சாரு நிவேதிதா's Blog, page 131
December 7, 2022
நாவல் – எழுத்து = விலக்கப்பட்டவற்றால் கட்டமைக்கப்படுகிற எச்சம் : நாகார்ச்சுனன் (எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் மீதான மதிப்பீடு)
(ஜெயமோகன் தளத்தில் என் எழுத்து பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன. அதோடு கூட ரொம்ப காலம் முன்பு என் எழுத்து பற்றி வந்த கட்டுரைகளையும் ஜெ. தளத்தில் வராத கட்டுரைகளையும் இங்கே மீள்பதிவு செய்கிறேன். பின்வரும் கட்டுரை என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலுக்கு நாகார்ச்சுனன் எழுதிய மதிப்புரை. இப்போதைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் புத்தகத்தின் கடைசியில் இந்தக் கட்டுரை வந்துள்ளது. அந்த விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இதை வெளியிட அனுமதி அளித்த நாகார்ச்சுனனுக்கு நன்றி. ... Read more
Published on December 07, 2022 22:44
கால் பந்தாட்டம் ஒரு அரசியல் நிகழ்வு
6.12.2022 அன்று நடந்த மொராக்கோ – ஸ்பெய்ன் கால்பந்தாட்டம் பார்த்தேன். கால் பந்தாட்டம் எனக்கு விளையாட்டு மட்டும் அல்ல. அரசியலோடு தொடர்பு உடையது. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் நான் யாரும் ஈடுபாடு காண்பிக்காத மொராக்கோ என்ற ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கே எழுதப்படும் இலக்கியத்தை ஒரு முப்பது ஆண்டுக் காலமாகப் படித்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்? ஏன் ஜான் ஜெனே ”நான் இறந்து போனால் என் பிரேதத்தை ஃப்ரான்ஸில் புதைக்காதீர்கள், மொராக்காவிலேயே புதையுங்கள்” என்று சொன்னார்? ... Read more
Published on December 07, 2022 22:13
நான்தான் ஔரங்ஸேப்… பற்றி என் யோகா குரு சௌந்தர் கட்டுரை
மதங்க கர்ப்பத்தில் பிறந்தோரின் வாக்குமூலம்- சௌந்தர் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
Published on December 07, 2022 22:05
December 5, 2022
சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி.ஆர்
என்னுடைய எழுத்தின் மீது பலருக்கும் ஒவ்வாமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதையும் மீறி என் எழுத்தை நெருங்குவதற்கான ஒரு திறவுகோல் காயத்ரியின் இந்தக் கட்டுரை. நீங்கள் இதுகாறும் கற்று வைத்திருப்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு சாருவின் எழுத்திற்குள் நுழையுங்கள் என்ற வாக்கியம் இந்தக் கட்டுரையில் மிகவும் முக்கியமானது. ஒரே ஒரு கருத்தில் மட்டும் முரண்படுகிறேன். நான் நேரில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவன் என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – ... Read more
Published on December 05, 2022 17:22
December 4, 2022
உள்ளும் புறமும் விளிம்பும்: காளி பிரசாத்
உ உள்ளும் புறமும் விளிம்பும்- காளிபிரசாத் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
Published on December 04, 2022 17:29
December 3, 2022
சாரு நிவேதிதா – எழுத்தும் வாழ்வும்: கார்ல் மார்க்ஸ்
சாருநிவேதிதா: எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
Published on December 03, 2022 17:59
விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா
விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in) விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
Published on December 03, 2022 17:58
December 2, 2022
the outsider: அவசர உதவி தேவை
என்னுடைய முப்பது ஆண்டுக் கால நண்பர் இப்போது திடீரென்று ஒரு காரியம் பண்ணி விட்டார். அவருக்கு அதற்கான சூழல் என்னவென்று தெரியவில்லை. நடந்தது இதுதான். தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற எடிட்டர். அவ்ட்ஸைடருக்கு படத் தொகுப்பு (எடிட்டிங்) செய்து கொடுப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் முன்வந்தார். என் வீட்டுக்கே வந்தார். நவம்பர் 15 கடைசி தேதி அன்று எனக்கு படம் கிடைத்து விட வேண்டும் என்றேன். ஒப்புக் கொண்டார். எளிதில் முடித்து விடலாம் என்றார். மணிக்கணக்கில் ஃபோனிலும் நேரிலும் ... Read more
Published on December 02, 2022 06:17
December 1, 2022
சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும் : அய்யனார் விஸ்வநாத்
நண்பர் அய்யனார் விஸ்வநாத் எழுதி, ஜெயமோகனின் தளத்தில் வெளியான கட்டுரை. படிக்கும் போது ரொம்பவும் லஜ்ஜையாக இருந்தது. இதை இங்கே பகிர வேண்டுமா என்று தயங்கினேன். ஆனாலும் என் எழுத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விஷயங்கள் என் எழுத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்றே இதைப் பகிர்கிறேன். ஜெ. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் ஆன்மீகத்தில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள். Activists. அவர்களது ஆன்மீகச் செய்திகளோடு கூடவே அவர்களின் வாழ்வும் ஒரு ... Read more
Published on December 01, 2022 22:40
குப்பை
ரேமண்ட் கார்வர் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையேயும் இலக்கிய வாசகர்களிடையேயும் ஒரு சூப்பர் ஸ்டார். நான் இதுவரை அவரைப் படித்ததில்லை. படிக்க விரும்பியதும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால் என்னோடு பிணைக்கப்பட்டால்தான் ஒரு எழுத்தாளனை வாசிக்க ஆரம்பிப்பேன். ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பிணைப்பு ஏற்பட வேண்டும். ஒரு இளம் தோழி – என் வாழ்விலே அப்படி ஒரு அழகியை அத்தனை அருகில் நான் கண்டதில்லை – முராகாமியோடு எனக்கு ஒருமுறையாவது படுக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்ன போது ... Read more
Published on December 01, 2022 03:01
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

