சாரு நிவேதிதா's Blog, page 127

December 26, 2022

அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு (குறுநாவல் குறித்த அறிவிப்பு)

அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு என்ற தலைப்பிலான என்னுடைய குறுநாவல் புத்தக விழாவின் போது வெளியாகும். வழக்கம் போல் ஸீரோ டிகிரி வெளியீடு. (இந்தக் கடைசி வாக்கியத்தை எழுதியிருக்க மாட்டேன். ஆனால் நண்பர்கள் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் ஆரம்பித்திருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்கவே ஸீரோ டிகிரி வெளியீடு என்று சொன்னேன். என்னுடைய புத்தகங்கள் அனைத்துமே எப்போதுமே ஸீரோ டிகிரியிலிருந்துதான் வெளிவரும். அங்கே நிராகரிக்கப்பட்டால் மட்டுமே ஆட்டோநேரட்டிவ். அப்படி நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியமும் தெரியவில்லை. கதையை சீனியிடம் விவரித்தேன். அடி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 06:55

அறம்

எடிட்டர் லெனின் அவர்களுக்கு… நான் தங்களிடம் என் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படமான த அவ்ட்ஸைடர் படத்துக்கு படத் தொகுப்பு பணியைச் செய்து தர முடியுமா என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஃபோனில் கேட்ட போது என் வீட்டுக்கே நேரில் வந்த நீங்கள் படத்தொகுப்பை செய்து தருவதாகச் சொன்னீர்கள். எடுத்த எடுப்பிலேயே முப்பதாயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு விட்டீர்கள். வங்கிக் கணக்கில் அதற்கான சாட்சி உள்ளது. அதற்குப் பிறகு நாம் தினந்தோறும் பேசினோம். நவம்பர் 15-ஆம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 06:37

ஆண்டாளும் கொஞ்சம் வெங்காயமும்…

மைலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் தினந்தோறும் காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை திருப்பாவை பிரசங்கம் நடந்து வருகிறது. டிசம்பர் பதினெட்டிலிருந்து இன்று வரை பதினெட்டு பாசுரங்கள் பிரசங்கம் முடிந்திருக்கிறது. ஜனவரி முதல் தேதி வரை இந்தப் பிரசங்கம் நடக்கும். கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார்தான் பிரசங்கிக்கிறார். அற்புதமான பிரசங்கம். சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஒரு ஞானக்கடல் என்று தோன்றுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சிற்றுண்டி வேறு தருகிறார்கள். செவி, வயிறு இரண்டுக்கான உணவும் இலவசம். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 00:12

December 25, 2022

த அவ்ட்ஸைடர் – 32

அவ்ட்ஸைடர் படத்தைப் பார்க்காமல் விட்டு விட்ட என் அன்பு நண்பருக்கு… முப்பத்தொன்றாவது அத்தியாயம் எத்தனை வலியுடன் எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்கிறீர்களா?  அவ்ட்ஸைடர் படத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்து வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்த நீங்கள் எனக்கு இன்று எழுதிய கடிதத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அரங்கில் குழுமியிருந்த 800 பேரில் என் வாழ்க்கையைச் சொல்லும் அந்த ஆவணப் படத்தை யார் அத்தியாவசியமாகப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு ஆளைச் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2022 08:32

நாகூர் என்றதும் நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள்?

நாகூர் என்றவுடன் இன்றைக்குச் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள் என்னென்ன? நாகூர் ஹனீஃபா. அவரைப் போன்ற குரல் படைத்தவர் அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. அதேபோல், அவருடைய பாடல்களில் ஒன்றுகூட சோடை போனது இல்லை. எல்லாமே ரசிக்கத் தகுந்தவை. அது, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…’ பாடலாக இருந்தாலும் சரி, ‘ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?’ பாடலாக இருந்தாலும் சரி; ஹனிஃபாவின் பல பாடல்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பவை. சில்லடி. எங்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2022 01:16

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 4

எல்லாம் சரி, ஒற்றைக் கையைத் தூக்கித் தூக்கிக் காண்பிப்பதுதான் நடனமா?  அதை அறிஞர் அண்ணாவே செய்திருக்கிறாரே? எஸ். செந்தில் குமார், திருச்சி. செந்தில், கீழே வரும் பத்தியைப் படித்துப் பாருங்கள்.  “பாபு ரங்கண்ணாவைப் பார்க்கும் முதல் காட்சியில், ரங்கண்ணா தனக்குத்தானே, தன் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நாதத்தைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருப்பார். அதைக் கலைக்க விரும்பாதபடி, பாபுவும் மற்றவர்களும் தயங்கி நின்றிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று அது,” என்று ‘தி. ஜானகிராமனின் இசையுலகம்’ என்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2022 01:11

December 24, 2022

அருஞ்சொல் இணைய இதழில் என் நேர்காணல்

இதுவரை என்னிடமிருந்து எடுத்த எத்தனையோ நேர்காணல்கள் வந்துள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றாக இது இருக்கும் என்று நம்புகிறேன். த அவ்ட்ஸைடர் என்ற ஆவணப்படத்துக்காக என் இளம் பிராயத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டதால் இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுதலாகிறது. விஷ்ணுபுரம் விருது விழா சமயத்தில் – அதாவது, டிசம்பர் பதினெட்டுக்கு முன்பாக நான் தொடர்ந்து ஐந்து நாட்கள் ராக்கண் விழித்தேன். ராக்கண் என்றால் பன்னிரண்டு மணி வரை விழிப்பதுதான். ஏனென்றால், எப்போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2022 21:15

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 : ஸோர்பா த இண்டியன்

அனுவின் வயது 22. இப்போதுதான் சட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.  மாடலிங் செய்கிறார்.  எதற்கு இத்தனை முஸ்தீபு என்றால் வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பர் 16) என்னைச் சந்திப்பதற்காகவே தன் தமையன் சேகரனோடு வட சித்தூர் வந்து நள்ளிரவு இரண்டு மணி வரை பண்ணை வீட்டில் நடந்த ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் அராத்துவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.  அன்றைய தினம் நான் களைப்பாக இருந்தேன்.  அருஞ்சொல் பேட்டியில் மும்முரமாக இருந்ததால் நான் ஒரு வாரமாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2022 05:08

ஒரு வரி

மகாமுனி என்ற படம் 2019இல் வந்திருக்கிறது. அதில் ஒரு காட்சியில் நாயகி நாயகன் ஆர்யாவிடம் உங்க கிட்ட சாரு எழுதின கலகம் காதல் இசை புக் இருக்கா எனக் கேட்கிறாள். ஆர்யா இருக்குங்க என்கிறார். இதை சாத்தியப்படுத்த நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு வரி வருகிறது என்பதைக் கண்டு பிடிக்க அந்தப் படம் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நோ காமெண்ட்ஸ். (20+) Facebook
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2022 03:58

December 22, 2022

த அவ்ட்ஸைடர் – 31

பப்பு லாப்ரடார் இனம்.  ஸோரோ க்ரேட் டேன்.  இரண்டு நாய்களும் அவைகளின் வாழ்க்கையில் அதிகமாக நேசித்தது என்னைத்தான்.  அப்புறம்தான் மற்றவர்கள்.   குணாதிசயங்களில் இரண்டும் இரண்டு வகை.  ஸோரோவுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது, என்னைப் போலவே.  பப்புவுக்கு அது ஜாஸ்தி.  பப்புவை நான் ஏதாவது கடுமையாகத் திட்டி விட்டால் ஒரு நாள் முழுதும் சாப்பிடாது.  நான் நூறு முறை மன்னிப்புக் கேட்டாலும் சாப்பிடாது.  ஆண் நாயாக இருந்தாலும் பெண்கள் மாதிரி அடம்.  நாம் உயிரையே வைத்திருக்கும் இவனா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 05:17

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.