சாரு நிவேதிதா's Blog, page 124

January 7, 2023

பஸ்ஸில் அட்டை போடும் சிறுமிகள்

டவுன் பஸ்களில் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கலாம். பஸ் கிளம்புவதற்கு ஐந்து பத்து நிமிடங்களுக்கு முன்னால் எல்லா பயணிகளின் தொடையிலும் ஒரு பத்து வயது சிறுமி ஒரு போஸ்ட் கார்டு சைஸ் அட்டையைப் போட்டு விட்டுப் போய் விடுவாள். அதில் எனக்கு அம்மா அப்பா கிடையாது, என்னால் வாய் பேச முடியாது, ஆனாலும் நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஐயாக்களே, அம்மாக்களே, என்னை உங்கள் பெண் போல் நினைத்து எனக்குப் பண உதவி செய்யுங்கள்… இன்னும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 08:39

January 6, 2023

வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2023 04:48

January 5, 2023

அன்பு குறித்து ஒரு புகார் மனு: நாவல்

தேகம் நாவலை இரண்டு வாரத்தில் எழுதி முடித்தேன். கூடவே அராத்து தங்கியிருந்தார். காலடி என்ற ஊரில் ரீஜினுவேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது எழுதியது அந்த நாவல். இப்போது தேகத்தைப் போல் மூன்று மடங்கு பெரிய நாவலை ஒரே வாரத்தில் எழுதி விட்டேன். இப்போது செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அன்பு குறித்து ஒரு புகார் மனு. புத்தக விழாவில் வெளிவரும். இது ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் நாவல். கொக்கரக்கோவின் சேட்டைகள் அதிகம் வரும் நாவல். நாவலின் ஹீரோ கண்ணாயிரம் பெருமாள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2023 23:58

January 3, 2023

நீங்கள் வேறு, நாங்கள் வேறு, ஆனாலும் சமரசமாய் வாழ்வோம்…

இந்தத் தலைப்பில் அல் குர்-ஆனில் ஒரு வசனம் உண்டு. ஔரங்ஸேப் நாவலில் அதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் ராம்குமார் அருண் இன்று பின்வருமாறு எழுதியிருக்கிறார். விஷயம் விஷ்ணுபுரம் விழா பற்றியது. ”இந்த ஆண்டு சாரு நிவேதிதாவோ அவருடன் வந்தவர்களோ ஒரு அரங்கிலேகூட உட்கார்ந்து கவனிக்கவில்லை. அவர்கள் சாரு சந்திப்புக்கும் விழாவுக்கும் மட்டும்தான் வந்தார்கள்.” சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தெளிவு படுத்தியும் இருக்கிறேன். ஆனால் ராம்குமார் அருண் என் ப்ளாகைப் படிப்பதில்லை என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2023 20:33

அன்பு குறித்து ஒரு புகார் மனு

அன்பு குறித்து ஒரு புகார் மனு இதுதான் நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தலைப்பு. நேற்று மனுஷிடமும் நேசமித்ரனிடமும் அராத்துவிடமும் பேசினேன். இதே வார்த்தைகளை வைத்து வெவ்வேறு விதமாக யோசித்தோம். கடைசியில் இந்தத் தலைப்பை முடிவு செய்தேன். முடியும் தறுவாயில் (பல எழுத்தாளர்கள் தருவாயில் என்று போடுகிறார்கள்!) இருக்கிறது. இன்றோ நாளையோ முடித்து விடுவேன். புத்தகத்தில் 200 பக்கம் வரும். ஔரங்ஸேப் மாதிரி இல்லாமல் முழுக்க முழுக்க ஆட்டோஃபிக்‌ஷன். இனிமேல் ஆட்டோஃபிக்‌ஷன் எழுத சரக்கு இல்லை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2023 19:21

மனுஷ்ய புத்திரன் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

வைரமுத்துவையும் வைத்துக் கொண்டு சிறப்புரை சாரு நிவேதிதா என்று போட ஹமீதுக்கு எத்தனை தைரியமும் என் மீது நம்பிக்கையும் இருக்க வேண்டும்? வைரமுத்துவிடம் தமிழ் விளையாடும். எனக்குப் பேச வராது. ஆனால் ஒன்று உறுதி. என் மனதிலிருந்து பேசுவேன். வந்து விடுங்கள்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2023 05:12

January 2, 2023

ஏழாம் தேதி புத்தக வெளியீடு

வரும் ஏழாம் தேதி நந்தனம் புத்தக விழாவில் உள்ள பிரதான அரங்கத்தில் மனுஷ்ய புத்திரனின் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் வெளியாகின்றன. அதில் மனுஷின் கவிதைகள் பற்றிப் பேசுகிறேன். ஏற்கனவே அவருடைய கவிதைகள் பற்றி நான் பேசிய மிக முக்கியமான உரை காணாமல் போய் விட்டது. பதிவு செய்த பேச்சு யாரிடமும் இல்லை. இந்த முறை அப்படி நடக்காமல் கபிலன் அதைப் பதிவு செய்து விடுவார் என நம்புகிறேன். ஆனால் இந்த முறை இரண்டு நட்சத்திரப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2023 23:51

கர்னாடக முரசும்…

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற இந்தப் புத்தகம் உங்களிடம் இல்லையெனில் – என்னைக் கோபித்துக் கொள்ளாதீர்கள் – உங்களை என் நண்பராக நான் எண்ண மாட்டேன். இந்தப் புத்தகத்தைத் தட்டச்சு செய்து தருவதற்கு யாரும் கிடைக்காததால் என் நண்பர் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தட்டச்சு செய்ததாகச் சொன்னார். இந்தப் புத்தகம் அளவுக்குத் தமிழில் அலைகளைக் கிளப்பிய புத்தகம் வெகு சில தான் இருக்க முடியும். ஜே.ஜே. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2023 21:44

சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை, ஏன்?

என் எழுத்து பற்றியும், என் எழுத்தை எதிர் கொண்ட தமிழ்ச் சமூகம் பற்றியும் ஒரு சிறப்பான ஆய்வு. த. ராஜன் ஆரம்பித்து வைத்த விவாதத்தை மனுஷ்ய புத்திரன் முடித்து வைக்கிறார். முக்கியமான புத்தகம். வாங்கிப் படியுங்கள். ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிய புத்தகம். சாருவால் பெருமாள் முருகனாக முடியவில்லை (razorpay.com)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2023 21:37

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.