் பார்த்த அன்றுதான் நான் ரொம்பத் த்ராபையான ஆடையில் சென்றிருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் புல்புல் மாதிரிதான் இருந்திருப்பேன், எழுதியிருப்பேன் என்று. அதைப் படித்தபோது புல்புல் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். அடிப்பாவி. அதற்குப் பிறகு ஒருநாள் நீலம் அரங்கில் சந்தித்தேன். அன்றும் படு த்ராபையான ட்ரெஸ்ஸில் இருந்தேன். ... Read more
Published on January 14, 2023 09:00
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு
இதுவரை என் வாழ்வில் என் புத்தகத்தை யாரிடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னதில்லை. திமிர் மட்டுமே காரணம். என் ஆசான் அசோகமித்திரனிடம் கூட என்னுடைய ஒரு புத்தகத்தையும் கொடுத்ததில்லை. அவரை மாதம் ஒருமுறை சந்திக்கும் வழக்கம் உள்ளவன். ஆனால் புத்தகம் கொடுத்ததில்லை. ஆனால் அன்பு நாவலை உங்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லி இறைஞ்சுவேன். கைகூப்பி வணங்கி உங்களைப் படிக்கச் சொல்லுவேன். படிக்கச் சொல்லி யாசிப்பேன். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்று நீங்கள் அதைப் படிக்கும் போது ... Read more
Published on January 14, 2023 08:48
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: நேசமித்ரன் மதிப்புரை
ப்ரியமுள்ள சாருவிற்கு, நாவலின் மென்பிரதி கிடைத்தது. வாசிக்கத் துவங்கி விட்டேன். வழக்கத்தை விட வேகமான நடை , சொல்முறையில் நளினம் கூடி இருக்கிறது.இந்திய குடும்ப அமைப்புகளில் ‘அன்பு’ என்ற பெயரில் நிகழும் வன்முறை , அக்கறை என்ற மோஸ்தரில் நிகழ்த்தும் ஆதிக்கம் இவை யாவும்உருவாக்கும் உயர் அழுத்தம்,மனச்சிதிலங்கள். இதிலிருந்து வெளியேற எத்தனிக்கும் எளிய மனிதர்களின் சிக்கலான போராட்டம் மிக நுட்பமான உளவியல் பார்வையுடன் பதிவாகி இருக்கிறது. உணர்ச்சிகளின் சூதாட்டத்தில் கிரகங்களைப் பணயம் வைத்து ஆடும் கடவுளும் சாத்தானுமாய் பிரிந்து ... Read more
Published on January 14, 2023 08:44
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: ஸ்ரீராம்
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு – டீஸர் அன்பு நாவலை பத்து நாட்களில் சாரு எழுதியிருக்கிறார். அதுவல்ல அதிசயம். நாவலின் ஒவ்வொரு வார்த்தையுமே ஒவ்வொரு அணுகுண்டைத் தாங்கி வருகிறது. சாமி வந்தது போல் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு உக்கிரம். சாருவின் நாவல்களை என்னுடைய ரசனையின்படி இவ்வாறு வரிசைப் படுத்துவேன். எக்ஸைல், ராஸ லீலா, ஒளரங்ஸேப், தேகம், காமரூப கதைகள், ஸீரோ டிகிரி, ஃபேன்சி பனியன். வாதையைக் கொண்டாட்டமாக எழுதியது ராஸ லீலா. வாழ்வின் ஒவ்வொரு ... Read more
Published on January 14, 2023 08:40
January 13, 2023
சிறுகதைப் பட்டறை
பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வன இல்லத்தில் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடக்க இருக்கும் சிறுகதைப் பட்டறைக்கு யார் யார் வருகிறீர்கள்? வினித்தைத் தொடர்பு கொள்ளுங்கள். சிறுகதைப் பட்டறையில் மூன்று சிறுகதைகள் குறித்து விவாதிக்கப்படும். ஆண்டன் செகாவின் வான்கா. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எங்கே என்று எனக்கு எழுதிக் கேட்காதீர்கள். தேடினால் பத்து நொடியில் கிடைக்கும். இரண்டாவது கதை மௌனியின் அழியாச் சுடர். மூன்று, ஊரின் மிக அழகான பெண். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. நான்காவதாக ... Read more
Published on January 13, 2023 22:08
வரம் – என்னுடைய புதிய புத்தகம்
இரண்டு தினங்களுக்கு முன் என்னுடைய புதிய புத்தகம் வரம் வெளிவந்துள்ளது. புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் வாங்கிக் கொள்ளலாம். அரங்கு எண் F16
Published on January 13, 2023 19:07
ஆட்டோநேரட்டிவ் பதிப்பக நூல்கள்
ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் நூல்கள் அடக்கவிலையில் விற்கப்படுகின்றன. உதாரணமாக கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த இந்தியத் தத்துவ இயலில் அழிந்தனவும் நிலைத்திருப்பனவும் என்ற மிகப் பெரிய நூல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 350 ரூபாய்க்குக் கிடைக்கிறது. வாங்கிப் பயனடையுங்கள்
Published on January 13, 2023 07:47
January 12, 2023
மொத்தம் 45000 வார்த்தைகள்
ஒரு பத்தாயிரம் வார்த்தைகள் உள்ள நீண்ட சிறுகதை என்றுதான் ஆரம்பித்தேன். இருபத்தைந்தாயிரம் வார்த்தைகள் வந்தன. பிறகு நாற்பதாயிரம் வார்த்தைகள். சீனிக்கும் கார்ல் மார்க்ஸுக்கும் இன்னும் ஒன்றிரண்டு நண்பர்களுக்கு அனுப்பி விட்டு இனிமேல் ஒரு வார்த்தை சேர்க்க மாட்டேன் என்று உறுதி கூறி விட்டேன். ஆனால் நேற்று இரவு நித்திரையில் மேலும் ஒரு அத்தியாயம் கனவாகத் தோன்றியது. வாக்கியம் வாக்கியமாக கனவில் எழுதப்பட்டது. நான்கு மணிக்கு எழுந்து அவற்றைப் பதிவு செய்தேன். அதையும் இறுதி அத்தியாயமாகக் கோர்த்து பதிப்பகத்துக்கு ... Read more
Published on January 12, 2023 20:28
January 11, 2023
தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்தவன்: வளன் அரசு
சாருவின் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு என்ற புதிய நாவலைப் படித்ததிலிருந்து ஒருவிதமான ட்ரான்ஸ் மனநிலையில் இருக்கிறேன். இவ்வளவு பெரிய நாவலை இவ்வளவு சீக்கிரமாகவும் தீவிரமாகவும் வாசித்ததேயில்லை. நாவலின் pdf அனுப்பிய அன்றே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். முப்பது பக்கம் முடித்தவுடன் மனமில்லாமல் மூடிவைத்துவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கினேன். இன்று காலை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து மதியத்துக்குள் முழுவதும் முடித்துவிட்டேன். நடுவில் உணவில்லை தண்ணீரில்லை. மதியம் பன்னிரண்டு மணிக்கு முக்கியமான வேலை, வாசிக்கும் ஆர்வத்தில் சுத்தமாக ... Read more
Published on January 11, 2023 17:28
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

