சாரு நிவேதிதா's Blog, page 140

October 10, 2022

சென்னை

சென்னை பற்றி போகன் சங்கர் எழுதியிருந்த எதிர்மறையான கருத்துகளை வாசித்தேன்.  இப்போதுதான் முதல்முறையாக ஒரு எழுத்தாளர் சென்னை பற்றி இப்படி எதிர்மறையாக எழுதுவதைப் படிக்கிறேன்.  இதுவரை எனக்குத் தெரிந்து சென்னை பற்றி எழுதியவர்கள் அத்தனை பேரும் இந்த நகரின் அருமை பெருமைகளைப் பற்றி எழுதியதைத்தான் படித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  அது அவர்களின் ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரம் என்று புரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  சாக்கடையில் வசிக்கும் எலிகளுக்கு அந்த சாக்கடை சொர்க்கமாகத் தெரிவதைப் போலவேதான் இதுவும்.  மற்றபடி சென்னை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 21:50

விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பு

நண்பர்களே, 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம். விருந்தினர்களின் பட்டியல் இன்னமும் அறுதி செய்யப்படவில்லை. நண்பர்கள் வழக்கம்போல நன்கொடை வழங்கவேண்டும் என்று கோருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. மிகமிகக்குறைந்த செலவில் இதை நடத்துகிறோம் என்றாலும்கூட இதற்கான செலவுகள் மிகுதி. நாங்கள் தனிப்பட்ட முறையில் எவரிடம் சென்று , ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 20:12

the outsider…

என் சக தமிழ் எழுத்தாளர்கள் பலரின் மேடைப் பேச்சுகளைக் கேட்டேன்.  விருது ஏற்புரையும் அதில் ஒன்று. அப்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால், ஏதோ ஒரு சந்தர்ப்பவசத்தினால்தான் நான் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.  மற்றபடி இந்த இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பதை அந்த எழுத்தாளர்களின் பேச்சின் போது என் மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்ந்தேன்.  என்னால் என்னுடைய ஊரில் ஓடும் நதியை என் நதியெனக் கொள்ள முடியவில்லை.  இத்தனைக்கும் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2022 03:50

October 9, 2022

தீண்டாமை

என் நண்பர் சமஸ் எடுத்த பேட்டிகளிலேயே என்னை ஆகக் கவர்ந்தது கருணாநிதியின் இறுதிப் பேட்டிதான்.  தொண்ணூறு வயதுக்கு மேல் கொடுத்த பேட்டி என்பதால் அதுவே அவரது இறுதிப் பேட்டியாக அமைந்தது.  எனக்கும் கருணாநிதிக்கும் நான் பல ஒற்றுமைகளைக் கண்டதுண்டு.  ஒருசில ஒற்றுமைகள் பற்றி நான் வெளியே சொல்ல முடியாது.  ஆனால் பலதை சொல்லலாம்.  கிண்டல், நக்கல், சிலேடை, எத்தனை மணிக்கு உறங்கினாலும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்வது, சுறுசுறுப்பு, எல்லோரிடமும் சமமாகப் பழகுதல், இத்தியாதி.  ஒரே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 01:32

October 8, 2022

ராதிகா சாந்தவனம்

தஞ்சாவூர் ராஜா ப்ரதாப் சிங்கின் போக பத்னியாக விளங்கிய தெலுங்குக் கவியான முத்துப்பழனி (1730 – 1790) எழுதிய ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்கு நூலை எனக்கு அர்த்தத்துடன் அல்லது அர்த்தம் தவிர்த்துப் படித்துக் காட்டக் கூடிய நண்பர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். புத்தகம் என்னிடம் உள்ளது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் தியாகராஜா நாவலுக்கு இது தேவைப்படுகிறது. charu.nivedita.india@gmail.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2022 01:39

ஆனி எர்னோ

நீண்ட நாட்களாகப் பேசாமல் இருந்த தோழியிடமிருந்து வந்த அழைப்பை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு ஃபோன் செய்து கேட்ட போது ஃப்ரீக் கால் என்றாள். 2. ஆனி எர்னோவின் நாவல் ஒன்றின் முதல் அத்தியாயம் அச்சு அசலாக ஸீரோ டிகிரியின் முதல் அத்தியாயம் போலவே இருக்கிறதாம். ஆனால் அது பற்றி நான் ஒன்றும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஆனி எர்னோவின் அந்த நாவல் 1960களிலேயே வந்து விட்டதாம். 3. அபிலாஷ் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த ஆனி எர்னோவின் இரண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2022 01:30

October 7, 2022

two intoxicants…

படங்களும் கருத்தும்: ஸ்ரீ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2022 03:32

October 6, 2022

ராஜராஜ சோழன் இந்துவா?

இந்து என்ற பெயர் விவகாரம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  சிந்துவை அரபி மொழி பேசுபவர்கள் ஹிந்து என்று அழைத்தார்கள்.  சிந்து நதியைத் தாண்டி – அதாவது, அரபிகளின் பார்வையில் – வாழ்பவர்கள் ஹிந்துக்கள்.  ஆக அராபிய முஸ்லிம்கள் வைத்த பெயரே ஹிந்து.  அதற்காக, அதற்கு முன்னால் ஹிந்து மதமே இல்லை என்று சொல்வது மட்டித்தனத்தைத் தவிர வேறு இல்லை.  ஆப்பிளுக்கு ஆப்பிள் என்று பெயர் வைக்காதிருந்தால் ஆப்பிளே இல்லை என்று சொல்லும் மட்டித்தனம்தான் ராஜராஜன் இந்து இல்லை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2022 23:46

க.நா.சு.வின் மனைவி ராஜியின் நேர்காணல்: தஞ்சை ப்ரகாஷ்

கீழே உள்ள பேட்டியை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம், எழுத்தாளர்களின் மனைவிகள் எழுத்தாளர் தேக வியோகம் அடைந்த பிறகு கொடுக்கும் பேட்டிகள் ஒருசிலவற்றை வாசித்திருக்கிறேன். அந்தப் பேட்டிகள் எதுவும் என்னைக் கவர்ந்ததில்லை. காரணம், மனைவி என்ற பெண் எழுத்தாளனோடு கூடவே வாழ்ந்தாலும், கணவனை அவள் ஒரு எழுத்தாளனாக உள்வாங்குவதில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவான நிலைமை நான் மேலே குறிப்பிட்டதுதான். உதாரணமாக, சி.சு. செல்லப்பா தன் உரையில் சொல்வது போல, அவர் கு.ப.ரா.வுடனும் சிதம்பர சுப்ரமணியனுடன் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2022 22:34

என்ன படிக்கிறேன், ஏன்? சி.சு. செல்லப்பா

சென்ற ‘இலக்கிய வட்டம்’ அரங்கில் எதுக்காக நான் எழுதுகிறேன் என்பதற்கு என்னால் திருப்தியாக விளக்கம் தரமுடியவில்லை என்று கூறி முடித்தேன். ஏனென்றால் எழுதவைக்க, தூண்டும் சக்தி அல்லது சக்திகள் எவை என்று திட்டமாக வகுத்துக்காட்ட முடியாது. எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு சக்தியை குறிப்பிட்டாலும் பல சக்திகளைச்  சுட்டிச் சொன்னாலும் இத்தனையோடும், கூட ஏதோ ஒன்று (Plus One) இருக்கிறது என்பதுதான் படுகிறது எனக்கு. இந்த எதோ ஒன்று என்பது படைப்பாளியின் பரவச நிலையிலே எழுவது. இந்தப் பரவச நிலை ஒருவனுக்கு ஏற்படாது போனால் அவன் படைப்பாளி ஆகமுடியாது. அருள் என்ற வார்த்தையைக்கூட ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2022 21:56

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.