சாரு நிவேதிதா's Blog, page 142
September 29, 2022
எனது நூலகம்
தியாகராஜா நாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன். இனி ஒரு வருட காலத்துக்கு அந்த உலகில்தான் இருக்க முடியும். என் நண்பர்கள் சிலர் தங்கள் நாவலை எழுத பத்துப் பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறினார்கள். எனக்கு அந்த லக்ஷுரி இல்லை. வயது 70. எனவே ஒரு ஆண்டில் முடித்தாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். இடையில் கட்டுரைகளில் காலம் கடத்தக் கூடாது. எழுதிக் கொண்டிருக்கும்போது ஏதோ புத்தகத்தை எடுக்கத் திரும்பினேன். அப்போது கண்ட காட்சியைப் ... Read more
Published on September 29, 2022 00:38
September 28, 2022
போல் தோ நா ஸரா (நடனம்)
ஆர்.ஆர். சபா என்று அழைக்கப்படும் ரசிக ரஞ்சனி சபாவில் இன்று மாலை ஐந்தரை மணிக்கு நான் கலந்து கொள்ளும் நடன விழா பற்றி எழுதியிருந்தேன். நடனம் தொடர்பான என்னுடைய ஒரு சிறிய குறிப்பு பின்வருவது. ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதியது. போல் தோ நா ஸரா… – Charu Nivedita
Published on September 28, 2022 21:33
பிறழ்வெழுத்து பற்றி அராத்து: ஒரு விவாதம்
அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது: சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி அவர் எழுத்து பற்றி சின்ன விவாதம் ஓடியது. நல்ல விஷயம் தான். என் பங்குக்கு கொஞ்சம் ஞானும். டிரான்ஸ்கிரஸிவ் ரைட்டிங்க் பிறழ்வெழுத்து – உபயம் ஜெயமோகன் மீறல் எழுத்து – பொது இலக்கிய வாசககர்கள் இதில் டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங்க் என்பது கேட்க கொஞ்சம் கெத்தாக இருக்கிறது. அதன் அர்த்தத்தை தேடினாலும் ஓரளவு ஓக்கேவாக இருக்கிறது. டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டிங்க் என்பதை விக்கிபீடியா சொல்வதை வைத்து அப்படியே ... Read more
Published on September 28, 2022 12:43
September 27, 2022
ஸேவியன் க்ளாவர்
சாரு, நீங்கள் நடனம் பற்றி எழுதியதும் எனக்கு ஸேவியன் க்ளாவர் பற்றி ஞாபகம் வந்தது. உங்களுக்குப் பிடித்த கென்னி ஜியோடு இணைந்து அவர் உருவாக்கிய நடனத்தின் காணொலியை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்கனவே பார்த்திருந்தால் என்னைத் திட்ட வேண்டாம், ப்ளீஸ். ஸ்ரீ
Published on September 27, 2022 22:17
செப் 29 மாலை: நாட்டிய நிகழ்ச்சியில் அடியேன்
நாளை – செப்டம்பர் 29 – மாலை ஐந்தரை மணிக்கு மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடக்க இருக்கும் நாட்டிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறேன். (30, சுந்தரேஷ்வரர் தெரு, மைலாப்பூர்) பொதுவாக கலை நிகழ்ச்சிகளின் போது பார்வையாளர் அனைவரும் நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்றுதான் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதற்கு முன்னால் பேசுபவர்களை நிகழ்ச்சிக்கு இடையூறாகவே நினைப்பார்கள். எனவே எனக்குக் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களில் என்னுடைய ஆகச் சிறந்த ஒரு பேச்சை வழங்குவேன். ஏனென்றால், ... Read more
Published on September 27, 2022 21:35
நொய்யல் – ஒரு நவீனத்துவ காவியம்
எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வாழ்க்கை பற்றி எழுதுவதில் விருப்பம் அதிகம். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலே சுயசரிதத்தன்மை கொண்டதுதான். ஆனால் இப்படி சுயசரிதத்தன்மை கொண்ட பல நாவல்கள் இலக்கியரீதியாக வெற்றியடையாமல் வெறும் ஆவணமாக மட்டுமே மிஞ்சுவதையும் காண்கிறோம். மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே மற்றவரிடம் சொல்வதற்கு தன்னைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. ஒருவருடைய பாட்டி மண் பானை நிறைய தங்க நகைகளை வைத்துக் கொண்டிருந்திருப்பார். பேரனோ சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பவனாக இருப்பான். ... Read more
Published on September 27, 2022 09:19
நானும் சக எழுத்தாளர்களும்… (மற்றும்) நான்தான் ஔரங்ஸேப்… பற்றி பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
எனக்குக் கிடைத்திருக்கும் வரங்களில் ஒன்று, எனக்கு எந்த எழுத்தாளரையெல்லாம் ரொம்பப் பிடிக்கிறதோ அவர்களுக்கு என் எழுத்து பிடிப்பதில்லை. ஏதோ பொது நாகரிகம் கருதியோ அல்லது அவர்களைப் பாராட்டுகிறேன் என்ற காரணத்திற்காகவோ கொஞ்சமாக சிரித்து, கொஞ்சமாகப் பேசுவார்கள். வேறு வழியில்லாமல்தான். இதை நான் அசோகமித்திரனிடம் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவர் கடைசி வரை ஒரு தர்மசங்கடத்துடன்தான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். இருக்காதா பின்னே? தன்னை தன் ஆசான் என்றும் தந்தை என்றும் வணங்கும் ஒருவனை ஒரு எழுத்தாளர் எப்படி முழுமையாகப் ... Read more
Published on September 27, 2022 03:15
நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு
இன்னும் சில சிறப்புப் பிரதிகள் கைவசம் உள்ளன. என்னைப் பற்றிய ஆவணப் படத்துக்கான தயாரிப்புச் செலவுக்காகத்தான் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறேன். பூனை உணவுக்கான செலவில் ஒரு தொகையை ஏற்றுக் கொண்டிருந்த நண்பர் அதை நிறுத்திக் கொண்டு விட்டார். நான் யாரிடமும் தனிப்பட்ட முறையில் பணம் கேட்பதில்லை என்பதால் அதை அப்படியே விட்டு விட்டேன். இன்னொரு நண்பர் ஒரு சிறிய விபத்தில் மாட்டியதால் இன்னும் மூன்று மாதத்துக்கு அவரால் உதவ முடியாத நிலை. ஆக, மாதம் இருபதாயிரம் ரூபாய் ... Read more
Published on September 27, 2022 00:56
September 26, 2022
தேவிபாரதியின் நொய்யல்
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நொய்யல் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாவலைப் படிக்க இத்தனைக் காலம் எடுத்துக் கொண்ட்து இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு நான் அந்த நாவலில் மூழ்கிக் கிடந்தேன். அதிலேயே வாழ்ந்தேன். திரும்பத் திரும்பப் படித்தேன். நாவல் பற்றி இங்கே நான் மதிப்புரையெல்லாம் எழுதப் போவதில்லை. பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்ற நாவலை உலகின் தலைசிறந்த ஐம்பது நாவல்களில் வைப்பேன் என்றால், தேவிபாரதியின் நொய்யலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றிலேயே முதல் ... Read more
Published on September 26, 2022 08:52
பசி மற்றும் இம்சை குறித்து ஒரு ஆட்டோஃபிக்ஷன் கதை (குறுநாவல்)
புகைப்படம்: ஒளி முருகவேள் 1.பச்சைக் கண் சனிக்கிழமை வாசகர் வட்ட சந்திப்பு முடிந்து எல்லோரும் அவரவர் இடத்துக்குக் கிளம்பி விட்டார்கள். நாங்கள் ஐந்து பேர் – நான், கொக்கரக்கோ, வினித், ஒளி முருகவேள், பாண்டியன் – மட்டுமே அந்த வன இல்லத்தில் தங்கியிருந்தோம். சந்திப்புக்கு வந்த நண்பர்கள் யாரும் இரவு எங்களோடு தங்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன். அது பற்றி நான் பலமுறை என்னுடைய இணையதளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதியிருக்கிறேன். தங்கினால் பெரிய ... Read more
Published on September 26, 2022 00:45
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

