மைலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் தினந்தோறும் காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை திருப்பாவை பிரசங்கம் நடந்து வருகிறது. டிசம்பர் பதினெட்டிலிருந்து இன்று வரை பதினெட்டு பாசுரங்கள் பிரசங்கம் முடிந்திருக்கிறது. ஜனவரி முதல் தேதி வரை இந்தப் பிரசங்கம் நடக்கும். கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார்தான் பிரசங்கிக்கிறார். அற்புதமான பிரசங்கம். சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஒரு ஞானக்கடல் என்று தோன்றுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சிற்றுண்டி வேறு தருகிறார்கள். செவி, வயிறு இரண்டுக்கான உணவும் இலவசம். ...
Read more
Published on December 26, 2022 00:12