சாரு நிவேதிதா's Blog, page 134

November 12, 2022

the outsider (25)

பலவிதமாக ஆலோசித்தார்கள் கமாண்டோக்கள்.  அதில் ஒரு யோசனை: ஒரு ட்ரக்கை வாங்கி, அதில் ஆயுதங்களை வைத்து மேலே காய்கறிகளால் மூடி விடுவது.  ஒவ்வொரு வீடாகப் போய் காய் வேண்டுமா என்று கேட்பது.  இலக்கு வெளியே வரும்போது ட்ரக்கில் இருந்தபடியே தாக்குவது.  உடனே ஒரு சந்தேகம் வந்தது, சொமோஸாவின் பென்ஸ் குண்டு துளைக்காத காராக இருந்தால்? மேலும், ட்ரக் என்றால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.  எனவே ட்ரக் யோசனை உடனடியாகக் கைவிடப்பட்ட்து.  என்ன செய்ய வேண்டும் என்றால், யாருடைய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 21:17

November 11, 2022

தகவல் தொடர்பு

முந்தாநாள் சீனி ஒரு கதை அனுப்பியிருந்தார்.  ஐந்தே நிமிடத்தில் படித்து விட்டு சூப்பர்ப் என்று வாட்ஸப் செய்திருந்தேன்.  இன்று சீனி ஃபோன் பண்ணி, கதை படிக்க நேரம் இருந்ததா என்று கேட்டார்.  அப்போதே பதில் அனுப்பி விட்டேனே என்றேன்.  என் பதில் அவருக்குப் போய்ச் சேரவில்லை போல.  இது போன்ற சிறிய விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் நம் வாசகர் வட்ட நண்பர்களுடன் தகவல் தொடர்பில் பிரச்சினையே வந்ததில்லை.  இதற்கு வெளியே தகவல் தொடர்பில் எனக்கு மன உளைச்சல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 23:41

ஈகோ

பொதுவாக மனிதர்களோடு சேர முடியவில்லை.  சேர்ந்து கூட்டாக வெளியூர் செல்ல முடியவில்லை.  அடுத்த மனிதனே பெரும் துன்பமாக இருக்கிறான்.  ஏன் இப்படி என்று பதினைந்து ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பதினைந்து ஆண்டுகள் என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது.  பதினைந்து ஆண்டுகளாகத்தான் சீனியை எனக்குத் தெரியும்.  சீனி என் வாழ்வில் நுழைந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை ஸ்தூலமாகத் தெரிய ஆரம்பித்தது.  அதாவது, பிரச்சினை சீனியின் மூலமாக அல்ல. சீனியும் நானும் அடுத்த மனிதரை எங்களோடு சேர்த்துக் கொள்ளும்போது பிரச்சினை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 21:09

ஒரு சந்திப்பு

தினமும் 2000 இலிருந்து 3000 வார்த்தைகள் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு என் வாழ்நாளில் எப்போதும் எழுதியதில்லை.  மழை காரணமாக வீட்டை விட்டும் வெளியே செல்ல முடியவில்லை.  அதனால், ஒரு மாற்றத்துக்காக இந்த மாதம் 19, 20, 21 (சனி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாளும் ஏற்காட்டில் இருப்பேன்.  18 இரவே ஏற்காடு வந்து விடுவேன்.  ஏற்காடு என்றாலே கொலைப்பசி என்ற விஷயம் பயமுறுத்துகிறது.  இந்த முறை செல்வகுமார் என்னோடு வருவதால் – அவரிடம் காரும் இருக்கிறது என்பதால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 08:36

த அவ்ட்ஸைடர் – 24

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்வதென்று எல்லோரும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறோம்.  எந்தக் குற்றமும் செய்யாத ஒரு சாதாரண சராசரி மனிதனின் முகபாவம் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட முகபாவத்தோடு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம்.  வீட்டின் உள்ளே சென்றவுடன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.  விளக்கையும் ஐந்து நிமிடத்தில் அணைத்து விட்டோம்.  ஆயுதங்கள் காரிலேயே இருந்தன.  அதைப் பற்றியும் கவலைப்படவில்லை.  இம்மாதிரி சமயங்களில் மற்றவர்களாக இருந்தால் உடனடியாக, ரகசியமாக ஆயுதங்களை எடுத்து வைத்துக் காபந்து பண்ணுவார்கள்.  போலீஸ் வேறு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 11, 2022 03:44

November 10, 2022

த அவ்ட்ஸைடர் 23

அதோடு விடவில்லை ஜூலியா.  நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரமோனிடம் சொன்னால் உங்கள் இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன் என்றும் சொன்னாள்.  சூஸானா தன் ’புதிய கணவன்’ ஆர்மாந்தோவுடன் பராகுவாய் திரும்புகிறாள்.  மூன்று வாரங்களுக்கு முன்புதான் கணவன் ஃப்ரான்சிஸ்கோவுடன் அசுன்ஸியோனில் சுற்றித் திரிந்தாள்.  வழக்கம்போல் விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  சாதாரணமாகவே அசுன்ஸியோன் விமான நிலையத்தில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; தேன் நிலவுத் தம்பதிகளை யார் தொந்தரவு செய்யப் போகிறார்கள்?  ஆர்மாந்தோ ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2022 01:59

November 9, 2022

த அவ்ட்ஸைடர் : 22

இன்றும் வினித்திடம் பேசினேன்.  அவர் ஒரு கேள்வி கேட்டார். ”உங்களைப் பற்றிய ஆவணப்படம் குறித்துதான் இந்த அவ்ட்ஸைடர் தொடரை எழுத ஆரம்பித்தீர்கள்.  இப்போது சீலேயிலிருந்து கிளம்பி அர்ஜெண்டினா, கொலம்பியா, பராகுவாய், நிகாராகுவா என்று எங்கெங்கோ சுற்றுகிறீர்களே, படம் பார்ப்பவர்கள் இது பற்றியெல்லாம் படத்தில் வரும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா?  சீலே போவதற்கே பணம் தட்டுப்பாடாக இருக்கிறதே?  இங்கெல்லாம் எப்படிப் போவீர்கள், அதுவும் ரெண்டு பேர்?” சீலேயுடன் படத்தை முடித்து விட்டு, இறுதியில் ஒரு அறிவிப்பைப் போட்டு விட ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 08:20

கனவு வைன் யோகா (மூன்றாம் அத்தியாயம்) Revised

(சற்று முன்னர் பதிவேற்றம் செய்த கதையில் நிறைய பிழைகள் இருந்ததால் பிழை திருத்தம் செய்து, கதையிலும் சில நகாசு வேலைகள் செய்து இப்போது திரும்பவும் ஏற்றியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.) பரோலில் வெளியே வரும் கைதி திரும்பச் செல்வதற்குத் தாமதமாகி விட்டால் காவல் துறை என்ன செய்யும்?  அந்த சூழலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நான் இந்த பூலோகத்தில் எங்கே போயிருந்தாலும் பத்தினி ஃபோன் செய்யும் போது எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ஃபோனிலேயே பெரும் ரகளை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 04:58

November 8, 2022

தூக்கப் பஞ்சாயத்து

இந்தத் தூக்கப் பஞ்சாயத்து இன்னும் ஓயாது போலிருக்கிறது.  இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.  எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்டோ, அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோ உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.   ஏனென்றால், எழுத்தாளர்கள் அதிமனிதர்கள்.  அவர்கள் செய்வதைப் பார்த்து நீங்களும் செய்தால் அது உங்களைப் படுகுழியில்தான் தள்ளும். உதாரணமாக, சாரு வைன் அருந்துகிறார் என்று நீங்களும் அருந்தினால் நீங்கள் காலி.  நான் அஞ்சு வருடம் குடிக்காமல் இருப்பேன்.  வேறு யாராலும் முடியாது. ஆகவே, எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளவற்றைப் படியுங்கள்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2022 23:51

த அவ்ட்ஸைடர் (21): ஒரு புரட்சிக்காரனின் சரித்திரம்

1980.  பராகுவாயின் சர்வாதிகாரி ஸ்த்ரோஸ்னர்தான் (Stroessner) அன்றைய தினத்தில் மிக நீண்ட காலமாக பதவியில் இருந்து கொண்டிருந்தவன்.  இருபத்தைந்து ஆண்டுகள்.  அந்த இருபத்தைந்து ஆண்டுகளும் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு முணுமுணுப்பு கூட எழவில்லை.  அந்த அளவுக்கு நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.   மிகப் பெரும் புரட்சியாளனாகிய ஸாந்தினோவைக் கொலை செய்த சொமோஸாவினால் கூட நிகாராகுவாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  நாட்டை விட்டு ஓடி விட்டான்.  ஆனால் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் இரும்புக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2022 08:44

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.