சாரு நிவேதிதா's Blog, page 125
January 2, 2023
மாயம்
அடிக்கடி நண்பர்கள் நீங்கள் பயன்படுத்தும் முகக் களிம்பு என்ன பிராண்ட் என்று கேட்கிறார்கள். சொல்கிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயம். தங்கமான சப்ஜெக்ட். எம்ஜியார் தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது உண்மைதான். நானும் ஒரு பத்து வருட காலம் தங்க பஸ்பம் சாப்பிட்டேன். விவரம் மற்றும் பலன் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். உறவு துண்டானதும் பஸ்பத்தை நிறுத்தி விட்டேன். தேவைப்படவில்லை. இவ்வளவுதான் வெளிப்படையாக சொல்ல முடியும். ஆயுர்வேதத்தில் எல்லாம் இருக்கிறது. அதேபோல் தங்கத்தைப் பொடி ... Read more
Published on January 02, 2023 03:08
உண்மையான காதல்
ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ள நாவல். அராத்து எழுதியது. ரேமண்ட் கார்வரின் ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. எனக்கு ரெமண்ட் கார்வரின் கதைகள் – இதுவரை நான் படித்தவற்றில் இருந்து பார்த்த போது – குப்பைக் கூளம். இத்தனை குப்பையான கதைகளை எழுதிய ஒருவரை என்னால் ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள முடியாது, அவர் இதை விட நல்ல கதைகள் எழுதியிருந்தாலும். அராத்துவின் கதையும் எனக்குப் பிடிக்கவில்லை. முதல் முதலாக அப்படி நடந்திருக்கிறது. ஆனால் ஆச்சரியமான ... Read more
Published on January 02, 2023 02:00
January 1, 2023
கலையும் மீறலும்: உரையாடல்: அண்ணா நூற்றாண்டு நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் எட்டாம் தேதி ஞாயிறு காலை பத்திலிருந்து பதினோரு மணி வரை வாசகர்களுடன் உரையாடுகிறேன். எல்லோரும் திரளாக வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர். இங்கே பாரதீய வித்யா பவனில் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை உபந்நியாசம் நிகழ்ந்த போது இரண்டு வார காலம் தினமும் காலை ஏழு மணிக்கு நூறு பேர் வந்தார்கள். இலக்கியத்தில் அல்ல, ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஆண்டாளிடம் பக்தி கொண்டவர்கள். அப்படி ஒரு நூறு பேராவது வந்தால் மகிழ்ச்சி ... Read more
Published on January 01, 2023 07:08
December 31, 2022
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு / அருஞ்சொல்
சமஸ் எனக்குப் பிடித்த பத்திரிகையாளர். என்னை ஒரு இருபது பேர் இதுவரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் மிகச் சிறந்த பேட்டி ஆங்கில நாவலாசிரியையும் நாட்டியக் கலைஞருமான Tishani Doshi எடுத்தது. Author’s parole என்ற தலைப்பில் அது வெளியாகி இருக்கிறது. அதே பெயரை கூகிளில் போட்டால் அந்தப் பேட்டியை நீங்கள் படிக்கலாம். அதை விட நல்ல பேட்டியாக இதை உருவாக்கியவர் சமஸ். நான் கொஞ்சம் கண்ணாடி மாதிரி. நீங்கள் உளறினால் நானும் உளறுவேன். நீங்கள் நன்றாகப் பேசினால் ... Read more
Published on December 31, 2022 21:26
December 30, 2022
தேவை ஒரு அய்யங்கார் நண்பர்
ராகவன் வினித்திடம் எக்கச்சக்கமாகப் பேசியிருக்கிறார். பேசக் கூடாததையெல்லாம் பேசியிருக்கிறார். அதில் ஒன்று, அராத்து என்னையும் சாருவையும் பிரிக்கப் பார்க்கிறான். எனக்கு அவர் சொன்னதில் பிரச்சினை இல்லை. ன் விகுதிதான் பெரும் மண்டைக் குடைச்சலாக இருக்கிறது, இன்னும். நானேதான் ஆயிடுக என்பது வெறும் வார்த்தை இல்லை ஸ்வாமி. நெஞ்சில் உணர வேண்டும். எலும்பு மஜ்ஜைக்குள் போக வேண்டும். பிரிக்கப் பார்க்கிறான் என்றால் நீங்கள் அவ்வளவு பெரிய ஆள், இல்லையா? அப்படித்தானே அர்த்தம்? தமிழிலேயே அறுபது ஆண்டுகளாகப் புழங்குகிறேன். வேறு ... Read more
Published on December 30, 2022 01:37
December 29, 2022
DJ சாரு நிவேதிதா
உங்களுக்கு DJ என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாது என்றால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேலே ஒரு வார்த்தை கூட படிக்க வேண்டாம். நீங்கள் மார்க்கேஸ், போர்ஹேஸ் போன்றவர்களைப் படிப்பதோடு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கலாம். டீஜே என்றால் தெரியும் என்றால் மேலே படியுங்கள். டீஜேக்களை பப்பில், டான்ஸ் பார்களில் பார்க்கலாம். குறுந்தாடி வைத்துக் கொண்டு அவ்வப்போது குட்டியூண்டு கிளாஸ்களில் டக்கீலா மாதிரி சரக்கு அடித்துக் கொண்டு, அல்லது பியர் கிளாஸ்களோடு ஏதோ ஒரு எந்திரத்தில் மேலும் கீழும் எதையோ ... Read more
Published on December 29, 2022 05:31
ஒன்றே ஒன்று கிடைத்தது…
சீனியோடு இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் – இயல்பாக எடுக்கப்பட்டது – அது என்னுடைய இயல்பான சிரிப்பு, சீஸ் அல்ல – பின்னால் நிற்பது கன்னடத்துப் பைங்கிளி ஸ்ரீ. மற்றும் சில தாய்லாந்து புகைப்படங்கள் சீனியோடு உள்ளது. அதெல்லாம் ஒளி எடுத்தது என்பதால் இங்கே வெளியிடவில்லை. ஒளிக்கு இயற்கைக் காட்சிகள்தான் பிரமாதமாக வரும். மனிதர்களிடம் அவருக்கு வித்தை வராது. மற்றபடி த அவ்ட்ஸைடர் படத்தில் ஒளிப்பதிவில் கலக்கி இருக்கிறார். ஸ்டில் ஃபோட்டாக்ரஃபி வேறு, சினிமாட்டாக்ராஃபி வேறு துறை ... Read more
Published on December 29, 2022 02:14
சௌந்தரும் நானும்…
என் வாழ்வில் அராத்து அளவுக்கு என்னைப் பாதித்த மனிதர்கள் யாரும் இல்லை. ஒரே காரணம்தான், நான் எப்படி வாழ நினைக்கிறேனோ அப்படி வாழ்கிறார் அவர். இந்த உலகில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பவர்கள் நான் பார்த்த வரை அவந்திகாவும் அராத்துவும்தான். ஆனால் தான் சுதந்திரமாக இருப்பது அவந்திகாவுக்குத் தெரியாது. அராத்துவுக்குத் தெரியும். அராத்துவுக்கு அடுத்தபடியாக என்னைப் பாதித்த மனிதர் சௌந்தர் ராஜன் என்ற பெயரைக் கொண்ட யோகா குரு சௌந்தர். சௌந்தரை விட மூத்தவரான ஜெயமோகனே ... Read more
Published on December 29, 2022 01:33
December 28, 2022
ஃபிலிஸ்டைன் சமூகத்தின் குறியீடு: விகடன்
உத்தேசமாக 1975ஆக இருக்கலாம். கொஞ்சம் முன்னே பின்னே பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது எங்களுக்கெல்லாம் ஆதவன் ஒரு பெரிய நாயகன். தில்லியில் நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலையில் இருந்தார். அவ்வப்போது அவர் கதைகள் விகடனில் வரும். நான் ஆதவன் வெறியன். ஒருநாள் விகடனில் ஆதவன் ஒரு பிக்பாக்கெட் என்பது மாதிரி கட்டம் கட்டிய ஒரு பெட்டிச் செய்தி வந்தது. அவர் தீபத்தில் எழுதிய கதையை விகடனுக்கும் கொடுத்து பணம் வாங்கி விட்டாராம். அதிலும் விகடன் அலுவலகத்துக்கு நேரிலேயே வந்து ... Read more
Published on December 28, 2022 21:45
இல்லை, ஞாபகம் இல்லை…
மனுஷின் பன்னிரண்டு கவிதை நூல்களின் தலைப்புகளும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. என் நண்பரோ அவையெல்லாம் டி.ராஜேந்திரன் காலத்துத் தலைப்புகள் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவையெல்லாம் லவ் டுடே தலைப்புகளாகத்தான் தெரிகின்றன. ஹமீது மாமாக்குட்டீ…யாகி விடக் கூடாதே என்ற கவலையும் வேறு சேர்ந்து கொண்டது. மனுஷின் தலைப்புகளை ஒட்டி நானும் சில தலைப்புகளை வைத்தேன். (கவிதைகள் இனிமேல்தான் எழுத வேண்டும்.) மனுஷின் தலைப்புகள் 1.மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும் 2. உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் 3.அன்புக்காகவும் ... Read more
Published on December 28, 2022 21:13
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

