சாரு நிவேதிதா's Blog, page 121

January 15, 2023

நாலு எழுத்துப் பெயர் கொண்ட நங்கை

நேற்று பொங்கலும் அதுவுமாய் கொஞ்சம் மனம் உடைந்து விட்டது விரிவாகச் சொல்ல வேண்டும் ஆனால் விரிவு கவிதைக்காகாது இரண்டுக்கும் இடையிலாகச் சொல்ல முயற்சிக்கிறேன் புத்தக விழாவில் நுழைகிறேன் ஸ்தம்பிக்க வைக்கும் அழகி ஒருத்தி என்னை நெருங்கி வந்து நான் உங்கள் வெறித்தனமான ரசிகை என்று சொல்லிக் கை குலுக்கினாள் பெயர் சொன்னாள் அழகாக இருப்பதை விட அதற்கேற்ப ஆடை தேர்வது ஒரு கலை இவள் கலைஞி அப்போது அந்தப் பக்கம் போன ஒரு இளைஞனை பம்பரத்தைச் சுண்டி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 23:01

இன்னும் ஓரிரு தினங்களில் அன்பு. இப்போது முன்னட்டை ஓவியம்…

எது எழுதினாலும் அதை எழுதி முடித்த பிறகு அதிலிருந்து நான் விலகி விடுவேன். அது வாசகர்களுக்கானது. அவ்வளவுதான். ஆனால் அன்பு நாவலில் அப்படி இல்லை. அதை நான் ஒவ்வொருவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படிக்கச் சொல்லி யாசிக்க வேண்டும். அது என் சுவாசம். என் தவம். அதற்கு நான் பெரிதும் எதிர்பார்த்த அட்டைப் படம் வந்து விட்டது. ஓவியம் மணிவண்ணன். மணி வண்ணனை ஒரு மாணவராக எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும். சந்த்ரு வீட்டில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 22:20

உடலும் பயிற்சியும்

அன்புள்ள சாருவுக்கு,நான் சிவசங்கரன். மதுரையில் இருந்து வந்து அண்மையில் உங்களை சென்னையில் சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அன்று, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீங்கள் ‘கலையும் மீறலும்’ பற்றிப் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது. நேரம் இன்னும் இருந்திருந்தால் நீங்கள் தொட்ட இடங்களைப் பற்றி இன்னும் நிறைய பேசியிருப்பீர்கள் என்றே தோன்றியது. நான் அவ்வளவு சிறப்பான பேச்சாளன் இல்லை என்று நீங்கள் அவ்வப்போது சொல்வீர்கள். உண்மையில், நீங்கள்தான் மிக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 21:27

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

அன்புள்ள சாருவுக்கு, அன்பு நாவல் ஒரு அகோர தாண்டவம்..உருத்திர மூர்த்தியாய் அப்படி ஒரு ஆட்டம் நாவல் முழுவதும்… இருப்பினும் நாவலின் மையச்சரடு அன்பின் சீரான கோர்வையைப் பற்றிக் கொண்டே செல்கிறது. நாவல் உணர்த்தும் பொருள் பிரதியில் முழுதாய்ப் பொதிந்துள்ளது.. இதனுள் முத்துக் குளித்தால் தரிசனம் கிடைக்கப் பெறலாம்…கிடைக்கும்… மிலரப்பாவின் கதை மரகத மாணிக்கம்… விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்ல..ஒரு 300பக்க நாவல் இவ்வளவு வேகமாக நான் படித்ததே இல்லை. போனில் படித்தால் கண் எரிகிறது என்று எப்போதும் புத்தகங்களையே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 20:15

விஷ்ணுபுரம் விழா நினைவுகள்

விஷ்ணுபுரம் விழாவில் சில விடுபட்ட புகைப்படங்கள் இருந்தன. அதில் இது ஒன்று. முன்வரிசையில் சுபஸ்ரீ, சக்திவேல். பின்வரிசையில் யோகா குரு சௌந்தர், மனோபாரதி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 00:08

January 14, 2023

writer of pop colors…

சினிமா நண்பர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பை விட எழுத்தே எனக்கு எளிது என்று சொன்னாலும் அவர்களே எழுத்தாளராகவும் இருந்து விடுவதால் நடிப்புதான் வேண்டும் என்கிறார்கள். எனக்கு நடிக்கத் தெரியாதே என்று சொன்னால் அது எங்கள் கவலை என்கிறார்கள். ஒரு எழுபது வயது எழுத்தாளனின் மூன்று நாள்களை முழுநீளத் திரைப்படமாக எடுக்கலாம் என்பது என் நெடுநாள் திட்டம். பொழுதுபோக்கு சினிமா அல்ல. படத்தில் வசனமே இருக்காது. வேறு நடிகர்களும் இல்லை. நான்தான் இயக்கலாம் என்று திட்டம். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 22:26

வாழ்ந்து பார்த்த தருணம்: வெங்கடசுப்ரமணியன்

வாழ்ந்து பார்த்த தருணம் என்ற தலைப்பில் என் நண்பர் வெங்கடசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதி வருகிறார். பின்வரும் கட்டுரை அந்தத் தொடரின் 193ஆவது பகுதி. சென்ற மாதமே எழுதி விட்டார். நான்தான் நேரமின்மையால் பகிர முடியவில்லை. இப்போது அன்பு நாவலை முடித்து விட்டதால் கொஞ்சம் சாவகாசமாக இருக்கிறேன். டிசம்பர் 18 விஷ்ணுபுரம் விழா. அன்றுதான் என் பிறந்த நாளும். நான் என் பிறந்த நாள்களை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடவே விருப்பப்படுவேன். நரகத்தில் உழல்பவர்களுக்குக் கிடைக்கும் கொண்டாட்டம் அது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 18:48

என் எழுத்தைப் பாருங்கள்…

என் நெருங்கிய நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அவர் சொன்னது சரிதான். ஆனால் எழுத்தாளர்கள் உளறக் கூடாதா? என் நாலு வரி அபிப்பிராயங்களைப் படிப்பதை விட நான் பத்து நாளில் எழுதிய அன்பு நாவலைப் படியுங்கள். கடவுளே எழுத்தாளனாகப் பிறந்தாலும் அப்படி ஒரு நாவலை எழுதியிருக்க முடியாது. என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு அது. ராஸ லீலா, ஸீரோ டிகிரி, எக்ஸைல் எல்லாவற்றையும் விட அன்புதான் உச்சம். இனிமேல் எழுதப் போகும் நாவல்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 09:10

இழுத்துப் போர்த்திக் கொண்ட கலகங்கள்!

இரண்டு மூன்று தினங்களுக்கு முன் புத்தகத் திருவிழாவில் புல்புல் இஸபெல்லாவைப் பார்த்தேன். ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ரொம்பவும் வருத்தப்பட்டேன். அவரைப் பார்த்த அன்றுதான் நான் ரொம்பத் த்ராபையான ஆடையில் சென்றிருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் புல்புல் மாதிரிதான் இருந்திருப்பேன், எழுதியிருப்பேன் என்று. அதைப் படித்தபோது புல்புல் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். அடிப்பாவி. அதற்குப் பிறகு ஒருநாள் நீலம் அரங்கில் சந்தித்தேன். அன்றும் படு த்ராபையான ட்ரெஸ்ஸில் இருந்தேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 09:00

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

இதுவரை என் வாழ்வில் என் புத்தகத்தை யாரிடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னதில்லை. திமிர் மட்டுமே காரணம். என் ஆசான் அசோகமித்திரனிடம் கூட என்னுடைய ஒரு புத்தகத்தையும் கொடுத்ததில்லை. அவரை மாதம் ஒருமுறை சந்திக்கும் வழக்கம் உள்ளவன். ஆனால் புத்தகம் கொடுத்ததில்லை. ஆனால் அன்பு நாவலை உங்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லி இறைஞ்சுவேன். கைகூப்பி வணங்கி உங்களைப் படிக்கச் சொல்லுவேன். படிக்கச் சொல்லி யாசிப்பேன். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்று நீங்கள் அதைப் படிக்கும் போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 08:48

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.