சாரு நிவேதிதா's Blog, page 137
October 29, 2022
அந்நியன் (15)
கான்ஸெப்ஸியோன் செல்வதற்காக லித்தினும் அவரது ஒளிப்பதிவாளரும் சாந்த்தியாகோவின் எஸ்தாஸியோன் செந்த்ராலிலிருந்து (Estación Central) இரவு பதினோரு மணி ரயிலைப் பிடிக்கிறார்கள். இந்த ரயில் நிலையம் எஃபெல் டவரை உருவாக்கிய குஸ்தாவ் எஃபெல் நிர்மாணித்தது என்பதால் இந்த ரயில் நிலையத்தில் யாருமே இனிமேல் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற அளவில் இது ஒரு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீலேயில் பினோசெத்தின் ஆட்சியில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. யார் நடமாடினாலும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, ... Read more
Published on October 29, 2022 09:52
ஆவணப்படம்
எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைக் குறித்து நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் த அவ்ட்ஸைடர் படம் பற்றியும் அவ்வப்போது எழுதி வருகிறேன். அந்தப் படம் எடுக்கப்படும் கலாச்சார, அரசியல் பின்னணி பற்றியும் தொடர்ந்து நான் தினமும் எழுதி வருகிறேன். ஏன் சீலே? அப்படி ஒரு போராட்ட நிலம் உலகில் எங்கேயும் இருந்தது இல்லை. அப்படி ஒரு கலாச்சார சுரணை உணர்வு கொண்ட மனிதர்கள் உலகில் எங்கேயும் இல்லை. எத்தனை கொடுமையான வறுமையிலும் தன் சுய ... Read more
Published on October 29, 2022 06:12
October 28, 2022
நான்தான் ஔரங்ஸேப்: நூல் அறிமுகம்: ஆர். அபிலாஷ்: ஞாயிறு இரவு எட்டு மணிக்கு
நாளை இரவு எட்டு மணிக்கு ஸூம் மூலம் ஆர். அபிலாஷ் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றி உரையாற்றுகிறார். நானும் பேசுகிறேன். முடிந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Published on October 28, 2022 22:38
த அவ்ட்ஸைடர் (14)
படப்பிடிப்பு வேலையெல்லாம் முடிந்து எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லாமல் ஜாலியாக பாங்காக் நகரில் இரவுக் கொண்டாட்டங்களுக்குப் பேர் போன காவோ ஸான் சாலையில் நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் ஒரு பப்பில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் நான் சீலே, அயெந்தே, விக்தர் ஹாரா என்று ஆரம்பித்த போது, ”இந்தக் கொண்டாட்டமான இரவில் அம்மாதிரி சீரியஸ் விஷயங்களெல்லாம் எதற்கு, நம் நாட்டிலும் அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் சாரு” என்று சீனி சொன்னதை நான் மறக்கவே மாட்டேன் என்று நினைக்கிறேன். ... Read more
Published on October 28, 2022 08:59
மூவர்
ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பின் போது எடுத்த புகைப்படம். எடுத்தவர் பிரபு காளிதாஸ்.
Published on October 28, 2022 03:55
October 27, 2022
ஹிந்து மதம் (2)
இந்து மத எதிர்ப்பும், இந்துத்துவ வெறியும் ஊடும் பாவுமாக பின்னியிருக்கின்றன. இதிலிருந்து நோகாமல் தத்துவம், கலை, பண்பாடு போன்ற உயர்ந்தவற்றை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது?ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கும்போது அது மதத்தை பாதிக்கிறது எனும்போதே மதம் ஜாதிகளை காக்கிறது என்றுதான் ஆகிறது. நாங்கள் இந்துக்களாக இருக்கவே விரும்பவில்லை. அது எங்களை ஜாதியை சொல்லி இழிவு செய்கிறது என்று ஒரு சாரார் புகார் எழுப்பும்போது அந்த குறைகளை கேட்க, கலைய இந்துமத அமைப்பிற்குள் என்ன ... Read more
Published on October 27, 2022 02:42
தமிழிலிருந்து ஆங்கிலம்
சுந்தர ராமசாமி அவர் காலத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் குரலாகக் கருதப்பட்டார். அவருடைய ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது ஜே.ஜே. சில குறிப்புகள். அந்த நாவல் ஆங்கிலத்தில் எப்படி கசாப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆங்கில நாவலாசிரியர் விளாசுகிறார். https://www.thehindu.com/books/litera...
Published on October 27, 2022 01:21
October 26, 2022
இரண்டு புகைப்படங்கள்
ஹிந்து மதம் என்ற தலைப்பிட்ட சென்ற குறிப்போடு தொடர்புடைய இரண்டு புகைப்படங்கள். இரண்டுமே மனோகரன் மாசாணம் எடுத்தவை. இடம்: பாங்காக்கில் உள்ள சொர்ண புத்தர் ஆலயம்.
Published on October 26, 2022 22:38
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

